Sunday, September 27, 2015

சர்க்கரை வியாதியை ஜோதிடப்படி குறைக்க

மாபெரும் வெற்றி -
 13 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் 
ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன். 
தற்போது 950 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 13 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.

அன்புடன்
முருகுபாலமுருகன்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


சர்க்கரை வியாதியை ஜோதிடப்படி குறைக்க 

      சரியான உடற்பயிற்சியின்மை, உணவு பழக்க வழக்கங்களில் முறையற்ற நிலை, உறக்கமின்மை, மன உளைச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் உடலுக்கு மிகவும் தேவையான இன்சுலின், சரிவர சுரக்காமல் போகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்த காரணங்களால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. உலகில் கோடிக்கணக்கான வியாதிகள் இருந்தாலும் பெருவாரியான மக்களை பயமுறுத்தி வரும் நோய் சர்க்கரை வியாதி. நமது வாழ்க்கை முறையில் இன்று மக்களில் பலருக்கு சர்க்கரை வியாதியானது சர்வ சாதாரணமாக வந்து விடுகிறது. குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு கூட சர்க்கரை நோயின் பாதிப்பு இருக்கிறது. சர்க்கரை வியாதியை பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கின்ற  போது சுக்கிரன் நவகிரகங்களில் சர்க்கரை வியாதிக்கு முக்கிய பங்கு வகுக்கிறது.

      நாம் உண்ணும் உணவு சரியாக செரிப்பதற்கு நமது ஜெனன ஜாதகத்தில் 4ம்  பாவமும், 6ம் பாவமும் முக்கிய பங்கு வகுக்கிறது. 

சுக்கிரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தால், அக்கிரகங்களின் தசா புக்தி காலத்தில் சர்க்கரை வியாதி எளிதில் ஏற்படுகிறது. ஜென்ம லக்னத்திற்கு ருண, ரோக ஸ்தானமான 6ஆம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்க்கை பெற்று இருந்தாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது-. சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் இழந்து இருந்தாலும் அவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றாலும், 4ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்தாலும் 4ஆம் வீட்டதிபதி பாவிகள் சேர்க்கை பெற்று உடன் சுக்கிரன் இருந்தாலும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

      காலபுருஷ தத்துவப்படி 4,6ஆம் வீடான கடகம், கன்னியில் பாவ கிரகங்கள் பலமிழந்து அமையப் பெற்று இருந்தால், சீரண சக்தி பாதிக்கப்பட்டு அதன் மூலம் சர்க்கரை வியாதி உண்டாகும். ஜல ராசிகள் என வர்ணிக்கப்பட கூடிய கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் இரண்டுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது.  குறிப்பாக சந்திரன், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று 4,9 பாவங்கள் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

     சர்க்கரை வியாதியை நாம் கட்டுப்படுத்துவதற்கு ஜோதிட ரீதியாக உள்ள வழிகளை பார்க்கின்ற போது நாம் சாதகமற்ற கிரகங்களின் தசா, புக்தி நடைபெறுகின்ற பொழுது எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 4,6ஆம் பாவங்களில் அமையும் பாவ கிரகங்களின் தசா புக்தி நடைபெறுகின்ற போதும், சுக்கிரன் தசா, புக்தி நடைபெறுகின்ற பொழுது சர்க்கரை வியாதிக்கான பாதிப்பு அதிகரிக்கின்றது.

     சர்க்கரை வியாதியானது நாம் கட்டுப்பாடுடன் இருந்தால் எந்த காலத்திலும் பாதிக்காது.  கட்டுப்பாட்டை மீறுகின்ற போது தான் பாதிப்புகள் அதிகரிக்கிறது. கெடுதியான தசா, புக்தி நடைபெறுகின்ற பொழுது, நாம் கட்டுப்பாடுடன் இருக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்குரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் கெடுதிகள் விலகும் சுக்கிரனால் சர்க்கரை வியாதி அதிகம் ஏற்படுவதால் வெள்ளிகிழமையன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதும், மகாலட்சுமிக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்வதம் உத்தமம். பசுவுக்கு அகத்தி கீரை அளிப்பது கூட ஒர் அளவுக்கு கெடுதியை குறைக்கும்.

     ஜலகிரகமான சந்திரனும் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதால் பராசக்தியை வழிபாடு செய்வது. துர்க்கா தேவியை வழிபாடு செய்வது, லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிப்பது, வெங்கடேச பெருமானை தரிசனம் செய்வதன் மூலம் கெடுதியில் இருந்து விலகி நாம் ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழலாம்.

     குறிப்பிட்டு சொல்லப் போனால் சர்க்கரை வியாதி என்பது பலருக்கும் இருக்கிறது. கெடுதியான காலத்தில் தான் அதிகம் பாதிக்கிறது. ஜோதிட ரீதியாக நமக்கு உள்ள கெட்ட நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த வித நோயும் நாம் கட்டுப்படுத்தலாம்.
                                                                                                                                                   

Wednesday, September 23, 2015

நவகிரகங்களும் தசா புக்தி பலன்களும்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 



நவகிரகங்களும் தசா புக்தி பலன்களும் 
ஜெனன ஜாகத்தைக் கொண்டு ஒருவரது வாழ்க்கையில் நடைபெறவிருக்கும் நன்மை தீமையைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஜோதிட ரீதியாக ஒரு ஜாதகத்தை சரி வர கணக்கிட்டால் அவர்களது வாழ்க்கைகை மிக துல்லியமாக கணக்கிடலாம். ஜாதகத்தையும் ஜாதகருடைய வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் சொல்ல வேண்டும். ராசி சக்கரம் நடப்பு தசா புக்தி கோட்சாரம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவரது வாழ்க்கையை ஆராய்கின்ற போது பல்வேறு கால கட்டங்கள் உள்ளது-. 10 வயது வரை குழந்தைப் பருவம், 10 வயது முதல் 25 வயது வரை வாலிபப் பருவம்,  25 வயது முதல் 45 வயது வரை மத்திம பருவம்,  45வயதுக்கு மேல் முதுமை பருவம். ஜாதகத்தில் பலா பலன்களை நிர்ணயித்து பலன் சொல்லும் போது ஒருவரது பருவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் கூற வேண்டும். நவ கிரகங்களின் தசா புக்தி பலன்களை நிர்ணயம் செய்கின்ற போது பலா பலன்கள் பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அவற்றைப்பற்றி இங்கே காணலாம்.
       
சூரியன்
      நவ கிரகங்களில் தலையாய கிரகமாக விளங்கும் சூரியனின் திசை, குழந்தை பருவத்தில் வந்தால் தந்தைக்கு சோதனை கொடுக்கும். சூரியன் 3,6,10,11ல் பலமாக அமையப் பெற்றால் குழந்தையின் உடல் நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். சூரியன் பலமிழந்து திசை நடைபெற்றால் ஜீரம், தோல்களில் பாதிப்பு, கண்களில் பாதிப்பு, தந்தைக்கு கண்டம் உண்டாகும். 
சூரியன் வலுப் பெற்று வாலிப பருவத்தில் திசை வந்தால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசி, நல்ல உடலமைப்பு, பல்வேறு வகையில் அனுகூலங்கள் உண்டாகும். சூரியன் பலமிழந்தால் உஷ்ண நோய், கல்வியில் மந்த நிலை, தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். 
சூரியன் பலமாக இருந்து மத்திம வயதில் சூரிய திசை வந்தால் சிறப்பான ஆரோக்கியம், நல்ல அறிவாற்றல், அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவி வகிக்கும் அமைப்பு, கடினமாக உழைத்து முன்னேறும் அமைப்பு உண்டாகும். சூரியன் பலமிழந்திருந்தால் சோம்பேறித் தனம், நிலையான வருமானம் இல்லாத அமைப்பு, அரசு அரசாங்க வழியில் அனுகூலமற்ற பலன், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். 
முதுமை பருவத்தில் சூரியன் பலமாக இருந்து சூரிய திசை வந்தால் சிறப்பான உடலமைப்பு, கௌரவ பதவிகளை வகிக்கும் யோகம், பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், சமுதாயத்தில் பெயர் புகழ் உண்டாகும். சூரியன் பலமிழந்து சூரிய திசை நடைபெற்றால் உடல் நிலை பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு தொழில் உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

                                 சந்திரன்
     சந்திரன் பலமாக இருந்து குழந்தை பருவத்தில் சந்திர திசை வந்தால் மகிழ்ச்சி சுறுசுறுப்பான அமைப்பு நல்ல ஆரோக்கியம் உண்டாகும். சந்திரன் பலமிழந்து சந்திர திசை நடைபெற்றால் அடிக்கடி உடம்பு பாதிப்பு ஜல சம்மந்தப்பட்ட நோய்கள் தாய்க்கு கண்டம் உண்டாகும்.
     சந்திரன் வலுவாக இருந்து வாலிப வயதில் திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை எதிலும் நிதானமாக பேசக் கூடிய அமைப்பு சிறப்பான பேச்சாற்றல் உண்டாகும். சந்திரன் பலமிழந்து வாலிப வயதில் திசை நடைபெற்றால் கல்வியில் தடை மனக்குழப்பம் சோம்பேறி தன்மை ஜல சம்மந்தப்பட்ட உடல் நிலை பாதிப்புகள் உண்டாகும்.
     மத்திம வயதில் சந்திரன் பலமாக அமைந்து சந்திர திசை நடைபெற்றால் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை, சமுதாயத்தில் கௌரவம், அந்தஸ்து, சமூக நலப் பணிகளில் ஈடுபடும் நிலை, நல்ல ஆரோக்கியம், பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் பலம் இழந்து திசை நடைபெற்றால் வீண் குழப்பம், மனநிலை பாதிக்கக் கூடிய அமைப்பு-, சோம்பேறித் தனம் உண்டாகும்.
     சந்திரன் பலமாக அமைந்து முதுமைப் பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் அமைப்பு, தெய்வீக காரியங்களில் ஈடுபடும் நிலை, மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். சந்திரன் பலமிழந்து சந்திர திசை வந்தால் ஆரோக்கிய பாதிப்பு, சோம்பேறித்தனம் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.

செவ்வாய்
     செவ்வாய் பலமாக இருந்து குழந்தை பருவத்தில் திசை வந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் சுறுசுறுப்புடன் இருக்கும் நிலை உண்டாகும். அதுவே பலமிழந்து திசை நடைபெற்றால் உடம்பு பாதிப்பு, வெட்டு காயங்கள், நெருப்பால் கண்டம் உண்டாகும். 
செவ்வாய் திசை இளம் வயதில் நடைபெற்றால் பலமாக இருக்கும் பட்சத்தில் கல்வியில் மேன்மை, அசையா சொத்து சேர்க்கை, எதையு-ம் தைரியத்துடன் செயல்படுத்தி பல்வேறு ஏற்றங்களை அடையும் நிலை உண்டாகும். செவ்வாய் பலமிழந்திருந்தால் விபத்துக்களை எதிர் கொள்ளும் நிலை, வீண் வம்பு பிரச்சனைகள், சகோதரர்களால் பிரச்சனைகள் உண்டாகும். மத்திம வயதில் செவ்வாய் திசை வந்தால் கடினமாக உழைக்கும் நிலை உயர் பதவி வகிக்கக் கூடிய யோகம், எதிலும் தைரியமாக செயல்படும் அமைப்பு உண்டாகும். செவ்வாய் பலமிழந்து மத்திம வயதில் செவ்வாய் திசை நடைபெற்றால் நெருங்கிய நண்பர்கள் இழப்பு, ரத்த சம்மந்தப்பட்ட  உடல் நிலை பாதிப்புகள், எதிலும் வீண்  வாக்கு வாதம் சண்டை சச்சரவுகள், தொழில், உத்தியோக ரீதியாக எதிர் நீச்சல் போட வேண்டிய நிலை உண்டாகும். 
செவ்வாய் பலம் பெற்று முதுமையில் வந்தால் பயமற்ற நிலை, எதையும் தைரியத்துடன் செயல்படுத்தும் அமைப்பு, பூமியால் அனுகூலங்கள், நல்ல உடலமைப்பு கௌரவ பதவிகளை வகிக்கும் நிலை உண்டாகும். செவ்வாய் பலமிழந்து திசை நடைபெற்றால் ரத்த சம்மந்தப்பட்ட உடல் நிலை பாதிப்புகள் உடல் பலவீனம், சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.

புதன்
     புதன் திசை குழந்தை பருவத்தில் வலுவாக அமையப் பெற்று நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், அழகாக பேசும் திறன், சுக வாழ்வு உண்டாகும். புதன் பலமிழந்தால் பேச்சில் இடையூறு, காதுகளில் கோளாறு, சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.
     இளமை பருவத்தில் புதன் வலுவாக இருந்து திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை செய்யும் அமைப்பு, தனிப்பட்ட முறையில் உயர்வு உண்டாகும். புதன் வலுவிழந்து திசை நடைபெற்றால் கல்வியில் தடை, உடல் பலஹீனம், நெருங்கியவர்களிடையே பகை உண்டாகும்.
     மத்திம வயதில் புதன் வலுவாக இருந்து திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கௌரவ பதவிகள் வகிக்கும் அமைப்பு, அறிவு திறனால் பல பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். வலுவிழந்து திசை நடைபெற்றால் குழப்பம், தொழில் உத்தியோக ரீதியாக நிறைய தடைகள் உண்டாகும்.
     புதன் பலமாக இருந்து முதுமையில் திசை நடைபெற்றால் கௌரவ பதவிகள் வகிக்கும் அமைப்பு, நல்ல ஞாபக சக்தி, மற்றவர்களை வழி நடத்தும் அமைப்பு, உண்டாகும்.  வலுவிழந்து திசை நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி, மூளையில் பாதிப்பு, உடல் பலஹீனம், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும்.

குரு
     குரு பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், சுறுசுறுப்பு, பெற்றோர்களுக்கு மேன்மை உண்டாகும். குரு பலம் இழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, வயிறு கோளாறு உண்டாகும்.
     குரு பலம் பெற்று இளமை பருவத்தில் திசை நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், தெய்வீக எண்ணம் பரந்த மனப்பான்மை, மற்றவர்களிடம் நல்ல பெயரை எடுக்கும் வாய்ப்பு உண்டாகும். குரு பலமிழந்திருந்தால் கல்வியில் தடை வீண் செலவுகளை செய்யும் நிலை, பொறுப்பற்று செயல்பட்டு மற்றவர்களிடம் அவப்பெயரை எடுக்கும் நிலை உண்டாகும்.
     குரு பலம் பெற்று மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தாராள தன வரவுகள், நல்ல பழக்க வழக்கம் பொது நலப் பணிகளில் ஈடுபடும் நிலை கௌரவ பதவிகளை அடையும் அமைப்பு உண்டாகும். குரு பலமிழந்திருந்தால் பொருளாதார நெருக்கடி, புத்திர வழியில் கவலை, உடல் நிலை பாதிப்பு உண்டாகும்.
     குரு பலம் பெற்று முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் பொது நல பணிகளில் ஈடுபடும் அமைப்பு, கௌரவ பதவிகளை அடையும் யோகம், தாராள தன வரவு, பரந்த மனப்பான்மை உண்டாகும். குரு பலமிழந்திருந்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், வயிறு கோளாறு, தேவையற்ற அவப்பெயர் உண்டாகும் நிலை ஏற்படும்.

சுக்கிரன்
     சுக்கிரன் பலம் பெற்று குழந்தைப் பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், சுக வாழ்வு, சத்தான உணவுகளை உண்ணும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் குழந்தை பருவத்தில் அடிக்கடி உடம்பு பாதிப்பு, நோயாளியாக விளங்கும் அமைப்பு உண்டாகும்.
     சுக்கிரன் பலம் பெற்று வாலிப பருவத்தில் திசை நடைபெற்றால் கவர்ச்சியான உடலமைப்பு, மற்றவர்களை ஈர்க்கும் அமைப்பு, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் ரகசிய உடல் நிலை பாதிப்புகள், தேவையற்ற பழக்கங்கள் உண்டாகும்.
     சுக்கிரன் பலம் பெற்று மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, பெண்களால் அனுகூலங்கள், வசதி வாய்ப்புகள் போன்ற யாவும் உண்டாகும். பலம் இழந்திருந்தால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு பெண்களால் செலவுகள் உண்டாகும்.
     சுக்கிரன் பலம் பெற்று முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை தாராள தனவரவுகள் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்புகள் தேவையற்ற பிரச்சனைகள், சர்க்கரை வியாதி, ரகசிய நோய்கள் உண்டாகும்.

சனி
     சனி பலம் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம் உண்டாகும். அதுவே பலமிழந்தால் அற்ப ஆயுள் ஆரோக்கிய பாதிப்புகள், சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும்.
     சனி பலம் பெற்று வாலிப பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் மற்றவர்களை எதிர் கொள்ளும் அமைப்பு உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, சோம்பேறிதனம், கல்வியில் தடை உண்டாகும்.
     சனி பலம் பெற்று மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் கடின உழைப்பால் பல்வேறு ஏற்றங்களை அடையும் அமைப்பு, பலரை வைத்து ( வேலையாட்களை) தொழில் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் செல்வாக்குடன் வாழும் அமைப்பு உண்டாகும். சனி பலமிழந்து திசை நடைபெற்றால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, சோம்பேறித்தனம், மனக்குழப்பம், தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.
     சனி பலம் பெற்று முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் பலரை வழி நடத்தும் அமைப்பு, நீண்ட ஆயுள் நல்ல உடல் வலிமை உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

ராகு
     ராகு பலமாக அமையப் பெற்று குழந்தைப் பருவத்தில் திசை நடைபெற்றால் சுறுசுறுப்புடன் இருக்கும் நிலை, நல்ல ஆரோக்கியம் இருக்கும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்புகள் பெற்றோருக்கு கண்டம் உண்டாகும்.
     ராகு பலமாக அமையப் பெற்று வாலிப பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், எதிலும் திறம்பட செயல்படும் அமைப்பு, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை, உண்டாகும். பலமிழந்திருந்தால் கல்வியில் தடை, தேவையற்ற நடப்புகள் தீய பழக்க வழக்கங்கள், பெற்றோர்களிடம் அவப்பெயர் உண்டாகும். 
ராகு பலமாக அமையப் பெற்று மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் எதிர்பாராத தன சேர்க்கை, புதிய தொழில் தொடங்கி வெற்றி பெறக் கூடிய அமைப்பு, எதிர்பாராத ஏற்றங்கள் உண்டாகும். பலம் இழந்திருந்தால் மண வாழ்வில் பிரச்சனை, எடுக்கும் முயற்சியில் தடை இடையூறு, தீய பழக்க வழக்கங்கள், முரட்டுத்தனமான செயல்பாடுகளால் அவப்பெயர் உண்டாகும்.
     ராகு பலமாக அமையப் பெற்று முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தன சேர்க்கை, செய்யும் தொழில் ஏற்றம் உண்டாகும். பலமிழந்திருந்தால் வீண் விரயங்கள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், தேவையற்ற கருத்து வேறுபாடுகள், விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை உண்டாகும்.

கேது
     கேது பலம் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் விளையாட்டுத் தனம், பிடிவாத குணம் இருக்கும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, பெற்றோர்களுக்கு சோதனை உண்டாகும்.
     கேது பலம் பெற்று வாலிப பருவத்தில் திசை நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை, ஆன்மீக தெய்வீக நாட்டம், எதிலும் எதிர் நீச்சல் போட்டு ஏற்றங்களை அடையும் அமைப்பு உண்டாகும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்புகள், கல்வியில் தடை, சிலர்  காதல் வலையில் சிக்கக் கூடிய அமைப்பு உண்டாகும். 
கேது பலம் பெற்று மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபடும் அமைப்பு எதிலும் எதிர் நீச்சல் போட்டு ஏற்றத்தை அடையும் நிலை குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். பலம் இழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்பு பல்வேறு வகையில் இடையூறு குடும்ப வாழ்வில் பிரிவு உண்டாகும்.
     கேது பலம் பெற்று முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபடும் அமைப்பு எதிலும் எதிர் நீச்சல் போட்டு ஏற்றத்தை அடையும் நிலை குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். பலம் இழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப் பல்வேறு வகையில் இடையூ குடும்ப வாழ்வில் பிரிவு உண்டாகும்.
     கேது பலம் பெற்று முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் பல்வேறு தெய்வீக காரியங்களில் ஈடுபடும் அமைப்பு, அமைதியான சூழ்நிலை, ஸ்தல தரிசனங்கள் உண்டாகும். பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு விஷத்தால் கண்டம், நெருங்கியவர்களிடையே பகை உண்டாகும்.


For your consultation


Please send Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Intha Naal 09/23/15

w

Friday, September 18, 2015

சந்திரன்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


சந்திரன் 


        நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்குபவர் சந்திரன். சந்திரன் மிகவும் வேகமாக இடம் மாறும் கிரகமாகும். மேலை நாடுகளில் சூரியனைக் கொண்டு பலாபலன்களை கணிக்கிறார்கள். ஆனால் இந்திய நாட்டில் ஜோதிடர்கள் சந்திரனைக் கொண்டு தான் கோட்சார பலனையும், சந்திரனின் ஜனன கால நிலைனைக் கொண்டு தசா புக்தி இருப்பையும் கணித்து அதனைக் கொண்டு தான் தசா புக்தி பலன்களை நிர்ணயம் செய்கிறார்கள். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலமாக அமைவது மிகவும் முக்கியம்.
     சந்திரன் மனோகாரன் ஆவார். ஒருவரது மன நிலை விருப்பு, வெறுப்பு அன்றாட செயல்பாடுகள், தாய், கண் பார்வை, மனோதைரியம் என அனைத்திற்கும் சந்திரனே காரகனாவார். சந்திரன் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு வலுப் பெற்றவராகவும் சுப கிரகமாகவும் விளங்குகிறார்.
     தேய் பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திரன் பாவியாக விளங்குகிறார். சந்திரனுக்கு குரு சூரியன் செவ்வாய் ஆகியோர் மிக சிறந்த நட்பு கிரகங்கள் ஆகும். மேற்கூறிய கிரக சேர்க்கை பெறுவதும் மேற்கூறிய கிரகங்களின் வீடுகளில் அமைகின்ற போதும் பலமான பலன்களை உண்டாக்குகிறார். சந்திரன் சர்ப கிரகங்களான ராகு கேது சேர்க்கைப் பெறுகின்ற போது தேவையற்ற பிரச்சினைகளையும் மன குழப்பதையும் உண்டாக்குகிறார். கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம லக்னத்தில் சந்திரன் அமையப் பெற்று செவ்வாய் பார்வை பெற்றால் செல்வாக்கு மன வலிமை உண்டாகும். உயர்ந்த அந்தஸ்த்தும் அரசாங்கத்தில் உயர் பதவிகளை அடையும் யோகமும் ஏற்படும். அதுவே விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ஜென்ம லக்னத்தில் நீசம் பெறுவதால் உடன் ராகு பகவான் அமையப் பெற்று விட்டால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகும். குறிப்பாக விஷத்தால் கண்டம் உண்டாகும். சந்திரன் 7ம் வீட்டில் பாவ கிரக சேர்க்கை பெற்று அமைவது சிறப்பல்ல.
     சந்திரன் சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று 7ல் அமைந்தாலோ, 7ம் அதிபதி சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலோ அவர்களது திருமண வாழ்க்கையில் அமையக் கூடிய வரனானது எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவராக அமையும். குறிப்பாக திருமணமான நபர்கள், விதவை விவாகரத்து ஆனவர்களை மணக்கக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். 



For your consultation


Please send Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078




Intha Naal 09/18/15

Sunday, September 13, 2015

6 ஆம் வீட்டில் அமையும் கிரகமும் எதிர்ப்பும்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

    எதிரியை தள்ளி வைக்கலாம் துரோகியை அருகிலேயே வைத்திருக்க வேண்டும். எதிரி நேரடியாக எதிர்ப்பான் ஆனால் துரோகி எப்பொழுது என்ன செய்வான் என்றே தெரியாது.  எல்லோருக்கும் எதிர்ப்பில்லாத நிம்மதியான வாழ்க்கை அமையுமா என்றால் கேள்வி குறிதான். குடும்ப வாழ்வில் கூட உறவினர்கள் ஏற்படுத்தும் மறைமுகப் பிரச்சனைகளால் மண வாழ்க்கையே பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். ஒருவர் என்ன தான் உழைத்தாலும் அந்த உழைப்பிற்கு மற்றவர்களது எதிர்ப்பிருந்தால் உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் போய் விடும். ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்தும் மறைமுக  எதிர்ப்புகளால் வாழ்க்கை பாதையானது  மாறி விடுகிறது. 
ஒருவருக்கு ஏற்படும் எதிர்ப்பை பற்றி அறிய 6ஆம் பாவம் மிகவும் உதவியாக இருக்கிறது. 6ஆம் பாவத்தைக் கொண்டு எதிர்ப்பு மட்டுமின்றி ருண ரோகம், கடன், மாமன், மாமி, சின்னம்மா, சித்தப்பா, நண்பர்களின் வீழ்ச்சி, பெண் என்றால் கணவனின் ரகசிய தொடர்பு போன்றவற்றை தெளிவாக அறியலாம்.
     6ஆம் பாவம் சிறப்பாக இருந்தால் தான் எதிர்ப்பில்லாத வாழ்க்கை, நோயற்ற வாழ்வு உண்டாகும். உப ஜெய ஸ்தானம் 6ஆம் வீடு என்பதால் 6ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் அமைய பெற்று சுபர் பார்த்தால் அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும். அதுவே 6ஆம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 6ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்தாலும் வாழ்க்கைப் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். 6ஆம் வீட்டில் நவ கிரகங்கள் அமைந்தால் என்ன பலன் உண்டாகும் என்பதனை பார்ப்போம்.
     சூரியன் சுபர் பார்வையுடன் 6ல் அமைந்தால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். சூரியன் 6ல் பாவிகள் பார்வையும் இருந்தால் நரம்பு தளர்ச்சி, இருதய நோய், நெஞ்சில் சளி நெருங்கிய உறவினர்கள் பகை உண்டாகும்.
     சந்திரன் 6ல் இருந்தால் உடல் நிலை பாதிப்பு ஜல தொடர்புடைய பாதிப்பு, சிறுநீரக கோளாறு தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். பெண்களுக்கு 6ல் சந்திரன் இருப்பது அவ்வளவு சிறப்பல்ல. சந்திரன் தேய் பிறையாகி குரு போன்ற சுப கிரக பார்வை பெற்றால் அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும். 
     செவ்வாய் 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் ஏற்படும். வம்புச் சண்டை போன்றவற்றில் முன் நின்று வெற்றி பெறுவார். கோபக்காரர், எந்தவித போட்டியையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார். சிலருக்கு இருதாரம் ஏற்படும்.
     புதன் 6ல் அமையப் பெற்றால் கல்வியில் தடை தாய் மாமன் பகை பெண்களால் அவமானம் நரம்பு சம்பத்த பட்ட பாதிப்புகள் கொடுக்கல் வாங்கலில் கருத்து வேறுபாடு உண்டாகும். நல்ல பேச்சு திறமையும், மற்றவர்களிடம் வாதம் செய்வதிலும் வல்லவராக இருப்பார்.
     குரு 6ல் இருந்தால் கொடுக்கல் வாங்கலில் சிக்கல், வயிறு கோளாறு, மலச்சிக்கல், வீண் பேச்சு, கிண்டலான பேச்சு உண்டாகும். உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு கேந்திராதிபதி என்பதால் அவ்வளவு கெடுதி இல்லை.
     சுக்கிரன் 6ல் இருந்தால் கலை சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபாடு உண்டாகும். பெண்களிடம் அவமானப்படும் நிலை, குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். பலமிழந்து பாவிகள் பார்வை பெற்றால் ரகசிய நோய்கள் உண்டாகும்.
     சனி 6ல் இருந்தால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும் தாராள தன வரவு, அசையும் அசையா சொத்து சேர்க்கை, எதிரிகளை வெல்லும் அமைப்பு, சொந்த முயற்சியால் உயர்வடையும் நிலை உண்டாகும்.
     ராகு கேது 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, எதிர்பாராத யோகங்கள் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் நோய் நொடிகள் தவறான செயல்களில் ஈடுபடும் அமைப்பு உண்டாகும்.


For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078



Intha Naal 09/13/15

Thursday, September 3, 2015

செவ்வாய் தோஷமும் பரிகாரமும்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


செவ்வாய் தோஷமும் பரிகாரமும்
                             
     திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு பல்வேறு தோஷங்களால் திருமணம் நடைபெற தடைகள் ஏற்படுகிறது. அவற்றில் பிரதானமாக விளங்குவது செவ்வாய் தோஷமும், ராகு கேது தோஷமும் ஆகும். திருமண தடைக்குப் பல்வேறு தோஷங்கள் காரணங்களாக விளங்கினாலும் செவ்வாய் தோஷத்தைக் கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள். 
ஜென்ம லக்னத்திற்கு குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிலும், சுகஸ்தானமான 4ஆம் வீட்டிலும், களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டிலும், ஆயுள், மாங்கல்ய ஸ்தானமான 8ஆம் வீட்டிலும் பாவ கிரகங்கள் அமைவதன் மூலம் திருமண வாழ்வில் தடங்கல்கள் ஏற்படும். குறிப்பாக 2,4,7,8,12ல் செவ்வாய் அமையப் பெறுவது செவ்வாய் தோஷமாகும். சிலர் ஜென்ம லக்னத்திற்கும் சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும், 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். வட இந்திய ஜோதிடர்கள் லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷமாகும் என்று கூறுகிறார்கள்.
     பெரும்பாலும் ஜென்ம லக்னத்திற்கு செவ்வாய் 2,4,7,8,12ல் இருப்பது தான் செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் உள்ள வரனுக்கு செவ்வாய் தோஷமுள்ள வரனையே பார்ப்பது நல்லது. செவ்வாய் 12  கட்டங்களில் 5ல் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது என்பதால் சுமார் 40% மக்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தே ஆக வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
     செவ்வாய் மேஷம், கடகம், விருச்சிகம், மகரத்தில் இருந்தால் தோஷத்தின் வலிமை குறைவு. அது போல 2ஆம் வீடு மிதுனம், கன்னியாக இருந்து செவ்வாய் இருந்தாலும், 4ஆம் வீடு மேஷம் விருச்சிகமாக இருந்து செவ்வாய் இருந்தாலும், 7ஆம் வீடு கடகம், மகரமாக இருந்து செவ்வாய் இருந்தாலும், 8ஆம் வீடு தனுசு, மீனமாக இருந்து செவ்வாய் இருந்தாலும், 12ஆம் வீடு ரிஷபம் துலாம் இருந்து செவ்வாய் இருந்தாலும், சிம்மம், கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய் குரு சந்திரன் ராகு சேர்க்கைப் பெற்றாலும் செவ்வாயை சனி பார்த்தாலும் தோஷம் பலம் இழக்கிறது என்று ஒரு வாதம் உண்டு.
     பொதுவாக பார்த்தால் செவ்வாய் 7,8ல் இருந்தால் தான் செவ்வாய் தோஷத்தின் பலம் அதிகம் 2,4,12ல் இருந்தால் அவ்வளவு வலிமையான செவ்வாய் தோஷம் என்று கூற முடியாது. செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் முருக வழிபாடு செய்வது. கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.



For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078



Intha Naal 09/03/15