Saturday, July 26, 2014

ஜல தொடர்புள்ள நோய்

ஜல தொடர்புள்ள நோய்




முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்








கண்ணுக்கு தெரிந்த உடல் உறுப்புகள் மட்டுமின்றி உடலுக்குள் இருக்கும் கண்ணுக்கு தெரியாத உறுப்புகளும் நன்றாக செயல்பட்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியும். சிலருக்கு அடிக்கடி ஜலத் தொடர்பான உடல் உபாதைகள் ஏற்பட்ட படியே இருக்கும். ஜலதோஷம் இது சற்றே அதிகமானால் ஆஸ்மா, மூச்சுத் திணறல், டி.பி போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஜலக்காரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலம் இழக்காமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். ஜலராசிகள் எனப்படும் கடகம், விருச்சிகம், மகரம், மீன, ராசிகளும் பலமிழக்காமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்க்கு கடக ராசி காரகன் ஆகும். சந்திரன் கடகத்தில் அமைந்து சூரியன் பகை பெற்று பாவிகள் பார்வை பெற்றிருந்தால் நுரையீரலில் அடைப்பு உண்டாகின்றது. சூரியன் சந்திரன் இணைந்து ஜல ராசியில் இருந்தாலும் ஜலத் தொடர்புள்ள நோய் உண்டாகும். சூரியன் சந்திரன் பலம் இழந்து ஜல ராசிகளில் கோட்சார ரீதியாக சூரியன் சந்திரன் அதனை கடந்து போகும் போது மூச்சுத்திணறல் ஜலதோஷம் உண்டாகிறது.

கடகம் விருச்சிகம் மகரம் மீனம் போன்ற ஜலராசிகள் லக்னமாகி இருந்து சூரியன் சந்திரன் ஜென்ம லக்னத்தில் அமைந்தாலும், பார்வை செய்தாலும், ஜென்ம லக்னம் சூரியன் சந்திரன் ஜலராசிகளில் அமையப் பெற்றாலும், 4ம் வீடு ஜலராசியாக இருந்து செவ்வாய் சனியால் பாதிக்கப்பட்டாலும் மூச்சுக் குழாயில் அடைப்பு மூச்சுத்திணறல் உண்டாகின்றது.ஜென்ம லக்னத்திற்கு 6,8ல் சந்திரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கையுடன் இருந்தால் நீரினால் கண்டம் உண்டாகும்.
சந்திரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது




ஆஸ்மா;

மூச்சு விடவே சிரமப்படும் நோயாகும் இது வந்தாலே இருமல் சளித் தொல்லை மூச்சு இரைத்தல் போன்றவை உண்டாகும்.

ஜென்ம லக்னம் கடகமாக இருந்து செவ்வாய் சனி லக்னத்தில் அமைந்தாலும், செவ்வாய் இருந்து சனி பார்வை செய்தாலும், ஜென்ம லக்னம் ஜல ராசியாக இருந்து லக்னாதிபதி 6,8,12ல் இருந்தாலும், ஜென்ம லக்னம் ஜல ராசியாக இருந்து கடகத்தில் செவ்வாய் சனி இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 4,6க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று 4 அல்லது 6ம் வீடு ஜல ராசியாக இருந்தாலும், ஜென்ம லக்னாதிபதி சனி சேர்க்கை பெற்று 12ல் அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்திற்கு  4ம் வீடு ஜல ராசியாக இருந்து சனியால் 4ம் வீடு பாதிக்கப்பட்டு இருந்தாலும், 4ல் சனி பலம் இழந்து இருந்தாலும், ஆஸ்மா உண்டாகும்.

நுரையீரல் வேலை செய்யாத நிலை

உள்ளுறுப்புகளில் இது மிகவும் முக்கியமானதாகும் நுரையீரல். சரிவர வேலை செய்தால் தான் உடலில் தேவையற்ற நீர் வெளியேற்றப்படும் இருதயம் சரிவர இயங்கும்.

சந்திரன் ஜல ராசியில் அமையப் பெற்று சூரியன் சம்மந்தமாகி சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்து சந்திர திசை, சூரிய திசை, சந்திர புக்தி, சூரிய புக்தி, நடைபெறும் போதும்,
சூரியன், சந்திரன் இணைந்து ஜல ராசியில் அமையப் பெற்று 4ம் அதிபதி பலம் இழந்து காணப்பட்டாலும்,
சந்திரன் நின்ற வீட்டின் அதிபதியும் சூரியன் நின்ற வீட்டின் அதிபதியும் சேர்க்கை பெற்று ஜல ராசியில் அமையப் பெற்று சந்திரன் பலமிழந்திருந்தாலும்,
சந்திரன், சுக்கிரன், 6ம் அதிபதியும் சேர்க்கை பெற்று ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டில் அமையப்பெற்று இருந்தாலும்
நுரையீரல் சரியாக வேலை செய்யாத நிலையும் மூச்சுத்திணறலால் அதிக துன்பமும் உண்டாகிறது. ஜல ராசியில் பிறந்து மேற்கூறிய கிரக அமைப்பு பெற்றவர்கள் குளிர்ச்சியானவற்றை கூடுமான வரை தவிர்த்து மழை பனிக்காலங்களில் கதகதப்பான சூழ்நிலைகளில் தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் சந்திர பகவானுக்கு உரிய பரிகாரங்களை மேற்கொள்வது மிகவும் உத்தமம்.
சந்திரனுக்கு பரிகாரம் செய்வதும், திருப்பதி செல்வதும் முத்து வைத்த மோதிரம் அணிவதும் நல்லது.


காச நோய்

இது ஒரு தொற்று நோய். இருமல்,தும்மல்,எச்சில் போன்றவற்றால் இது பரவும். தொடர்ந்து நீண்ட நாட்கள் இருக்கும் வியாதிகளில் (டி.பி என்பது) எலும்பு உருக்கி நோயும் ஒன்றாகும். இந்த நோய் ஆளையே உருக்கி எலும்பும் தோலுமாய் ஆக்கிவிடும் என்பதால் இதற்கு எலும்புருக்கி நோய் என்ற பெயரும் உண்டு. சுகாதாரமற்ற சூழ்நிலையால் இவ்வியாதி தோன்றுகிறது என்றாலும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் இதனை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஜோதிட ரீதியாக இந்த நோய் ஏற்பட சில கிரக அமைப்பு காரணமாகின்றது.
ஜென்ம லக்னத்திற்கு 6,8ல் குரு அமையப் பெற்று பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையால் பாதிக்கப்பட்டாலும்,
சந்திரன் பலம் இழந்து இரு புறமும் பாவிகள் அமையப் பெற்றாலும்,
சூரியன், சந்திரன், பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையால் பாதிக்கப்பட்டாலும்,
சந்திரன், புதன் இணைந்து பாவிகள் பார்வை செய்தாலும்,
ஜலக்காரகனான சந்திரன் பலம் இழந்து கடகம் விருச்சிகம் மகரம் மீனத்தில் அமையப் பெற்றாலும்,
செவ்வாய், புதன் இணைந்து 6ல் அமைந்து, சந்திரன், சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை பெற்றாலும்,
குரு, சனி, ராகு இணைந்து 7 அல்லது 8ல் அமைந்து, அமைந்த வீடு ஜல ராசியாக இருந்தாலும், சுவாச கோளாறு காச நோய் உண்டாகும்.

சந்திரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வாத நோய்

வாழ்கையையே முடக்கி போடும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். வாத நோய் இது மனிதர்களுக்கு வரக் கூடாத நோய்களில் மிக முக்கியமானதா-கும். இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் உதவி மிகவும் அவசியமானதாகிறது. சுயமாக எதையும் செய்து கொள்ள முடியாதபடி நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.உண்ண,உடுக்க மட்டுமின்றி மற்ற எல்லா தேவைகளுக்கும் பிறரின் உதவி தேவைபடுவதால் மிகுந்த மன உடச்சலுக்கு ஆளாகின்றனர்.

உடலில் கெட்ட நீர் சேர்க்கையினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகி வாழ்க்கையையே முடக்கி போட்டு விடுகிறது. வாத நோய்களல் பல வகை உண்டு. இந்த நோயினால் கை கால்கள் செயலிழப்பதோடு, சிலர் பேச்சு திறனையும் இழக்கின்றார்கள். அதிக குடிப்பபழக்கத்திற்கு அடிமை ஆனவர்களையும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களையும் இந்நோய் அதிகமாக தாக்குகிறது. இளம் பிள்ளை வாதம் (போலியோ) என்பதும் இதில் ஒரு வகை தான் கை கால்கள் சூம்பி செயல்படாமல் போகின்றது. சிலருக்கு காலையில் ஈரக்காற்றில் பயணம் செய்யும் போது காதில் உட்புகும் காற்றினால் முகத்தின் ஒரு பாகம் செயலிழந்து கண்னை கூட மூட முடியாமல் பக்க வாத நோய் தாக்கி விடுகிறது.

இதற்கெல்லாம் ஜோதிட காரணங்கள் என்ன என பார்த்தால் சூரியன் வாயுவுடன் கலந்த பித்தத்தையும் சந்திரன் வாயுவையும், கபத்தையும், செவ்வாய் பித்தத்தையும், புதன் வாதம், பித்தம், கபங்களையும், குரு கபம், வாதத்தையும், சனி வாத பித்தங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.
சூரியன் 6ல் இருந்தால் பித்தம் கபம் ஆகியவையும் சனி 6ல் இருந்தால் வாதத்தையும் உண்டாக்குகின்றன.
சூரியன், சந்திரன் 6ம் பாவம் இவற்றிற்கு சனி, செவ்வாயின் தொடர்புகள் வாத நோய் ஏற்பட காரணமாகிறது.
சூரியன் கடகத்திலிருந்து சனியின் தொடர்பையோ, அல்லது  சனி கடகத்தில் இருந்து செவ்வாயின் பார்வையோ பெறுவது வாத நோயினை ஏற்படுத்தும் அமைப்பாகும். 8ம் அதிபதி லக்னத்திலும் 2ம் அதிபதி 8லும் லக்னாதிபதியுடன் சனி சேர்க்கையாகி சந்திரன் பாவிகளுடன் சேர்க்கையானால் வாத நோய் உண்டாகும். புதன் பகவான் நீசமாகி அஸ்தங்கம் பெற்று பலம் இழந்தால் நரம்பு தளர்ச்சி, வாத நோய் உண்டாகும். தசா புக்தி நடைபெறும் காலங்களில் பலம் இழந்த கிரகம் அதிகமான வாதத்தை ஏற்படுத்தி ஒரு பக்க கைகால்களில் பக்க வாதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் ஒரு பக்கத்தின் செயல்பாடுகள் பாதிப்படைகின்றது.
சூரியனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Tuesday, July 15, 2014

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் ஜீரண கோளாறும்

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் ஜீரண கோளாறும்


நன்றி,நன்றி  

8 லட்சத்தை வாசகா்களை கடந்த எனது வலை தளம் 

       

சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 3 வருடத்திற்குள்  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 8 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.சோதிட சம்மந்தமான 570 பதிவுகளை  இது வரை எனது  வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. 

அன்புடன்
முருகுபாலமுருகன்



முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்





ஒரு சராசரி மனிதன் ஒடி ஒடி உழைப்பது ஒரு ஜான் வயிற்றுக்காகதான். நாம் கட்டாயம் மூன்று வேலை சாப்பிட்டே ஆக வேண்டும் இது யார் ஏற்படுத்திய பழக்கம் என்று தெரியாவிட்டாலும் பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். நாம் உழைக்க, சுறுசுறுப்பாக செயல்பட உணவு என்பது மிக முக்கிய மானதாகிறது. Êசாப்பிடும் உணவு   ஊட்டசத்து நிறைந்ததாக இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.ஆனால் இப்போதிருக்கும் இயந்திரமயமான உலகில் சாப்பாடு என்பதே பேஷனாகி வருகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மாசாலா பொருட்களும், பாஸ்ட் புட் என்ற பெயரில் ஆங்காங்கே தெரு ஒரங்களில் விற்கப்படும் துரித உணவு வகைகளும் தான் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது. மேலை நாடுகளில் தட்ப வெப்ப நிலைக்கேற்ப உண்ணப்படும் பிட்ஸா, பர்கர், சாக்லேட் போன்றவைகள் நம்முடைய கலாசாரத்திலும் புகுந்து விட்டதால் நம்முடைய வயிறு வேலை செய்வதா வேண்டாமா என குழம்பிக் கொண்டிருக்கிறது. பொதுவாக நாம் உண்ணும் உணவானது நன்கு ஜீரணித்தால் மட்டுமே அது ரத்தத்துடன் கலந்து நம் உடலுக்கு தேவையான சக்தியை நமக்கு அளிக்கிறது. அப்படி ஜீரணமாகாவிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், வாயுத்தொல்லை, வயிற்று வலியால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. வயிற்றால் ஏற்றுக் கொள்ள முடியாத பொருட்களை உண்பதால் புட் பாய்சன் என்ற பெயரில் உணவே விஷமாக மாறி விடுகிறது.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடும், சிம்ம ராசியும்  மேல் வயிறு பாகத்தினைக் குறிக்கும் பாவமாகும். 6ம் வீடும் கன்னி ராசியும் கீழ் வயிறு பாகத்தினைக் குறிக்கும் பாவங்களாகும். ஜென்ம லக்னத்திற்கு 8ம் வீடும் விருச்சிக ராசியும் சிறு குடலுக்கும் காரண பாவமாகும். (மற்ற கழிவுகளை வெளியேற்றும்)

சூரியன் ஜீரண சக்திக்கு காரகனாவார், ஜென்ம லக்னத்திற்கு 5,6 ஆம் பாவத்தின் அதிபதிகள்,சூரியன் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும், 5,6 ஆம் பாவத்தை பாவிகள் சூழ்ந்திருந்தாலும் ஜீரண சக்தி பாதித்து வயிறு கோளாறுகள் உண்டாகும். நவகிரகங்களில் சனி,ராகு பலமான பாவகிரகங்கள் ஆகும். சனி,ராகு ஜென்ம லக்னத்திற்கு 5இல் அல்லது 6இல் அமைந்தால் வயிற்றில் கோளாறு உண்ணும் உணவு செரிக்காத நிலை ஏற்படும். சனி,ராகு 6,8ம் பாவத்திலோ, கன்னி, விருச்சிகத்திலோ அமையப் பெற்றால் குடலில் பிரச்சனை, குடல் பாகத்தில் பாதிப்பு உண்டாவது மட்டுமின்றி மலச்சிக்கலும் ஏற்படுகிறது.

5ல் சூரியன் அமையப் பெற்றால் சூடாக உணவு உண்ணும் பழக்கம் நல்ல ஜீரண சக்தியும் உண்டாகும். சூரியன் பாவகிரக சேர்க்கை, செவ்வாயுடன் சம்மந்தப்பட்டால் ஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்புள்ளது. செவ்வாய் சம்மந்தமோ பார்வையே ஏற்பட்டால் குடலில் புண் உண்டாகும்.

5ம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றால் வித விதமான உணவு மேல் விருப்பம் பெற்று இருப்பார்கள். அதனால் வளர்பிறை சந்திரனாக இருந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். பாவிகள் சேர்க்கை பார்வை இல்லாமல் இருந்தால் மேலும் சிறப்பு. தேய் பிறை சந்திரனாகி 5ல் அமையப் பெற்றால் மனக்கவலையுடன், வயிறு கோளாறு குடல் புண், உடல் உபாதைகள் ஏற்படும். சந்திரனுக்கு கேதுவுடன் சம்மந்தம் ஏற்பட்டால் குடல் புண் ஏற்பட்டு பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.

5ம் வீட்டில் செவ்வாய் அமையப் பெற்றால் சூடான உணவு வகையில் ஆர்வம் கொண்டு அதன் மூலம் குடல் புண், கேஸ்டிரிக், அல்சர், போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். செவ்வாய் ஆட்சியோ உச்சமோ பெற்றால் நல்ல ஆரோக்கியம் பெற்றாலும்  திசா புக்தியில் வயிறு கோளாறு உண்டாகும். செவ்வாய் நீசம் பெற்றோ பாவியாகி 5ல் அமைந்து 6,8,12ம் அதிபதியின் தொடர்பு பெற்றிருந்தால் செவ்வாய் திசை புக்தி காலத்தில் வயிற்று வலியால் அதிக அவதி உண்டாகும்.

5ல் புதன் அமைந்து சூரியன் சேர்க்கை பெற்றால் புதன்  திசை புதன் புக்தி காலத்தில் பசி இல்லாத நிலை அஜீரண கோளாறு ஏற்படும்.

5ல் குரு அமையப் பெற்றால் நல்ல பசி எடுக்கும் நிலை ஜீரண தன்மை இருக்கும். குருபகவான் செவ்வாய் ராகு கேது சேர்க்கையோ, பார்வையோ பெற்றால் அஜீரண கோளாறு, வயிற்றில் புண் உண்டாகும்.

5ல் சுக்கிரன் அமையப் பெற்றால் இனிப்பான, சுவையான, உயர்வகை உணவு உட்கொள்ள ஆசையும், சுக்கிரன் சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் எண்ணெயில் தயாரித்து பொருள் மீது ஆசை ஏற்படும். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ செவ்வாய் பார்வையோ பெற்றால் சூடான உணவை சாப்பிடுவார்கள். சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றால் வயிறு பாதிக்கும்.

சனி 5ல் அமையப் பெற்றால் அதிக அளவு எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் சரியாக ஜீரணமாகாமல்  அஜீரண கோளாறு அபண்டிசைட்ஸ் பெப்டிக் அல்சர், இன்டெஸ்டினல் அல்சர் உண்டாகும்.

ராகு 5ல் அமைந்தால் சரியான சமயத்தில் சாப்பிட முடியாத நிலை குடல் புண் ராகு புக்தி காலத்தில் வயிறு கோளாறு உண்டாகும். சூரியனுக்கு பரிகாரம் செய்வது நல்லது

கேது 5ல் அமைந்தால் சூடாக புசிப்பார்கள். கேது புக்தி காலத்தில் கேஸ்டிக், குடல் புண், அல்சர் உண்டாகும்.

5ல் பாவிகள் அமைந்து குரு பார்வை பெற்றால் வயிறு உபாதைகள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும். ராசியையும்  ஜென்ம லக்னத்தையும் குரு பார்வை செய்தால் கெடுதிகள் விலகும். அளவுடன் உண்டு வளமுடன் வாழ்வது மூலம் வயிறு கோளாறுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Sunday, July 13, 2014

இருதய நோய்

இருதய நோய்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 
சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்



ஆஸ்பத்திரிகளும் மருந்துக் கடைகளும் பெருகி வருகின்றன. புதுப்புது நோய்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவை மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. இன்றைய உலகில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும். பல்வேறு நோய்கள் இருந்தாலும் இருதயக் கோளாறு என்பது மிகவும் பிரதானமான தாகும். இருதய கோளாறு உண்டானவர்கள் உயிர் வாழ்வதே மிகவும் கஷ்டமான ஒன்றாகும். ஜோதிட ரீதியாக இருதயக் கோளாறு யாருக்கு உண்டாகிறது என்பதனை தெளிவாக பார்ப்போம்.

குறிப்பாக உஷ்ண கிரகமான சூரியன் இருதயக் கோளாறுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஜென்ம லக்னத்திற்கும் 4ம் பாவமும், 4ம் அதிபதியும், 4ல் உள்ள கிரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. 4ம் அதிபதியும் 4ம் பாவமும் பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டாகிறது.

நவகிரகங்களில் சூரிய பகவான் இருதய தசைக்கும் அதில்  உள்ள ரத்த  குழாய்களுக்கும் காரகம் வகிக்கின்றார். சூரியனை விட சந்திர பகவான் ரத்த குழாய் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கும் காரகத்துவம் வகிக்கிறார். ரத்தகாரகன் செவ்வாயும் இருதய கோளாறுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.

இராசிகளில் சூரியனின் வீடான சிம்மத்திற்கும் சந்திரனின் வீடான கடகத்திற்கும் இருதய கோளாறுகளுக்கும் சம்பந்தம் உள்ளது. குறிப்பாக சூரியன்,சந்திரன்,செவ்வாய்,4ம் வீடு,கடகம்,சிம்மம் ஆகியவை பாவ கிரகங்களால் பாதிப்பட்டு இருந்தால் இருதயக் கோளாறு உண்டாகிறது. அது போல மேற்கூறிய கிரகங்கள் 6ம் வீட்டிலோ 6ம் அதிபதியுடனோ சேர்ந்து பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் இருதயக் கோளாறுகள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 4,5&ம் பாவங்களில் பாவ கிரகங்கள் அமையப் பெற்று 4,5&க்கு அதிபதிகள் பாவ கிரகங்களால்  பாதிக்கப்பட்டு சுப கிரக சம்மந்தமின்றி இருந்தாலும். குறிப்பாக 4ம் வீட்டில் சூரியன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ, அமைந்து பாவகிரகங்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தாலும் இருதயக் கோளாறு உண்டாகும்.
சூரியன், செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது மூலம் இருதய பாதிப்புகள் குறையும்.

Tuesday, July 8, 2014

வழுக்கை

வழுக்கை



முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 
சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்




தலைக்கு முடி என்பது முக்கியமானதாகும். தலை நிறைய முடி இருந்தால் மட்டுமே முகத்திற்கும் அழகு உண்டாகும். தலை முடி நீளமாக அழகாக உள்ள பெண்களை எல்லா ஆண்களும் விரும்புவார்கள். தற்போது நிறைய முடி வளர்த்து  குடுமி போட்டுக் கொள்ளும் ஆண்களும் உள்ளார்கள். தலைவாரி பூச்சூட்டிக் கொள்வது என்பது  பெண்களுக்கே தனி அழகு தான். பெண்களுக்கு முடி கொட்டும் என்றாலும் வழுக்கை என்பது அவ்வளவாக ஏற்படாது. ஆனால் முடி கொட்டி வழுக்கையால் பாதிக்கப்படுவர்கள் அதிகம் ஆண்களே. இதனால் பலரின் கேலி பேச்சிற்கும் ஆளாக வேண்டியுள்ளது.சொட்டை,வழுக்கை,என்ற பட்ட பெயர்கள் கிடைப்பதுடன் சிலர் கண் கூசுவதாக கண்ணையும் முடி கொள்வார்கள்.

சுக்கிரன், சந்திரன் இருவரும் முக அழகிற்கு முக்கிய மானவர்கள். குறிப்பாக இவற்றிக்கு ஜென்ம இலக்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலக்னம் பலமாக இருந்தால் நல்ல உடலமைப்பு, முக அழகு, அழகான தலை முடி உண்டாகிறது. உஷ்ண கிரகங்களான சூரியன், செவ்வாய் வீடுகளான மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகியவை லக்னமாக அமைவதே தலை முடிக்கு நல்லதல்ல. அதே போல நெருப்பு ராசிகள் ஜென்ம லக்னமாக இருப்பதும் நல்லதல்ல. கருமையான நிறத்திற்கு காரகம் வகிக்கும் சனி பகவான் கூட தலை முடிக்குக் காரகம் ஆவார். எனவே சந்திரன் சுக்கிரன் சனி ஆகிய கிரகங்கள் தலைமுடிக்கு காரகம் வகிக்கின்றன. உஷ்ண கிரகங்களான சூரியனும் செவ்வாயும் தலைமுடியை குறிக்கும் கிரகமாக விளங்குகின்றனர். எனவே ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தை சூரியன் செவ்வாய் பார்வை செய்தாலும் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றாலும் முடி குறைந்து வழுக்கை உண்டாகிறது.

சூரியன், செவ்வாய், சந்திரனையோ சுக்கிரனையோ பார்வை செய்தால் முடி உதிர்ந்து வழுக்கை உண்டாகும். லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றாலும் வழுக்கை உண்டாகும். சுக்கிரனும் சந்திரனும் சூரியன் செவ்வாயால் பாதிக்கப்படுவது நல்லதல்ல. சனி செவ்வாயை பலமாக பார்த்தாலும் முறையற்ற முடி அமைப்பு உண்டாகின்றது. சூரியன், செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது நல்லது 

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA









காதுகளில் நோய்

காதுகளில் நோய்



முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின்
சாா்பில் நடைபெறவுள்ள
சனி பெயா்ச்சி யாகம்



ஒருவர் நம்மை ஒரு முறை கூப்பிட்டு நாம் திரும்பி பார்க்க வில்லை என்றால் உனக்கென்ன காது செவிடா என கேட்பார்கள். உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளில் காதும் மிக இன்றியமையாத தாகும். காது நன்றாக கேட்டால் மட்டுமே நம்மால் பிறர் கூறுவதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். நாம் பேசுவதற்கும் காது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிறர் கூறுவதை காதில் வாங்கினால் மட்டுமே அதற்கு தகுந்த பதிலை நம்மால் கூற முடியும். பயணங்களின் போதும் வண்டி வாகனங்களின் சத்தத்தை கேட்டு அதற்கேற்ப பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். காது கேட்காதவர்களுக்கு ஒலி என்றால் என்னவென்று தெரியாது. பிறர் கூறுவதை புரிந்து கொள்ள முடியாது. காது பிரச்சனையால் சிலருக்கு வாய் பேச முடியாத நிலை  உண்டாகும். காது குறிப்பாக கேட்டால் மட்டுமே நமது செயல்களில் சிறப்பாக ஈடுபட்டு தன்னம்பிக்கையுடன் உழைக்க முடியும். சமுதாயத்தில் ஒட்டி வாழ காது நமக்கு மிக முக்கியமாகும். காதுகளில் கூர்மையானவற்றை விட்டு குடைவது, அதிக சத்தம் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 3,11 ஆகிய பாவங்களைக் கொண்டு காதுகளில் உண்டாகும் நோய்களை  அறிய முடியும். 3ஆம் பாவத்தை வைத்து வலது காதையும் 11ஆம்  பாவத்தை வைத்து இடது காது பற்றியும் கூறி விட முடியும். குரு, புதன் ஆகிய கிரகங்களை கொண்டு காது நோயைப் பற்றி அறியலாம்

புதன் சுக்கிரனுடன் இணைந்து ஜென்ம லக்னத்திற்கு 12ஆம் வீட்டில் அமையப் பெற்றால் இடது காது பாதிக்கின்றது.

6ஆம் வீட்டிற்கு அதிபதி புதனுடன் இணைந்து சனியால் பார்க்கப்பட்டாலும்,புதன் ராகு, சனியுடன் இணைந்து 3 அல்லது 11இல் அமையப் பெற்றாலும் காது கேட்காத நிலை ஏற்படுகிறது.

6ஆமதிபதி சனி புதன் போன்றவற்றால் பார்க்கப்பட்டாலும், 3,6இக்கு அதிபதிகள் மற்றும் புதன் அஸ்தங்கமானாலும், அசுபர்களான செவ்வாய், சனி, ராகு, கேது, சூரியன் போன்ற கிரகங்கள் 3,5,9,11 ஆகிய  வீடுகளுடன் சம்மந்தமானாலும் காதுகளில் பாதிப்பு, காது கேட்காத நிலை உண்டாகின்றது.
புதன் சந்திரன் இணைந்து 3 அல்லது 11இல் அமைய பெற்று பாவிகளால் பாதிக்கப்பட்டால் காதில் நீர் தொடர்பான பாதிப்பு,  காதின் உட்பகுதி பாதிக்கும் நிலை மற்றும் செவ்வாய் புதன் இணைந்து 11ஆம் வீட்டில்  அமையப்பெற்றால் காதின் உட்பகுதி கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு, சனி செவ்வாய் இணைந்து 6ஆம் வீட்டில் அமையப்பெற்று இருந்தால் காது கேட்கும் சக்தி குறையும் நிலை ஏற்படுகிறது.
  குரு, புதனுக்கு பரிகாரம் செய்வது நல்லது 

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Sunday, July 6, 2014

பற்களும் ஜோதிடமும்

பற்களும் ஜோதிடமும்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். இப்படி வாய் விட்டு சிரிக்க நம் வாயில் இருக்கும்  பற்கள் ஒழங்காக வரிசையாக அமைந்திருந்தால் அந்த சிரிப்பிற்கே ஒர் தனி அழகு தான். கவிஞர்கள் பற்களை பலவற்றிற்கு உதாரணமாக கூறியுள்ளனர். முத்து போன்ற பற்கள், பச்சரி பல்லழகி,மணி மணியாய் பற்கள், வானில் உள்ள நட்சத்திரங்களை போல மின்னும் பற்கள் என பலப்பல புகழாரங்களும் பற்களுக்கு உண்டு. பல் வரிசை அழகாக அமையப் பெற்றவர்களுக்கு வாய் திறந்து சிரிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதுவே பல்வரிசை அழகாக அமையவில்லை எனில் வாயை பொத்திக் கொண்டு தான் சிரிக்க வேண்டிருக்கும். இதில் தொத்து பல், எத்துப்பல், பல்லி என பல பட்ட பெயர்களும் கிடைக்கும். வாயில் துர்நாற்றமில்லாமல் பற்களை ஒழங்காக துலக்கி தூய்மையாக வைத்து கொள்வது ஏதாவது சாப்பிட்டால் உடனேயே வாய் கொப்பளிப்பது போன்றவை பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

நவகிரகங்களில் உடலில் உள்ள எல்லா எலும்பிற்கும் காரணமானவர் சனி பகவான் ஆவார். எனவே பற்களுக்கும் சனி பகவான் தான் காரகம் வகிக்கிறார். ஜென்ம ராசியானது ( 1ஆம் வீடு) மேல் தாடை பற்களையும், 2ஆம் வீடு கீழ் தாடை பற்களையும்,  4ஆம் வீடும் மறைமுகமாக பற்களை ஆள்கின்றது. ராசிக்கரத்தில் மேஷம் மேல் தாடை பற்களையும் ரிஷபம் கீழ் தாடை பற்களையும் கடகம் மறை முகமாக பற்களையும் ஆள்கின்றது. ஆகவே ஜென்ம லக்னம் 2ஆம் 4ஆம் வீடு குரு, சனி இவர்களின் பலத்தைக் கொண்டே ஒருவரின் பற்களின் நிலையை பற்றி அறிய முடியும்.
பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் சனி பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் பற்கள் பாதிக்கப்படுகிறது. அது போல சனி, ஜென்ம லக்னம், 2ஆம் வீடு, பலம் இழந்து சனியின் திசா புக்தி நடைபெறும் போது பற்கள் பாதிக்கும் சூழ்நிலை உண்டாகின்றது. சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னம் சனியின் வீடானாலும் ( மகரம் கும்பம் ) பற்கள் பாதிக்கப் படும் நிலை, எனாமல் சிதை வாகி வரைமுறையற்ற பற்கள் அமையும் சூழ்நிலை உண்டாகும். அது போல சனி பகைவரான சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப் பெற்றாலும், சூரியனுக்கு 6,8,12இல் சனி அமையப் பெற்றாலும் முறையற்ற பற்களை அடைய நேரிடும்.
குரு பகவான் ஜல ராசியில் அமைந்து கேது சேர்க்கையுடன்  சனி செவ்வாய் போன்ற பாவிகளால் பார்க்கப்பட்டால் பற்கள் கரு நிறம் அடையப் கூடிய நிலை பற்களின் பலம் குறைந்து பல்வலி உண்டாகும் சூழ்நிலை ஏற்படும். குரு பகவான் ஜல ராசியில் அமைந்து பாவிகளின் பார்வை குருவுக்கு இருந்தால் பற்களின் நிறம் மாறும்.
ஜென்ம லக்னத்தில் சனி பலம் இழந்து செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டாலும் பலம் இழந்த சனியை செவ்வாய் பார்வை செய்தாலும் சண்டை போடும் போது பற்களை இழக்க நேரிடும். செவ்வாய் ஜென்ம லக்கினத்தை பார்வை  செய்து செவ்வாய் திசை புக்தி நடைபெற்றாலும் பற்களில் பாதிப்புகள் ஏற்படும்.
சனிக்கு பரிகாரம் செய்தால் பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Tuesday, July 1, 2014

கண்களில் பாதிப்புகள்;

கண்களில் பாதிப்புகள்;

கண்கள் அழகாக அமைவது  முகத்திற்கு அழகு. அதை கண்கள் நல்ல ஒளியுடனும் பார்வையுடனும் அமைவது வாழ்க்கைக்கே அழகு. கண் பார்வை என்பது மனிதனுக்கு உயிர் நாடியாகவும் விளங்குகிறது.  தனியாக பிறர் தயவின்றி செயல்படுவதற்கும், இயற்கை அழகை ரசித்து வாழ்வதற்கும் கண்கள், மிக முக்கியமானதாகும். கண் பார்வையின்றி வாழ்வது மிகவும் கடினம் ஒளியிழந்த வாழ்க்கை என்பதால் தொடுதல், உணருதல் போன்றவற்றின் மூலமே எதையும் தெரிந்து கொள்ள முடியுமே தவிர வாழ்க்கை என்பது ஒரு கேள்வி குறியாக தான் இருக்கும். எவ்வளவு திறமைகள் இருந்தாலும்  அவற்றை முழுமையாக வெளிப்படுத்த இயலாத அளவிற்கு சிக்கல்கள் உண்டாகும். ஒவ்வொன்றிற்கும் பிறரின் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். எதனால் இந்த பார்வை கோளாறு ஏற்படுகின்ற தென்று ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது நவகிரகங்களின் திருவிளையாடலே காரணமாக இருக்கின்றது.


பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீடு வலது கண்ணுக்கு 12 ஆம் வீடு இடது கண்ணுக்கும் உரிய ஸ்தானமாகும். இந்த இரு ஸ்தானங்கள் பாவிகளால் பாதிக்கப்பட்டால் கண் பார்வை பாதிக்கும். கண் பார்வைக்கு முக்கிய காரகனாக விளங்கக் கூடிய கிரகம் சூரியனாவார். வலது கண்ணுக்கு சூரியனும் இடது கண்ணுக்கு சந்திரனும் காரகர்களாவார்கள்.

சூரியன் சந்திரன் சுக்கிரனும் பாவிகள் சேர்க்கைப் பெற்று பலமிழந்து அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, கண் பார்வை குறையும் அமைப்பு உண்டாகும். கண் பார்வையை குறைப்பதில் முக்கிய கிரகமாக விளங்கக் கூடியவர்கள் வலது கண்ணுக்கு சனியும், இடது கண்ணுக்கு செவ்வாயும் ஆகும். சூரியனை சனி பார்த்தால் கண் பார்வை பாதிக்கும். அது போல செவ்வாய் 2,12 ஆம் வீட்டை பார்த்தால் கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.

ஜென்ம லக்னத்திற்கு 6,8 ஆம் பாவங்களில் பலமான பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் கண் பார்வையில் பாதிப்பு உண்டாகும். 8ல் அமையும் கிரகம் இடது கண்ணையும் 6ல் அமையக் கூடிய கிரகம் வலது கண்ணையும் பாதிக்கும்.

லக்னாதிபதி 6,8,12ல் அமையப் பெற்று 2,12க்கு அதிபதிகள் சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சூரியன் சந்திரன் இணைந்து 12ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 6ல் சந்திரன், 8ல் சூரியன், 12 சனி, 2ல் செவ்வாய் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 1,2,7க்கு அதிபதிகள் சந்திரன் சேர்க்கை பெற்று 6,8,12ல் இருந்தாலும், லக்னாதிபதி சனி சேர்க்கைப் பெற்று 2,12ல் இருந்தாலும் சனி செவ்வாய் இணைந்து 2,12ல் இருந்தாலும் சந்திரன், சுக்கிரன் இணைந்து பாவிகள் சேர்க்கை பெற்றாலும், கண்களில் பாதிப்பு உண்டாகும்.


பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2,12 அதற்கு 7 ஆம் வீடான 6,8ல் பாவிகள் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு உண்டாகும். 6,8,12ல் சந்திரன் சுக்கிரன் அமையப் பெற்றால் மாலைக் கண் நோய் உண்டாகும்.

ஜென்ம லக்னாதிபதி 2 ஆம் அதிபதி சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும், சூரியன் கேது சேர்க்கை பெற்று 2,6,8,12ல் அமையப் பெற்றாலும் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

சூரியன், சந்திரன், சுக்கிரனுக்கு பரிகாரம் செய்தால் கண் சம்மந்த பட்ட பாதிப்புகள் குறையும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விஜய் டிவி

சனி பாிகாரம் - முருகுபாலமுருகன்