Thursday, November 30, 2017

இன்றைய ராசிப்பலன் - 01.12.2017

இன்றைய ராசிப்பலன் -  01.12.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
01-12-2017, கார்த்திகை 15, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.13 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அசுவினி நட்சத்திரம் பகல் 02.28 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. பரணி தீபம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00


சந்தி



               
திருக்கணித கிரக நிலை
01.12.2017
ராகு
கேது

சனி புதன்
சூரிய சுக்கி
குரு செவ்


இன்றைய ராசிப்பலன் -  01.12.2017
மேஷம்
இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் வெளியூர் பயணத்தால் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.
மகரம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

டிசம்பர் மாத ராசிப்பலன்

டிசம்பர் மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

               





               
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

சனி
புதன்

சூரிய
சுக்கி
செவ்
குரு

               
கிரக   மாற்றம்
03&12&2017 புதன் வக்ர ஆரம்பம் பகல் 01.04 மணி
11&12&2017 விருச்சிகத்தில் புதன் () அதிகாலை 04.18 மணி
16&12&2017 மகரத்தில் சூரியன் அதிகாலை 03.01 மணி
20&12&2017 தனுசில் சுக்கிரன் மாலை 06.32 மணி
23&12&2017 புதன் வக்ர நிவர்த்தி காலை 07.21 மணி

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ஆம் வீட்டில் குருவும் பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இம்மாத முற்பாதியில் சூரியன் 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெற்றுவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபறு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றுவிடலாம்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. முடிந்தால் சூரியனுக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3&ல் ராகு 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்& மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 6&ல் குரு 7,8&ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பதும், முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:: சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும் பாதிப்புகள் குறையும்.

சந்திராஷ்டமம்  18.12.2017 காலை 07.04 மணி முதல் 20.12.2017 இரவு 07.57 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்களான ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்& மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம்:: துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சர்ப கிரக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  20.12.2017 இரவு 07.57 மணி முதல் 23.12.2017 காலை 08.29 மணி வரை

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சுக்கிரன் 6&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த எதிர்ப்புகள் மறைந்து ஏற்றங்கள் ஏற்படும். போட்டி பொறாமைகள் குறையும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். அபிவிருத்தி பெருகும். லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்& வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை விரதமிருந்து ஆறுமுக பெருமானை வணங்குவதாலும், அங்காரகனாகிய செவ்வாயை வணங்குவதாலும் உண்டாகும் துயரங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்  23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் செவ்வாய் 4&ல் சுக்கிரன் 6&ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன்& மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தாமதத்திற்கு பின் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் குரு பகவான் 3&ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டினை பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

பரிகாரம்:: வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையை  அணிவித்து, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம்  25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் குரு, 3&ல் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் அதிகப்படியாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். 2&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்& மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்& வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.

பரிகாரம்:: அல்லல் போக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதாலும், ஹனுமன் துதிகளை சொல்வதாலும் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.

சந்திராஷ்டமம்  30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை. மற்றும்  28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் சுக்கிரன் 3&ல் சனி சஞ்சரிப்பது நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்& மனைவியிடையே சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமையும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவார்கள்.

பரிகாரம்:: கருணை வடிவான கந்தனை வணங்குவதாலும் சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் வாழ்வில் நற்பலன்களை பெறலாம்.

சந்திராஷ்டமம்  02.12.2017 மாலை 05.32 மணி முதல் 04.12.2017 மாலை 04.53 மணி வரை மற்றும் 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 12&ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் சற்று சுமாராக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் சில தடைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  04.12.2017 மாலை 04.53 மணி முதல் 06.12.2017 மாலை 04.33 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ராசியதிபதி குரு செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். சூரியன் 12&ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்& மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:: சனிபகவானை வழிபடுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  06.12.2017 மாலை 04.33 மணி முதல் 08.12.2017 மாலை 06.28 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11&ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எந்த வித சிக்கலையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:: சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் துன்பம் ஏதும் ஏற்படாது.

சந்திராஷ்டமம்  08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியை குரு பார்ப்பதும் 10&ல் சூரியன் சுக்கிரன் 11&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்-& மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிலருக்கு புதிய பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்& வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு உயர் பதவிகளை அடையக்கூடிய யோகம் உள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம்:: முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபடுவதாலும் சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதாலும் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.

சந்திராஷ்டமம் 10.12.2017 இரவு 11.42 மணி முதல் 13.12.2017 காலை 08.08 மணி வரை


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் 11&ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். குரு, செவ்வாய் 8ல் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகலாம்பணம் கொடுக்கல்& வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். நிதானத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கு சற்று காலதாமதமாகலாம். மாணவர்கள் கல்விக்கான பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:: சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் இறை அருள் பரிபூரணமாய் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்  13.12.2017 காலை 08.08 மணி முதல் 15.12.2017 மாலை 06.53 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்.

01.12.2017 கார்த்திகை 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

06.12.2017 கார்த்திகை 20 ஆம் தேதி புதன்கிழமை திரிதியைதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

07.12.2017 கார்த்திகை 21 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

13.12.2017 கார்த்திகை 27 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை

14.12.2017 கார்த்திகை 28 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை

28.12.2017 மார்கழி 13 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

31.12.2017 மார்கழி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரியோதிசி திதி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை