திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதைப் பருவத்தில் பயிர் செய்வது மட்டுமின்றி பாதுகாப்பதும் அவசியம். ஆண், பெண் இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய திருமண உறவானது நீண்டகாலம் கமிழ்ச்சியுடன் அமைவது நல்லதல்லவா. மணவாழ்க்கையில் எல்லா வகையான சிறப்பான அம்சங்கள் அமைந்தால்தான் மனமகிழ்ச்சியுடன் வாழமுடியும். இல்லை என்றால் மகிழ்ச்சி இருக்காது. எப்படி டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக்கூடாதோ, அது போல வரன் தேடும் விஷயத்தில் ஜோதிடரிடமும் பொய் சொல்லக்கூடாது. ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் சரியான பிறந்த நேரம், ஊர் ஆகியவற்றைத் தெளிவாக எந்த தவறுதலும் இன்றி ஜோதிடரிடம் கூறினால் மட்டுமே, அவரால் தெளிவான ஜனன ஜாதகத்தை கணிக்க முடியும். அப்படி கணிக்கப்படும் ஜாதகமே அவரின் மரண காலம் வரை உள்ள பலா பலன்களை எடுத்துரைக்கும் ஜாதகத்தைக் கொண்டுதான் திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். ஜோதிட ரீதியாக ஆண் பெண் இருவருக்கும் வரன் தேடும் படலம் தொடங்கியதும் முதலில் நாம் பார்ப்பது நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதுதான். ஆனால் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாகவும் பொருத்தங்கள் உள்ளதா என தெளிவாக ஆராய வேண்டும். பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சுமாரான அமைப்பே ஆகும்.
முதலில் நட்சத்திரப் பொருத்தங்களான 10 வகையான பொருத்தங்களை பார்க்க வேண்டும். பிறகு ஜாதக ரீதியாக உள்ள சாதக, பாதகப் பலன்களைப் பற்றி ஆராய வேண்டும். இப்படி பொருத்தங்கள் பார்த்து செய்யும் திருமணங்கள் நீண்டகால சந்தோஷப் பலன்களை ஏற்படுத்தும். இப்பொழுது பத்து பொருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.
தினப்பொருத்தம்
ஆண் பெண் இருபாலரின் நட்சத்திர பொருத்தங்களில் தினப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் இருவரும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 2,4,6,8,9,11,13, 15,,17,18,20,22,24,26,27 ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உண்டு. கண்டிப்பாக 7வது நடத்திரமாக இருந்தால் திருமண செய்யக்கூடாது.
ஏகநட்சத்திரம்,
பெண், ஆண் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவைகள் மிகவும் உத்தமம்.
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடமாக இருந்தால் மத்திமம் மற்ற நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.
கணப்பொருத்தம்,
ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணமாக இருந்தால் கணப் பொருத்தம் உத்தமம். ஆண் தேவ கணமும், பெண் மனுஷ கணமும் ஆனால் உத்தமம். பெண் தேவ கணமும் ஆண் மனுஷ அல்லது ராஷஸ கணமானால் மத்திமம். மற்றவை பொருந்தாது. கணப்பொருத்தமானது சிறப்பாக இருந்தால் இருவருக்கும் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். செல்வ செழிப்பு தாராளமாக உண்டாகும்.
மகேந்திர பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 4,7,10,13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இதன் மூலம் இருவருக்கும் நீண்ட ஆயுள் உண்டு.
ஸ்திரீ தீர்க்க பொருத்தம்
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 13 க்கு மேல் வந்தால் உத்தமம். 7 க்கு மேல் வந்தால் மத்திமம். பொருத்தம் சிறப்பாக இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்.
யோனி பொருத்தம்
யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது.
பகையோனிகள் நட்சத்திரங்கள்
குரங்கு & ஆடு, பூராடம், திருவோணம்& பூசம், கிருத்திகை
சிங்கம் & யானை, அவிட்டம், பூரட்டாதி& பரணி, ரேவதி
குதிரை & எருமை, அஸ்வினி, சதயம்&சுவாதி, அஸ்தம்
பசு& புலி, உத்திரம், உத்திராடம், விசாகம்& சித்திரை, உத்திரட்டாதி
எலி & பூனை, மகம், பூரம்& ஆயில்யம், புனர்பூசம்
பாம்பு & எலி , ரோகிணி, மிருகசீரிஷம்& மகம், பூரம்
கீரி& பாம்பு, உத்திராடம்& ரோகினி, மிருகசீரிஷம்,
மான் & நாய், கேட்டை, அனுஷம்& மூலம், திருவாதிரை
இது இருவரின் உடல் பொருத்தம் ஆகும்.
பலனறிதல்
குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதே போல் யானை சிங்கம் ஆடு குரங்கு, நாகமும் கீரியும், நாயும் மானும், பூனை எலியும், புலிபசுவும் ஒன்றுக் கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக்கூடாது.
இதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.
நட்சத்திரம் கணம் பால் மிருகம்
அஸ்வினி தேவ ஆண் குதிரை
பரணி மானுஷ ஆண் யானை
கிருத்திகை ராஷஸ பெண் ஆடு
ரோகிணி மானுஷ ஆண் நாகம்
மிருகசீரிஷம் தேவம் பெண் சாரை
திருவாதிரை மானுஷ ஆண் நாய்
பனர்பூசம் தேவம் பெண் பூனை
பூசம் தேவம் ஆண் ஆடு
ஆயில்யம் ராஷஸ ஆண் பூனை
மகம் ராஷஸ ஆண் எலி
பூரம் மானுஷ பெண் எலி
உத்திரம் மானுஷ பெண் எருது
அஸ்தம் தேவம் பெண் எருமை
விசாகம் ராஷஸ ஆண் புலி
அனுஷம் தேவம் பெண் மான்
கேட்டை ராஷஸ ஆண் மான்
மூலம் ராஷஸ பெண் நாய்
பூராடம் மானுஷ ஆண் குரங்கு
உத்திராடம் மானுஷ பெண் மலட்டு பசு
திருவோணம் தேவம் பெண் குரங்கு
அவிட்டம் ராஷஸ பெண் சிங்கம்
சதயம் ராஷஸ பெண் குதிரை
பூரட்டாதி மானுஷ ஆண் சிங்கம்
உத்திரட்டாதி மானுஷ பெண் பசு
ரேவதி தேவம் பெண் யானை
ராசி பொருத்தம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 7,9,10,11,12, ஆக இருந்தால் உத்தமம். 3,4 ஆக இருந்தால் மத்திமம். ராசிப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் மன ஒற்றுமை இருக்கும்.
ராசி அதிபதி பொருத்தம்
பெண் ராசிக்கு ஆண் ராசி அதிபதி நட்பு ஆனால் உத்தமம். சமம் ஆனால் மத்திமம். பகையானால் பொருந்தாது. ராசி அதிபதி பொருத்தம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக அமையும்.
கிகரகம நட்பு சமம் பகை
சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன்
செவ்வாய், சனி ராகு, கேது
குரு
சந்திரன் சூரியன் செவ்வாய் ராகு, கேது
புதன் குரு, சனி
சுக்கிரன்
செவ்வாய் சூரியன் சுக்கிரன், புதன், ராகு, கேது
குரு, சந்திரன் சனி
புதன் சூரியன் செவ்வாய் சந்திரன்
சுக்கிரன் குரு, சனி
ராகு
குரு சூரிய சனி, ராகு
சந்திரன் கேது புதன், சுக்கிரன்
செவ்வாய்
சுக்கிரன் புதன், சனி செவ்வாய்
ராகு, கேது குரு சூரியன், சந்திரன்
சனி புதன் குரு சூரிய, சந்தி
சுக்கிரன் செவ்வாய்
ராகுகேது
ராகு சுக்கி சனி புதன் சூரிய சந்தி
கேது குரு செவ்வாய்
வசியப் பொருத்தம்
ராசி வசிய ராசிகள்
மேஷம் சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருச்சிகம், தனுசு
சிம்மம் துலாம், மீனம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்
பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ரச்சுப் பொருத்தம்
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் & சிரசு ரச்சு.
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் & கண்டரச்சு.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி & உதிரரச்சு.
பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி & தொடை ரச்சு.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே ரச்சானால் பொருத்தம் இல்லை. இது மாங்கல்ய பொருத்தம் என்பதால் இந்த பொருத்தம் இருந்தால்தான் திருமணம் செய்ய வேண்டும்.
வேதை பொருத்தம்
அஸ்வினியும் கேட்டையும்,
பரணியும் அனுஷமும்
கிருத்திகையும் விசாகமும்,
ரோகிணியும் சுவாதியும்,
திருவாதிரையும் திருவோணமும்,
புனர்பூசமும் உத்திராடமும்
பூசமும் பூராடமும்,
ஆயில்யமும், மூலமும்,
மகமும் ரேவதியும்,
பூரமும் உத்திரட்டாதியும்,
உத்திரமும் பூரட்டாதியும்,
ஹஸ்தமும் சதயமும்
ஒன்றுக்கொன்று வேதைகள். வேதைகள் இருவருக்கும் உண்டானால் பொருத்தம் இல்லை.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001
Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001