Saturday, January 24, 2015

படித்த மனைவி



காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 

 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
படித்த மனைவி

கல்வி என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்றாகும். இதில் மணவாழ்க்கை ரீதியாக வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது நன்கு படித்திருந்தால் வாழ்க்கை தரமும் உயர்வாகவே இருக்கும். இன்றைய சூழலில் பெற்ற குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றாலும் முதலில் எழும் கேள்வி பெற்றோர் படித்தவர்களா? என்று தான். ஏனென்றால் கணவனோ மனைவியோ படித்திருந்தால் நல்ல உத்தியோகத்தைப் பெற முடியும். அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கும் நல்ல கல்வியைத் தர முடியும் பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் நல்ல பழக்க வழக்கங்கள், பலகலைகளில் தேர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இவை அனைத்திற்கும் மூலதனமாக அமைவது கணவன் மனைவியின் கல்வி தகுதியே ஆகும். ஜோதிட ரீதியாக உங்களுக்கு  வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது படித்தவராக இருக்குமா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் பெண்ணாவள் படித்தவளாக இருப்பாளா என்பதனை பற்றி பார்ப்போம்.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீட்டைக் கொண்டு அடிப்படைக் கல்வி, பேச்சுதிறன், எழுத்துத்திறன் பற்றியும், நான்காம் வீட்டைக் கொண்டு இளமைக் கல்வி, மற்றும் பொது அறிவைப் பற்றியும், 5 ஆம் வீட்டைக் கொண்டு உயர்கல்வி, புத்திசாலித்தனம், அறிவுக் கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை பற்றியும், 10 ஆம் வீட்டைக் கொண்டு தொழில், உத்தியோக நிலை பற்றியும், இத்துடன் நவக்கிரகங்களில் குரு, புதனைக் கொண்டு ஒருவரது கல்வி ஆற்றலைப் பற்றியும் மிகத் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். 
ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியானவள் படித்தவளாக இருப்பாளா என ஆராய்வதற்கு களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டிற்கு 2,4,5 ஆம் அதிபதிகள் மற்றும் குரு,புதன் பலத்தைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 7 ஆம் வீட்டிற்கு 4,5 க்கு  அதிபதிகள் (ஜென்மலக்னத்திற்கு 10,11 க்கு அதிபதி) சுபர் சேர்க்கைப் பெற்று  கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், ஆட்சி உச்சம் பெற்றாலும் படித்த மனைவி அமைவாள். ஒரு பெண் ஜாதகத்தில் மேற்படி இருந்தால் நன்கு படித்த கணவனாக அமைவார்.  
ஒரு ஆணின் ஜாதகத்தில் 7 க்கு 4 ஆம் அதிபதி பலமிழந்து 7க்கு, 5 ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவியானவள் கல்வித் தகுதியில் சற்று குறைந்தவளாக இருந்தாலும், நல்ல அறிவாற்றலும் குடும்பத்தை நிர்வாகிக்கும் ஆற்றலும், கணவருக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருக்கும் பண்பும் உண்டாகும். 7க்கு 2 ஆம் இடமான 8 ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல், குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் போன்றவை சிறப்பாக இருக்கும். 
ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீட்டிற்கு 4,5 க்கு அதிபதிகள் புதன் போன்ற சுபகிரக சேர்க்கை பெற்று, ஆட்சி உச்சம் பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று, சந்திரன், சுக்கிரனும் பலம் பெற்று, பரிவர்த்தனைப் பெற்றிருந்தால் நல்ல அழகான படித்த பண்புள்ள நாகரீகமான பெண் மனைவியாக அமைவள். 
ஆக 7 க்கு 4,5 ஆம் அதிபதிகள் பலம் பெற்றிருப்பது மூலமாக நல்ல படித்த வாழ்க்கைத் துணையானது அமையும். அதுமட்டுமின்றி 7 க்கு 10 ஆம் அதிபதி 7 ஆம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ அமைந்திருந்தால் நன்கு படித்த  மனைவி அமைவது மட்டுமின்றி, உயர்ந்த பதவிகளில் உத்தியோகம் வகிக்க கூடியவராகவும், கணவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கக்கூடியவராகவும் இருப்பார். 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Tuesday, January 20, 2015

தாரதோஷம்



காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 

 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்




சென்னை புத்தக கண்காட்சியில் தற்போது நான்

 எழுதிய 

திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்

 மற்றும் 

காலமெல்லாம் நோயின்றி வாழ 

ஜோதிட மருத்துவம் 

ஆகிய இரு புத்தகங்களும் புதிதாக

 வெளிவந்துள்ளது








தாரதோஷம்

ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது தான் நம்முடைய இந்திய கலாச்சாரமாகும். மேல நாடுகளே நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படும் விஷயம்  நம்முடைய கட்டுப்பாடான தாம்பத்ய வாழ்க்கைதான். பெண்கள் அனைவரும் சீதையாகவும், ஆண்கள் அனைவரும் ராமனாகவும் வாழத்தான் ஆசைபடுவார்கள். ஆனால், அந்த ஆசையானது எல்லோருக்குமே பூர்த்தியாகி விடுவதில்லை.  சில சமய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை நிலை தடுமாறச் செய்து விடுகிறது.

மனரீதியான பிரச்சினைகளும். உடல் ரீதியான தேவைகளும் வாழ்க்கைத் துணையைவிட மற்றவர்களிடம் நிறைவேறும் போது மனமும் அவரைநாடி செல்கிறது. வீட்டு சாப்பாடு சரியில்லாத போது நல்ல உணவு விடுதியை தேடிச் செல்வதைப் போல, இது சரியா தவறா என்ற வாதத்தை முன் வைத்தால் நம்முடைய கலாச்சாரப்படி தவறு தான். ஆனால் இது மேலோட்டமான கருத்து ஆகும். வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பவருக்குதான் தெரியும் அதிலுள்ள பிரச்சனைகள்.

இப்படி தடம் மாறி வாழ்க்கை செல்வதற்கும் ஜோதிட ரீதியாக உள்ள கிரக அமைப்புகளே காரணமாக இருக்கின்றன. தடம் மாறி வாழுபவர்களை இந்த சமூகம் தூற்றத்தான் செய்யும் என்றாலும், ஒவ்வொருவரிடம் என் ஜாதக நிலை இவ்வாறு உள்ளது என விளக்கம் கூற முடியாது. எவ்வளவுதான் நல்லவராக வாழ மனம் நினைத்தாலும்  கிரக நிலையின் ஆதிக்கங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒருவகையில் தவற தான் செய்வார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீடான களத்திரஸ்தானமும், களத்திரகாரகன் சுக்கிரனும் மற்ற கிரகச் சேர்க்கைப் பெற்றிருக்கின்ற போதும், 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்  போதும் களத்திரதோஷம் எனும் தாரதோஷம் ஏற்படுகிறது. பொதுவாக 7 ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றதோ, அது போல சுக்கிரனுடன் எத்தனை கிரகங்கள் சேர்க்கைப்பெற்றுள்ளதோ, 7 ஆம் அதிபதி எத்தனை கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளரோ அத்தனை நபர்கள் அவர்களின் வாழ்கையில் குறிக்கிடுவாகள்.  அதனால் தான் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு 7 ஆம் வீடு சுத்தமாகவும், 7 ஆம் அதிபதி கிரக சேர்க்கைகளின்றியும் அமைய வேண்டும் என்று கூறுவார்கள்.

நவக்கிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது போன்ற  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் 7 இல் அமைந்தாலோ, 7 ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலோ, சுக்கிரனுடன் இணைந்திருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தாரம் அமையும். இதில் சூரியன், செவ்வாய் ஒரு  ஜாதகத்தில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு. குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் 2 க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமைகின்ற போதும்,  ஜென்ம  இராசி என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரனுக்கு 7 ஆம் வீட்டில்  இரண்டிற்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரனுக்கு 7 ஆம் அதிபதி 2க்கும் மேற்பட்ட பாவக்கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், களத்திரகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரனுக்கு 7 ஆம் வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் களத்திரதோஷம் உண்டாகி மண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெறுகிறதோ, 7 ஆம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறதோ அத்தனை  தாரங்கள் கண்டிப்பாக அமையும். அதிலும்  தாரதோஷம் உண்டான நபர்களுக்கு இளம் வயதில் திருமணம் நடைபெற்றால் மற்றொரு தாரமோ அல்லது வேறு ஒரு நபருடன் தொடர்போ உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகங்களால் தோஷங்கள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறுகின்ற போது எவ்வளவு தான் குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சிகர மானதாகவும், நிம்மதியாகவும் இருந்தாலும் வேறு ஏதாவது ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டு குடும்ப வாழ்வில் நிம்மதி குறையும். 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Friday, January 16, 2015

ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு




சென்னை புத்தக கண்காட்சியில் தற்போது நான்

 எழுதிய 

திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்

 மற்றும் 

காலமெல்லாம் நோயின்றி வாழ 

ஜோதிட மருத்துவம் 

ஆகிய இரு புத்தகங்களும் புதிதாக

 வெளிவந்துள்ளது










மாபெரும் வெற்றி 
  
10 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 10  லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி. 

2011 ஜீலையில் தொடங்கி தற்போது 700 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 10  லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.  அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.


அன்புடன்
முருகுபாலமுருகன்




காணத்தவறாதீர், 

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு


கணவன் மனைவியிடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போல இணை பிரியாததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையானது மனமொத்து வாழ்வதாக அமைந்து விட்டால், அந்த வாழ்வில் இன்பத்திற்கு எல்லையே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்ப சூழல் மிக சிறப்பானதாக இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் பிறன் மனைவி நோக்காது வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்து மென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என மனைவியிடம் மட்டுமே தம்முடைய மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் ராமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருவருக்குமே பங்கு உள்ளது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ராமன் சீதையைப் போல வாழம் ஜோடிகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இப்படி ஒருவருக்கொரவர் ஒருடல் ஈருயிராய் வாழ்வதென்பது அறிதல்லவா. இப்படி சீதாராமனாய் வாழக்கூடிய யோகம் எத்தனைப் பேருக்க உள்ளது என ஜோதிட ரீதியாக பார்ப்போமா?

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்திற்கு 7 ஆம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2 ஆம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7 ஆம் அதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7 ஆம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.

ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்கு வகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில்  அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7 ஆம் வீட்டிற்கோ, 7 ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த வித சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் 7&ஆமதிபதி எவ்வளவு கிரகளுடன் கூடியிருந்தாலும் 7 ஆம் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் ஒரே திருமணம் தான் நடைபெறும்.

பொதுவாக 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவ கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.

சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும்  கூடி ஒருவரின் ஜாதகத்தில்  எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை  இல்லாமல் இருப்பது நல்லது.

ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7 இல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7 ஆம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.

இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும். 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA




Wednesday, January 7, 2015

திருமணம் எப்பொழுது நடக்கும்

மாபெரும் வெற்றி   
10 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 10  லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி. 

2011 ஜீலையில் தொடங்கி தற்போது 700 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 10  லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.  அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.


அன்புடன்
முருகுபாலமுருகன்





காணத்தவறாதீர், 

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்

திருமணம் எப்பொழுது நடக்கும்?

பண்டைய காலங்களில் இளம் பிராயத்திலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. ஆனால், காலங்கள் மாற மாற இளமையில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என கூறப்பட்டதால் இளமை திருமணங்கள் வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும் தமிழ் கலாசாரத்தில் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆணுக்கு 21 வயது பெண்களுக்கு 18 வயது  ஆகிவிட்டாலே திருமணத்தை செய்து வைத்து விடுவார்கள். இலங்கையில் சில பகுதிகளிலும் இந்த வயதுகளில் திருமணம் செய்கிறார்கள். ஆனால் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்களுக்கு 30 வயதிலும், ஆண்களுக்கு 35, 40 வயதுகளிலும் திருமணம் செய்கிறார்கள். 

இளம் வயதிலேயே திருமணம் செய்வது தவறு. இளம் வயது திருமணத்தால் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலை, சுற்றத்தாரை அனுசரித்து செல்ல முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது.  திருமணத்திற்கு உடல் தகுதி, மனத்தகுதி இரண்டுமே அவசியமாகும். 

இது ஒரு புறம் இருக்க வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு பிள்ளைகளை பெற்றெடுப்பதில் சிக்கல்கள், அவர்கள் வளர்வதற்குள் முதுமை, பருவத்தை எட்டி விடும் நிலை போன்றவை ஏற்படுகிறது. திருமணத்தை தக்க வயதில் செய்வது தான் சிறப்பு. ஒருவரின் ஜெனன ஜாதக ரீதியாக அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதினைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். வரன் பார்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு தவறான கருத்து உள்ளது. குரு பலன் வந்து விட்டால் தன் பிள்ளைக்கு திருமணம் நடந்து விடும் என்று ஜோதிடரை அணுகும் போது குரு பலம் வந்து விட்டதா பாருங்கள் என ஜாதகத்தை காண்பித்து கேட்கிறார்கள். குரு பலம் என்பது கோட்சார ரீதியாக குருபகவான் ஜென்மராசிக்கு 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதைத்தான் சொல்வார்கள். 
குரு இந்த வீடுகளில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும், சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்புகளையும் ஏற்படுத்துவார் என்றாலும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு கோட்சார ரீதியாக உண்டாகக் கூடிய குருபலம் மட்டுமின்றி ஜெனன ஜாதக ரீதியாக நடைபெற கூடிய தசாபுக்திகளும் பலமாக இருப்பது மிகவும் அவசியமாகும். 

ஒருவருக்கு திருமணம் கைகூட 7 ஆம் அதிபதியின் தசாபுக்தியோ, 7 இல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியோ, 7 ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்ற சுபகிரக தசாபுக்தியோ, 7 ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ நடைபெற்றால் திருமணம் கைகூடும் அதுபோல களத்திரகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிரனின் தசாபுக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களாகிய பரணி, பூரம், பூராடத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ நடைபெற்றாலும், சந்திரனுக்கு 7 இல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியிலும், 7 ஆம்  அதிபதியின் தசாபுக்தியிலும் திருமண சுபகாரியம் கைகூடும்.

ஒருவருக்கு என்ன தான் ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும், கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில் திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடி வருவதில்லை. அப்படியே கூடினாலும் மண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிலருக்கு கேது திசை இராகு புத்திக்கு பிறகு வரக்கூடிய குருபுத்தி காலத்தில் மணவாழ்க்கை அமைந்தாலும் வரக்கூடிய வரனுக்கும் இராகு கேது தோஷம் இருந்தால் மட்டுமே ஒரளவுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். 

கேதுவின் திசையைவிட திருமண வயதை அடைந்தவர்களுக்கு கேதுவின் புத்தி நடைபெறுகின்ற போதும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களிலும் எவ்வளவு தான் முயற்சித்தாலும் திருமணங்கள் கை கூடுவதில்லை. அப்படியே கூடி வந்தாலும் பல இடையூறுகள் ஏற்பட்டு தாமத நிலையினை உண்டாக்கும். கேது ஞான காரகன் என்பதால் கேது திசாபுக்தி காலங்களில் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். இதனால் மணவாழ்க்கையானது மகிழ்ச்சியற்றதாக மாறும்.


Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA