Monday, October 28, 2024

Today rasi palan - 28.10.2024

 


Today rasi palan -
28.10.2024

இன்றைய ராசிப்பலன் -  28.10.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-10-2024, ஐப்பசி 11, திங்கட்கிழமை, ஏகாதசி திதி காலை 07.51 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 ராகு

 

குரு (வ)

 

சனி (வ)

 

28.10.2024

செவ்

 

சந்தி

 

சுக்கி

 சூரிய புதன்

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  28.10.2024

மேஷம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

துலாம்

இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று வண்டி வாகனங்களால் பண விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

கும்பம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும்.

No comments: