Wednesday, March 31, 2021
Today rasi palan - 01.04.2021
Today rasi palan - 01.04.2021
இன்றைய ராசிப்பலன் - 01.04.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
01-04-2021, பங்குனி 19, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.00 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. விசாகம் நட்சத்திரம் காலை 07.21 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 05.19 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 05.19 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
சூரிய புதன் சுக்கி |
|
செவ் ராகு |
|
|
திருக்கணித கிரக நிலை 01.04.2021 |
|
|
குரு சனி |
|
||
|
சந்தி கேது |
|
|
இன்றைய ராசிப்பலன் - 01.04.2021
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம்
இன்று வெளிப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
துலாம்
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிலில் மந்த நிலை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.
பிலவ வருட பலன்கள் 2021-2022 மீனம்
பிலவ வருட பலன்கள் 2021-2022
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம்
கொண்ட மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த பிலவ வருடத்தில் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு
முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான
ராகு 3-ல், கேது 9-ல் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியம்
மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்தது நிறைவேறும் யோகம்,
உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் வாய்ப்பு, மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றும் பலம், பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும் யோகம் ஏற்படும்.
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில்
மகிழ்ச்சி, சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்று எடுக்கும் யோகம் உண்டாகும்.
உங்கள் ராசியாதிபதி குரு
இவ்வாண்டு முழுவதும் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் நன்றாக இருந்தாலும்
சில நேரங்களில் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூட தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால்
உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் பேசினால் ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு நற்பலனை
அடைய முடியும்.
தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலனை அடையும் யோகம் உண்டு. வேலையாட்கள்
மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள்
வெற்றி தரும் என்றாலும் நவீன கருவிகள் வாங்குவதற்காக அதிக முதலீடுகள் செய்ய நேரிடும்.
பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைபளு இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு
ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உங்களது
உழைப்பிற்கான சன்மானம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கும் என்றாலும் கௌரவ பதவிகள்
தேடி வரும்.
இவ்வாண்டில் ராசியாதிபதி குரு 12-ல் சஞ்சரிப்பது தேவையற்ற செலவுகளை
உங்களுக்கு ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை
4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது
அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம்,
உங்களது பொருளாதரா நிலை மிக சிறப்பாக இருக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த தேக்க
நிலை விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த
மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும்
உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகளில் சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு ஒரு சில தடைகளுக்கு பின்பு நல்ல வரன்கள் தேடி
வரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில்
மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கையாளும்
போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நற்பலனை
அடைய முடியும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள்
குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின்
சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்
மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத
செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும்,
மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும்
எதிர்பார்த்த சம்பளம் கிடைக்க ஒரு சில இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். வெளியூர் சென்று
பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற
வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும்.
மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு
அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக
அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களால் சில நேரங்களில்
அதிக அளவில் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை
பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் புதிய வாய்ப்புகள் மூலம்
கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம்
கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். சொகுசு கார், பங்களா
போன்றவற்றை வாங்க முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள்.
கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு
வாகனங்களையும் வாங்குவீர்கள்.
படிப்பு
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப்
பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்வீர்கள்.
நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும்.
மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை
மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். சூரியன் 2-ல், செவ்வாய் 4-ல்
சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை
குறையாது. நெருங்கியவர்களிடம் பேசும் போது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தாராள தனவரவால்
தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.
பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள்
கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
வைகாசி
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும்
முயற்சியில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள்
கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு
சிறப்பாக இருக்கும். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால்
முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம்
அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். அரசு வழியில்
அனுகூலங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். முருகப் பெருமானை
வழிபடுவது நல்லது.
ஆனி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான பலன்களை
தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எல்லா வகையிலும் லாபங்கள்
பெருகும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை
செலுத்துவது நல்லது. திருமண சுபகாரியங்களில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா
சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். 4-ல் சூரியன்,
12-ல் குரு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருந்தால் அனுகூலங்களை
அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து
செயல்படவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு
உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். சிவனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு
மேற்கொள்வது நல்லது.
ஆடி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, வரும் 4-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம்
செய்ய இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள்
கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும்
குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு
சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில்
உயர்வடைவார்கள். வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். தட்சிணாமூர்த்தி வழிபடுவது
நல்லது.
ஆவணி
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல வித்திலும்
மேன்மையான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு
நல்ல வரன்கள் தேடி வரும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். பங்காளிகள்
ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை
சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும்
நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம்
சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து
செல்வது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
புரட்டாசி
உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதும் குரு, சனி வக்ர
கதியில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அ¬ப்பு என்பதால் மன அமைதி குறையும். குடும்பத்தில்
சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில்
உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது
ஏற்றங்களை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணி நிமித்தமாக சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். எதிர்பார்க்கும் உயர்வுகள்
கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை
தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. சிவனையும்,
முருகரையும் வழிபடுவது உத்தமம்.
ஐப்பசி
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இம்மாதத்தில்
சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். 3-ல் ராகு, 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால்
பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். தேவையற்ற பயணங்களால்
அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள்
குறையும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.
அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்
பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம்
செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள
முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறைவாக இருக்கும். சிவனையும், முருகரையும்
வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை
மிகச் சிறப்பாக இருக்கும். 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள்
உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வெளியூர்
சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி
பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம்
அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை
கூடும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து
கொண்டால் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள்
யாவும் நிறைவேறும். விநாயகர் வழிபாடு செய்யவும்.
மார்கழி
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால்
எல்லா வகையிலும் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.
உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும்
உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள்
கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள்
விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை
சற்று அனுசரித்து நடந்து கொண்டால் லாபங்களை பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்
வெற்றிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை
வழிபடுவது நல்லது.
தை
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன், சனி சஞ்சரிப்பதால்
தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகவும் சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில்
தடையின்றி வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும்.
பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும்.
உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும்.
பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.
உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர
வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தட்சிணாமூர்த்தி வழிபாடு
மேற்கொள்வது நல்லது.
மாசி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் 10, 11-ல் செவ்வாய்
சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் ஏற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும்
சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன்
செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
வீண் செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப்
பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து
நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள்
மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். கொடுக்கல்-
வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலன்களை அடைய முடியும். சிவனையும்,
அஷ்டலட்சுமியையும் வழிபடவும்.
பங்குனி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும்.
எதிர்பாராத உதவிகளும் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல்
தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன்
இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள்
எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியும்
பெருகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிவனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது
நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 கிழமை - வியாழன், ஞாயிறு திசை -
வடகிழக்கு
கல் - புஷ்ப ராகம் நிறம்
- மஞ்சள், சிவப்பு தெய்வம் - தட்சிணாமூர்த்தி