Saturday, July 10, 2021

Today rasi palan - 11.07.2021

 

Today rasi palan - 11.07.2021

இன்றைய ராசிப்பலன் -  11.07.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-07-2021, ஆனி 27, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.47 வரை பின்பு வளர்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.22 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். அமிர்த லட்சுமி விரதம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 

 

  ராகு

சூரிய புதன்

 

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

11.07.2021

சந்தி செவ் சுக்கி

சனி (வ)

 

 

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் - 11.07.2021

மேஷம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்-கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் சற்று குறையும்.

கன்னி

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மகரம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனகுழப்பம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. எதையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

No comments: