Monday, April 30, 2012

சிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரன் சுக காரகன் என்பதால் அவர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால் நல்ல நிலையான ஜீவனம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, அதன் மூலம் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். அதிலும் இப்படி சேர்க்கைப் பெற்று பலம் பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் சிறப்பான வருமானமும், கூட்டுத் தொழில், சொந்த தொழில் செய்து சம்பாதித்து மிகப் பெரிய அளவில் செல்வந்தராகக்கூடிய  அற்புதமான அமைப்பும் உண்டாகும்.
சிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும் 10ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க முடியும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10 ல் சூரியன், குரு சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல வேலை அமைந்து அதன் மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.
சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.  நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும்.
சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்று 9,12 ல் ராகு அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு சம்மந்தமுடைய தொழில்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.  இதுமட்டுமின்றி சந்திரன் 10ல்  உச்சம் பெற்று அமைந்திருந்தால், கடல் சார்ந்த பணிகளில்  பணிபுரியும் அமைப்பு, ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டிடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொடர்புடைய  தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன் சேது சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல், ரசாயன தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிர பகவான் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்று சனி, புதனுடன் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும்.
அதுவே சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். அதிலும் குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Saturday, April 28, 2012

கடகம் லக்னமும் தொழில் அமைப்பும்

கடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வாயாவார். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் அதிபதியாகவும் விளங்குகிறார். கேந்திர திரிகோணத்திற்கு அதிபதியான செவ்வாய் லக்னாதிபதி சந்திரனுக்கு நட்புக் கிரகம் என்பதால், இந்த லக்னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாவார். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதினால், பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாகவும் அதிகார குணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு காரகனாக சூரியன், கடக லக்னத்திற்கு 10ம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வைப் பெற்றால் அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு, போலீஸ், ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் அமைப்பு, பலருக்கு உதவி செய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்று சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் உடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கட்டிடப் பொறியாளர் கம்ப்யூட்டர் பொறியாளராக விளங்கக்கூடும்.

செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, கெமிக்கல் ரசாயன தொடர்புடையத் துறை, வேளாண்மை, உணவு வகைகள், ஓட்டல் எனவும், மேற்கண்டவற்றுடன்  இணைந்து குரு பார்வையும் பெற்றால் அரசுத் துறையில் கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாகவே செவ்வாய் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளையும், அரசு வழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெற முடியும்.

செவ்வாய், குரு, புதன் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம், வங்கிப் பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில், பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை மற்றும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றின் மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு, புதன் போன்றவர்கள் 10ல் அமையப் பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி மற்றவர்களை வழி நடத்தக்கூடிய யோகம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு புதனுடன் சனியும் பலம் பெற்றால் வக்கீல் பணி, நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப் பெற்றால் கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலம், கட்டிடக்கலை ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்க முடியும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று உடன் சந்திரனும் இருந்தால் கலை, இசை சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வருமானம் அமையும்,

செவ்வாய் சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்வடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10ம்  வீட்டில் சனி நீசம் பெறுவதால் சனி 10ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றால் அடிமைத் தொழில், நிலையான வருமானமற்ற நிலை  ஏற்படும். செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் அனுகூலங்கள், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை மூலமும், உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001





Thursday, April 26, 2012

மிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவானாவார். குரு பகவான் ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்க்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

இது மட்டுமின்றி கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும். 10ம் அதிபதி குரு பகவான், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும் 10ல் சூரியன். செவ்வாய் அமையப் பெற்று திக் பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிக¬ள் வகிக்கக்கூடிய யோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10ல் அமையக்கூடிய சூரியன், செவ்வாயுடன் புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.

குரு பகவான் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய உன்னத திறன், வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகை துறை, எழுத்துத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும்.

குரு சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் ஆடை, ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது, பெண்கள்  உபயோகிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு சுக்கிரனுடன் சனியும் சேர்க்கை பெற்றால் வண்டி, வாகனங்கள், டிராவல்ஸ் தொடர்புடைய தொழில், வெளியூர்,  வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சுக்கிரனுடன் புதன் அல்லது சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை, சினிமா சார்ந்த  உட்பிரிவுத் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு, பங்களாக்களை கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து கெமிக்கல், இராசாயணம் தொடர்புடைய தொழில்களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமையாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும். சனி ராகு சேர்க்கை 10ம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம் சம்பாதிக்க நேரிடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001




Tuesday, April 24, 2012

ரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். சனி 9,10 க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்புக் கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாவார். ரிஷப லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி உச்சம் பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ இருந்தால், கொரவமான பதவிகளை  வகிக்கும் யோகம், அதன் மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்புக் கிரகங்களின் சேர்க்கையுடனிருந்தால் சொந்தத் தொழில்  செய்யக்கூடிய யோகம், நிலையான வருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில்  செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.  நல்ல வருவாய் அமையும்.

சனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10 ல்  அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது, ஆலோசனை கூறுவது, தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு, சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் செவ்வாய் சேர்க்கையுடனிருந்தால் கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டிடங்களை கட்டி விற்கும் துறை, கட்டிட வல்லுநராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து  உடன் சந்திரன் அல்லது  ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில்  ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.

பத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன்,  செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல்  செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு, அரசு சார்ந்த  துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, அதிலும் குரு பார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Sunday, April 22, 2012

மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம்  அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி, வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.

சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி வணிகம், வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு  தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருபகவானுக்கு 10ம்  வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக பணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும்.

மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில்  சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.

சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Friday, April 20, 2012

ஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ஜாதக அமைப்புகள்

வாழ்க்கையானது இன்ப, துன்பங்கள் நிறைந்தது. பொருளாதார நிலையானது ஒருவருக்கு சிறப்பானதாக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் வண்டிச் சக்கரத்தை தடையின்றி ஓட்ட முடியும். தொழில், வியாபாரம் செய்து பிழைப்பவர்களின் நிலையானது ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது.

பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் நூறு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு சில நேரங்களில் ஐம்பது ரூபாய் மட்டும் கிடைக்கப் பெற்று நஷ்டமடைய நேரிடும்.  அது போலத்தான் ஷேர் மார்க்கெட் என்பதும், பலர் தங்களின் சேமிப்பு பணத்தை லாபகரமான விஷயங்களில் முதலீடு செய்து முன்னேற்றமடைய விரும்புகிறார்கள். சிலர் தங்கம் போன்றவற்றிலும், சிலர் ஷேர் மார்க்கெட் போன்றவற்றிலும் முதலீடு செய்கிறார்கள். ஆனாலும் விலை ஏறும் போது இவற்றில் லாபமும், விலை குறையும் போது நஷ்டமும் அடைய நேரிடுகிறது.

வியாபாரம் செய்பவர்களும் அரிசி, பருப்பு, தானிய வகைகள் போன்றவற்றை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டு அதன் விலை ஏறும்போது விற்ற லாபம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டே  செயல்படுவார்கள். இருப்பில் வைத்துக்கொண்டு  விலை ஏறும்போது எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், அந்தப் பொருளின் விலை சட்டென சரியும் போது வாங்கிய விலையே வந்தால்  போதுமென் அவசரமாக விற்பனை செய்து விடுவார்கள். இப்படி நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்து ஒருவரால் லாபத்தை அடைய முடியுமா அல்லது நஷ்டம்  உண்டாகுமா என ஜோதிட ரீதியாக பார்ப்போம்.

எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை எப்படி உண்டாகிறது? என ஒருவரின் ஜாதக ரீதியாக பார்த்தோமானால், உபஜய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3, 6, 10, 11 ம் வீடுகள் பலம் பெறுகின்றபோது எதிர்பாராத திடீர் தன யோகம் உண்டாகி வாழ்க்கை முன்னேற்றமடைகிறது. அதிலும் குறிப்பாகப் பார்த்தோமானால் 6,11 ம் வீடுகள் பலம் பெறுகின்றபோது திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வருகிறது. உபஜய ஸ்தானத்தில் பாவகிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் போன்றவை நட்பு நிலையுடன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நவகிரகங்களில் யூகிக்க முடியாத அளவிற்கு திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவர் ராகு பகவானாவார். இந்த ராகு பகவான் உபஜய ஸ்தானங்களில் அமையப் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெறுவாரேயானால் எதிர்பாராத தனவரவுகள் மூலம் வாழ்க்கைத் தரமானது திடீரென்று உயரும்.

அதுபோல ஒருவர் ஜாதகத்தில் 6,11 க்கு அதிபதிகள் பலம் பெறுவதும், பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல அமைப்பாகும். திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றி பார்க்கின்ற போது, தன ஸ்தானமான 2ம் வீடு மற்றும் 5,9 ம் வீடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2,5,9,11 க்கு அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனைப் பெற்றாலும், இணைந்து பலம் பெற்றிருந்தாலும் திடீர் தனச்சேர்க்கையானது அமையும்.



சூரியன் 6 அல்லது 11ம் வீட்டில் பலம் பெற்று 5,9ம் வீடுகள் சாதகமாக இருந்தால் தந்தை, மூதாதையர்கள் மற்றும் அரசு வழியில் திடீர் தனயோகம், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஜாதகரைத் தேடி வரும்.

சந்திரனானவர் 6 அல்லது 11 ல் பலம் பெற்றிருந்தால் உணவு தானியங்கள், தண்ணீர், பயணங்கள் மூல மாகவும் எதிர்பாராத லாபங்கள், தனச்சேர்க்கைகள் உண்டாகும்.

செவ்வாய் பகவான் 6 அல்லது 11 ல் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை மூலமாக எதிர்பாராத யோகம், கௌரவ பதவிகள் தேடி வந்து வாழ்க்கை தரமானது உயரக்கூடிய வாய்ப்பு கிட்டும்.

புதன் குரு 6,11 ம் வீடுகளில் பலம் பெற்றிருந்தால் பங்குச் சந்தை, வணிகம், பயணத்தால் அனுகூலங்கள், முதலீடுகள் மூலமாக லாபங்கள் உண்டாகும்.
சுக்கிர பகவான் பலம் பெற்று 6,11 ம் வீடுகளும் பலம் பெற்று அமைந்தால் கலை, சினிமா, ஆடை, ஆபரணங்கள், ரியல் எஸ்டேட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி 6,11 ல் அமையப் பெற்றால், சில சட்ட விரோதமான சட்ட சிக்கல்கள் நிறைந்த செயல்கள் மூலமாக எதிர்பாராத தனச் சேர்க்கையினை அடைவார்கள்.

அதுவே 6,11 க்கு அதிபதிகள் விரையாதிபதி சேர்க்கைப் பெறுவதும், பாதகாதிபதி சேர்க்கைப் பெறுவதும், விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமையப் பெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால், எதிர்பாராத தனவரவுகள் உண்டாவதற்கு தடை ஏற்படும். நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற லக்ன காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் இடம் பாதக ஸ்தானம் என்பதனால்  பங்குச் சந்தை, லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

ஒருவர் ஜாதகத்தில் 8,12 ம் வீடுகள் கெடுதியான ஸ்தானம் என்றாலும் 3,6,8,12 க்கு அதிபதிகள் இடம் மாறி மாறியிருந்தாலும், பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. இதனால் இந்த வீட்டில் அமைந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் எதிர்பாராத தன வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கை முன்னேற்றமடையும்.

தன  யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் கோட்சார ரீதியாக கிரக நிலைகளின் சஞ்சாரமும் சாதகமாக இருந்தால், எடுத்துக்காட்டாக சனி, 3,6,11லும் குரு 2,5,7,9,11 லும் சஞ்சாரிக்குமேயானால் அந்த யோகத்தின் பலன் பலமானதாக அமைந்து சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் அதுவே அஷ்டமச் சனி, ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும் அந்த யோகத்தின் பலமானது குறைந்து லாபம் தடைபடும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Wednesday, April 18, 2012

வெளியூர், வெளிநாடு யோகம்


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். சிலர் என்னதான் பிறந்த ஊரில் படித்து வளர்ந்தாலும் ஜீவன ரீதியாக சம்பாதிப்பதற்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். பிறந்த நாட்டை விட அந்நிய நாடுகளில்தான் அதிக சம்பளம் கொடுப்பதாக மக்கள் நம்புவதே இதற்கு காரணமாகும். சொந்த ஊரில் மாசம் 10,000 ரூபாய்க்கு 12 மணி நேரம் மாடாய் உழைப்பவர்கள், அதே 12 மணி நேர வேலைக்கு அயல்நாடுகளில் 40, 50 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்ற ஆசையில் செல்கிறார்கள். 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் இங்கே சேமிக்க முடியாத பணத்தை இரண்டே வருடங்களில் அயல்நாடுகளுக்குச் செல்பவர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்.

இது மட்டுமின்றி என் கணவர் அயல்நாட்டில் பணிபுரிகிறார் என்பதை மனைவி மார்கள் சொல்லிக் கொள்வதிலும் பெருமையாக நினைக்கிறார்கள். வாழ்க்கைத்தரம் உயர்வடையும் குடும்பத்தால் ஆடம்பர வாழ்க்கை வாழவும், வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு பணம் அனுப்புவோர்களில் எத்தனை பேர் தங்கள் சுகங்களை தொலைத்திருக்கிறார்கள் என்று அவர்களை கேட்டால்தான் தெரியும். ஒருபுறம் ஏற்றத்தை கொடுக்கும் அயல்நாட்டு வாழ்க்கையானது, ஒரு புறம் இறக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறினால் மிகையாகாது.

வெளிநாடு சென்று பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சம்பாதிக்கும் ஆசையில் செல்லும் சிலர் எந்தவித பலனையும் அடையாமலேயே வெருங்கையுடன் ஊர் திரும்பினால் போதும் என்ற நினைப்பில் வந்துவிடுகிறார்கள். ஜோதிட ரீதியாக அயல்நாடுகளுகுகுச் சென்று சம்பாதிக்கும் யோகம் யாருக்கு அமையும் என்று பார்த்தோமானால், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 9.12 க்கு அதிபதிகள் பலம் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ, ஒருவருக்கொருவர் பார்வை செய்தோ அமைந்திருந்தாலும் 9,12 க்கு  அதிபதிகள் இணைந்து 9 அல்லது 12 ல் அமைந்திருந்தாலும் அவருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று  சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பயணங்களுக்கு காரகனான சந்திரன் பலம் பெற்று 9, 12 க்கு அதிபதிகளும் பலம் பெற்றிருந்தால் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு  சென்று வரும் அமைப்பு, பயணங்களால் அனுகூலம், அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமின்றி 9,12 க்கு அதிபதிகளுடன் 10 ம் அதிபதி இணைவது அற்புதமான ராஜ யோகமாகும். இதனால் ஜாதகருக்கு வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். 9,12 க்கு அதிபதிகள் இணைந்து ஜல ராசிகள் என கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் அமையப் பெற்றால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 9,12  க்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்து 9 அல்லது 12 ல் சனி அல்லது ராகு அமையப் பெற்று, அதன் திசை நடைபெற்றாலும் 9,12 க்கு அதிபதிகளுடன் சனி அல்லது ராகு இணைந்து திசை நடைபெற்றாலும் கடல் கடந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு, வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் 2க்கு  மேற்பட்ட கிரகங்கள் 9,12 ல் பலமாக அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் வாய்ப்பும் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

ஒருவருக்கு 9,12 ம் ஸ்தானங்கள் பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டாவதைப் போல 3ம் அதிபதியும் பலம் பெற்றிருந்தால் குறுகிய கால பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு, அடிக்கடி பயணங்கள் ஏற்படும் அமைப்பு உண்டாகும். குறிப்பாக, ஒருவருக்கு சந்திரனுடைய திசை அல்லது புக்தி நடைபெற்றால் அடிக்கடி தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகங்கள் இருந்தாலும் அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது முக்கியமானதாகும். இந்த தசாபுக்தி காலங்களில் கோட்சார ரீதியாகவும் குரு, சனி போன்ற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். அதுவே, சாதகமான தசாபுக்தி நடைபெறும் காலங்களில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடைபெற்றாலும் குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் தடைபடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Monday, April 16, 2012

யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெறலாம்

படித்து முடித்தவுடன் இன்றைய இளைஞர்கள் சும்மா இருக்க விரும்புவதில்லை. ஏதாவது ஒரு தொழிலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். உடன் படித்த நண்பர்கள் அல்லது உற்றார், உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, சிறப்பாகச் செயல்பட்டு, அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடைந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பினை பெறுகிறார்கள்.

 ஒருவர் தனி நபராகச் செயல்படாமல் யாரையாவது துணைக்கு சேர்த்துக் கொண்டு கூட்டாக சேர்ந்து தொழில் செய்வதே கூட்டுத் தொழிலாகும். எல்லோருக்குமே அரசாங்க பணி கிடைக்குமா என்றால், அது இயலாத காரியம்தான். மற்றவர்களிடம் கைகட்டு சேவகம் செய்ய எல்லோருமே விரும்புவார்களா? என்றால், அதுவும் இயலாதது தான். சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் நம்பிக்கைக்குரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் செய்கிறார்கள்.

இப்படி கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் ஜோதிட ரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தோமானால், ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடம் தொழில் ஸ்தானமாகும். 10க்கு, 10ம் இடமான 7ம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7ம் அதிபதி 10ம்  அதிபதி சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்தாலும், 10ம் அதிபதி 7ல் அமையப் பெற்றாலும் 7,10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத் தொழில் செய்து  சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 10ம் வீட்டை விட 7ம் வீடு பலம் பெறுமேயானால் கூட்டுத்தொழில் யோகமானது சிறப்பாக அமையும்.

ஒருவருக்கு கூட்டுத் தொழில் யோகம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும் போது ஒரு ஆணின் ஜாதகத்தில் 7,10 க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே  மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் அதன் மூலம் லாபங்கள் ஏற்படும்.

ஏழாமிடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால் 7ம் அதிபதி 3,6,8,12 ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டு சேர்ந்து செய்வதை தவிர்த்து தனித்து செயல்படுவதே மிகவும் நல்லது. 7ம் அதிபதி கேந்திர திரிகோண கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரக சேர்க்கையுடனிருந்தால், கூட்டுத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10ம் அதிபதியுடன் இணையும் பலம் பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் அவருக்கு தொழில் ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.

அதுபோல 3,11 க்கு அதிபதிகள் 10ம் அதிபதியுடன் சேர்ந்து  செவ்வாய் பலம் பெற்றிருந்தால் உடன் பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியை சார்ந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5,9 ம் அதிபதிகள் பலம் பெற்று 10ம் அதிபதியுடன் இணைந்திருந்து 5,9  ம் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தை காரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தின் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்த செய்யக்கூடிய அமைப்பு, தந்தை வழி மூதாதையர்கள் செய்த தொழிலை செய்யும் அமைப்பு, தந்தை வழி உறவுகளுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் அமைப்பு உண்டாகும்.

10 ம் அதிபதியுடன் 4ம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கை பெற்றிருந்தால் தாய் வழி உறவுகள்  மற்றும் தாய் மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

10 ம் அதிபதியுடன் 2ம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

10 ம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம் பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி பலம் பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலை ஆட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து, அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி 5ம் அதிபதியின் சேர்க்கை பெற்று, புத்திரகாரகன் எனவர்ணிக்கப்படக் கூடிய  குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் அவருடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, ஒருவரது ஜாதகத்தை ஆராயும் போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கேற்ற நபர் ஜாதகருக்கு கடைசி வரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம் கிரகம் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரை கூட்டாகச் சேர்த்து தொழில்  செய்யும் போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற லக்னங்களின் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதை நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Saturday, April 14, 2012

தொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்

ஒருவருக்கு எவ்வளவு திறமைகள், கல்வித் தகுதி, மற்றவர்களின் உதவி இருந்தாலும் சம்பாதிக்கக்கூடிய யோகமானது ஜாதக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது அமையாது. மற்றவர்கள் கொடுத்தும்  ஒருவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து லாபத்தை அடைந்தவர்களும் இல்லை. அதுபோல நஷ்டத்தை அடைந்தவர்களும் இல்லை. எவ்வளவுதான் செல்வம் செல்வாக்குடன் இருந்தாலும், சம்பாதித்து லாபத்தை அடையக்கூடிய யோகம் இருந்தால் மட்டுமே லாபம் அமையும்
.
ஜோதிடத்தில் பொதுவான கருத்து ஒன்று உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ஒரு திசையானது சிறப்பாக வேலை செய்தால் மட்டும் போதும். அவரின் வாழ்நாள் முழுவதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு செல்வம் சேர்ந்து விடுவது மட்டுமின்றி அவரின் சந்ததியினருக்கும் போதிய செல்வங்களை சேர்த்து வைத்துவிட முடியும். சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தினை அடையக்கூடிய அளவிற்கு சக்தியையும் கொடுக்கும்.

ஒருவருக்கு சொந்தத் தொழிலானது சிறப்பாக அமைய வேண்டுமானால், 10ம் வீட்டின் அதிபதியும், 10ம் வீடும் பலமாக இருப்பது மட்டுமின்றி, அவருக்கு நடக்கக்கூடிய தசா புக்தியானதும் பலமாக இருந்தல் மிகவும் அவசியம். தசா புக்தி என்பது ஒருவரின் பிறந்த கால தசா இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புக்திகளை குறிப்பிடுவதாகும். இந்த தசா புக்திகளைக் கொண்டுதான் அவருக்கு உண்டாகக்வடிய பலா பலன்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நவக்கிரகங்கள் சுழற்சி முறையில் நம்மை ஆட்சி செய்வது தான் தசா புக்தி ஆகும். குறிப்பாக, ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றனரோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் திசையானது முதலில் நடக்கும். அடுத்தடுத்து மற்ற கிரகங்களின் திசைகள் சுழற்சி முறையில் நடைபெறும். நவகிரகங்களின் மொத்த தசா காலங்கள் 120 வருடங்களாகும். திசையின் உட்பிரிவாக ஒவ்வொரு கிரகத்தின் திசையிலும் ஒன்பது  கிரகங்களின் புக்திகள் நடைபெறும். தசா புக்திகளின் காலங்கள் 120 வருடங்கள் என்பதனால், எல்லாத் திசைகளும் ஒருவரை ஆதிக்கம் செய்ய முடியாது. அவர் வாழும் கால அளவை வைத்தே கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.

ஒருவர் வாழ்வில் முன்னேற்றமான பலனை பெறவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் அதற்கேற்ற யோகங்கள் அமைந்திருக்க வேண்டும். யோகங்கள் அமைவது மட்டுமின்றி அந்த யோகத்தை தரக்கூடிய தசாபுக்தியும் அவரின் வாழ்நாளில் வரவேண்டும். அதிலும் தொழிலில் லாபத்தை அடைய தொழில் செய்யும் காலத்தில் வரவேண்டும். நடக்கக்கூடிய திசையானது பலம் பெற்ற கிரகத்தின் திசையாகவும் இருக்குமேயானால் எதிர்பார்க்கும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10 லும், திரிகோண ஸ்தானங்களாகிய 1,5,9 லும், தனலாப ஸ்தானங்களாகிய 2,11 லும் நவகிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் 1,4,5,7,9,10 ல் அமைவதும், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவைகள் திரிகோண ஸ்தானங்களைவிட உபஜய ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,10, 11 அமைவதும் நல்லது. மேற்கூறியவாறு கிரகங்கள் அமையப்பெற்றால் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும்  அமையும் கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் மட்டுமே நற்பலனை ஏற்படுத்தும்.

நவகிரகங்களின் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர்  நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.

உதாரணமாக, சனியானவர் 3,6, 10, 11 ல் அமைந்தால் அதன் தசா புக்தி காலத்தில் நற்பலன்களை வாரி வழங்குவார் என்றாலும், சனி தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, அதன் வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் போன்றவற்றில் அமையப்பெற்றோ, தனது சொந்த வீடான மகரம், கும்பத்தில் அமைந்தோ, அதன் தசா புக்தியானது நடைபெற்றால் நற்பலன்களை அடைவது மட்டுமின்றி எல்லா வகையிலும் லாபங்களை எளிதில் அடைய முடியும். அதுவே சனியானவர் தனக்கு பகை கிரக வீடான சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருந்து அதன் தசாபுக்தியானது நடைபெற்றால் எதிர்பார்க்கும் நற்பலன்களை அடைவதில் தடைகள் உண்டாகும்.

ஆக, நவகிரகங்கள் வலுப்பெற்று சாதகமாக அமையப்பெற்றால் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமானப் பலன்கள் கிடைக்கும். அதுவே, நடக்கக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளுடடைய திசையாகவோ, மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசையாக இருந்தாலும் (சுபர் 3,6,8,12 பாவிகள் 8,12) ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசை பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் திசை, பாதக ஸ்தானத்தில்அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவும், இருந்தாலும், தொழிலில் லாபங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட இடையூறுகள் உண்டாகும்.

தசாபுக்தி  பலன்களை பற்றி தெளிவாக ஆராயும் போது லக்னாதிபதிக்கு பகை கிரகங்களின் தசா புக்தியிலும், தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமமான 6,8 ல் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தி காலங்களிலும் தொழில் ரீதியாக லாபங்கள், வெற்றிகள் அடைய தடைகள் ஏற்படும். இது மட்டுமின்றி ஒருவருக்கு நடைபெறக்கூடியது 3&வது  திசை காலங்களிலும் அவர் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும் முழு பலனை அடைய முடியாமல் எதிலும் ஒரு  திருப்தியற்ற நிலையே உண்டாகும். 3&வது திசையானது என்னதான் யோகம் பெற்ற கிரகத்தின் திசையாக இருந்தாலும் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய தடைகள் ஏற்படுகிறது. 3&வது திசையானது தொழிலில் முன்னேற்றம் தராது என்றாலும், தனித்து செயல்படாமல், யாருடனாவது கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் போது ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

என்னதான் தொழில் செய்தாலும் சிலருக்கு வரக்கூடிய லாபமானது, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிக்க முடியாமல் போகும். ஆனால் ஒரு சிலருக்கோ தொழில் மூலம் அபரிதமான லாபம் கிடைக்கப்பெற்று அதன் மூலம் வீடு, மனை, வண்டி, வாகன சேர்க்கைகள் சுகமாக வாழும் யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். இப்படி யோகமாக வாழும் வாய்ப்பு யாருக்கு அமைகிறது என்று ஆராய்ந்தோமேயானால், சுக்கிரன், புதன், சனி, ராகு போன்ற கிரகங்களின் திசைகள் நடைபெறும் போது நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம், தொழில் ரீதியாக உண்டாகிறது. சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது திசை நடப்பில் இருப்பவர்கள் தொழிலில்  பெரிய அளவில் லாபத்தை அடைவதில்லை.

எனவே, தொழில் ரீதியாக ஒருவர்  முன்னேற்றமடைய வேண்டுமானால் என்னதான் யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் நடக்கக்கூடிய தசா புக்தியானது பலமாக இருந்தால் மட்டுமே சிறந்த லாபத்தை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Friday, April 13, 2012

உத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் உண்டாகக்கூடிய காலமும்

உத்தியோகம் புருஷ லட்சணணம் என்பார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்த சம்பாதிப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கழுதை மேய்த்தாலும் அரசு துறையில் கழுதை மேய்ப்பவனுக்குத்தான் தன் பெண்ணைக் கொடுப்பேன் என்று பெற்றோர்கள் அடம் பிடிப்பார்கள். ஆனால், தற்போது சம்பாதிப்பதுக்கு ஏதுவாக தனியார் துறைகளிலும் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அரசு வேலையை அவ்வளவாக யாரும் எதிர்பார்ப்பதில்லை. மனிதனால் பிறந்த அனைவருக்குமே நிறைய சம்பாதிக்க வேண்டும், உயர்வான பதவிகளை வகிக்க வேண்டும், சமுதாயத்தில் நல்லதொரு வாய்ப்பினை பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். இப்படி உத்தியோக ரீதியாக  சம்பாதிக்கக்கூடிய யோகம் யாருக்கு உண்டாகும் என்று ஜோதிட ரீதியாக ஆராயும் போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 10ம் இடமானது தொழில் உத்தியோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாக உள்ளது. 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 10ல் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதிபலம் பெற்றிருந்தாலும், தொழில் செய்த சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே 10ல் ஒரு கிரகம் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 10 ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் உத்தியோகம் செய்த சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
நல்ல உத்தியோகம் என்பது ஒருவருக்கு அமைய வேண்டுமென்றால் நவகிரகங்கள் பலமாக இருத்தல் அவசியம். நவகிரகங்களில் உத்தியோககாரகன் செவ்வாயாவார்.  செவ்வாய் பலம் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு  தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், உபய ஜய ஸ்தானம் என கூறக்கூடிய 3,6,10,11 ல் அமையப் பெற்று நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், உயர்ந்த உத்தியோகத்தில்  பணிபுரியக் கூடிய உன்னத நிலை ஏற்படும். நிர்வாக காரகனான செவ்வாய் 10ல் அமைந்தால் திக் பலம் பெறுவார். அப்படி செவ்வாயே திக் பலம் பெற்று  அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதாயத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரகமான குருவின்  பார்வையானது செவ்வாய்க்கோ, 10ம் வீட்டிற்கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

நவகிரகங்களில் அரசனாக விளங்கக்கூடிய சூரியன் 10ம் அதிபதியாக இருந்தாலோ, 10ம் வீட்டில் அமைந்து குருபார்வை பெற்றாலோ, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும்.  ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களின் ஆதிக்கம் இருக்குமேயானால், பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். 10ம் அதிபதியுடன் 3,6,8,12 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 10ம் அதிபதியே 3,6,8,12 ல் மறைந்திருந்தாலும், பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கை மற்றும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் சொந்த தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்து சம்பாதிப்பது சிறப்பு.

ஒருவருக்கு என்னதான் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோக அமைப்பு கொண்ட ஜாதகமாக இருந்தாலும், சம்பாதிக்கக்கூடிய வயதில் வரக்கூடிய திசையானது சாதகமானதாக இருந்தால் மட்டுமே தொழில் செய்து  சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே, அந்த வயதில் நடைபெறக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,8,12 க்கு உரிய கிரகங்களின் திசையாகவோ ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசையாகவோ, பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகத்தின் திசையாகவோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவோ இருக்குமேயானால், முதலீடு செய்து தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்வதே நற்பலனைத் தரும். பொதுவாக, ஒருவருக்கு நடக்கக்கூடிய  திசையானது சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது போன்ற கிரகங்களின் திசையாக இருந்தால் பெரும்பாலும் உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்.

அது போல ஒருவருக்கு நடக்கக்கூடிய திசையானது 3 வது திசையாக இருந்தாலும், உத்தியோக அமைப்பு உண்டாகிறது. உதாரணமாக, செவ்வாயின் நட்சத்திரங்களாகிய மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக குரு திசை வரும். குருவின் நட்சத்திரங்களாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக புதன் திசை வரும்.  இதுபோல 3வது வரும் காலங்களில் பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். சனி பார்வையானது 10ம் வீட்டிற்கு இருக்குமேயானால், அவர் எவ்வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும், கடினமாக உழைத்தாலும், தகுதிக்கு குறைவான உத்தியோக அமைப்பே உண்டாகும். அவ்வளவாக முன்னேற்றத்தை அடைய முடியாது.
பணிக்கு சென்றோம், வந்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் உத்தியோக ரீதியாக உயர்வுகளை பெறுவதே  முக்கியமானதாகும். சிலர் சாதாரண பதவிகளில்  இருந்தாலும், அவரின் திறமையால் படிப்படியாக முன்னேறி உயர்வான பதவிகளை அடைவார்கள். ஆனால், சிலருக்கு ஆரம்பத்திலேயே உயர் பதவியை வகிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக  உயர்வுகளை எப்பொழுது பெறமுடியம் என பார்க்கும் போது 10ம்  அதிபதியின் தசாபுக்தி காலங்களிலோ, 10ம் அமையப்பெற்ற  கிரகங்களின் தசா புக்திகளின் காலத்திலோ, 10ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்ற கிரகங்களின் தசா புக்திகளின் காலங்களிலோ, 10ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகளின் காலங்களிலோ, வலுப்பெற்ற கேந்திர திரிகோணாதிபதிகளின் தசா புக்திகளின் காலங்களிலோ, உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி பகவான் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு, 3,6,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும், ஆண்டு கோளான குரு பகவான், 2,5,7,9,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும் உத்தியோக ரீதியாக உயர்வுகள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் மேன்மைகள் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Tuesday, April 10, 2012

சொந்த தொழில் செய்யும் யோகம்


தொழில் செய்து சம்பாதிப்பது என்பது மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கே அமையும். நல்ல நிர்வாகத் திறனும், தொழில் செய்வதற்கான முதலீடும் ஒருவரிடத்தில் தடையின்றி இருக்குமானால், அவரால் கண்டிப்பாக சொந்தத் தொழிலில் நிறையவே சம்பாதிக்க முடியும். சொந்த தொழிலில் அதிக லாபம் பெற்று முன்னேறியவர்களும் உண்டு. நஷ்டமடைந்து காணாமல் போனவர்களும் உண்டாகும். வருமானம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு முக்கியமான அம்சமாகும். அதுவும் சொந்த தொழில் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் அமைந்து விட்டால் தனிப்பட்ட நபரின் பொருளாதார தேவைகள் பூர்த்தியடைவதோடு, அவரைச் சார்ந்து பணபுரிபவர்களின் குடும்பங்களும் பிழைக்கும். 

சொந்தமாக தொழில் செய்யக்கூடிய யோகம் என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. என்னதான் வங்கிகளில் கடன் கொடுத்தாலும் தொழிலை திறமையாகச் செய்து வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து கன்னியமாக வாழ்வது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது. 

இப்பொழுது சொந்தத் தொழில் யோகமானது ஒருவருக்கு எந்த கிரக அமைப்புகளால் உண்டாகிறது என்பதனை பற்றி ஜோதிட ரீதியாக ப
£ர்ப்போம். 

ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடமானது தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 10 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், மூல திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் வீட்டின் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், திரிகோண ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 1,5,9 க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப் பெற்றிருந்தாலும் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகிறது. கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்ற 10ம் அதிபதி, பரிவர்த்தனை பெறுவதும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் சேர்க்கை பெறுவதும், சொந்த தொழில் யோகத்தை பலப்படுத்தும் அமைப்பாகும். 10ம் அதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெறக்கூடிய, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைவது சிறப்பாகும்.

ஜோதிடத்தை பொறுத்தவரை தொழில் ஸ்தானமான 10ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அத்தனை தொழில்கள் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும். அதுபோல 10ம் அதிபதி எத்தனை கிரக சேர்க்கை பெற்று பலம் பெற்றிருக்கிறதோ அத்தனை விதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும். 

சொந்த தொழில் செய்வது லாபத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போட்ட முதலீட்டிற்கு மேலாக பல மடங்கு லாபத்தை பெற்றால்தான் சொந்தத் தொழிலில் காலூன்றி நிற்க முடியும். போட்டி பொறாமைகள் நிறைந்த சமுதாயத்தில் லாபத்தை அடைவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.  எதிர்பார்த்த லாபத்தை அடைய 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11ம் வீடும், 11ம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் மேலும் மேலும் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். அதற்கும் தன ஸ்தானமான 2ம் வீடும், 2ம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவதன் மூலம் பணவரவானது தாராளமாக அமையும். 

பொதுவாக ஒருவருக்கு சிறப்பான சொந்த தொழில் யோகமானது அமைய 10ம் இடம் பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னமும், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படகூடிய சந்திரனும் பலம் பெற வேண்டும். லக்னாதிபதி பலம் பெற்றால் நல்ல தைரியம், துணிவு, சுயமாக சிந்திக்கும் ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். அதுபோல மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலம் பெற்றால் நல்ல மனவலிமை இருக்கும். சிந்தித்து செயல்பட்டு திடமான முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

நவகிரகங்களில் முதன்மை கிரகமாக வர்ணிக்கப்படக்கூடிய சூரிய பகவான் பலம் பெற்று அமைந்துவிட்டால் அரசு வழியில் ஆதரவுகள் சமுதாயத்தில் நல்ல பெயர், புகழ், கௌரவம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். அதுவே சூரியன் & சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பலமிழந்திருந்தாலும் அரசு வழியில் தேவையற்ற கெடுபிடிகள் ஏற்படும்.

புதன் பகவான் பலம் பெற்று ஒருவர் ஜனன ஜாதகத்தில் அமையுமேயானால் தொழில் ரீதியாக எதிலும் கணக்கிட்டு செயல்படும் ஆற்றல், சிந்தித்து செயல்படும் திறன், செய்யும் தொழிலில் பிறரிடம் எப்படி திறமையாக பேசவேண்டுமோ அப்படி திறமையாக பேசி காரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல், போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை தன் அறிவு திறமையால் சமாளித்து முன்னேற்றம் பெறக்கூடிய ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக அமையும். 

தனக்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் தொழில் ரீதியாக பண நடமாட்டங்கள் சிறப்பாக அமையும். பணம் கொடுப்பது வாங்குவது போன்றவற்றில் சரியாகச் செயல்பட்டு லாபத்தை அடைய முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். அதுவே குரு பலம் இழந்திருந்தால் செய்யும் தொழில் ரீதியாக சரியான லாபத்தை அடைய தடைகள் உண்டாகும். பணவிஷயத்தில் மற்றவர்களிடம் ஏமாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.

சனி பகவானவர் தொழில் காரகனாகவும் சிறந்த வேலையாட்கள் அமைவதற்கு காரகனாகவும் விளங்குகிறார். சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்து, தன் நட்பு கிரகங்களான புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் தொழில் ரீதியாக நல்ல அனுகூலங்கள் உண்டாகும. சிறந்த வேலையாட்கள் அமையப் பெற்று அவர்களால் சாதகமான பலன்களும், அபிவிருத்தியும் பெருகும். அதுவே சனி பலமிழந்திருந்தால் செய்யும் தொழிலில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது இருக்கும்.  வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையும், வேலை ஆட்களே துரோகம் செய்யும் நிலையும் உண்டாகும்.

ஆக, ஒருவருக்கு சொந்த தொழிலானது சிறப்பாக அமைய 10ம் அதிபதியும் 10ம் வீடும் பலம் பெற்றிருந்து, நவகிரகங்களும் வலுவுடன் அமையப் பெற்றிருந்தால் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் வாழ்வில் வசதிகளையும், பொருளாதார உயர்வுகளையும் பெற்று சமுதாயத்தில் கௌரவமான மேன்மையினை அடைய முடியும்.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001






Sunday, April 8, 2012

தொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள


சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் என்பது எல்லோருக்குமே அமைந்து விடுமா? தொழில் செய்வதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளன. ஒருவர் தொழிலில் சம்பாதிக்க 10ம் வீடும் 10ம் அதிபதியும் பலமாக அமைந்திருந்தால் சொந்தத் தொழில் செய்யலாம். அப்படி 10ம் அதிபதி 6,8,12 ல் மறைந்திருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் சொந்த தொழில் செய்யக்கூடாது. அப்படி தொழில் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், முதலில் அவர்களின் ஜனன ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து வேறு எந்த கிரகம் பலம் பெற்றிருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்துக்கேற்ற நபரை உதவியாக வைத்துக் கொண்டு தொழில் செய்தால் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். 

உதாரணமாக, ஒரு ஆண் ஜாதகத்தில் 7ம் வீடும், சுக்கிரனும் பலமாக இருந்தால் மனைவியுடன் சேர்ந்து மனைவி பெயரில் தொழில் செய்வதும் 3,11 ம் வீடுகள் பலம் பெற்று செவ்வாயும் பலமாக இருந்தால் உடன்பிறப்புகளோடும் சேர்ந்து தொழில் செய்வது நல்லது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் பலமாக இருந்து தொழில் செய்தாலும் சில கிரகங்கள் சாதகமின்றி அமைந்துவிட்டால், தொழில் ரீதியாக பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலோ, சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப் பெற்றிருந்தாலோ, அரசு வழியில் சிக்கல்கள், தொழில் ரீதியாக சட்ட சிக்கல்கள் போன்றவற்றை  எதிர்கொள்ள நேரிடும்.  பலமிழந்த கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் போது தேவையற்ற சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், அக்காலங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பேச்சைக் குறைத்து கொள்வது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.

குரு பகவான் நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ ஒருவரின் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், பண விஷயங்களைக் கையாளும் போது, தனித்து செயல்படாமல் நம்பிக்கைக்குரியவர்களை முன் வைத்து செயல்படுவதும் மற்றவர்களுக்கு பணம், கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடப்பதும் நல்லது. 
தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தொழிலுக்கு காரகனாகவும், வேலையாட்களுக்கு காரகனாகவும் விளங்கும் சனி பகவான் பகை நீசம் பெற்று அமைந்திருந்தால், அவருக்கு வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படாது.  அவர்கள் மூலம் வீணான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நல்ல  வேலையாட்கள் அமையாமல் தொழிலில் முன்னேற்றத் தடைகள் உண்டாகும். இப்படி அமையப் பெற்றவர்கள் வேலையாட்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது. 
பொதுவாக ஒருவருக்கு கிரக நிலைகள் பலமாக அமையப்பெற்று சாதகமான தசாபுக்திகள் நடைபெறுவது மட்டுமின்றி கோட்சார ரீதியாகவும் சாதகமான கிரக நிலைகள் இருந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அடைய முடியும். அப்படி கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகர் எதிலும் கவனமுடன் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. குறிப்பாக அஷ்டமச் சனி, ஏழரைச் சனி காலங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை அபிவிருத்தி செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
தொழில் செய்யும் இடங்களில் அவரவரின் இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைப்பது, தினந்தோறும் ஊதுபத்தி ஏற்றி, பூமாலை போட்டு, பூஜை செய்து, கற்பூரம் ஏற்றுவது நல்லது. பசுவின் கோமியம் கிடைக்குமேயானால் அதை தொழில் செய்யும் இடங்களில் தெளித்தால் நல்ல லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். வாரம் தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி புகை போட்டு பூஜை செய்வது மிகவும் உத்தமம். இது மட்டுமின்றி புதிதாக எந்தவொரு முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் நல்ல நேரம் பார்த்து தொடங்குவது மூலம் வெற்றியும் லாபமும் பெருகும்.
சனி, சுக்கிரன் பலமாக இருந்தால் தொழில் விஷயங்களில் பல்வேறு ஏற்றங்களை அடைய முடியும். சுக்கிரனை வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைநிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற பூக்களால் பூஜிப்பது, சனி பகவானை சனிக்கிழமைகளில் நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது போன்றவற்றின் மூலம் நவகிரகங்களின் அருளை பெற முடியும். தொழிலில் நல்ல  லாபம் ஈட்ட முடியவில்லையே என கவலைப்படுபவர்கள் சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரத்தை வைத்து வழிபாடு செய்வது உத்தமம். 

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Friday, April 6, 2012

நவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்


உழைத்து தான் வாழ வேண்டும். பிறர் உழைப்பில் ஒரு போதும் நாம் வாழக் கூடாது என்பது முன்னோர்களின் வாக்கு. ஒரு மனிதன் பிறந்து, வளர்ந்து இளம் வயதில் கல்வி கற்பதென்பது அவனின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். அவன் மேற்கல்வி என வரும் போது அவனுடைய வாழ்க்கைத் தரம் உயர, அவன் என்ன தொழில் செய்ய விருப்பப்படுகிறானோ அதை கற்கிறான். உழைக்காமல் விரும்பப்படுகிறானோ அதை கற்கிறான். உழைக்காமல் இருந்தால் ஒருவருக்கும் உணவு கிடைக்காது. அவன் ஏதாவது ஒரு தொழில் ஈடுபட்டு பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்ள முடியும்.  சிலர் தொழிலுக்கேற்ப கல்வி கற்று தொழில் செய்வதும் உண்டு. கல்வி கற்காதவர்களும் தன் அனுபவ ரீதியாக  தொழில் செய்வதும் உண்டும். வாழ்க்கைத் தரம் உயரவும், பொருளாதார ரீதியாக மேன்மையடையவும் ஏதாவது ஒரு துறையில் சாதித்தே ஆக வேண்டும்.

பசித்திருப்பவனுக்கு மீனை கொடுக்காதே. மீன் பிடிக்க வலை வாங்கிக் கொடு என்பார்கள். அது போல  உழைக்காமல் பிழைக்க விரும்புவர்களை எந்த வகையிலும் ஊக்குவிக்க கூடாது. தொழில் செய்து பிழைப்பவர்களில் பல வகை உண்டு. சிலர் என்னதான் படித்திருந்தாலும் பூர்விக வழியில் செய்யக்கூடிய குலத்தொழிலைதான் செய்வார்கள். 

சிலர் தன்னுடைய சொந்த முயற்சியாலேயே முன்னேறி ஒரு தொழிலை அமைத்துக் கொள்வார்கள். சிலருக்கு பிறந்த ஊரை விட வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும். ஒருவர் ஜீவன ரீதியாக சம்பாதிக்க தொழில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உத்தி யோகம் செய்தும் முன்னேற்றமடைய முடியும். தொழில் உத்தியோகம் என்பது பல ஆயிரம் வகைகளில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களில்  பலம் பெற்ற கிரக நிலைகளின் காரகத்துவத்திற்கேற்ப, ஒவ்வொரு துறையில் சாதித்து சம்பாதிக்க முடியும்.

ஒருவரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது ஜென்மலக்னத்திற்கு 10ம் வீடும், 10 ம் அதிபதியும், 10ம் வீட்டில் அமையப் பெற்ற கிரகமும், 10ம் அதிபதி அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றாரோ அக்கிரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கூறிய கிரகங்களில் எந்தக் கிரகம் அதிக பலம் பெறுகிறதோ அக்கிரகத்திற்குரிய துறையில் ஜாதகர் பிரகாசிக்க கூடியபோகம் உண்டாகும்.


சூரியன் 

ஜென்ம லக்னத்திற்கு 10 வீட்டில் வலுபெற்ற  கிரகமாக சூரியனிருந்தால் வாழ்வில் பல சாதனை படைக்கும் அமைப்பு, அதிகம் சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் 10ல் பலமாக அ¬ந்திருந்தால் அரசு, அரசாங்க துறைகளில்  கௌரவபதவி, வங்கிபணி, மருத்துவத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறைகளில் அதிகாரமிக்க  பதவிகளை அடையும் வாய்ப்பு  நல்ல நிர்வாகத்திறனும் உண்டாகும். 

சூரியன் வீடான சிம்மத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சிம்மத்தில் சனி, ராகு,  போன்ற பாவ கிரகங்கள்அமையப் பெற்றால், செய்யும் தொழிலில் போட்டி, பொறாமை மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களால் பிரச்சனை, தேவையற்ற இன்னல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, சட்ட சிக்கல்கள் உண்டாகும். சூரியன் வலுப்பெற்று அதன் தாசாபுக்தி நடைபெறும் காலங்களில் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளும் உண்டாகும். அதுவே சூரியன் பலமிழந்து அமைந்து விட்டால் அக்காலங்களில் எதிர்பாராத இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

சந்திரன் 

சந்திரன் 10ல் வலுப்பெற்று அமைந்தால் பயணத்தொடர்புடைய துறை, ஜல சம்மந்தப்பட்ட துறை, கடல் சார்ந்ததுறை, உணவகதொழில், எண்ணெய் வகை சம்மந்தப்பட்டவை, பண்ணை தொழில், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்டவைகள், அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்கள், விலை உயர்ந்த துணி வகைகள், உப்பு சம்பந்தப்பட்ட தொழில், மலைப் பகுதிகளில் பணிபுரியும் அமைப்பு, தாய் வழியில் தொடரும் தொழில்களை செய்யும் வாய்ப்பு உண்டாகும். சந்திரனின் வீடான கடகத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரன் பலம் பெற்று திசை நடைபெற்றால் தொழில், உத்தியோக ரீதியாக அடிக்கடி  பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு கொடுக்கும். நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும். அதுவே சந்திரன் பலமிழந்து அதன் திசை புக்திகள் நடை பெற்றால், தேவையற்ற மனக்குழப்பங்களால் தொழிலில் இடையூறு, லாபங்கள் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

செவ்வாய் 

செவ்வாய் 10ல் பலம் பெற்றிருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட், தோட்டம், கட்டிட வல்லுனராகக்கூடிய அமைப்பு, ராணுவம், பாதுகாப்புத்துறை, போலீஸ், நிர்வாகத்துறை, வழக்கறிஞர் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். மற்றும் மருத்துவத்துறை, அறுவை சிக்சை பிரிவுகள், உளவுத்துறை, சிறைத்துறை, வட்டாட்சியர், மின்சார பொறியாளர் போன்ற துறைகளில் சாதனை செய்யும்  அமைப்பு உண்டாகும். அனு உலை பணி தபால் துறை, தூதரக பணிபுரியக் கூடிய வாய்ப்பு, சர்க்க்கஸில் மிருகங்களை பழக்குபவராகவும், இரும்பு வெட்டுபவராகவும், தீப்பெட்டித் தொழில், மன்ணென்ணெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவராகவும் இருக்கக்கூடிய வாய்ப்பு அமையும். செவ்வாய் பலம் பெற்று அமைந்து, செவ்வாய் திசை நடைபெற்றால் எந்த வொரு துறையிலும் நல்ல நிர்வாகத்திறமையுடன் செயல்பட்டு சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதுவே, செவ்வாய் பலமிழந்திருந்தால் பகைவர்களின்  தொல்லைகள் அதிகரித்து அதனால் தொழில் நஷ்டமடைய நேரிடும். 

புதன் 

புதன் 10ல் பலம் பெற்று அமையப் பெற்றால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி, கணக்கர்கள் கவிஞர்கள், எழுத்தாளர், பேச்சாளர் பணி, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் பணி, கணிதத்துறை, ஆடிட்டர், தபால் துறை, இன்சூரன்ஸ் துறை போன்றவற்றில் பணிபுரியக்கூடிய  வாய்ப்பு, செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை துறை, எடிட்டர்கள், பதிப்பாளர் பணி, ஜோதிடத்துறை, பெயிண்டிங், பிரிண்டிங், புத்தக வர்த்தகம், டிசைன்  வரைகலைப் பணி போன்றவற்றில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். தாய் வழி மாமன்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெற்று அமைந்து, அதன் திசை நடைபெறும்போது தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடைய முடியும். அதுவே புதன் வலுவிழந்து அதன் திசை நடைபெற்றால் உடன் பணிபுரிபவர்கள் உடன் பழகுபவர்களாலேயே தொல்லை ஏற்படும்.

குரு 

குரு 10ல் வலுப்பெற்று அமையப் பெற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், வரித்துறை, கல்வித்துறை, அரசியல் அமைப்பு உருவாக்குதல், ஆலய அறப்பணிகள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல், வங்கிகளில் பணத்தை கையாளும் துறை, மத சமய தொடர்புடைய துறைகள், ஜோதிடத் துறை, அறக்கட்டளை பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குரு பலம் பெற்றிருந்து அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் தாராள தனவரவும், செய்யக்கூடிய தொழில் உத்தியோகத்தில் உயர் பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். அதுவே குரு பலமிழந்து திசை நடைபெற்றால் தைரியமற்ற நிலை, தேவையற்ற அவப்பெயர்களை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி, வீண் பழிச் சொற்கள் உண்டாகும். 

சுக்கிரன் 

சுக்கிரன் 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் கலை, இசை, நடிப்பு, நாட்டியம், சங்கீதத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பும், தங்க நகைகள் விற்னை, ஆடம்பர ஆடைகள் சம்பந்தப்பட்ட தொழில், மாட மாளிகைகள் கட்டும் பணி, பட்டுத் துறை, பால் துறை, வாசனை பொருட்கள் விற்பனை, குதிரை பந்தயம் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், மருந்து விற்பனை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் வலுபெற்று அமைந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக வாழ்வில் பல வகைகளில் முன்னேற்றங்கள் தேடிவரும். செல்வம், செல்வாக்கு பெருகும். அதுவே சுக்கிரன் பலமிழந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக இழப்புகள், பெண்களால் அவமானங்கள் ஏற்பட்டு நஷ்டம் உண்டாகும்.

சனி 

சனி 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் விவசாயத் துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, பஞ்சாயத்துத் துறை, மருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, இரும்பு, ஈயம் மற்றும் எண்ணெய் வியாபாரம், நிலம், சொத்து, வர்த்தக கூட்டுறவு துறைகளில் பணி செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். காவலாளி, தோட்ட வேலை, மாட்டு தொழுவத்தில் பணி புரியும் வேலை, செருப்பு தைத்தல் போன்ற தொழில்களை செய்ய நேரிடும். சனி பலம் பெற்றிருந்தால் தொழிலில் நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகத்தை கொடுக்கும். அதன் தசாபுக்தி காலங்களில் மேலும் மேலும் உயர்வு உண்டாகும். அதுவே, சனி பலமிழந்திருந்தால் தேவையற்ற பழக்க வழக்கங்களால் திருடி சம்பாதிக்கும் சூழ்நிலை, அடிமைத் தொழில், வாழ்நாள் முழுவதும் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய நிலை உண்டாகும். 

ராகு

ராகுபகவான் 10ல் அமையப் பெற்றால் விண்வெளிகளில் பயணம் செய்யும் தொழில், வானொலி, சர்க்கஸ் போன்ற துறைகளிலும், தெய்வீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் ராகு தசா புக்தி காலங்களில் தொழில், உத்தியோக ரீதியாக சம்பாதிக்கும் யோகம் சிறப்பாக அமையும். அதுவே, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்து ராகு பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு, அடிமைத் தொழில், தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி சம்பாதிக்கவே முடியாமல் வாழ்க்கையே பாலாகும்.

கேது 

கேது 10ல் இருந்தால் விஞ்ஞானம், வெளிநாட்டு வர்த்தகம், மெஸ்மரிசம், கட்ட பஞ்சாயத்து மூலமும், ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும் அமையும். ராகுவுக்கு கூறியதுபோல கேதுவுக்கும் சொந்தவீடு இல்லை என்பதால் மேற்கூடிய பலன்களே உண்டாகும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001




Wednesday, April 4, 2012

நீர் ஆதாரம்

தண்ணீர் பிரச்சினை இன்று பெரிய பிரச்சினையாகவே மாறிவருகிறது. நல்ல மழை பொழிந்தால்தான் பூமியில் நீர் ஊரும்.  பூமி குளிர்ந்தால்தான் ஊற்றுகள் உண்டாகும். ஊற்றுகள் நன்றாக இருந்தால்தான் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ முடியும். மாறி வரும்  இன்றைய சூழ்நிலையில் தார் ரோடுகளும், காங்கிரிட் கட்டடங்களும் நிறைய உண்டாவதால், மண் என்பது கண்ணால் பார்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்காகத்தான் அரசாங்கம் கூட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது.
நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி சேகரித்தால் மட்டுமே அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்குத் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்கும் இல்லையெனில் தண்ணீரும் அரசாங்கத்தால் லிட்டர் கணக்கில் விற்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சொந்த வீட்டைக்கூட கட்டிவிடலாம். ஆனால் அந்த வீட்டில் நீர்வளம் சிறப்பாக இருந்தால் மட்டுமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும். இதற்கும் ஜோதிட ரீதியாக அவரவரின் 4ம் பாவமே காரணமாக அமைகிறது.

பொதுவாக, ஒரு வீட்டின் உரிமையாளருடைய ஜாதகத்தைக் கொண்டு, அவர் வீட்டில் உள்ள கிணறு, போர் போன்றவற்றில் நீர் எப்படி இருக்கும் என்று கூறலாம்.

4ம் பாவமானது நீர் ராசி என வர்ணிக்கக்கூடிய கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசியாக இருந்தாலும்,

4ம் அதிபதி நீர் ராசிகளில்அமைந்திருந்தாலும், 

சந்திரன், சுக்கிரன் 4ம் அபதியின் சேர்க்கைப் பெற்றாலும், 4ம் வீட்டைப் பார்வை செய்தாலும் நீர்
ஆதாரம் சிறப்பாக இருக்கும்.

அதுபோல 4ல் அமையக்கூடிய கிரகங்களைப் பொறுத்து நீர் ஆதாரத்தினை மிகத் தெளிவாக அறியலாம்.

4ல் சூரியன் பலமாக இருந்தால் தண்ணீர் மிவும் ஆழமான இடத்தில் இருக்கும்.

சந்திரன் சுக்கிரன் 4ல் இருந்தால் நீரோட்டம் மிக அதிகமாக இருக்கும்.

செவ்வாய், கேது இருந்தால் பாறைகளுக்கிடையே நீர் கிடைக்கும்.

குரு பகவானிருந்தால் தண்ணீர் அருமையாகவும், சுவையாகவும் இருக்கும்.

புதன் இருந்தால் மணல் அதிகமாக இருந்து, அதனடியில் நீர் ஊற்று சிறப்பாக இருக்கும்.

சனி இருந்தால் தண்ணீர் கிடைப்பது அரிது.அப்படிக் கிடைத்தாலும் கறுப்பாகவும், உவர்ப்பாகவும் இருக்கும்.

ராகு பகவானிருந்தால் வறண்ட பூமியாக இருக்கும்.

ஆக சூரியன், குரு, புதன் போன்ற கிரகங்களின் ஆதிக்கம் 4ம் வீட்டிற்கு இருந்தாலும், பார்வை செய்தாலும் தண்ணீர் சுவையாகவும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001