Tuesday, July 30, 2013

திருமணத்திற்கு உகந்த நாட்கள்




திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் புனிதமான காரியம் ஆகும். ஆண் பெண் இருவரும் இணைந்து தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைக்க திருமணமானது மங்களகரமான ஒரு சுப நாளில் செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் செய்ய உகந்த நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள் என உண்டு.

     பொதுவாக ரோகிணி, மிருக சீரிஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மிகவும் உத்தமம். அசுவினி, புனர்பூசம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களிலும் திருமணம் செய்யலாம். துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி திதி நாளில் திருமணம் செய்யலாம். மேற்குரிய நட்சத்திரம், திதி இணைந்து, ஞாயிறு,  திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் திருமணம் சார்ந்த சுப காரியங்கள் செய்வது மிகவும் உத்தமம்.

     குறிப்பாக மேற்கூறிய நட்சத்திரம், திதி, கிழமை நாளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு கும்ப லக்ன நேரத்தில் முகூர்த்த லக்கினத்திற்கு 3,6,11ல் பாவிகள் இருப்பது நல்லது. 6,8ல் சுக்கிரன் புதன் இருந்தால் கெடுதி 2,3ல் சந்திரன் இருப்பதும், 7ல் யாரும் இல்லாமல் இருப்பது மிகவும் உத்தமம்.

     மேற்கூறிய விதிகள் பொதுவான விஷயம் என்றாலும் திருமணம் செய்து கொள்ளும் மண மக்களுக்கு மேற்குரியவை உகந்ததாக இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.

     குறிப்பாக திருமணம் நாள் ஆனது ஆண் பெண் இருவருக்கும் தாரா பலன் உள்ள நட்சத்திர நாளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சில நேரத்தில் ஆண் பெண் இருவருக்கும் தாரா பலன் வராது. அதாவது ஒருவருக்கு தாரா பலன் வரும். ஒருவருக்கு தாரா பலன் வராது. இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு தாரா பலன் வருகிறதா என்று பார்த்த விட்டு இருவருக்கு ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்த நட்சத்திரமானது 7வது நட்சத்திரமாக இருக்க கூடாது. தாரா பலன் என்பது ஆண் பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் 2,4,6,8,9,11,13,14,17,18,20,22,24,26,27 நட்சத்திர நாளாகும். இது மட்டும் இன்றி, இருவருக்கும் சந்திராஷ்டம் நாளாக முகூர்த்த நாள் இருக்க கூடாது.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com

Wednesday, July 24, 2013

திருமண வாழ்வு

ஜோதிடத் தராசில் மண மேடை



     இன்றைய உலகில் ஆண் பெண் இணைவது திருமணம் என்ற பந்தத்தின் மூலம் உண்டாகிறது. திருமணம் மட்டுமே நாமே பார்த்து அமைத்துக் கொள்ள வழிவகுத்து உள்ளார். திருமண வாழ்வு மங்களகரமாக அமைய ஜோதிடம் என்ற காலக் கண்ணாடி மூலம் திருமண பொருத்தம் பார்க்கும் போது எதிர் கால வாழ்வு மங்களகரமாக அமைகிறது. ஜோதிடம் என்ற அரிய கலை கொண்டு ஆண் பெண் ஜாதகத்தை ஆராயும் போது பல்வேறு உண்மைகள் வெளிப்படுகின்றன. பொதுவாக ஆண் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் வரும் வரன் (பெண்) ஜாதகத்திலும் தோஷம் இருப்பது போல் இருந்தால் மண வாழ்வு சிறப்பாக இருக்கும்.

     பொதுவாக ஜென்ம லக்கினத்திற்கு 7ம் பாவம் கொண்டு திருமண வாழ்வு பற்றியும், 2ம் பாவத்தைக் கொண்டு குடும்ப வாழ்வு பற்றியும். 4ம் பாவத்தைக் கொண்டு சுக வாழ்வு பற்றியும், 8ம் பாவத்தைக் கொண்டு ஆயுள் ஆரோக்கியம், பெண்களுக்கு மாங்கல்ய பலத்தைப் பற்றியும் 12ம் பாவத்தைக் கொண்டு கட்டில் சுக வாழ்வு பற்றியும் அறியலாம்.

     நவ கிரகங்களில் ஆண்களுக்கு சுக்கிரன் களத்திர காரகனாகவும், பெண்களுக்கு செவ்வாய் களத்திர காரகனாகவும் விளங்குகிறார்கள்.

     பொதுவாக ஆண் பெண் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர காரகன், சுக்கிரன் செவ்வாயும் 7ம் அதிபதியும் சுபர் சேர்க்கை பெற்றால் மண வாழ்வு சிறப்பாக இருக்கும். பாவிகள் 7ல் அமையப் பெற்றாலும், பாவிகள் 7ம் அதிபதி சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் சோதனைகள் உண்டாகும்.

     ஜென்ம லக்கினத்திற்கு 7ல் பாவிகள் அமையப் பெற்றாலும் 7ம் வீட்டை பாவிகள் பார்வை செய்தால் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது. திருமண விஷயத்திற்காக ஒரு ஜாதகரை ஆராயும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். 

     பொதுவாக ஜென்ம லக்னத்தில் பகை கிரகங்கள் அமையப் பெற்றால் மற்றும் ஜென்ம லக்கினத்தில் கிரக யுத்தத்துடன் கிரகங்கள் அமைய பெற்றால் மண வாழ்வில் சோதனைகள் உண்டாகும். உதாரணமாக, செவ்வாய் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம லக்னத்தில் பகை கிரகமான சனி அமைவது, சூரியன் லக்னமான சிம்மத்தில் சனி அமைவது நல்லது அல்ல. அது போல சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரி அல்லது 2 டிகிரிக்குள் 7ம் அதிபதியோ களத்திர காரகனோ அமைவது நல்லது அல்ல. அது போல பகை கிரகங்கள் இணைந்து ஜென்ம லக்கினத்தில் அமைவது நல்லது அல்ல. அதாவது ராகு&சனி, ராகு&செவ்வாய்,சனி&சூரியன், சனி&சூரியன்&ராகு, சுக்கிரன்&குரு, சுக்கிரன்&செவ்வாய், சுக்கிரன்&ராகு என பகை கிரகங்கள் இணைந்து அமைவது. 7ம் அதிபதி, களத்திர காரகன் போன்றவை நீசம் பெற்று பாவிகள் சேர்க்கை பெற்று ஜென்ம லக்கினத்தில் அமைவது நல்லது அல்ல.

     ஜென்ம லக்னத்தில் செவ்வாய் சனி இணைந்து 7ம் வீட்டைப் பார்த்தாலும், 6,8ல் சனி செவ்வாய் அமைந்தாலும் மண வாழ்வு நன்றாக இருக்காது.

     பொதுவாக ஜென்ம லக்னாதிபதியும் 7ம் அதிபதியும் நட்பு கிரகமாக இருப்பது நல்லது. அது மட்டும் இன்றி 1,7க்கு அதிபதிகள் சேர்க்கை பெறுவது, சுபர் பார்வை பெறுவது மிகவும் உத்தமம். அதுவே 1,7க்கு அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் சஷ்டாஷமத்தில் அமைவது நல்லது அல்ல. அதாவது  ஒருவருக்கு ஒருவர் 6, 8,ல் அமைந்தால் மண வாழ்வில் ஒற்றுமை குறையும். 7ம் அதிபதிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதிகள் குறையும். 

     சனி பகவான் சந்திரன் சேர்க்கை பெற்றாலும் சந்திரனுக்கு 7ல் சனி அமையப் பெற்றாலும் மண வாழ்வில் சோதனைகள் உண்டாகும். குறிப்பாக சனி லக்னமான மகரம் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி சந்திரன் சேர்க்கை பெற்றாலும் அதிகமாக கெடுதி ஏற்படுத்தாது.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் அதிபதி 6ல் அமைந்து பலம் இழந்து இருந்தால் அதாவது 6ல் அமைந்து நீசம் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ இருந்தால் திருமண வாழ்வு என்பது மிகவும் போராட்டம் நிறைந்த ஒன்றாகி மாறி விடும்.களத்திர காரகன் சுக்கிரன் 7ம் அதிபதிக்கு 6, 8ல் அமைந்தால் மண வாழ்வில் சங்கடங்கள் உண்டாகும்.
     
ஜெனன ஜாதகத்தில் சனி ராகு மிக அருகில் இணைந்து ஜென்ம லக்கினம் 6, 7, 8ல் அமைதி அமைந்தால் ஜாதகரை தவறான வழி பாதைக்கு கொண்டு செல்லும். குறிப்பாக வேறு பெண் சேர்க்கை, ஆரோக்கியம் பாதிப்புகள் ஏற்படும். சனி & ராகு திசை, புத்திகள் நடைபெற்றால் ஜாதகரின் நடவடிக்கைகள் நன்றாக இருக்காது. அது போல் சனி ராகு 7ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும், சுக்கிரன் சேர்க்கை பெற்று சுபர் பார்வை இல்லாமல் இருந்தாலும் கெட்ட பலன்கள் உண்டாகும்.
     
ஜென்ம லக்கினத்திற்கு 5ல் ராகு அமையப் பெற்று ராகுவுக்கு (6,8ல்) சஷ்டர்ஷகத்தில் 7ம் அதிபதி அமைய பெற்றால் திருமண வாழ்வு சோதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

ஒரு பெண் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சந்திரன் சுக்கிரன் அமைய பெற்றால்  திருமணமாண ஓருவரை மணமுடிக்க நேரிடும்.
     
ஜென்ம லக்கினத்திற்கு 7ல் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாவிகள் அமையப் பெற்றால் மண வாழ்வு சோதனை நிறைந்ததாக இருக்கும்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com


Saturday, July 20, 2013

சொந்த தொழில் யோகம்



      ஏதாவது ஒரு தொழிலைச் செய்தால் தான் இவ்வுலகில் ஜீவிக்க முடியும். சம்பாதனை என்பதை எந்த வகையிலும் சம்பாதிக்கலாம். குறிப்பாக தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் சிலருக்கு தான் உண்டாகும். பலர் தொழிலில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்துள்ளனர். தொழில் மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் தான் தொழிலில் சாதனை செய்ய முடியும். பொதுவாக ஜனன ஜாதகம் பலமாக இருந்தால் தான் சொந்தத் தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சொந்த தொழில் யோகத்தைப் பற்றி ஜோதிட ரீதியாக கிரக அமைப்புகள் எப்படி அமைய வேண்டும் என பார்ப்போம்
     
பொதுவாக ஜென்ம லக்கினம், சந்திரன், சூரியன், சனி, புதன், குரு ஆகிய கிரகங்கள் பலமாக இருந்தால் தான் சொந்த தொழில் யோகம் உண்டாகும். அது போல தொழில் ஸ்தானமான 10ஆம் இடமும் பலம் பெற வேண்டும். அது மட்டுமின்றி தன ஸ்தானமான 2 ஆம் வீடு லாப ஸ்தானமான 11 ஆம் வீடு  கூட்டு தொழில் ஸ்தானமான 7 ஆம் வீடு வலுவுடன் அமையப் பெற்றால் நற்பலன் அடைய முடியும். ஜென்ம லக்னத்திற்கு 2,11க்கு அதிபதிகள் இணைந்தோ பரிவர்தனை பெற்றோ இருப்பது சிறப்பாகும். அது போல 2,10க்கு அதிபதிகள் அல்லது 2,7க்கு அதிபதிகள் அல்லது 10,11க்கு அதிபதிகள் 7,10க்கு அதிபதிகள் இணைவதும் பரிவர்தனை பெறுவதும் சிறப்பாகும். குறிப்பாக 10 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுவதும் கேந்திர திரி கோணத்தில் அமையப் பெறுவதும் தொழில் யோகத்தை வலிமைப் படுத்தும்.

      பொதுவாக முக்கிய கிரகமான சூரியன் குரு பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 7 முதல் 12 ஆம் பாவம் வரை அல்லது 10 அல்லது 3 ஆம் பாவம் வரை 5க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது நல்ல அமைப்பாகும். குறிப்பாக அதிக கிரகங்கள் 10 ஆம் வீட்டில் இருப்பதும் 10 ஆம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று இருப்பதும் தொழில் யோகத்தை பலப்படுத்துவதாகும்.
     
சொந்தமாக தொழில் செய்யும் யோகம் ஏற்பட ஜென்ம லக்னமும், சந்திரனும் வலுப் பெற வேண்டும். ஜென்ம லக்னாதிபதி பலம் பெற்றால் தான் தைரியம், துணிவு சுயமாக சிந்திக்கும் நிலை, செயல்படும் வலிமை உண்டாகும். அது போல மனோ காரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் தான் மன வலிமை உண்டாகும். சொந்த தொழில் செய்வதற்கு சில கிரகங்கள் முக்கிய பங்கு வகுக்கிறது. அக்கிரகங்கள் ஏதாவது ஒரு வகையில் பலம் பெற்றால் தான் சொந்த தொழில் யோகம் உண்டாகும். குறிப்பாக தொழில் ரீதியாக கிரகங்களின் காரகத்துவத்தை பார்த்தால் நவ கிரகங்களில் தலைவனாக விளங்கக் கூடிய சூரியன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆத்ம காரகன் சூரியன் பலம் பெற்றால் தான் நல்ல உடல் அமைப்பு உண்டாகும். தைரியத்துடன் உழைக்கும் சக்தி உண்டாகும்.

      சூரியன் பலத்துடன் இருந்தால் தான் சமுதாயத்தில் பெயர், புகழ், கௌரவம் போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழந்து இருந்தால் தனித்து செயல்படும் தன்மை குறைந்து விடும். சூரியன் வலிமையுடன் அமையப் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் தான் தொழில் செய்யும் வலிமை உண்டாகும்.
     
புதன் பகவான் தொழில் அமைப்பிற்கு மிக முக்கிய கிரகமாக விளங்குகிறார். புதன் பகவான் அறிவுத் திறன், சிந்திக்கும் ஆற்றல், புத்தி கூர்மை, திட்டம் தீட்டுதல், கணக்கிட்டு செயல்படும் திறன், போன்றவைக்கு அதிபதியாவார். அது மட்டுமின்றி வணிகம், ஸ்பெகுலேசன், போன்றவைக்கு புதனே காரகனாவார். புதன் பகவான் ஒருவன் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் தான்  எதையும் எதிர் கொள்ளும் பலம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு செயல்படும் வலிமை உண்டாகும்.  அது போல பேச்சு திறமைக்கும் புதன் தான் காரகன் ஆவார். ஆக, புதன் பலம் பெற்றால் தான் தொழிலில் எப்படி பேச வேண்டுமோ அப்படிப் பேசும் ஆற்றல் எதையும் கணக்கிட்டு செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

      குரு பகவான் தனக்காரகன் ஆவார். அது போல பண நடமாட்டத்திற்கும் கொடுக்கல், வாங்கலுக்கும் குருவே காரகன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருந்தால் தான் அவர் கொடுக்கல் வாங்கலில் திறமையாக செயல் பட முடியும். அது போல பண விஷயத்தில் சரியாக செயல்பட்டு லாபத்தை ஈட்ட முடியும். குரு பலம் இழந்தவர்கள் பலர் கொடுக்கல் வாங்கலில் பல்வேறு இழப்புகளை சந்தித்து உள்ளார்கள். ஆக,தொழில் செய்வதற்கு குருவின் பலம் மிக முக்கியமாகும்.
     
சனி பகவான் வேலையாட்களுக்கு காரகன் ஆவார். சனி ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் தான் வேலையாட்களை வழி நடத்தும் பலம் உண்டாகும். சனி ஒருவர் ஜாதகத்தில் வலு விழந்திருந்தால் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. அது போல வேலை ஆட்களால் பல்வேறு நஷ்டங்களை சந்திக்க நேரிடும். ஆக, நவ கிரகங்கள் பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் பாவமும் பலம் பெற வேண்டும். 10ஆம் அதிபதி பலம் பெற்றால் தான் சொந்த தொழிலில் சாதிக்க முடியும்.
     
ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் அதிபதியும் சந்திரனுக்கு 10 ஆம் அதிபதியும் தொழில் யோகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். லக்னத்திற்கு 10 ஆம் அதிபதி சந்திரனுக்கு 10 ஆம் அதிபதி இவ்விரு கிரகங்களில் எக்கிரகம் பலம் பெறுகிறதோ அக்கிரகம் சம்மந்தப்பட்ட தொழில் யோகம் உண்டாகும். 10 ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றால் தொழிலில் பல்வேறு சோதனைகள் உண்டாகும்.
     
ஆக ஒருவர் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், புதன் சனி, குரு ஆகிய கிரகங்கள் பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் அதிபதி 2,7,11க்கு அதிபதியுடன் இணைந்தோ, பரிவர்தனைப் பெற்றோ இருந்தாலும் 5க்கும் மேற்பட்ட கிரகங்கள் 7 முதல் 12 ஆம் பாவத்திற்குள்ளோ அல்லது 10 முதல் 3 ஆம் பாவத்திற்குள்ளோ இருந்தால் சொந்த தொழில் யோகம் உண்டாகும். குறிப்பாக ஜெனன ஜாதகம் பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கு யோகத்தை தரக் கூடிய கிரகங்களின் தசா புத்தி வந்தால் தொழிலில் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும்.
                                                             

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com
                         

Tuesday, July 16, 2013

பலாபலன்களை வழங்கும் குஜவத் கேது சசிவத்ராகு

       
பலாபலன்களை வழங்கும் குஜவத் கேது சசிவத்ராகு 

     
நவகிரகங்கள் அனைத்திற்கும் சொந்த வீடு உண்டு குறிப்பாக நவக்கோள்களில் சாயாகிரமான ராகு கேதுவுக்கு சொந்த வீடு கிடையாது. சூரியன் சந்திரனுக்கு ஒரு வீட்டு அதிபத்தியமும் செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனிக்கு இரு வீட்டு அதிபத்தியமும் உண்டு. இந்த 7 கிரகங்களும் தங்களது திசா புத்தி காலங்களில் தங்களது வீட்டின் அதிபதிய பலா பலனை ஜாதகருக்கு தரும். ஆனால் ராகு கேதுவுக்கு சொந்த வீடு இல்லை என்பதால் அவர்கள்  எப்படி பலன்களை தருவார் என ஆராய்கின்ற போது பல்வேறு நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன.
     
குறிப்பாக ராகு கேது இருவரும் அவர்கள் எந்த வீட்டில் இருக்கின்றார்களோ அந்த வீட்டை தனது சொந்த வீடாக எடுத்துக் கொண்டு பலன்களை வழங்குவார்கள். அது மட்டும் இன்றி கேது பகவான் செவ்வாயைப் போலவும் ராகு பகவான் சனி பகவானை போலவும் பலன்களை வழங்குகிறார்கள். பொதுவாக பாவிகள் தங்களது திசா காலத்தில் தொடக்கத்தில் கெடு பலனும் சுய புக்திக்கு பிறகு ஏற்றத்தையும் உண்டாக்குவார்கள். பொதுவாக ஒரு பாவ கிரக திசையில் சுய புக்தி யோகத்தை தந்து விட்டால் அடுத்து வருகின்ற புக்தி காலங்களில் கண்டத்தை உண்டாக்கும் என்று பொது விதியும் உண்டு.
     
அது போல ராகு கேது சுய புக்தியில் கெடுதியும் பிற புக்தியில் நற்பலனையும் உண்டாக்கும். கரும்பாம்பு என வர்ணிக்கப்படும் ராகு பகவான் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரத்தில் அமையப் பெற்றால் யோகத்தை உண்டாக்கும். அது போல ராகு பகவான் சனியை போல யோகம் தருவார் என்ற நிலைப்படி மகர கும்ப லக்னங்களுக்கு ராகு பகவானும், கேது பகவான் செவ்வாயை போல பலன் தருவார் என்ற நிலைப்படி மேஷம் விருச்சிக லக்னத்திற்கு யோகத்தை தருவார். அது போல ராகு பகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமையப் பெற்று திசை நடத்தினால் மட்டும் போதாது. அந்த ஜாதகத்தில் சனி பகவானும் பலம் இழக்காமல் இருக்க வேண்டும்.  அது போல கேது பகவான் திசா நடைபெறும் காலங்களில் நற்பலன் ஏற்பட வேண்டும் என்றால் செவ்வாயும் வலு இழக்காமல் இருக்க  வேண்டும். அப்படி அமையப் பெற்றால் தான் நற்பலன்களை ராகு கேது திசா புத்தி காலங்களில் அனுபவிக்க முடியும். அது போல ராகு கேது ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரி கோணாதிபதியின் சாரமும் நட்பு  கிரக சாரமும் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகும். ராகு கேது 6,8,12க்கு அதிபதிகளின் சாரமும் பாதகாதிபதிகளின் சாரமும் பெறுவது நல்லதல்ல.ராகு கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தாலும் நற்பலன் உண்டாகும்.

     ஆக சாயா கிரகங்கள் குஜவத் கேது சசிவத் ராகுவாக பலா பலன்களை வழங்குகிறார்கள்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com

Tuesday, July 9, 2013

காவி அணியும் வாழ்க்கை


காவி அணியும் வாழ்க்கை

      இன்றைய சமுதாயத்தில் சிலர் மண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையை வெறுத்து துறவியாக செல்லும் நிலை பல இடங்களில் நாம் காண்கிறோம். குறிப்பாக சில கிரக அமைப்புகள் பொருத்தே இது போன்ற நிலை உண்டாகும். பொதுவாக திருமண வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஸ்தானமான 7 ஆம் வீடும் சுக்கிரனும் ஒருவர் ஜாதகத்தில் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் திருமண வாழ்வில் பிரிவு, பிரச்சனைகள் உண்டாகும். சுக்கிரன் 7 ஆம் அதிபதி கேதுவின் ஆதிக்கத்தில் அகப்பட்டிருந்தால் கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றாலும் மண வாழ்வில் ஈடுபாடில்லாத நிலை உண்டாகும். குறிப்பாக 7 ஆம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் மண வாழ்க்கையே இல்லாத நிலை உண்டாகும்.
     
ஜென்ம லக்னத்திற்கு 4,7,10ல் 4 கிரகங்கள் இணைந்து இருந்து உடன் ராகு இல்லாமல் இருந்தால் சந்யாசி ஆகும் நிலை உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பலம் பெற்று ஜென்ம லக்னத்தை பார்வை செய்து மற்ற கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் சந்யாசி வாழ்க்கை உண்டாகும். லக்னாதிபதி சனி பகவானை பார்வை செய்து மற்ற கிரகங்களின் பார்வை லக்னாதிபதிக்கு இல்லாமல் இருந்தாலும்.சந்திரன் சனி வீட்டில் அமையப் பெற்று சனி, செவ்வாய் சந்திரனை பார்வை செய்தால் சந்யாசி நிலை உண்டாகும்.
     
ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் சந்திரன், குரு, லக்னத்தை பார்வை செய்தாலும் சந்யாச நிலை உண்டாகும்.
                                                                    

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082
CBS CODE-01078

                      

Thursday, July 4, 2013

சந்திர மங்கள யோகம்



                                     


     ஒரு ஜாதகத்தில் சந்திரனும், செவ்வாயும் கூடியிருந்தால் சந்திர மங்கள யோகம்  ஏற்படும். சந்திரனும் செவ்வாயும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டாலும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். உதாரணம் ரிஷபத்தில் சந்திரன், விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும். சந்திரன் கடகத்தில் இருக்க செவ்வாய் மகரத்தில் இருந்தால் அப்போதும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். முதல் உதாரணத்தில் சந்திரன் உச்சம், செவ்வாய் ஆட்சி இரண்டாவது உதாரணத்தில் செவ்வாய் உச்சம், சந்திரன் ஆட்சி

     மற்றொரு வகையிலும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். சந்திரனும், செவ்வாயும் கேந்திரத்தில் இருந்தாலும்  இந்த யோகம் உண்டாகும். ஆனால் முதல் இரண்டு அமைப்புக்களை விட சற்றே பலம் குறைந்ததாகும். இந்த யோகத்தின் பலனைத் தெரிந்து கொள்வோம்.

     நல்ல உடல்பொலிவும், பரந்த மார்பும், விரிந்த நெற்றியும் சராசரி உயரமும் அமையும். இந்த யோகம் உடையவர்கள் மதுபானங்கள் வியாபாரம் செய்தல், பெரிய  பார் வைத்து நடத்துதல் ஆகியவற்றாலும், உற்பத்தி வியாபாரம் மூலமாகவும் இரசாயனத்துறை வாயிலாகவும் வயலுக்குத் தேவையான உரம் சம்பந்தப்பட்ட துறை மூலமாகவும் பொருள் திரட்டுவார்கள்.

     இவர்கள் பிறந்த லக்னம் ஸ்திர லக்னமாக இல்லாமல், சர லக்னமாகவோ, உப லக்னமாகவோ இருக்குமானால், கடல் கடந்த நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வார்கள். சந்திரன் திரவ பதார்த்தத்திற்கும், பயண ஏற்பாடுகள் செய்யும் ஸ்தாபனப் பிரதிநிதிகளுக்கும் காரகத்துவம் உடையவர் ஆவார். செவ்வாய் ரசாயன லெபாரட்டரிகளுக்கும் அறுவை சிகிச்சை தளவாடங்களுக்கும் காரகத்துவம் உடையவர் ஆவார். ஆதலால் இந்தத் துறைகளில் இவர்கள் அறிவாற்றல் பெற்று, பொருள் திரட்ட வாய்ப்புண்டு. மேலும், சில அனுபவப் பூர்வமான சாத்தியக் கூறுகளையும் தெரிந்து கொள்வது அவசியமாகும். பலமான சந்திரமங்கள யோகம் உடையவர்கள் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளுக்கு அதிபதிகளாக வாய்ப்பு உண்டு அல்லது நிர்வாகம் செலுத்தக் கூடிய தகுதியைப் பெறுவார்கள்.

     பெரிய தோட்டங்களுக்கு அதிபதியாகி எல்லா விதமான கனி வகைகளையும் உற்பத்தி செய்யக் கூடிய சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள். கப்பலில் மாலுமியாகவோ அல்லது நிர்வாகியாகவோ அமைந்து, அடிக்கடி கடற் பயணம் செய்யவும் இவர்களுக்குத் தகுதி உண்டாகும்.

     நீச்சல் குளம் அமைத்து, அதில் அழகான காட்சி அம்சங்களையும் சுற்றுப் புறத்தில் பொருத்தி, அதன் மூலமாகப் பலரையும் அங்கே வரவழைத்து, அவ்வகையில் பொருள் திரட்டும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த யோகமுடைய ஆண்கள், அழகான பெண்களின் மூலம் சுகம் மட்டுமல்லாமல், செல்வத்தையும் அடைவதற்குரிய சந்தர்ப்பம்  ஏற்படுவதுண்டு. மேலும் இந்த யோகத்தின் மூலம் கலையும் விஞ்ஞானமும் கலந்த நூதனமான பொருட்களை உற்பத்தி செய்து, அவை பலராலும் பாராட்டப் படக் கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொள்வார்கள், மண் வளம் இவர்களுக்கு அமையும் மண்ணைப் பெண்ணாக்கும் கலையில் வல்லவராக இவர்கள் விளங்குவார்கள்.

     ரோஸ் மில்க் போன்ற பால் வியாபாரம் விசேடமாகச் செய்து பொருள் திரட்டவும் இவர்களுக்கு வாய்ப்பு உண்டாகும். சிவப்பு நீராகிய இரத்தம் குவித்து வைக்கப் படுகிற இரத்த வங்கியில் தொடர்புடையவர்களாகி அதன் மூலம் பொருள் திரட்டும் வாய்ப்பையும் பெறுவார்கள். மேலும் இரத்தப் பரிசோதனை செய்வதில் இவர்களுக்கு நிகராக யாராலும் இருக்க முடியாது. இவர்களுடைய உடலிலும் நல்ல இரத்த ஒட்டம் இருக்கும். இவர்களால் பெரிய கட்டிடங்களைக் கட்ட முடியும். அந்தக் கட்டிடத்தில் கற்பனை அம்சங்கள் நிறைந்திருக்கும்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078