Tuesday, December 27, 2016

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 26.12.2016

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 26.12.2016





கேள்வி  நான் கலைதுறையில் பணி புரிகிறேன் எப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும்
நாகராஜன், திருச்சி.

பதில்
                விருச்சிக லக்கினம், அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்துள்ள தங்களுக்கு கலைக்காரகன் சுக்கிரன் 7,12க்கு அதிபதியாகி 8ல் அமைந்து, 8ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்று இருப்பதாலும், ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டின் அதிபதி சூரியன் நவம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் உள்ளதாலும் கலைதுறையில் நீங்கள் சாதிக்க முடியும்.
                 பிறக்கும் போதே ஏழரைச்சனி நடைபெறும் போது பிறந்துள்ள உங்களுக்கு தற்போது கோட்சார ரீதியாக ஏழரைச்சனி நடை பெறுவதாலும், 3வது தசாவாக தற்போது கேது தசா 26.12.2020 வரை நடை பெறவுள்ளதாலும் எதிலும் முன்னேற தடை ஏற்படுகிறது. அதனால் தற்சமயம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவது நல்லது. அடுத்து 26.12.2020 முதல் தொடங்கவுள்ள சுக்கிர திசை காலங்களில் கலை துறையில் சாதனைகள் செய்ய கூடிய அளவிற்கு வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தினமும் வினாயகப் பெருமானை வழிபடுவது, கேதுவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது உத்தமம்.


கேள்வி  என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும்.
சீனிவாசன், கோவை.

பதில்&
                கன்னி லக்கினம், ரேவதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள தங்கள் மகனின் ஜாதகத்தில்  லக்கினத்திற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியான புதன் திரிகோண ஸ்தானமான 9ல் சுக்கிரனின் வீட்டில் இருப்பது சிறப்பான அமைப்பாகும், 10ம் வீட்டில் சூரியன் திக்பலம் பெற்று இருப்பதால் நல்ல வேலை, உயர்பதவி வகிக்கும் யோகம், செல்வம் செல்வாக்குடன் வாழும் அமைப்பு உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தற்போது வக்ரம் பெற்றுள்ள சனியின்புக்தி நடைபெறுதால் எதிலும் நிறைய இடையூறுகள் உண்டாகும். அடுத்து வரக்கூடிய புதன் புக்தி காலங்களில் முன்னேற்றங்கள் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது உத்தமம்.

கேள்வி  எனக்கு திருமணம் தாமதம் ஆகிறது எப்போது நடக்கும்.
ராஜேஷ். வேலூர்

பதில்&            
                ரிஷப லக்கினம், சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும், 7ம் அதிபதி செவ்வாய் நட்பு வீட்டில் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தாலும் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் இருப்பதும் தோஷம் கடுமையான ஆகும். தற்சமயம் சனி தசாவில் சுய புத்தி 24.05.2017 வரை நடைபெற உள்ளதால் 2017 மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறுதற்கான வாய்ப்பு உள்ளது.
                உங்கள் ஜாதகத்தில் சூரியனின் வீடான சிம்மத்தில் ராகு அமைந்திருப்பது பூர்வ ஜென்ம தோஷம் என்பதால் திருமண தடை ஏற்படுகிறது. தொடந்து குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது உத்தமம்.
 

கேள்வி           என் மகன் எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் நன்றாக இருக்கும்.
இப்ரகீம், பன்ருட்டி.

பதில்                
                                விருச்சிக லக்கினம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள தங்கள் மகனின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு கல்வி ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி 7ம் வீட்டில் திக்பலம் பெற்றுள்ளதால் தொழில் நுட்ப கல்வி, டெக்னிக்கல் கல்வி யோகம் சிறப்பாக இருக்கும். கல்வி காரகன் புதன் ஆட்சி பெற்று இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் வக்ரம் பெற்றிருப்பதால் ஜாதகர் கல்வியில் அடைய வேண்டிய இலக்கை அடைய இடையூறுகள் உண்டாகும். எதிர்காலத்தில் கற்ற கல்விக்கு சம்பந்தமில்லாத துறையை சார்ந்து சம்பாதிக்கும் அமைப்பை கொடுக்கும். தற்போது வக்ரம் பெற்று அமைந்துள்ள புதனின் திசை நடைபெறுவதால் எதிர் பார்க்கும் கல்வியை அடைய இடையூறு உண்டாகும். விஷ்ணுபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.


கேள்வி           தற்போது வெளிநாட்டில் என் கணவர் உடல்நல குறைவுடன் உள்ளார். என் மகன் ஜாதக ரீதியாக என் கணவர் ஆரோக்கியம் எப்படி இருக்கும்.
அமுதா, பன்ருட்டி.

பதில்                
                                துலா லக்கினம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள தங்கள் மகனின் ஜாதகத்தில் தந்தைகாரகன் சூரியன் ஆட்சி பெற்று அமைந்திருப்பதும், தந்தை ஸ்தானமான 9ம் வீட்டின் அதிபதி புதன் 12ல் உச்சம் பெற்ற அமைந்திருப்பதும் தந்தைக்கு நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் தற்போது தந்தை ஸ்தானமான 9ல் அமைந்துள்ள சனியின் தசாவில், லக்கினத்திற்கு 8ல் உள்ள ராகுவின் புக்தி 05.01.2019 வரை நடை பெறுவது ஜாதகரின் தந்தைக்கு சற்று சோதனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். லக்னத்திற்கு அட்டம ஸ்தானமான 8ல் உள்ள ராகுவின் புத்தி நடப்பதால் அம்மன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.



கேள்வி           என் மகள் எந்த துறையில் மேல் படிப்பு படித்தால் நன்றாக இருக்கும்.
தட்சிணாமூர்த்தி, பன்ருட்டி.

பதில்                
                                விருச்சிக லக்கினம், உத்திர நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்துள்ள தங்கள் மகனின் ஜாதகத்தில் 4ம் அதிபதி சனி 7ம் வீட்டில் வக்ர கதியில் அமைந்து இருப்பதும், கல்வி காரகன் புதனும் வக்ர கதியில் அமைந்து இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஜாதகருக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். இதனால் கடினமான கல்வியை தேர்ந்தெடுக்காமல் எளிதில் படித்து முடிக்க கூடிய  கல்வியாக தேர்ந்து எடுத்து படிப்பது நல்லது.
                ஜாதக ரீதியாக தொழில் நுட்ப கல்வி, டெக்னிக்கல் கல்வி, நிர்வாக தொடர்புடைய கல்வி போன்றவற்றை தேர்ந்தெடுத்தால் நற்பலன் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.




கேள்வி           எனக்கு எப்போது திருமணம் நடக்கும் எப்படி இருக்கும்.
                சுரேஷ் சென்னை.

பதில்
                                மேஷ லக்கினம், பரணி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2,7க்கு அதிபதி சுக்கிரன் 3ல் உள்ளார். சுக்கிரன் புதன் வீட்டில் புதனுடன் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் ராகுவின் சாரத்தில் அமைந்திருப்பதும், சூரியனுக்கு அருகில் அமைந்து அஸ்தங்கம் அடைந்திருப்பதும், சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி லக்கின, ராசி மேஷமாகி 2ல் ராகு, 7ல் சனி, 8ல் கேது அமைந்திருப்பது கடுமையான களத்திர தோஷம் என்பதால் மணவாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் யாரை திருமணம் செய்தாலும் விட்டு கொடுத்து சென்றால் தான் வாழ்க்கையை நடத்த முடியும். 7ல் உள்ள சனி வக்ர கதியில் அமைந்திருப்பதாலும், சுக்கிரன் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளதாலும் ஏதாவது குறை உள்ள பெண்ணை தான் திருமணம் செய்ய நேரிடும்.
                தற்சமயம் 7ல் உள்ள சனி புத்தி 11.08.2017 முடிய நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு ஆகும். அடுத்து வரும் புதன் புத்தியில் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு கோட்சார ரீதியாக 12.09.2017 முதல் குருவும் 7ல் சஞ்சரிக்க இருப்பதால் நற்பலனை அடைவீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.    


கேள்வி           எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும்.
உமாசங்கர். திருவண்ணமலை.

பதில்
                துலா லக்கினம், பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு லக்கினத்திற்கும், எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரன் 8ல் ஆட்சி பெற்று அமைந்து உள்ளது. பொதுவாக 8ல் அமையும் கிரகத்தின் தசா புத்தி காலங்களில் நற்பலன்கள் ஏற்படாது என்றாலும் சுக்கிரன் லக்கினாதிபதி என்பதாலும் பூச நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சுக்கிர தசா 4வது தசா என்பதாலும் முன்னேற்றமான பலன்களை பெற முடியும்.
                8ல் உள்ள சுக்கிரன் 2,7ம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உள்ளதால் எதிலும் தனித்து செயல்படாமல் கூட்டாக சேர்ந்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

கேள்வி           எனக்கு உத்தியோகம் அரசு துறையா. அல்லது தனியார் துறையா.
அஞ்சலி விழுப்புரம்

பதில்&
                                தனுசு லக்கினம், ரேவதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு லக்கின ராசிக்கு அதிபதியான குரு திரிகோண ஸ்தானமான 9ல் சூரியனின் வீட்டில் சூரியனின் சேர்க்கையுடன் ஆட்சி பெற்று உள்ளதால் உங்களுக்கு அரசாங்க வழியில் அனுகூலமான பலனை அடைய முடியும்.
                என்றாலும் 10ம் அதிபதி புதன் சனியின் நட்சத்திரத்தில் அமைந்து 8ல் மறைந்து இருப்பதால் நேரடியாக அரசு வேலை இல்லாமல் அரசு உதவி பெறும் நிறுவனத்தில் பணி புரியும் அமைப்பு உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் முயற்சி செய்வது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது உத்தமம்.
 `

கேள்வி           பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகன் எந்த துறையில் மேல் படிப்பு படித்தால் நன்றாக இருக்கும்.
வள்ளியம்மை. திருப்பத்தூர்

பதில்                
                                மிதுன லக்கினம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசியில் பிறந்துள்ள தங்கள் மகன் ஜாதகத்தில் 4ம் அதிபதியும் கல்வி காரகனுமான புதன் ஜென்த லக்னத்திற்கு 12ல் நட்பு கிரகமான சுக்கிரனின் வீட்டில் இருப்பது நல்ல அமைப்பாகும். குரு ஜென்ம லக்கினத்திலேயே அமைந்து இருப்பதாலும், ஜாதகர் உபய லக்கினத்தில் பிறந்திருப்பதாலும் எல்லையில்லா அறிவாற்றல் உண்டு.
                தொழில் நுட்பம், கணக்கு, கம்பியூட்டர், பி.. ஆர்க் தொடர்புடைய துறைகளில் மேற்படிப்பு படித்தால் சிறப்பாக இருக்கும். 12ம் வீட்டில் சனி, ராகு, புதன், சூரியன் இணைந்து இருப்பதால்  எதிர்காலத்தில் பன்நாட்டு நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பு உண்டாகும்.





No comments: