Wednesday, June 18, 2025

Today rasi palan - 19.06.2025

 


Today rasi palan -
19.06.2025

இன்றைய ராசிப்பலன் -  19.06.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

19-06-2025, ஆனி 05, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.56 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.17 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சந்தி சனி

சுக்கி

 

சூரிய குரு

புதன்

ராகு

 

19.06.2025

 

 

செவ் கேது

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  19.06.2025

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழில், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், வீண் விரயங்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு கை, கால் வலி, சோர்வு போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகி வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

Tuesday, June 17, 2025

Today rasi palan - 18.06.2025

 


Today rasi palan -
18.06.2025

இன்றைய ராசிப்பலன் -  18.06.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

18-06-2025, ஆனி 04, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 01.35 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.23 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் இரவு 12.23 வரை பின்பு சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி

சுக்கி

 

சூரிய குரு

புதன்

சந்தி ராகு

 

18.06.2025

 

 

செவ் கேது

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  18.06.2025

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் விருத்திக்காக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 06.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 06.35 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை காலை வேளையில் செய்வது உத்தமம்.

கன்னி

இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பணப் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும்.

தனுசு

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளில் சாதகப்பலன் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடை பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.