Friday, June 3, 2016

வார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016




தற்போது சென்னையில் நடைபெறும் 
புத்தக கண்காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள எனது படைப்புகள்

சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)
ISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்
  •  27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.
  • நலம் தரும் நவகிரக வழிபாடு.
  • காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம் 
  • திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்




காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  

விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

வார ராசிப்பலன் ஜீன்   05 முதல்  11   வரை   2016  வைகாசி  23  முதல்  29  வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


புதன் 
சூரிய சுக்கி


கேது 




ராகு குரு 

சனி () செவ்()




கிரக   மாற்றம்
08.06.2016 ரிஷப புதன்
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்           03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.
மிதுனம்         05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.
கடகம்              08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 07.56 மணி மணி வரை.
சிம்மம்            10.06.2016 காலை 07.56 மணி முதல் 12.06.2016 இரவு 06.13 மணி வரை.



இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

06.06.2016 வைகாசி 24 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

08.06.2016 வைகாசி 26 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன் 5ல் குரு 11ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள்     6,7

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட  ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன் 7ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால்  விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.


வெற்றிதரும் நாட்கள்     5,8,9.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் செவ்வாய் சனி 11ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     6,7,10,11.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் குரு 11ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5,8,9.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன் 10ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன்  கொடுப்பதைத் தவிர்க்கவும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5,6,7,10,11

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள்     6,7,8,9.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.


வெற்றிதரும் நாட்கள்     8,9,10,11.
சந்திராஷ்டமம்                      03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி செவ்வாய், 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். ளுத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகபெருமானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 5,10,11.
சந்திராஷ்டமம்      05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் கேது 6ல் சூரியன் 9ல் குரு சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5,6,7,
சந்திராஷ்டமம்      08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 07.56 மணி மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 11ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் சாதகப் பலளை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.



வெற்றிதரும் நாட்கள்     6,7,8,9.
சந்திராஷ்டமம்      10.06.2016 காலை 07.56 மணி முதல் 12.06.2016 இரவு 06.13 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.&&


வெற்றிதரும் நாட்கள்     8,9,10,11.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 3ல் சூரியன் 6ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிறுசிறு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசுரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.


வெற்றிதரும் நாட்கள்     5,10,11.


No comments: