வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் ஜீரண கோளாறும்
நன்றி,நன்றி
8 லட்சத்தை வாசகா்களை கடந்த எனது வலை தளம்
சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 3 வருடத்திற்குள் தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 8 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.சோதிட சம்மந்தமான 570 பதிவுகளை இது வரை எனது வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
அன்புடன்
முருகுபாலமுருகன்
முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின்
சாா்பில் நடைபெறவுள்ள
சனி பெயா்ச்சி யாகம்
ஒரு சராசரி மனிதன் ஒடி ஒடி உழைப்பது ஒரு ஜான் வயிற்றுக்காகதான். நாம் கட்டாயம் மூன்று வேலை சாப்பிட்டே ஆக வேண்டும் இது யார் ஏற்படுத்திய பழக்கம் என்று தெரியாவிட்டாலும் பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். நாம் உழைக்க, சுறுசுறுப்பாக செயல்பட உணவு என்பது மிக முக்கிய மானதாகிறது. Êசாப்பிடும் உணவு ஊட்டசத்து நிறைந்ததாக இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.ஆனால் இப்போதிருக்கும் இயந்திரமயமான உலகில் சாப்பாடு என்பதே பேஷனாகி வருகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மாசாலா பொருட்களும், பாஸ்ட் புட் என்ற பெயரில் ஆங்காங்கே தெரு ஒரங்களில் விற்கப்படும் துரித உணவு வகைகளும் தான் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது. மேலை நாடுகளில் தட்ப வெப்ப நிலைக்கேற்ப உண்ணப்படும் பிட்ஸா, பர்கர், சாக்லேட் போன்றவைகள் நம்முடைய கலாசாரத்திலும் புகுந்து விட்டதால் நம்முடைய வயிறு வேலை செய்வதா வேண்டாமா என குழம்பிக் கொண்டிருக்கிறது. பொதுவாக நாம் உண்ணும் உணவானது நன்கு ஜீரணித்தால் மட்டுமே அது ரத்தத்துடன் கலந்து நம் உடலுக்கு தேவையான சக்தியை நமக்கு அளிக்கிறது. அப்படி ஜீரணமாகாவிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், வாயுத்தொல்லை, வயிற்று வலியால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. வயிற்றால் ஏற்றுக் கொள்ள முடியாத பொருட்களை உண்பதால் புட் பாய்சன் என்ற பெயரில் உணவே விஷமாக மாறி விடுகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடும், சிம்ம ராசியும் மேல் வயிறு பாகத்தினைக் குறிக்கும் பாவமாகும். 6ம் வீடும் கன்னி ராசியும் கீழ் வயிறு பாகத்தினைக் குறிக்கும் பாவங்களாகும். ஜென்ம லக்னத்திற்கு 8ம் வீடும் விருச்சிக ராசியும் சிறு குடலுக்கும் காரண பாவமாகும். (மற்ற கழிவுகளை வெளியேற்றும்)
சூரியன் ஜீரண சக்திக்கு காரகனாவார், ஜென்ம லக்னத்திற்கு 5,6 ஆம் பாவத்தின் அதிபதிகள்,சூரியன் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும், 5,6 ஆம் பாவத்தை பாவிகள் சூழ்ந்திருந்தாலும் ஜீரண சக்தி பாதித்து வயிறு கோளாறுகள் உண்டாகும். நவகிரகங்களில் சனி,ராகு பலமான பாவகிரகங்கள் ஆகும். சனி,ராகு ஜென்ம லக்னத்திற்கு 5இல் அல்லது 6இல் அமைந்தால் வயிற்றில் கோளாறு உண்ணும் உணவு செரிக்காத நிலை ஏற்படும். சனி,ராகு 6,8ம் பாவத்திலோ, கன்னி, விருச்சிகத்திலோ அமையப் பெற்றால் குடலில் பிரச்சனை, குடல் பாகத்தில் பாதிப்பு உண்டாவது மட்டுமின்றி மலச்சிக்கலும் ஏற்படுகிறது.
5ல் சூரியன் அமையப் பெற்றால் சூடாக உணவு உண்ணும் பழக்கம் நல்ல ஜீரண சக்தியும் உண்டாகும். சூரியன் பாவகிரக சேர்க்கை, செவ்வாயுடன் சம்மந்தப்பட்டால் ஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்புள்ளது. செவ்வாய் சம்மந்தமோ பார்வையே ஏற்பட்டால் குடலில் புண் உண்டாகும்.
5ம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றால் வித விதமான உணவு மேல் விருப்பம் பெற்று இருப்பார்கள். அதனால் வளர்பிறை சந்திரனாக இருந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். பாவிகள் சேர்க்கை பார்வை இல்லாமல் இருந்தால் மேலும் சிறப்பு. தேய் பிறை சந்திரனாகி 5ல் அமையப் பெற்றால் மனக்கவலையுடன், வயிறு கோளாறு குடல் புண், உடல் உபாதைகள் ஏற்படும். சந்திரனுக்கு கேதுவுடன் சம்மந்தம் ஏற்பட்டால் குடல் புண் ஏற்பட்டு பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.
5ம் வீட்டில் செவ்வாய் அமையப் பெற்றால் சூடான உணவு வகையில் ஆர்வம் கொண்டு அதன் மூலம் குடல் புண், கேஸ்டிரிக், அல்சர், போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். செவ்வாய் ஆட்சியோ உச்சமோ பெற்றால் நல்ல ஆரோக்கியம் பெற்றாலும் திசா புக்தியில் வயிறு கோளாறு உண்டாகும். செவ்வாய் நீசம் பெற்றோ பாவியாகி 5ல் அமைந்து 6,8,12ம் அதிபதியின் தொடர்பு பெற்றிருந்தால் செவ்வாய் திசை புக்தி காலத்தில் வயிற்று வலியால் அதிக அவதி உண்டாகும்.
5ல் புதன் அமைந்து சூரியன் சேர்க்கை பெற்றால் புதன் திசை புதன் புக்தி காலத்தில் பசி இல்லாத நிலை அஜீரண கோளாறு ஏற்படும்.
5ல் குரு அமையப் பெற்றால் நல்ல பசி எடுக்கும் நிலை ஜீரண தன்மை இருக்கும். குருபகவான் செவ்வாய் ராகு கேது சேர்க்கையோ, பார்வையோ பெற்றால் அஜீரண கோளாறு, வயிற்றில் புண் உண்டாகும்.
5ல் சுக்கிரன் அமையப் பெற்றால் இனிப்பான, சுவையான, உயர்வகை உணவு உட்கொள்ள ஆசையும், சுக்கிரன் சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் எண்ணெயில் தயாரித்து பொருள் மீது ஆசை ஏற்படும். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ செவ்வாய் பார்வையோ பெற்றால் சூடான உணவை சாப்பிடுவார்கள். சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றால் வயிறு பாதிக்கும்.
சனி 5ல் அமையப் பெற்றால் அதிக அளவு எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் சரியாக ஜீரணமாகாமல் அஜீரண கோளாறு அபண்டிசைட்ஸ் பெப்டிக் அல்சர், இன்டெஸ்டினல் அல்சர் உண்டாகும்.
ராகு 5ல் அமைந்தால் சரியான சமயத்தில் சாப்பிட முடியாத நிலை குடல் புண் ராகு புக்தி காலத்தில் வயிறு கோளாறு உண்டாகும். சூரியனுக்கு பரிகாரம் செய்வது நல்லது
கேது 5ல் அமைந்தால் சூடாக புசிப்பார்கள். கேது புக்தி காலத்தில் கேஸ்டிக், குடல் புண், அல்சர் உண்டாகும்.
5ல் பாவிகள் அமைந்து குரு பார்வை பெற்றால் வயிறு உபாதைகள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும். ராசியையும் ஜென்ம லக்னத்தையும் குரு பார்வை செய்தால் கெடுதிகள் விலகும். அளவுடன் உண்டு வளமுடன் வாழ்வது மூலம் வயிறு கோளாறுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment