Thursday, February 16, 2012

நீசபங்க ராஜயோகம்

ஒருவர் வளமான வாழ்க்கை வாழ்வதற்கும், பல அதிர்ஷ்டங்களை அடைவதற்கும், ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பலமாக இருப்பது அவசியம். அதுவே கிரகங்கள் பலமிழந்து இருப்பது நல்லதல்ல. ஒரு கிரகம் தனது பலவீன ஸ்தானமான நீச ஸ்தானத்தில் இருப்பது, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்தையும், அந்தக் கிரகம் எந்த வீட்டின் அதிபதியாக இருக்கிறதோ அந்த வீட்டின் பலனையும் பாதிக்கும் என்றாலும், நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.

ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது.

உதாரணமாக, தந்தை காரகனான சூரியன் நீசம் பெற்றிருந்தால், அந்த குழந்தை பிறக்கின்ற போதே தந்தைக்கு பாதிப்புகள் ஏற்படும். அதுவே நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் பாதிப்புகள் விலகி பின்பு நல்லது நடக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில்  திருமணத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் 7ம் வீடாகும். 7ம் அதிபதி நீசம் பெற்று பங்கம் அடைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமையும் போது சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் விலகி பின்பு நல்லது நடக்கும்.

அது போல ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதியோ, குருவோ நீசபங்கம் பெற்றிருந்தால் முதலில் ஒரு கருசிதைவு ஏற்பட்டு அதன் பின்பு குழந்தை யோகம் உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

1 comment:

R.Ravichandran said...

I am Meena Lagnam, Kanya rasi, my 2nd place saturn, 11th place mars, Is it nesa panga rajayogam. Is it give good thing, When.(it give good things in Sani dhasai. Pls advise