Tuesday, April 24, 2018

Today rasi palan - 25.04.2018


Today rasi palan - 25.04.2018
இன்றைய ராசிப்பலன் -  25.04.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
25-04-2018, சித்திரை 12, புதன்கிழமை, தசமி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மகம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு பூரம். சித்தயோகம் பகல் 03.06 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

புதன்
சூரிய
சுக்கி

               
திருக்கணித கிரக நிலை
25.04.2018

ராகு
கேது
சந்தி
செவ் சனி(வ)
 

குரு(வ)               



இன்றைய ராசிப்பலன் -  25.04.2018
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் தோன்றும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.  இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.
சிம்மம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பபார்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச் சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
மகரம்
இன்று எதிர்பாராத விண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
கும்பம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

No comments: