Monday, August 31, 2015
Sunday, August 30, 2015
Saturday, August 29, 2015
பாதகாதிபதியின் லீலைகள்
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில்
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
பாதகாதிபதியின் லீலைகள்
நவகிரகங்கள் நம்மை வழி நடத்துகின்றன. ஜெனன காலத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு ஏற்ப நற்பலனும் தீய பலனும் ஏற்படுகிறது. பொதுவாக கேந்திர திரி கோணாதிபதிகள் யோகத்தை அளிக்கின்றனர். 3,6,8,12க்கு அதிபதிகள் கெடுதல்களை வழங்குகிறார்கள். இதை தவிர சில லக்னகாரர்களுக்கு சில கிரகங்கள் கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். அது எது என்று பார்த்தால் பாதகாதிபதியும், பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களும் எதிர்பாராத கெடுதல்களை உண்டாக்குகின்றனர்.
பன்னிரெண்டு லக்னத்தையும் சரம் ஸ்திரம், உபயம் என பிரித்துள்ளார்கள். பாதக ஸ்தானம் எது என்று பார்த்தால் சர லக்னமான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவைக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீடு பாதக தானமாகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகிய ஸ்திர லக்னத்திற்கு 9ஆம் வீடு பாதக ஸ்தானமாகும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னத்துக்கு 7ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். பாதக ஸ்தானாதிபதி, பாதகஸ்தானத்தில் அமையும் கிரகங்களின் போன்றவற்றின் தசா புக்தி காலத்தில் தொழில், பொருளாதார ரீதியாக நஷ்டம் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இடையூறு, எதிர்பாராத இழப்புகள் ஏற்படும்.
சர லக்னத்திற்கு 11ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் மூத்த சகோதர வழியில் சோதனைகள் சகோதர தோஷம் உண்டாகிறது. 11ல் அமையும் கிரகங்களும் 11ஆம் அதிபதியும் சில கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். கெடுதல்கள் என்றால் முழுமையான கெடுதல் அல்ல. சில சின்ன சின்ன கெடுதல்கள் ஏற்பட்டாலும் ஒரு சில வகையில் அனுகூலப் பலன்கள் உண்டாகிறது.
ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் தந்தை வழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகிறது. உற்றார் உறவினர்கள் வகையிலும் ஒரு ஒற்றுமையில்லாத நிலை ஏற்படுகிறது. 9ஆம் அதிபதி ஸ்திர லக்னத்திற்கு பெரும்பாலும் கெடுதிகளை செய்வதில்லை.
உபய லக்னத்திற்கு 7ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை. 7ஆம் வீடு கூட்டுத் தொழில் ஸ்தானம் என்பதால் உபய லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுத் தொழில் செய்தால் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகிறது. மிதுனம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனகாரகன் குருவே 7ஆம் அதிபதியாகி பாதகாதிபதியாவதால் பொருளாதார ரீதியாக சங்கடங்கள், நெருங்கியவர்களுக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராத நிலை, கூட்டாளிகளிடம் பண விஷயத்தில் தகராறு உண்டாகும்.
பாதக ஸ்தானாதிபதி கெடுதல்களை உண்டாக்குவார் என்றாலும் சில நேரங்களில் பாதகாதிபதியு-ம் கெடுதல்களை செய்வதில்லை. பாதகாதிபதி யாருக்கு கெடுதலை செய்ய மாட்டார் என்று பார்த்தால் 3,6,8,12ல் மறைந்திருந்தாலும், திரிகோண ஸ்தானமான 1,5,9ல் அமையப் பெற்றாலும் பாதகாதிபதி பாதக பலனுக்கு பதில் சாதக பலனை ஏற்படுத்துவார்கள்.
பாதகாதிபதி, திதி, சூன்ய ராசியில் இருந்தாலும் பாதகாதிபதி பகை நீச ராசியில் இருந்தாலும் பாதகாதிபதி சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றாலும் பாதகப் பலனை செய்வதில்லை.
பாதக ஸ்தானத்தில் ஒரு கிரகம் இருக்கின்றது என்றால் எது என்ன கிரகமே அக்கிரகத்தின் காரகத்துவ விஷயத்தில் மிகவும் உஷாராக இருப்பது உத்தமம். 4ம் அதிபதி பாதக ஸ்தானத்திலிருந்தால் ஜாதகரின் பெயரில் உள்ள அசையும் அசையா சொத்திற்கு ஆபத்து என்பதால் அதனை குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களின் பெயர்களில் வைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.
பாதகாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த பாவப் பலன் பாதிக்கப்படுகிறது. 4ல் இருந்தால் சொந்த வீடு அமைய இடையூறும், 5ல் இருந்தால் புத்திர தோஷமும், 9ல் இருந்தால் தந்தை வழியில் பகையும் உண்டாகிறது. பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் தசா புக்தியிலும் சாதகமற்ற பலன்களே உண்டாகின்றன.
10ம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் 10ல் உள்ள கிரகங்கள் பாதகாதிபதி சாரத்தில் இருந்தாலும் சொந்தத் தொழில் செய்ய கூடாது. அப்படி செய்தால் நஷ்டங்கள் தான் ஏற்படும். பாதகாதிபதியின் தசா புக்தி காலங்களில் பொருளாதார ரீதியாக வரவுகள் ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக நம்பிக்கையான நபர்கள் மீது முதலீடு செய்வது நல்லது
Friday, August 28, 2015
Thursday, August 27, 2015
Wednesday, August 26, 2015
செப்டம்பா் மாத ராசிப்பலன் 2015
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
செப்டம்பா் மாத ராசிப்பலன் 2015
மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 6ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.09.2015 இரவு 09.22 மணி முதல் 21.09.2015 காலை 07.03 மணி வரை.
.
ரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாத குணம் கொண்ட உங்களுக்கு 3ல் செவ்வாய் 11ல் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 4ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மேலேங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்றே குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.09.2015 காலை 07.03 மணி முதல் 23.09.2015 மதியம் 01.05 மணி வரை.
மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 3ல் சூரியன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.09.2015 மதியம் 01.05 மணி முதல் 25.09.2015 மதியம் 03.35 மணி வரை.
கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.
பரிகாரம். முருகப்பொருமானை வழிபாடு செய்வது சஷ்டி விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 25.09.2015 மதியம் 03.35 மணி முதல் 27.09.2015 பகல் 03.37 மணி வரை.
சிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் குருவும் 2ல் ராகுவும், 12ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 27.09.2015 பகல் 03.37 மணி முதல்29.09.2015 மதியம் 03.00 மணி வரை.
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு 12ல் சூரியன் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 02.09.2015 அதிகாலை 04.48 மணி முதல் 04.09.2014 காலை 07.02 மணி வரை.
29.09.2015 மதியம் 03.00 மணி முதல் 01.10.2015 மதியம் 03.39 மணி வரை.
துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் குரு சூரியன் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். அற்புதமான நற்பலன்களை பெற முடியும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.
பரிகாரம். சனி பகவானை வழிபடுவது ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 04.09.2014 காலை 07.02 மணி முதல் 06.09.2015 மதியம் 12.17 மணி வரை.
விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 11ல் ராகு சஞ்சசாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சற்றே தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் என்றாலும் எதையும் எதிர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் சில தடைகளுக்குப் பின்பே பெற முடியும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 06.09.2015 மதியம் 12.17 மணி முதல் 08.09.2015 இரவு 08.38 மணி வரை
தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9ல் குருவும், 11ல் சனியும் சஞசரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் ஆரோக்கிறத்தில் கவனமுடனிருப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 08.09.2015 இரவு 08.38 மணி முதல் 11.09.2015 காலை 07.34 மணி வரை.
மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாத உங்களுக்கு அட்டம் ஸ்தானமான 8ல் குரு சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் தடைகளுக்குப்பின் நிறைவேறும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 11.09.2015 காலை 07.34 மணி முதல் 13.09.2015 இரவு 08.07 மணி வரை.
கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்ட உங்களுக்கு6ல் செவ்வாயும் 7ல் குருவும் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கடன்கள் யாவும் குறையும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 13.09.2015 இரவு 08.07 மணி முதல் 16.09.2015 காலை 09.11 மணி வரை.
மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு மாத கோளான சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் செவ்வாய் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 1,7&இல் கேது ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 16.09.2015 காலை 09.11 மணி முதல் 18.09.2015 இரவு 09.22மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
09.09.2015 ஆவணி மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, துவாதசி திதி, பூச நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம் தேய்பிறை.
16.09.2015 ஆவணி மாதம், 30 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி, சித்தரை நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம் தேய்பிறை.
17.09.2015 ஆவணி மாதம், 31 ஆம் தேதி வியாழக்கிழமை, சதுர்தசி திதி, சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம் தேய்பிறை.
23.09.2015 புரட்டாசி மாதம், 06 ஆம் தேதி புதன்கிழமை, தசமி திதி, உத்திராட நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை
24.09.2015 புரட்டாசி மாதம், 07 ஆம் தேதி வியாழக்கிழமை, ஏகாதசி திதி, திருவோண நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை
25.09.2015 புரட்டாசி மாதம், 08 ஆம் தேதி வெள்ளிகிழமை, துவாதசி திதி, அவிட்ட நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை
Tuesday, August 25, 2015
பயணங்களை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
மக்கள் பெருக்கம், இட நெருக்கடி போன்றவற்றால் கட்டாயம் தினமும் அனைவரும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் வசிப்பது ஓரிடமாகவும் பணிபுரிவது ஓரிடமாகவும் இருக்கிறது. சொந்தமாக வீடு வாங்கி வசிக்க விரும்புபவர்கள் எங்கு இடம் மலிவாக கிடைத்தாலும் வீடு கட்டி குடியேறி விடுகிறார்கள். மற்ற வசதிகளை நினைத்து பார்ப்பதில்லை. அதன் பயனாக காய் கறி வாங்க வேண்டும் என்றாலும் 2,3, கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இது மட்டுமின்றி வீடு ஓரு ஊரிலும் பணி வேறு ஊறிலும் இருப்பவர்கள் வாரம் ஒரு முறை குடும்பத்தை பார்த்து விட்டு செல்ல சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணமும் அலைச்சலை ஏற்படுத்தவதாக உள்ளது. சிலர் வெளி நாடுகளிலேயே வாழ வேண்டிய சூழ்நிலையால் தூர தேசங்களுக்கு படையெடுத்து பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஜோதிட ரீதியாக யாருக்கு அதிக பயணங்களை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று பார்த்தால் பயணங்களுக்கு காரகத்துவம் வகிக்கக் கூடிய கிரகம் சந்திரனாகும். சந்திரன் திசை புக்தி நடைபெறுகின்ற சமயங்களில் தான் பயணங்கள் அதிகம் ஏற்படுகின்றது.
சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டில் சுப கிரக பார்வையுடன் இருந்தால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். 12 பாவங்களில் ஜென்ம லக்னத்திற்கு 3,6,9,12ஆம் வீட்டைக் கொண்டு பயணங்களை தீர்மானம் செய்யலாம். 3,6ஆம் வீட்டைக் கொண்டு குறுகிய கால பயணத்தையும் 9,12ஆம் பாவத்தைக் கொண்டு தூர பயணம் வெளியூர் வெளி நாடு பயணங்களையும் தீர்மானிக்கலாம்.
மூன்றாம் அதிபதி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் சுபர் சேர்க்கையுடன் அமையப் பெற்று அடிக்கடி பயணங்களும் அனுகூலங்களும் உண்டாகும். 3ஆம் வீடு வலுப்பெறுவது மட்டுமின்றி 3ஆம் வீட்டை சுபர் பார்ப்பது நல்லது. 3ல் சந்திரன் அமையப் பெற்று வலுவுடன் இருந்தால் அடிக்கடி பயணமும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும்.
மூன்றாம் அதிபதி பலமாக இருந்து சூரியன், சந்திரன் குரு, சுக்கிரன், ஆகியோர் சுபர் பார்வை பெற்று அமையப் பெற்றால் அடிக்கடி பயணங்களும் பயணங்களால் பொருளாதார ரீதியாக மேன்மையும் உண்டாகும்.
மூன்றாம் அதிபதியும் சந்திரனும் பலமிழந்து 3ல் சனி, செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தால் பயணங்களால் மனக்கவலையும், சங்கடங்களும் ஏற்படும்.
9,12ம் வீடுகள் தூர பயணம் வெளியூர் பயணம் வெளி நாடு பயணங்களை குறிக்கக் கூடிய ஸ்தானமாகும். 9,12க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 9,12க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், வெளியூர் வெளிநாடு பயணம் ஏற்படும். கடகம் விருச்சிகம் மீனம் ஆகியவை ஜல ராசிகள் ஆகும். இவைகள் 9,12ம் வீடுகளாக இருந்து அதில் சந்திரன் அமையப் பெற்றால் வெளியூர் பயணங்கள் உண்டாகும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் 9,12ல் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் வலிமையாக அமையப் பெற்றால் வெளியூர் பயணமும், பயணங்களால் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய லாபமும் உண்டாகும். 9,12ஆம் வீடுகளில் சுப கிரகங்கள் பலமாக அமையப் பெற்றால் பயணங்களால் ஏற்றங்கள் உண்டாகும். 9,12ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் அமைந்து அதன் திசை நடைபெற்றால் பயணங்களால் இழப்பு ஏற்படும்.
9,12ல் சனி ராகு போன்ற கிரகங்கள் சுபர் பார்வையுடன் அமையப் பெற்று சுப ஆதிபத்யம் பெற்றிருந்தால் கடல் கடந்து அயல் நாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும். 9,12ல் ராகு,சனி அமையப் பெற்று அதன் திசை நடைபெற்றால் அயல்நாட்டவர் தொடர்பும் ஜீவன ரீதியாக அயல் நாடு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் பயணங்கள் ஏற்படுவதற்கான யோகங்கள் இருப்பது முக்கியமில்லை. அந்த யோகத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் தான் பயணங்கள் ஏற்படும். அதுவும் ஜென்ம லக்னத்திற்கு யோகத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகமாக இருந்தால் தான் அந்த திசையில் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். கோட்சார ரீதியாக ஏழரை சனி அஷ்டம சனி போன்ற சங்கடமான காலமாகவும் இருக்க கூடாது. கோட்சார நிலையும் திசா புக்தியும் நன்றாக இருந்தால் வெளியூர் மூலமாக யோகங்களும் பொருளாதார மேன்மையும் உண்டாகும்.
Monday, August 24, 2015
Saturday, August 22, 2015
Friday, August 21, 2015
கிரகங்களும் மாங்கல்ய பலமும்
கிரகங்களும் மாங்கல்ய பலமும்
இந்தியர்களின் வாழ்க்கை நிலையை பார்த்து மற்ற நாட்டிலுள்ளவர்கள் பொறாமை படுகிறார்கள். இந்தியாவில் தான் குடும்ப வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது ஆண் பெண் இருவரும் இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள். பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதை விட நீண்ட மாங்கல்ய பாக்கியத்துடன் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதை மிகவும் விரும்புகிறார்கள்.
இந்திய நாட்டில் பெண்கள் கணவனை இழந்து விட்டால் அப்பெண்ணிற்கு மிகப் பெரிய குறை ஏற்பட்டு விட்டதாக பார்க்கிறார்கள். சுமங்கலியாக இருக்கும் பெண்ணிற்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. எந்த செயல் செய்வதென்றாலும் சுமங்கலிகளை வைத்தே செய்கிறார்கள். எங்காவது வெளியில் செல்லும் போது எதிரே ஒரு சுமங்கலிப் பெண் வந்து விட்டால் அச்செயல் சிறப்பாக நடக்கும் என்றும் அது ஒரு நல்ல சகுனம் என்றும் கருதுகிறார்கள். ஒரு ஆண் எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருந்தாலும் அமையும் மனைவி நீண்ட மாங்கல்ய பாக்கியம் கொண்ட பெண்ணாக இருந்தால் அந்த ஆணுக்கு எப்படிப்பட்ட கண்டம் ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்கும் யோகம் உண்டாகி விடுகிறது.
ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ ஜெனன ஜாதக அமைப்பு மிகவும் முக்கியம். பெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8ஆம் பாவத்தை மாங்கல்ய ஸ்தானமாக வைத்துள்ளார்கள். ஒரு பெண்ணிற்கு 8ம் வீடும் பலம் பெற்று அமையப் பெற்றால் நீண்ட மாங்கல்ய பாக்கியம் உண்டாகிறது. 8ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் அமைவதும், பாவ கிரகங்கள் 8ஆம் வீட்டை பார்வை செய்வதும் நல்லதல்ல. 8ஆம் வீடு மாங்கல்ய ஸ்தானம் என்பதைப் போல 7ஆம் வீடு களத்திர ஸ்தானமாகும். 7,8 சிறப்பாகக் இருந்தால் நல்ல வாழ்க்கை உண்டாகும். திருமண வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள பெண் ஜாதகத்தை எடுத்தவுடன் 7,8ம் பாவங்கள் பலமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
ஜென்ம லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கொடிய பாவிகள் இருப்பதும் 8ஆம் வீட்டை சனி, செவ்வாய் பார்வை செய்து சுபர் பார்வையின்றி இருப்பதும் கடுமையான தோஷமாகும். 7,8க்கு அதிபதிகள் இணைந்து 8ல் அமையப் பெற்று பாவிகள் பார்த்தாலும்,
8ல் செவ்வாய் 8ஆம் அதிபதி சேர்க்கை பெற்றிருந்தாலும், ராகு சனி செவ்வாய் சேர்க்கை பெற்று 7,8ல் இருந்தாலும்.
ஜென்ம லக்னத்திற்கு 7ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்து 7,8க்கு அதிபதிகள் இணைந்து 12ல் இருந்தாலும் 7ஆம் அதிபதி பலமிழந்து சனி, செவ்வாய் இணைந்து 7,8ல் இருந்தாலும்,
ஜென்ம லக்னத்திற்கு 7ஆம் வீட்டிற்கு இரு புறமும் பாவிகள் இருந்தாலும் 7ஆம் அதிபதி பாவிகளுக்கு இடையே இருந்தாலும், 7ஆம் வீட்டில் செவ்வாய் அமையப் பெற்று பாவிகள் பார்வை செய்தாலும்
ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, 7,8ல் இரு பாவிகள் இணைந்திருந்து சுபர் பார்வை பெறாமல் இருந்தாலும், கால புருஷ தத்துவப்படி மாங்கல்ய ஸ்தானமாக கருதப்படும் விருச்சிக ராசியில் 2க்கும் மேற்பட்ட பாவிகள் இருந்தாலும்,
கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. குறிப்பாக 7,8ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புக்தி அப்பெண்ணிற்கு வரும் போது கணவருக்கு கண்டம் தவிர்க்க முடியாத சங்கடங்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
Thursday, August 20, 2015
Wednesday, August 19, 2015
Tuesday, August 18, 2015
12ல் கிரகங்கள் அமைவதினால் உண்டாகக்கூடிய பலன்கள்
12ல் கிரகங்கள் அமைவதினால் உண்டாகக்கூடிய பலன்கள்
ஜென்ம லக்னத்திற்கு 12ஆம் வீடு அயன சயன போகத்தையும் விரயத்தையும் குறிப்பிடக் கூடியதாகும். 12ஆம் பாவத்தைக் கொண்டு ஒருவருக்கு ஏற்படும் செலவுகள், நிம்மதியற்ற உறக்கம், மன குழப்பம், நெருங்கியவர்களிடம் பயம், கடன் நிவர்த்தி, உடலில் உள்ள குறைபாடு, வேலை இழப்பு, தேவையற்ற பிரச்சனைகள், இடது கண் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்
12ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் சிறப்பு. அப்படி கிரகங்கள் அமையப் பெற்றால், சுப கிரகங்களாக இருந்தால் அனுகூலமான பலன்களை உண்டாக்கும். 12ல் சுப கிரகங்கள் அமையப் பெற்று 12ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து இருந்து 12ஆம் அதிபதி பலமிழந்தாலும் சுப கிரகங்களின் அமைப்பால் அவ்வளவு எளிதில் செலவு செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படாது. அதுவே 12ல் கிரகங்கள் பலமிழந்து அமையப் பெற்று 12ஆம் அதிபதி பலம் பெற்று இருந்தால் அதிகம் செலவு செய்ய கூடிய நிலை உண்டாகும். பாவ கிரகங்கள் 6,8க்கு அதிபதியாகி 12ல் பலம் பெற்றிருந்தால் பணத்தை அக்கிரகங்களின் தசா புக்தி காலத்தில் இழக்கும் அமைப்பு உண்டாகும்.
அதாவது சுபர் 12ல் இருந்தால் செலவுகள் நியாயப் படியாக இருக்கும். பாவிகள் 12ல் பலம் பெற்றால் நிம்மதியற்ற நிலை, ஒய்வில்லாத சூழ்நிலை கண்களில் கோளாறு போன்றவை ஏற்படும். 12ஆம் வீட்டில் சனி ராகு சேர்க்கை பெற்று 8ஆம் அதிபதி பார்வை செய்தால் வாழ்வில் பல்வேறு கஷ்டங்கள் ஏற்படும்.
12ஆம் வீட்டில் அமையும் கிரகங்களுக்கு ஏற்ப அக்கிரங்களின் திசா புக்தி காலத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். ஜென்ம லக்னாதிபதி 12ல் அமையப் பெற்று பலமிழந்து இருந்து இருந்து அக்கிரத்தின் தசா புக்தி நடைபெற்றால் தேவையில்லாத பயணம் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, வறுமை, கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் அதிபதி 12ல் 12ஆம் அதிபதி சேர்க்கை பெற்று அமையப் பெற்று 2ஆம் அதிபதி திசை புக்தி நடந்தால் வீண் செலவு குடும்பத்தில் பிரச்சனை, குடும்பத்தில் நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள், மனக்குழப்பம் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 3ஆம் அதிபதி பலமிழந்து 12ல் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் உடன் பிறந்த இளைய, சகோதர, சகோதரிகளுக்கு உடல் நிலை பாதிப்புகள் காதுகளில் பாதிப்பு அலைச்சல், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு உண்டாகும். 3ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தால் திடீர் யோகம் ஏற்றம் உயர்வு உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 4ஆம் அதிபதி 12ல் பலமிழந்து அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் கல்வியில் தடை, தாய்க்கு பாதிப்பு அலைச்சல் அதுவே பலம் பெற்றிருந்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் அதிபதி 12ல் பலமிழந்து அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் தந்தைக்கு உடல் நிலை பாதிப்பு, புத்திர வழியில் கவலை உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு, உண்டாகும். அதுவே சுபர் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் பல்வேறு பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் அதிபதி 12ல் பலமிழந்து அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் உடல் நிலை பாதிப்பால் மருத்துவ செலவுகள், எதிரிகளின் செயல்களால் வீண் விரயங்கள் உண்டாகும். 6ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தால் எதிரிகளை வெல்லும் ஆற்றல் எதிர்பாராத வகையில் வரவுகள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 7ஆம் அதிபதி 12ல் பலமிழந்து அமையப் பெற்று சுக்கிரனும் பலமிழந்து அதன் தசா புக்தி நடைபெற்றால் மனைவி அல்லது கணவனுக்கு கண்டம், கூட்டாளிகள் மூலம் இழப்பு உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 8ஆம் அதிபதி 12ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் எதிர்பாராத வகையில் யோகங்கள், ஏற்றங்கள், முன்னேற்றங்கள் உண்டாகும். 8ஆம் அதிபதி பலமிழந்து பாவிகள் பார்வை பெற்றால் தேவையற்ற பிரச்சனைகள், உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 9ஆம் அதிபதி 12ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் வெளியூர், வெளிநாடு பயணங்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் தந்தை தந்தை வழி, உறவினர் வகையில் தேவையற்ற சோதனைகள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 10ஆம் அதிபதி 12ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக சோதனை, உத்தியோகத்திலிருந்தால் வேலையிழப்பு, தகுதியிழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 11ஆம் அதிபதி 12ல் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் மூத்த உடன் பிறப்புகள் மூலம் சோதனைகள் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 12ஆம் அதிபதி 12ல் ஆட்சி பெற்று சுபர் பார்வையுடன் அமையப் பெற்று திசா புக்தி நடைபெற்றால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அதுவே பாவ கிரகங்கள் 12ல் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விரயங்கள் ஏற்படும்.
Monday, August 17, 2015
Sunday, August 16, 2015
Thursday, August 13, 2015
ஏக நட்சத்திர திருமணம் நல்லதா?
200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது இந்தநாள் நிகழ்ச்சி
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
ஏக நட்சத்திர திருமணம் நல்லதா?
திருமணம் செய்வதற்கு முன் ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கின்ற போது நட்சத்திர பொருத்தம் சிறப்பாக இருந்தால் திருமண வாழ்க்கையானது மிக சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமைந்துவிடும். ஏக நட்சத்திரத்திற்கு திருமணம் செய்யலாமா என்ற சந்தேகம் மக்களுக்கு உண்டு. என்றாலும் சில நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம். அதற்கு சில விதி முறைகள் உண்டு.
ஆண் பெண் இருவரும் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், அஸ்தம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் திருமண செய்ய மிகவும் உத்தமம்.
அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம், ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் திருமணம் செய்ய மத்திமம். மேற்கூறிய நட்சத்திரங்களை தவிர மற்ற நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் திருமணம் செய்ய கூடாது.
ஏக நட்சத்திரம் என பார்க்கும் போதும் ஆண், நட்சத்திரம், முன் பாதமாகவும் பெண் நட்சத்திரம் பின் பாதமாக வந்தால் சிறப்பான அமைப்பாகும். ஆண் நட்சத்திரம் முன் பாதம் பெண் நட்சத்திரம் பின் பாதமாக இருப்பதன் மூலம் நட்சத்திர பொருத்தம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும்.
ஏக நட்சத்திர ரீதியாக இருவருக்கும் நட்சத்திர பொருத்தம் இருந்தாலும் செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் இருக்கிறதா ஜாதகப் பொருத்தம் சிறப்பாக இருக்கிறதா என ஆராய்ந்து அனைத்தும் நன்றாக இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம்.
Wednesday, August 12, 2015
Tuesday, August 11, 2015
Intha Naal 08/11/15
200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது இந்தநாள் நிகழ்ச்சி
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
Monday, August 10, 2015
ஹோரைப் பலன்கள்
காணத்தவறாதீர்
தினமும்
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
ஹோரைப் பலன்கள்
ஒரு நாளின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரு கிரகம் ஆக்கிரமிப்பு செய்கிறது. இதை நேரத்தை அந்த கிரகத்தின் ஹோரை என்கிறோம். நல்ல நேரம் கெட்ட நேரம் இருப்பது மாதிரி நல்ல ஹோரையும் கெட்ட ஹோரையும் உண்டு. எந்தெந்த ஹோரைகளில் என்ªன்ன காரியங்களை செய்யலாம் என பார்ப்போம்.
சூரிய ஹோரை
அரசாங்க அதிகாரிகளை சந்தித்து உதவி பெற, புதிய வேலைகளுக்கு முயற்சி செய்ய, உயில், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் எழுத, வியாதிகளுக்கு மருந்துண்ண, பிரபலமானவர்களை சந்திக்க, சுபாரிசுகளுக்கு ஏற்பாடு செய்ய, வியாபாரத்திற்கு கூட்டாளிகளின் தயவு பெற, வங்கிகளில் தொடர்பு- வைக்க, போன்ற காரியங்களுக்கு சூரிய ஓரை ஏற்றது. இந்த ஹோரையில் புது வீடு குடி போகக் கூடாது.
சந்திர ஹோரை
பஸ், ரயில், கப்பல், விமானம், மற்றும் அனைத்து வாகனங்களிலும் பயணம் செய்ய, தாய்வர்க்கத்தினரைக் கண்டு பேச, புதிய ஆடை ஆபரணங்கள் அணிய, கலைத்துறை சம்பந்தப்பட்ட பொறுப்புக்களில் ஈடுபட, பெண் பார்க்க, விசா பாஸ்போர்ட் மனுக்கள் வாங்க கொடுக்க, கல்வி புகட்ட, பசு கன்று கால்நடை வளர்க்க சந்திர ஹோரை மிகவும் உகந்தது. இந்த ஹோரையில் புது வீடு கட்டலாகாது.
செவ்வாய் ஹோரை
வாங்கிய கடன்களை தீர்க்க. நெருப்பு சம்பந்தப் பட்ட காரியங்கள் செய்ய, மண், மனை பூமி சம்பந்தமானதை விற்க, பேரம் பேச, வழக்காட, வழக்கு செய்ய, யுத்தங்கள் ஆரம்பிக்க, இரும்பு தளவாடங்கள் தயாரிக்க, புதிய ஆலைகள் தொடங்க, அடுப்பு போட, மருந்துண்ண, கருத்துக்களை மாற்றி பேச, அழிவு வேலைகள் செய்ய உகந்தது
புத ஹோரை
தந்திகள் அனுப்ப, வக்கீல்களை நேர்காண விஞ்ஞானம், ஜோதிடம், ஆராய்ச்சிகளில் ஈடுபட போட்டி, பந்தயங்களில் பங்கு கொள்ள, புதிய வேலைக்கு முயற்சி செய்ய தேர்விற்கு படிக்க ஆரம்பிக்க பத்திரிக்கைகளுக்கு கதை கவிதைகள் அனுப்ப கமிஷன் வியாபாரம் தொடங்க தாய் வர்க்கத்தைப் பற்றி பேச புகழ் பெற்றவர்களை சந்திக்க உத்தமம். இந்த ஹேரையில் நிலம் வாங்கிவோ, பெண்களைப் பற்றி பேசவோ கூடாது.
குரு ஹோரை
உபதேசம் பெற, தியானம் மந்திரம் ஜபிக்க, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க, புதிய ஆடை அணிய, பொருள் கொடுக்க வாங்க, கூட்டு வியாபாரம் செய்ய, கடன் வாங்க, அரசாங்க காரிய நிறைவிற்கு மனு போட, பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க, பெரிய மனிதர்களை சந்திக்க, அற நிலையம் மற்றும் கோவில் பணிகள் தொடங்க, பணம் சம்பந்தமான எந்த விஷயங்களில் ஈடுபட, ஆபரணங்களை சேர்க்க உத்தமம். இதில் முதல் விருந்து உண்ணக் கூடாது.
சுக்ர ஹோரை
பெண்களைப் பார்க்க, பெண்களை நேசிக்க, பெண்களின் நட்பை பெற, விவாகம் பற்றி பேச, மருந்துண்ண, வாகனம், பசு, கன்று வாங்க, புதிய கலை பயில, கிணறு குளம் வெட்டும் பணி தொடங்க, நகைகள் வாங்க, வாசனை திரவியங்கள் சேர்க்க, விருந்து, கேளிக்கை, கச்சேரி செய்ய, கடன் வசூல் செய்ய, கிரகப்ரவேசம் மற்றும் சுப காரியங்கள் ஈடுபட, கணிணித் துறையில் ஈடுபட, பத்திரிகை துறையில் ஈடுபட, புதிய வியாபார திறப்பு விழா மனைவி வர்க்கத்தாருடன் பேச சுபம் செய்ய இந்த ஹோரை சுபம். கடன் கொடுக்கலாகாது.
சனி ஹோரை
நிலம் குத்தகை விட, இரும்பு பொருட்கள் விற்க, விவசாயம் செய்ய, சொத்து நடவடிக்கை எடுக்க, பழுது இயந்திரங்களை பராமரிக்க சுபம். மற்ற அனைத்து காரியங்களுக்கும் விலக்கவும். பிரயாணம் செய்ய கூடாது. அசுப காரியங்களுக்கு உத்தமம்.
Saturday, August 8, 2015
ஷேர் மார்க்கெட் யோகம்
காணத்தவறாதீர்
தினமும்
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
ஷேர் மார்க்கெட் யோகம்
பணம் இருந்தால் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் தானாகவே வரும். கஷ்டப்படுபவர்களை கண்டால் ஏதாவது உதவி கேட்பானோ என பயந்து அனைவரும் விலகி செல்வார்கள். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது நிதர்சனமான உன்மை. வசதி வாய்ப்புகளுடன் வாழும் மனிதர்களை கண்டால் வரும் புன்னகை கஷ்ட படுபவர்களை கண்டால் வர மறுக்கிறது. பணம் இன்று வரும் நாளை போகும் உறவு வராது என்பதெல்லாம் வாய் வார்த்தைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உண்மையில் வசதி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சொந்த பந்தங்கள் தேடி வரும். நயமாக பேசும். காரியங்களை சாதித்து கொள்ளும்.
பணம் சம்பாதிக்க பல வழிகள் இருந்தாலும் யாருக்கு எந்த வழியில் சம்பாதிக்க முடியும் என்ற விதி இருக்கிறதே அந்த வழியில் தான் சம்பாதிக்க முடியும். சிலருக்கு பூர்வீக சொத்தால் பணம் தாராளமாகக் இருக்கும். சிலர் கஷ்டப்பட்டு உழைத்து தான் சம்பாதிக்க வேண்டிய நிலை இருக்கும். ஒரு சிலருக்கு எதிர் பாராத திடீர் லாபம் யோகத்தால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொருள் வரவு உண்டாகும். அதாவது பங்கு சந்தை, ரேஸ் போன்றவை மூலம் திடீர் லாபம் உண்டாகும். சிலருக்கு ரியல் எஸ்டேட் துறையில் கூட திடீர் தன சேர்க்கை உண்டாகும். இதை தான் எதிர் பாராத தன வரவு என்பார்கள். குறிப்பாக மலேஷியா போன்ற நாடுகளில் லாட்டரி டிக்கெட் மூலம் தனலாபம் வருமா? என்று எனக்கு தினமும் தொலைபேசி வருகிறது. அங்கெல்லாம் லாட்டரி என்பது கூப்பனை வாங்கி நான்கு அல்லது ஐந்து இலக்க எண்ணை எழுதிப் போட வேண்டும்.
ஜோதிட ரீதியாக எதிர்பாராத தனசேர்க்கை யாருக்கு ஏற்படுகிறது என்று பார்த்தால் நவகிரகங்களில் ராகு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார். உபஜெப ஸ்தானங்களில் ராகு வலம் வருகின்ற ஜாதகங்களில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகிறது. உப ஜெய ஸ்தானங்களில் பாவ கிரகங்களில் சுப கிரகங்களின் பார்வை அமைகின்ற போது திடீர் தன யோகம் உண்டாகிறது. அது போல ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் வீடும், லாப ஸ்தானமான 11ஆம் வீடும் திடீர் தன யோகத்திற்கு காரகர்கள் ஆகிறார்கள். ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் வீடும் அதிபதியும் பலம் பெறுவது மிகவும் நல்லது. 6,11க்கு அதிபதிகள் லாப ஸ்தானத்தில் அமைவது அற்புதமான அமைப்பாகும்.
சுக்கிரனும் ராகுவும் 6,11க்கு அதிபதிகளின் சேர்க்கை பெற்று பலம் பெறுவது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதன் மூலம் பங்கு சந்தை லாட்டரி, ரேஸ் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். அதுவே 6,11க்கு அதிபதிகள் 12ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலோ, 12ல் அமையப் பெற்றாலோ எதிர் பாராத வகையில் அதாவது பங்கு சந்தை போன்ற ஸ்பெகுலேஷன் மூலம் எதிர்பாராத இழப்புகள் உண்டாகும். 6,11க்கு அதிபதிகள் 9ஆம் அதிபதி சேர்க்கை பெற்றால் இறை அருளால் எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும். சந்திரன் புதன் 6,11க்கு அதிபதியுடன் சேர்க்கை பெற்று பலம் பெற்று அமையப் பெற்றால் பங்கு சந்தை, மூலம் தன லாபம் உண்டாகும். சனி, ராகு சேர்க்கை பெற்று 6,11க்கு அதிபதிகள் பலம் பெற்றால் சில சட்ட விரோத செயல்கள் மூலம் எதிர்பாராத தன சேர்க்கைகள் கிட்டும்.
ஜென்ம லக்னத்திற்கு 2,5க்கு அதிபதிகள், 2,11க்கு அதிபதிகள், 2,9க்கு அதிபதிகள், 9,11க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் எதிர்பாராத தன யோகம் உண்டாகும். புதன் லாப ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்று 6ஆம் அதிபதி சேர்க்கை பெற்றால் பங்கு சந்தை மூலம் எதிர்பாராத யோகங்கள் உண்டாகும்.
லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று 6ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்றால் கலை, சினிமா, லாட்டரி, ரேஸ் மூலம் எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும். சுக்கிரன், சனி, ராகு, செவ்வாய் லாப ஸ்தானத்தில் இணைந்திருப்பது எதிர்பாராத யோகத்தை உண்டாக்கும்.
லாப ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெற்று 6ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்றிருந்தால் பூமி, மனை, மூலமாக எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும். சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமையப் பெற்று 6ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் லாட்டரி, ரேஸ், சூதாட்டம், இன்சூரன்ஸ் துறை மூலம் எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும்.
குரு சந்திரன் போன்ற கிரகங்கள் லாப ஸ்தானத்தில் அமையப் பெற்று 6ஆம் அதிபதி சேர்க்கை பெற்றால் தண்ணீர் மூலமாக யோகம் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5,11க்கு அதிபதிகள் இணைந்து ராகு, கேது சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் திடீர் தன யோகம் எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும். பொதுவாக 6,11ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெறுகின்ற போது திடீர் தன யோகம் உண்டாகிறது.
6,11க்கு அதிபதிகள் யோகத்தை உண்டாக்கும் என்றாலும் அவர்களுடன் விரயாதிபதி சேர்க்கை, பாதகாதிபதி சேர்க்கை போன்ற ஜாதக அமைப்புள்ளவர்கள் பங்கு சந்தை போன்றவற்றில் முதலீடு செய்யாமலிருப்பது மிகவும் உத்தமம்.
Subscribe to:
Posts (Atom)