Friday, July 22, 2022

Today rasi palan - 23.07.2022

 


Today rasi palan - 23.07.2022

இன்றைய ராசிப்பலன் -  23.07.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

23-07-2022, ஆடி 07, சனிக்கிழமை, தசமி திதி பகல் 11.27 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 07.03 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 07.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஆடி கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

குரு

ராகு செவ்

சந்தி

 

சுக்கி

 

 

23.07.2022

சூரிய புதன்

 

சனி (வ)

 

 

 

கேது

 

 

இன்றைய ராசிப்பலன் -  23.07.2022

மேஷம்

இன்று உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் பணவரவு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பு மூலம் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதம் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப்பலன் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக பெரிய மனிதர்கள் தொடர்பு கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் நீங்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

No comments: