Wednesday, February 12, 2020

Today rasi palan - 13.02.2020


Today rasi palan - 13.02.2020
இன்றைய ராசிப்பலன் -  13.02.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
13-02-2020, மாசி 01, வியாழக்கிழமை, பஞ்சமி இரவு 08.46 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.25 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.
சுக்கி


ராகு
புதன்
திருக்கணித கிரக நிலை
13.02.2020

சனி சூரிய

கேது குரு செவ்


சந்தி

இன்றைய ராசிப்பலன் - 13.02.2020
மேஷம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று வெளியூர் பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
மீனம்
இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.


No comments: