Sunday, December 18, 2016

ஜெ மறைவு கோள் நிலைக் காரணம்



இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். சினிமா துறையில் ஜெயலலிதாவாக ஜொலித்தாலும், அரசியல் வாழ்வில் அனைத்து தமிழக மக்களின் மனதிலும் அம்மாவாக இடம் பெற்ற புரட்சி தலைவி அவர்களின் இழப்பு தமிழக மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று. ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் எதிரிகளே அஞ்சி நடுங்கிய இந்த வீரமங்கைக்கு ஈடாகாது. நீ ஒன்றை பெறுவதற்கு தகுதியுடையவராக இருக்கிறாய் என்றால் அதை அடைய விடாமல் தடுப்பதற்கு பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது என்ற விவேகானந்தரின் வாக்குக்கேற்ப வாழ்ந்து காட்டியவர். 
மிதுன லக்கினம், மக நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்தவர் புரட்சி தலைவி அம்மா. ஜெனன ஜாதகத்தில் பல்வேறு ராஜயோகங்கள் பெற்றவர். மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார் என்ற பழமொழிற்கு ஏற்ப தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்து பலருக்கு சிம்ம செப்பனமாக விளங்கியவர். 
உபலக்கினத்திற்கு மாரக ஸ்தானமாக கருதப்படுவது 7,11ம் பாவம் ஆகும். தற்சமயம் மிதுன லக்கினத்திற்கு மாரக ஸ்தானமான 7ல் அமைந்த குருமகா திசை 22.08.2012 முதல் தொடங்கி நடைபெறுகிறது. மாராகாதிபதி, கேந்திராதிபதியான குரு வலுப்பெற்று திசை தொடங்கிய சுய புக்தி காலத்தில் 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றியினை பெற்றார். 
அடுத்து 10.10.2014 முதல் அம்மா அவர்களுக்கு ஆயுள்காரகனான சனியின் புக்தி தொடங்கியது. சனி 2ல் வக்ர கதியில், தசா நாதன் குருவிற்கு 8ல் அமைந்து புக்தி நடைபெற்றது. குரு - சனி சஷ்டாஷ்டகமாக அமைந்து அதன் தசா புக்தி தொடங்கியதும் நிதிமன்ற தீர்ப்பை எதிர் கொள்ள நேரிட்டது. அதன் பின் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பினை எதிர்கொண்டார். குரு தசா சனி புக்தியில் 11ல் உள்ள ராகுவின் அந்திரம் 03.08.2016 முதல் 20.12.2016 முடிய நடைபெறுகிறது. ராகு மிதுன லக்கினத்திற்கு மற்றொரு மாரக ஸ்தானமான 11ல் அமைந்து அந்திரம் நடைபெற்றதால் யாரும் எதிர்பாராத இந்த துயர நிகழ்வு நடந்துவிட்டது. நம் அனைவரையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு  விண்ணுலகை ஆள சென்று விட்டார். இந்த இழப்பு யாராலும் ஈடு செய்ய இயலாத இழப்பு. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

No comments: