Monday, September 16, 2024

Today rasi palan - 17.09.2024

 


Today rasi palan - 17.09.2024

இன்றைய ராசிப்பலன் -  17.09.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-09-2024, புரட்டாசி 01, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.44 வரை பின்பு பௌர்ணமி. சதயம் நட்சத்திரம் பகல் 01.53 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 ராகு

 

குரு

செவ்

சந்தி

சனி (வ)

 

17.09.2024

 

 

புதன்

 

 

 

கேது சூரிய சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் -  17.09.2024

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். முடிந்த வரை பேச்சை குறைப்பது நல்லது.

சிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம் நிகழும்.

கன்னி

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

மகரம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகள் வகையில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத உதவியால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Sunday, September 15, 2024

Today rasi palan - 16.09.2024

 


Today rasi palan - 16.09.2024

இன்றைய ராசிப்பலன் -  16.09.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

16-09-2024, ஆவணி 31, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 03.10 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 ராகு

 

குரு

செவ்

சந்தி

சனி (வ)

 

16.09.2024

 

 

சூரிய புதன்

 

 

 

சுக்கி கேது

 

இன்றைய ராசிப்பலன் -  16.09.2024

மேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.   வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை இருக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

கும்பம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

மீனம்

இன்று பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.