Tuesday, November 5, 2024

Today rasi palan - 05.11.2024

 


Today rasi palan -
05.11.2024

இன்றைய ராசிப்பலன் -  05.11.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-11-2024, ஐப்பசி 19, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.17 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கேட்டை நட்சத்திரம் காலை 09.45 வரை பின்பு மூலம். மரணயோகம் காலை 09.45 வரை பின்பு அமிர்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 ராகு

 

குரு (வ)

 

சனி (வ)

 

05.11.2024

செவ்

 

 

 

சந்தி புதன் சுக்கி

 சூரிய

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  05.11.2024

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 9.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 9.45 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

துலாம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

மகரம்

இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வராத கடன்கள் இன்று வசூலாகும்.

No comments: