Saturday, January 6, 2024

Today rasi palan – 07-01-2024

 




Today rasi palan – 07-01-2024

இன்றைய ராசிப்பலன் - 07-01-2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

07.01.2023 மார்கழி 22, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.46 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

ராகு

  குரு

 

 

 

சனி

 

07.01.2024

 

 

 

சூரிய செவ்

புதன்

சுக்கி

 சந்தி

கேது

இன்றைய ராசிப்பலன் -  07.01.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த  பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

சிம்மம்

இன்று மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைய உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்கவும். தேவையற்ற குழப்பங்கள் சற்று விலகி மனநிம்மதி ஏற்படும். மாலைக்கு பிறகு அனுகூலமாக செய்தி கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலை அடைவீர்கள்.

 

 

 

No comments: