கற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நடைபெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில்
காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
( காலை 07-05 மணி முதல் 07.15 மணி வரை சனி ஞாயிறு)
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
டிசம்பர் மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2015
மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5&ல் குரு, 6ல் செவ்வாய் இராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய வார்கள். அபிவிருத்தியும் பெருகும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 09.12.2015 மாலை 04.28 மணி முதல் 12.12.2015 அதிகாலை 01.19 மணி வரை.
ரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் குருவும் 7&ல் சூரியன் சனியும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் அடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.12.2015 அதிகாலை 01.19 மணி முதல் 14.12.2015 காலை 07.54 மணி வரை
மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சூரியன் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் எதிர் பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.12.2015 காலை 07.54 மணி முதல் 16.12.2015 பகல் 12.54 மணி வரை.
கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் குருவும், 3ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும், அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். மிருமண சுப காரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம். சிவ பெருமானைன வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 16.12.2015 பகல் 12.54 மணி முதல் 18.12.2015 மதியம் 04.48 மணி வரை.
சிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் ராகு, 4ல் சனி சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.12.2015 மதியம் 04.48 மணி முதல்20.12.2015 இரவு 07.44 மணி வரை.
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சனியும் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். முருகப்பெருமானை வழிபடவும்
சந்திராஷ்டமம் 30.12.2014 காலை 05.55 மணி முதல் 01.01.2015 பகல் 11.47 மணி வரை.
துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11&ல் குரு, மாத பிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22.12.2015 இரவு 10.04 மணி முதல் 24.12.2015 இரவு 12.46 மணி வரை.
விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். என்றாலும் 11&ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 24.12.2015 இரவு 12.46 மணி முதல் 27.12.2015 காலை 05.18 மணிவரை.
தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&ல் குரு, 11ல் சுக்கிரன், சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு எனறாலும், 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்து கொண்டால் மட்டுமே தேவைவயற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வேலை பளுவும் குறைவாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விவது நல்லது.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 27.12.2015 காலை 05.18 மணி முதல் 29.12.2015 மதியம் 01.03 மணி வரை.
மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் சூரியன், சனி சஞ்சரிப்பதும் 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.12.2015 அதிகாலை 04.01 மணி முதல் 04.12.2015 மாலை 04.00 மணி வரை.
மற்றும் 29.12.2015 மதியம் 01.03 மணி முதல் 31.12.2015 இரவு 12.13 மணி வரை.
கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் குரு சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும். எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்த கொள்வது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.
பரிகாரம். ராகு கேதுவை வழிபடுவது, சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 04.12.2015 மாலை 04.00 மணி முதல் 07.12.2015 அதிகாலை 05.00 மணி வரை.
மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு ருண ரோக ஸ்தானமான 6ல் குரு சஞ்சரிப்பதும், களத்திர ஸ்தானமான 7ல் செவ்வாய் ராகு சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். புதிய சேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலார்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபடுவது முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.12.2015 அதிகாலை 05.00 மணி முதல் 09.12.2015 மாலை 04.28 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
06.12.2015 கார்த்திகை 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை தசமிதிதி அஸ்த நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை.
07.12.2015 கார்த்திகை 21 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.
20.12.2015 மார்கழி 04 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை தசமிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை
21.12.2015 மார்கழி 05 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை
28.12.2015 மார்கழி 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம் .தேய்பிறை.
30.12.2015 மார்கழி 14 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமிதிதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை.
Contact
For your consultation
Jothidamamani
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
or