Tuesday, August 20, 2013

லக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும்

 

  ஓம் சரவணபவ

செப்டம்பர் இதழடன்
இலவச இனைப்பாக
96 பக்கம்
முருகு பாலமுருகன்
எழதிய

நலம் தரும் நவகிரக வழிபாடு (96 பக்கம்)

பரிகார தலங்கள் வழிமுறைகளுடன்


உலகில் மனிதனாய் பிறந்தவர்கள் எல்லோரும் பல்வேறு கஷ்ட நஷ்டங்களை கடந்து வருகிறார்கள். நவ கோள்களே நம் அனைவரையும் வழி நடத்துகிறது. ஜெனன ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் வளமான வாழ்வு ஏற்படும் என்பதை பற்றி இங்கு பார்ப்போமா..

     ஜெனன ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்பு இருந்தால் தான் வாழ்வு சிறப்பாக இருக்கும். குறிப்பாக லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் கேந்திரத்திலோ அல்லது திரி கோணத்திலோ அமைந்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும். லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ அமைந்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும். லக்கினாதிபதி என்பவர் மிகவும் முக்கியமான கிரகமாகும். அவர் தான் வாழ்கையை வழி நடத்துபவர். லக்கினாதிபதி ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணத்தில் அமையாமல் மறைவு ஸ்தானமான 6,8,12ல் அமைவது நல்லது அல்ல. அப்படி அமைந்தால் வாழ்க்கையே மிகவும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். அது போல லக்கினாதிபதி பாதக ஸ்தானத்தில் இருக்க கூடாது.
     
ஒரு வேளை லக்கினாதிபதி பாவ கிரகமான  செவ்வாய், சூரியன், சனி ஆக இருந்தால் உபஜெய ஸ்தானமான 3,6,11ல் அமைவது உத்தமம். லக்கினாதிபதி சுப கிரகமாகி கேந்திரத்தில் வலு பெறுவது சுமாரான அமைப்ப தான். குறிப்பாக லக்கினாதிபதிக்கு பல்வேறு குறிப்புகள் உண்டு. அதாவது ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி ஆனவர் சுபரோ, பாவரோ அந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் யோகத்தை அளிக்க கூடியவர். அதாவது உதாரணமாக சனி பாவி என்றாலும் சனியின் பார்வை கெடுதியை தரும் என்றாலும், சனி பார்வை மகர, கும்ப லக்னத்தால் பிறந்தவர்களுக்கு நன்மையை செய்யும். சனி பகவான் சுபர் என்றால் எவ்வளவு நற்பலனை செய்வாரோ அது போல நன்மை பலனை மகர கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படுத்துவர்.

     அது போல இவ்வளவு சிறப்பு வாய்ந்த லக்கினாதிபதி எக்கிரக சேர்க்கை பெற்றால் நல்லது என்று பார்த்தாலே லக்கினாதிபதி ஆனவர் கேந்திர, திரிகோணதிபதி சேர்க்கை பெறுவது மிகவும் உத்தமம். குறிப்பாக லக்கினாதிபதி மறைவு ஸ்தானாதிபதி எனப்படும் 6,8,12க்கு அதிபதிகள் சேர்க்கை பெறுவது நல்லது அல்ல. அது மட்டும் இன்றி 6,8,12க்கு அதிபதிகளின் பார்வை பெறுவது நல்லது அல்ல. அது போல லக்கினாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுவது நல்லது என்று பார்த்தால் நட்பு கிரக சேர்க்கை பெறுவது மிகவும் உத்தமம். உதாரணமாக சூரியன், குரு, செவ்வாய், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் இவர்கள் இணைவது ஒருவர் மற்றொருவர் வீட்டில் இருப்பது ஒரளவுக்கு யோகத்தையும் மேன்மையும் ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். 
சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் அவர்கள் சேர்க்கையும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் வீட்டில் இருப்பதும் நற்பலனை உண்டாக்கும் அதை தவிர்த்து ஒரு கிரக பகை கிரகத்தின் வீட்டில் இருப்பது நல்லது அல்ல. உதாரணமாக சூரியன் லக்கினாதிபதியாகி சனி வீடான மகரம், கும்பத்தில் இருப்பது சிறப்பு அல்ல.  சனி லக்கினாதிபதி ஆகி செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகத்தில் இருப்பது, சூரியன் வீடான சிம்மத்தில் இருப்பது நல்லது அல்ல.
     
ஆக லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் நட்பு கிரக வீட்டிலோ, கேந்திர, திரிகோணத்திலோ அமைய பெற்றால் நல்லதொரு ஏற்றம் உயர்வு வாழ்வில் உண்டாகும்.


தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

No comments: