Friday, October 18, 2024

Today rasi palan - 18.10.2024

 


Today rasi palan - 18.10.2024

இன்றைய ராசிப்பலன் -  18.10.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

18-10-2024, ஐப்பசி 01, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 01.15 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 01.26 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 01.26 வரை பின்பு சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 

 

 ராகு

சந்தி

குரு (வ)

செவ்

சனி (வ)

 

18.10.2024

 

 

 

 

சுக்கி

 சூரிய புதன்

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  18.10.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியிலேயே தடைப்படும். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று பிள்ளைகள் வகையில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

துலாம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.

தனுசு

இன்று தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனஅமைதி இருக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

Thursday, October 17, 2024

Today rasi palan - 17.10.2024

 


Today rasi palan - 17.10.2024

இன்றைய ராசிப்பலன் -  17.10.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-10-2024, புரட்டாசி 31, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.56 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ரேவதி நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் மாலை 04.20 வரை பின்பு அமிர்தயோகம். பௌர்ணமி.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 சந்தி ராகு

 

குரு (வ)

செவ்

சனி (வ)

 

17.10.2024

 

 

 

 

சுக்கி

 புதன்

கேது சூரிய

 

இன்றைய ராசிப்பலன் - 17.10.2024

மேஷம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 04.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகளை மாலை நேரத்தில் தொடங்கினால் அனுகூலப் பலன் ஏற்படும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு மாலை 04.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போது பேச்சில் கவனம் தேவை.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிலும் சற்று நிதானம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று பிள்ளைகள் வகையில் நிம்மதி குறைவு ஏற்படும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் சற்று குறையும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறக்க பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.

மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.