Sunday, September 27, 2015

சர்க்கரை வியாதியை ஜோதிடப்படி குறைக்க

மாபெரும் வெற்றி -
 13 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் 
ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன். 
தற்போது 950 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 13 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.

அன்புடன்
முருகுபாலமுருகன்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


சர்க்கரை வியாதியை ஜோதிடப்படி குறைக்க 

      சரியான உடற்பயிற்சியின்மை, உணவு பழக்க வழக்கங்களில் முறையற்ற நிலை, உறக்கமின்மை, மன உளைச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் உடலுக்கு மிகவும் தேவையான இன்சுலின், சரிவர சுரக்காமல் போகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்த காரணங்களால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. உலகில் கோடிக்கணக்கான வியாதிகள் இருந்தாலும் பெருவாரியான மக்களை பயமுறுத்தி வரும் நோய் சர்க்கரை வியாதி. நமது வாழ்க்கை முறையில் இன்று மக்களில் பலருக்கு சர்க்கரை வியாதியானது சர்வ சாதாரணமாக வந்து விடுகிறது. குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு கூட சர்க்கரை நோயின் பாதிப்பு இருக்கிறது. சர்க்கரை வியாதியை பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கின்ற  போது சுக்கிரன் நவகிரகங்களில் சர்க்கரை வியாதிக்கு முக்கிய பங்கு வகுக்கிறது.

      நாம் உண்ணும் உணவு சரியாக செரிப்பதற்கு நமது ஜெனன ஜாதகத்தில் 4ம்  பாவமும், 6ம் பாவமும் முக்கிய பங்கு வகுக்கிறது. 

சுக்கிரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தால், அக்கிரகங்களின் தசா புக்தி காலத்தில் சர்க்கரை வியாதி எளிதில் ஏற்படுகிறது. ஜென்ம லக்னத்திற்கு ருண, ரோக ஸ்தானமான 6ஆம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்க்கை பெற்று இருந்தாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது-. சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் இழந்து இருந்தாலும் அவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றாலும், 4ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்தாலும் 4ஆம் வீட்டதிபதி பாவிகள் சேர்க்கை பெற்று உடன் சுக்கிரன் இருந்தாலும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

      காலபுருஷ தத்துவப்படி 4,6ஆம் வீடான கடகம், கன்னியில் பாவ கிரகங்கள் பலமிழந்து அமையப் பெற்று இருந்தால், சீரண சக்தி பாதிக்கப்பட்டு அதன் மூலம் சர்க்கரை வியாதி உண்டாகும். ஜல ராசிகள் என வர்ணிக்கப்பட கூடிய கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் இரண்டுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது.  குறிப்பாக சந்திரன், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று 4,9 பாவங்கள் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

     சர்க்கரை வியாதியை நாம் கட்டுப்படுத்துவதற்கு ஜோதிட ரீதியாக உள்ள வழிகளை பார்க்கின்ற போது நாம் சாதகமற்ற கிரகங்களின் தசா, புக்தி நடைபெறுகின்ற பொழுது எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 4,6ஆம் பாவங்களில் அமையும் பாவ கிரகங்களின் தசா புக்தி நடைபெறுகின்ற போதும், சுக்கிரன் தசா, புக்தி நடைபெறுகின்ற பொழுது சர்க்கரை வியாதிக்கான பாதிப்பு அதிகரிக்கின்றது.

     சர்க்கரை வியாதியானது நாம் கட்டுப்பாடுடன் இருந்தால் எந்த காலத்திலும் பாதிக்காது.  கட்டுப்பாட்டை மீறுகின்ற போது தான் பாதிப்புகள் அதிகரிக்கிறது. கெடுதியான தசா, புக்தி நடைபெறுகின்ற பொழுது, நாம் கட்டுப்பாடுடன் இருக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்குரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் கெடுதிகள் விலகும் சுக்கிரனால் சர்க்கரை வியாதி அதிகம் ஏற்படுவதால் வெள்ளிகிழமையன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதும், மகாலட்சுமிக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்வதம் உத்தமம். பசுவுக்கு அகத்தி கீரை அளிப்பது கூட ஒர் அளவுக்கு கெடுதியை குறைக்கும்.

     ஜலகிரகமான சந்திரனும் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதால் பராசக்தியை வழிபாடு செய்வது. துர்க்கா தேவியை வழிபாடு செய்வது, லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிப்பது, வெங்கடேச பெருமானை தரிசனம் செய்வதன் மூலம் கெடுதியில் இருந்து விலகி நாம் ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழலாம்.

     குறிப்பிட்டு சொல்லப் போனால் சர்க்கரை வியாதி என்பது பலருக்கும் இருக்கிறது. கெடுதியான காலத்தில் தான் அதிகம் பாதிக்கிறது. ஜோதிட ரீதியாக நமக்கு உள்ள கெட்ட நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த வித நோயும் நாம் கட்டுப்படுத்தலாம்.
                                                                                                                                                   

No comments: