ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் உண்டாக கூடிய இன்பம், துன்பம், துக்கம், சந்தோஷம், நல்லது, கெட்டது இவை அனைத்திற்கும் நவ கிரகங்கள் தன் காரணம் என ஜோதிட ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நாமே அறிவோம். நவ கிரகங்கள் தான் நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றது. அவை ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கேற்ப நாம் அசைந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் கூட நவகிரகங்களே காரகத்துவம் வகிக்கின்றன. நவகிரகங்கள் தானே நம்மை ஆட்டுவிக்கின்றன.
அதனால் நான் படுத்துக் கொண்டே விட்டதை பார்த்து கொண்டிருக்கிறேன் எனக்கு எல்லா தேவைகளும் பூர்த்தியாகி விடுமா என நீங்கள் கேட்கலாம். சும்மா படுத்து சோம்பேறியாக திரிபவனை கூட கோட்டீஸ்வராக்கும் நவகிரகங்கள் உழைத்து உழைத்து ஒடாய் தேய்பவனை பிச்சைகாரனாகவே வைத்திருப்பதும் உண்டு. இதற்கு அவரவர் பிறக்கும் போதுள்ள ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பே காரணமாகும். ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கைக்கு தேவையானவைகளைப் பெற்று திருப்திகரமான வாழ்க்கை வாழவே விரும்புவான். சிலர் வறுமையான வீட்டில் பிறந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சுகமான வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் பிறக்கும் போது நல்ல வசதிவாய்ப்புகளுடன் இருந்து இறுதி காலம் வரை அப்படியே வாழ்வார்கள். சிலருக்கு வசதி வாய்ப்புகளுடன் பிறந்தாலும் எல்லாவற்றையும் இழந்து தரித்திரவாசியாய் வாழக்கூடிய சூழல் உண்டாகும். இன்னும் சிலரோ பிறந்தது முதல் இறப்பது வரை கஷ்ட ஜீவனமே நடத்துவார்கள். இதற்கெல்லாம் காரணமும், நவ கிரகங்கள் தான் நாம் செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் போன்றவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதைப் போல கேந்திராபத்திய தோஷத்தை பற்றியும் இங்கு பார்ப்போம். ஒரு மனிதனின் ஏற்றத் தாழ்விற்கு இந்த கேந்திராபதிபத்திய தோஷம் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு அமைந்தால் என்னென்ன பலன்களை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1ம் பாவத்திலிருந்து நம்முடைய ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகள் பற்றி அறியலாம். கேந்திர ஸ்தானமான 4ம் பாவத்தை கொண்டு ஒருவருக்கு உண்டாகக் கூடிய சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம் கல்வி, தாய்,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் போன்றவற்றைப் பற்றி அறியலாம். அது போல கேந்திர ஸ்தானமான 7ம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு உண்டாக கூடிய மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறியலாம். 10ம் வீடான கேந்திர ஸ்தானத்தை கொண்டு தொழில் வியாபாரம் உத்தியோகம் பற்றியும் அறியலாம். பொதுவாக கேந்திர ஸ்தானங்களில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் உண்டாகிறது என பார்க்கின்ற போது பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படுகிறது. சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமைந்து ஆட்சி பெறுகின்ற போது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நற்பலன்கள் உண்டாகத் தடையை எதிர் கொள்ள நேரிடுகிறது.
குறிப்பாக சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் தனித்து ஆட்சிப் பெறும் போது அதன் திசா புக்தி காலங்களில் பல்வேறு வகையில் சோதனையான பலன்களை அடைய வேண்டியிருக்கிறது. தற்போது நாம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் எது எனவும் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவாக பார்ப்போம்.
மேஷ இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், மகரமும் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் சொந்த வீடு வாகனம் அமையத் தடை, சுக போக வாழ்க்கைக்கு இடையூறுகள் உண்டாகிறது. அது போல 7ம் வீடான துலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் மண வாழ்க்கை விரைவில் அடையத் தடை அப்படி அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. கூட்டு தொழிலில் பிரச்சனைகள் நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.
ரிஷப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்துக் கொண்டோமானால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். இந்த வீட்டு அதிபதிகளில் லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமே சுபராவார். அவர் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். இதனால் ரிஷப லக்னகாரர்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவதில்லை.
மிதுன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக புதன் பகவானும் 7,10 இக்கு அதிபதியாக குரு பகவானும் உள்ளார்கள் . லக்னத்தில் புதன் ஆட்சிப் பெற்றால் லக்னாதிபதி என்பதால் நற்பலன்களையே உண்டாக்குவார். அதுவே 4ல் ஆட்சி உச்சம் பெற்றால் எதிலும் தடை தாமதங்கள், வீடு வாகனம் வாங்க தடை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாவதில் இடையூறுகள் உண்டாகும். அது போல 7 இல் குரு ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சனைகள். கூட்டு தொழிலில் சங்கடங்கள் ஏற்படுகிறது. 10இல் குரு ஆட்சிப் பெற்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடுகிறது-. புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கைப் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகிறது.
கடக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் 4 இல் ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாவதுடன் பாதகாதிபதி என்ற காரணத்தாலும் அளவு கடந்த சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. சந்திரன் லக்ன கேந்திரம் பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
சிம்ம இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10இல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக பாதிப்புகளை அடைய நேரிடும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
கன்னி இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறுசிறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4இல் குரு ஆட்சி பெற்றால் சுக வாழ்வில் தடை வீடு வாகனம் வாங்க இடையூறுகள் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 7இல் குரு ஆட்சிப் பெற்றால் மணவாழ்வில் பிரச்சனைகள் கூட்டு தொழிலில் தடைகள் உண்டாகும். 10இல் புதன் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல என்றாலும் புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலன்களையே வழங்குவார்.
துலா இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு இலக்னாதிபதி அதிபதி சுக்கிரனாவார். 10ஆம் அதிபதி சந்திரனாவார். சுக்கிரன் ஆட்சிப் பெற்றால் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். வளர் சந்திரன் ஆட்சி பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்கள் தொழில் வியாபார ரீதியாக இடையூறுகள் உண்டாகும். அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்து விட்டால் நற்பலன்களே உண்டாகும்.
விருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே சுப கிரகமாவார். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும் அது மட்டுமின்றி கார கோபாவ நாச ரீதியாகவும் களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல. இதனால் திருமண நடை பெற தடை தாமதங்களும் உண்டாகும். தாமதித்து திருமணம் அமையும் அதன் பின்னர் நற்பலன் உண்டாகும்.
தனுசு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக குருவும் 7,10 இக்கு அதிபதியாக புதனும் உள்ளனர். கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சுபர் வீடாக இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 1இல் குரு ஆட்சி பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 4இல் ஆட்சிப் பெற்றால் சுகவாழ்வில் பாதிப்பு, வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்குவதில் தடைகள், கல்வியில் இடையூறுகள் உண்டாகும். 7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் இடையூறுகள், திருமணம் நடைபெற தடைகள், தொழில் வியாபார உத்தியோகரீதியாக வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
மகர இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரக சுக்கிரன் 10 இல் ஆட்சிப் பெற்றால் தொழில் வியாபார ரீதியாக வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் அவர் திரிகோண ஸ்தானமான 5 இக்கும் அதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் ஆட்சிப் பெற்று அமைந்து விட்டால் மனக்குழப்பம், மண வாழ்க்கை ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் தேய்பிறை சந்திரனாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
கும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்தால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகி சுக வாழ்வு உண்டாக தடை, இல்வாழ்வில் பிரச்சனை, பெண்களால் இடைஞ்சல்கள் உறவினர்களால் வீண் மனக்கவலைகள் உண்டாகும்.
மீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4,7,10 ஆம் அதிபதிகள் சுபர்கள் என்பதால் 1இல் குரு ஆட்சிப் பெற்றால் சிறிது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 10இல் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடையூறுகள் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். 4,7ல் புதன் ஆட்சிப் பெற்றால் சுக வாழ்வு உண்டாவதில் தடை வீடு வாகனம் அமைவதில் தடை உண்டாகும். மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் ஏற்படும். இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும். அதுவே புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் ஒரளவுக்கு கெடு பலன் குறைகிறது-. குறிப்பாக அந்தந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் தான் பாதிப்புகள் அதிகமாகிறது. ஜென்ம இலக்னம் கேந்திர ஸ்தானம் என்றாலும் இலக்னாதிபதியாக இருந்து ஆட்சிப் பெற்றால் பெரிய கெடுதல்களை ஏற்படாது.
தொடர்புக்கு
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street , (Near Valli Thirumanamandapam) Vadapalani, Chennai-600026 My Cell - 0091 - 7200163001, 9383763001.9444072006.
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078