Wednesday, October 28, 2015

கல்வி கற்கும் யோகம்

  வாங்கி படிக்க தவறாதீர்கள் 
நவம்பர் 2015 
ஓம்சரவணபவா இதழுடன்

2016 புத்தாண்டு பலன்கள்

(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 சந்திராஷ்டமம்,சுப முகூர்த்த நாட்கள்அதிர்ஷ்டக்குறிப்புகள்  அடங்கியது)  



96 பக்கம் இலவச இனைப்பு


இப்படிக்கு

ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
------------------------------------



 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

கல்வி கற்கும் யோகம்

ஒரு குழந்தையானது பூமியில் பிறந்தவுடன், அக்குழந்தையின் தாய், தந்தையருக்கு குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமையானது தொடங்கிவிடுகிறது. நம் குழந்தை என்னவாக ஆகவேண்டும் என கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தை உயர்ந்த நிலையை அடைய முதல் அடிப்படைத் தேவையாக கல்வி அமைகிறது. அக்கல்வி தங்கள் பிள்ளைக்கு நல்ல படியாக அமைய அதற்கு தேவையானவற்றை செய்ய தொடங்குகிறார்கள்.

பழங்காலங்களில் நெல் மணியை தரையில் கொட்டி அ, ஆ எழுத சொல்லிக் கொடுத்தவர்கள், அடுத்து கரும்பலகைகளில் எழுதி படிக்கக் கற்று கொடுத்தார்கள். வலது கையை தலைக்கு மேல் கொண்ட வந்து இடது காதை தொட்டால்தான் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் நிலைகள் போய் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை இரண்டரை வயது முதலே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, இவன் டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். 10ஆம்  வகுப்பு வரை சமமாக செல்லும் காலங்கள், 11ஆம் வகுப்பு வரும் முதலே எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு தன் மகனை என்ன படிக்க வைக்கலாம், எதில் கொண்டு சென்றால் இவன் முன்னேற்றமடைவான் என ஆராயும் பெற்றோர்களுக்கு இதே சில டிப்ஸ்.

நவகிரகங்களில் கல்வி காரகன் புதன் பகவானாவார். ஒரு குழந்தையானது தனது அடிப்படை ஆரம்ப கல்வியில் காலடி எடுத்து வைக்க அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2ஆம் வீடானது பலமாக இருத்தல் அவசியம். 2ஆம் வீடானது பலமாக இருந்தால் குழந்தை எந்த தடைகளும் இன்றி அடம்பிடிக்காமல் அழாமல் பள்ளிக்கு செல்லும். அதுவே 2ஆம் வீட்டிற்கு பாவ கிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் குழந்தை அடிப்படை கல்வியிலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ஆம் வீட்டைக் கொண்டு அந்தக் குழந்தையின் மேல்நிலைக் கல்வியைப் பற்றி அறியலாம். 4ஆம் வீடானது பலமாக இருந்து விட்டால் அக்குழந்தையின் மேற்கல்வியில் தடைகள் இல்லாமல் இருக்கும். அதுவே 4ஆம் வீட்டிற்கு பாவகிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் கல்வியை  பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை போன்றவற்றால் கல்வி நிலை பாதிப்படையும். 5ஆம் வீடானது உயர்கல்வி, பட்டயக் கல்வி பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் 5ஆம் வீடானது பலமாக இருந்தால் ஏதாவது ஒரு துறையில் சாதனைகள், ஆராய்ச்சிகள் செய்யக்கூடிய யோகம் அமையும். 

      ஜென்ம லக்னத்திற்கு 4,5ஈம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக்கல்வி  யோகம்  உண்டாகும். 4,5 ல் பாவ கிரகமான சனி அல்லது ராகு அமைவது நல்லதல்ல அப்படி அமைந்திருந்தால் படிக்கும் வயதில் அப்பாவ கிரக திசை புக்தி நடைபெற்றால் கல்வியில் தடை படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.

வித்தியாகாரகன் எனவும் கல்வி காரகன் எனவும் போற்றப்படும் புதன் பகவான் வலுப் பெற்று இருந்தால் கல்வியில் மேன்மை உண்டாகிறது. ஜென்ம லக்கினத்திற்கு 4,5ஆம் வீட்டிற்கு அதிபதியுடன் புதன் தொடர்பு இருப்பது நல்லது. 4,5ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் வலுவாக அமைகின்றதோ அக்கிரகங்களின் தன்மைக்கேற்ப உயர்கல்வி அமையும்.

புதன் சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறை சந்திரன் சேர்க்கை ஏற்றால் சுப கிரக தன்மையுடனும். சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றால் பாவ கிரக தன்மையுடனும் பலனை தருவார்.
புதன் மிதுனம், கன்னி ராசியில் அதிக பலம் பெறும் போது கல்வி ரீதியாக மேன்மை ஏற்படும். மீனத்தில் நீச்சம் பெற்றாலும் உடன் சுக்கிரன் அமைந்து நீச பங்கம் உண்டாகி இருந்தால் கல்வியில் சிறு தடைக்குப் பிறகு மேன்மை ஏற்படும்.

    புதன் பாவிகளான சனி, ராகு, கேது சேர்க்கை மற்றும் பார்வை பெறாமல் இருப்பது மிகவும் உத்தமம். புதன் ஜென்ம லக்கினத்திற்கு எந்த வீட்டில் அமைந்து உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதி புதனுக்கு கேந்திரத்தில் அமையப் பெற்றால் புதனுக்கு வலுவான பலம் உண்டாகி பட்டக் கல்வி, உயர்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படுகிறது. புதனுக்கு இருபுறமும் பாவிகள் சூழாமல் இருப்பது கல்வி ரீதியாக மேன்மையை உண்டாக்கும்.

      புதன் சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை அல்லது சுப கிரகத்தின் வீட்டில் இருந்தால் கல்வியில் நல்ல நிலை அடையும் சூழ்நிலை ஏற்படும். புதன் பாவ கிரக வீட்டில் அமையப் பெற்றாலும் புதன் வக்ரம் பெற்றாலும்  பாவிகளால் பார்க்கப்பட்டாலும் கற்ற கல்வியை பயன் படுத்த முடியாமல் கல்விக்கு சம்பந்தம் இல்லாத தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை, வாழ்நாளில் கற்றகல்வியை உபயோகிக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது.

      புதன் வீடான மிதுனம், கன்னியில் சனி ராகு,போன்ற பாவிகள் வலுப் பெற்றால் கல்வியில் இடையூறு உண்டாகிறது. 

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, அதன் கல்வியும் தரமானதாக, சிறப்பாக அமைய, அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2,4,5 ஆகிய வீடுகள் பலம் பெற்றிருப்பதுடன்  கல்விகாரகன் புதனும் பலமாக இருத்தல் மிகமிக அவசியம். 

Intha Naal 10/28/15

Thursday, October 22, 2015

மாத ராசிப்பலன்- நவம்பர் - 2015 & சுப முகூர்த்த நாட்கள்

                          வாங்கி படிக்க தவறாதீர்கள் 
நவம்பர் 2015 
ஓம்சரவணபவா இதழுடன்

2016 புத்தாண்டு பலன்கள்

(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 சந்திராஷ்டமம்,சுப முகூர்த்த நாட்கள்அதிர்ஷ்டக்குறிப்புகள்  அடங்கியது)  



96 பக்கம் இலவச இனைப்பு


இப்படிக்கு

ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
------------------------------------




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


மாத ராசிப்பலன்-  நவம்பர் - 2015  & சுப முகூர்த்த நாட்கள்

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் குரு சஞ்சரிப்பதும் ருணரோக ஸ்தானமான 6ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.   
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 12.11.2015 காலை 09.11 மணி முதல் 14.11.2015 மாலை 06.44 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் கேது சஞ்சாரம் செய்வதும் சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் ஓருளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல் படுவது, கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகளுக்குப்பின் தான் லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளால் வூண் பிரச்சனைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. 
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.11.2015 மாலை 06.44 மணி முதல் 17.11.2015 அதிகாலை02.11 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு  முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் 6&ல் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல் பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள் 
பரிகாரம். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 17.11.2015 அதிகாலை02.11 மணி முதல் 19.11.2015 காலை 07.33 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4&ல் ராகு சஞ்சாரம்  செய்வது தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை ஏற்படுத்தும் என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டிட நிரப்பும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. 
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு  சஷ்டி விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 19.11.2015 காலை 07.33 மணி முதல் 21.11.2015 காலை 10.48 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் 2&ல் ராகு 8&ல் கேது சஞ்சாரம் செய்வதும் ஜென்ம ராசியில் குரு, 4ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய சிறு சிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.11.2015 காலை 10.48 மணி முதல்23.11.2015 மதியம் 12.07 மணி வரை 

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சனி, மாத பிற்பாதியில் 6&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். ணூணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பதும் உற்றார் உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர் பார்க்கும் இட மாற்றங்களும் கிடைக்கும்.
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.11.2015 மதியம் 12.07 மணி முதல் 25.11.2015 மதியம் 01.04 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்வது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் அமையும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி சற்று விட்டு கொடுத்த நடப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும்.  பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதமிருப்பது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 25.11.2015 மதியம் 01.04 மணி முதல் 27.11.2015 மதியம் 02.50 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும், 12&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் நில தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும்.  கூட்டாளிகளின் ஆதரவற்ற செயல்படுகளால் மன நிம்மதி குறையும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன் மனைவி சற்று விட்டு கோடுத்த செல்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 27.11.2015 மதியம் 02.50 மணி முதல் 29.11.2015 இரவு 07.27 மணிவரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு மாத முற்பாதியில் சூரியன் 11&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைபளு  சற்று அதிகமாகவே இருக்கும். 
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 02.11.2015 காலை 10.11 மணி முதல் 04.11.2015 இரவு 08.03 மணி வரை.
மற்றும் 29.11.2015 இரவு 07.27 மணி முதல் 02.12.2015 அதிகாலை 04.01 மணி வரை

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், சனி லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்.  பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும்.  சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்து நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். 
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 04.11.2015 இரவு 08.03 மணி முதல் 07.11.2015 காலை 08.39 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ல் குருவும் 9ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.  சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை அளிக்கும். 
பரிகாரம். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.11.2015 காலை 08.39 மணி முதல் 09.11.2015 இரவு 09.37 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 6ல் குருவும், 7ல் ராகுவும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். நண்பர்களும் விரோதிகளாவார்கள். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.11.2015 இரவு 09.37 மணி முதல் 12.11.2015 காலை 09.11 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.11.2015  ஐப்பசி மாதம், 16 ஆம் தேதி  திங்கட்கிழமை சஷ்டி திதி, புனர்பூச நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம்  தேய்பிறை

08.11.2015  ஐப்பசி மாதம், 22 ஆம் தேதி  ஞாயிற்றுகிழமை, துவாதசி திதி, அஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல்  09.00 மணிக்குள் தனுசு இலக்கினம்  தேய்பிறை 

09.11.2015  ஐப்பசி மாதம், 23 ஆம் தேதி  திங்கட்கிழமை, திரயோதசி திதி, அஸ்த  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் தேய்பிறை 

13.11.2015  ஐப்பசி மாதம், 27 ஆம் தேதி  வெள்ளிகிழமை, துவிதியை திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம்  வளர்பிறை

15.11.2015  ஐப்பசி மாதம், 29 ஆம் தேதி  ஞாயிற்றுகிழமை, சதுர்தசி திதி, மூல நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல்  09.00 மணிக்குள் தனுசு இலக்கினம் வளர்பிறை

18.11.2015 கார்த்திகை 02 ஆம் தேதி புதன் கிழமை சப்தமிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

22.11.2015 கார்த்திகை 06 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஏகாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

23.11.2015 கார்த்திகை 07 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை 

27.11.2015 கார்த்திகை 11 ஆம் தேதி வெள்ளிகிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.

29.11.2015 கார்த்திகை 13 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.


Contact

For your consultation



please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Friday, October 16, 2015

கல்வியும் பெற்றோர் கடமையும்





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


கல்வியும் பெற்றோர் கடமையும்


     கல்வி செல்வம் நமக்கு என்றும் அழியாத செல்வமாகும். திருடரால் திருட முடியாதது. தீயால் கருகாதது வெள்ளத்தால் அடித்து செல்ல முடியாதது. அள்ள அள்ள குறையாது. மற்றவருக்கு கற்று கொடுப்பதால் வளருமே தவிர குறையாது. கல்வி ஒருவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பை தரும். ஒருவன் தாம் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் உதவும் என வள்ளுவர் கூறியுள்ளார்.

     ஒரு குழந்தைக்கு பிறந்தவுடன் முதல் ஆசிரியராக தாய் விளங்குகின்றாள். மெல்ல மெல்ல சிறு சொற்களை கற்றுக் கொடுத்து அவனை பேசும் படி கற்-று கொடுக்கிறாள். ஆக பிறந்த உடனேயே மனிதனுக்கு கல்வி உண்டாகி விடுகிறது. கல்விக்கான வயதை அடைந்தவுடன் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுக்கின்றோம்.

     நமது பண்பாட்டின் படி அனைத்திற்கும் நேரம் காலம் பார்த்து செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். கல்வி என்பது நமக்கு அழிவில்லாத சொத்து. இதனை கற்க நேரம் காலம் பார்க்க வேண்டியது அவசியம். நமது முன்னோர்கள் எதை செய்வதற்கும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வகுத்து உள்ளார்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எனவே ஒரு குழந்தைக்கு கல்வி கற்க ஆரம்பிக்கும் போது அதன் வாழ்க்கைப் பாதை வெளிச்சமாக மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான நாள், நட்சத்திரம் தேர்ந்து எடுத்து செய்ய நமக்கு முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

      முதல் முதலில் கல்வி தொடங்க அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, உத்திராடம், திருஒணம், அவிட்டம், உத்திரட்டாதி,  ரேவதி போன்ற நட்சத்திர நாட்களும். துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகளும். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கின  நேரங்களிலும்  திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஆகிய நாட்களில் முதல் முதலில் கல்வி கற்க தொடங்குவது மிகவும் சிறப்பு. கல்வி தொடங்கும் நேரத்தில்  லக்னத்திற்கு 4,8ம் வீடுகளில் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருப்பது மிகவும் நல்லது. 

     ஒரு வயதான பெரியவரை (பிராமணர், வேதம் அறிந்தவர்) ஒருவரை அழைத்து (அல்லது) குழந்தையின் தாத்தா தாய் மாமனையும் அழைக்கலாம். அவரை முன் நிறுத்தி முதலில் வீட்டில் சரஸ்வதி விநாயகர் தமிழ் கடவுளான முருகன் போன்ற தெய்வங்களின் படங்களுக்கோ  விக்ரகங்களுக்கோ பூசாற்றி அதன் முன்பாக பொறி கடலை பழம் தேங்காய் வைத்து பூஜிக்க  செய்ய வேண்டும். படங்களுக்கு முன்பாக ஒரு படி நெல் அல்லது அரிசியை சதுரமாக பரத்தி வைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அக்குழந்தையின் கைகளை அந்த குருவானவர் (பெரியவர்கள்) பிடித்து அந்த பரத்திய நெல் அல்லது அரிசியில் ஸ்ரீஹரி என்ற திருமாலின் நாமத்தை எழுத வைத்து அதன் பிறகு தமிழ் உயிர் எழுத்தான அ, ஆ என்ற எழுத்தினை எழுத வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த அரிசியை அல்லது நெல்லை பழம் தேங்காய் வெற்றிலை பாக்குடன் வேஷ்டி சட்டை துண்டு போன்யவற்றை தட்சிணையாக வைத்து அந்த குருவுக்கு தானமாக அக்குழந்தையின் பெற்றோர் தர வேண்டும். பின்பு அக்குழந்தையை குருவின் காலில் விழுந்து வணங்க சொல்லி அவரின் ஆசியை பெற வைக்க வேண்டும். 

அன்றே பள்ளியில் சேர்க்க சிறப்பான நாளாக இருந்தால் ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து சுப ஓரைகளான குரு சுக்கிரன் புதன் ஓரைகளில் பள்ளிக்கு அழைத்துப் போக வேண்டும். முதல் நாளன்று இனிப்பு வாங்கி குழந்தையின் கையில் அளித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வகுப்பில் வழங்க செய்ய வேண்டும். இத்துடன் பொறுப்பு முடிந்து விடாமல் ஆரம்ப நாள் முதலே குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர் கற்றுத் தர வேண்டும். சூரியன் உதிப்பதற்குள் எழ வைக்க வேண்டும். காலைக் கடன்களை முடிக்க கற்றுத் தர வேண்டும். அதன் பிறகு சூரியனையும் தெய்வத்தையும் வணங்க கற்றுத் தர வேண்டும்.  

காலையில் படிக்கும் வழக்கத்தை கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும். வகுப்பில் மற்ற மாணவர்களை அனுசரித்து போக அறிவுரை கூற வேண்டும். அவர்களை அவர்களுக்கு தெரியாமல் கண்காணிக்க வேண்டும். அவர்கள் மாலையில் திரும்பியதும் வகுப்பில்  நடந்ததை கூற  ஆர்வம் காட்டுவார்கள். அதை செவி கொடுத்து கேட்க வேண்டும். தவறு செய்தால் அன்புடன் திருத்த வேண்டும். 

பள்ளிக்கு குழந்தை செல்ல அடம் பிடிக்கிறது என்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  அக்காரணத்தை பொறுமையுடன் பெற்றோர் கண்டறிந்து நிவாரணம் தேடுவது  சிறப்பு. நமது  அணுகு முறை தான் குழந்தைகளை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் உருவாக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை தர கற்றுக் கொடுக்க வேண்டும். வயது ஏற ஏற அவர்களாகவே தமது பொறுப்புகளை உணரும் படி செய்ய வேண்டும். அடிப்படை பலமாக அமைந்து விட்டால் மேல் எழும்பும் கட்டிடம் கண்டிப்பாக பலமானதாக தான் இருக்கும். 5ல் வளையாதது 50தில் வளையாது என்று கூறுவார்கள். சிறுவயது முதலே நாம் ஒரு உதாரணமாக இருந்து அவர்களை வழி நடத்தினால் எல்லாக் குழந்தையுமே புத்திசாலிகளாகவும் தன்மைபிக்கை மிக்கவர்களாகவும் உருவாகி விடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. 

இதில் அன்னையர்கள் தான் குழந்தையின் முதல் ஆசிரியர். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே என்ற பாடல் வரிகள் தாயை தான் குறிக்கிறது. குழந்தைகள் தாயின் அன்பிற்குக் கட்டுப்படுவார்கள். ஒரு குழந்தை நல்லபடி வளர வேண்டும் என்ற உள்ளம் கொண்டவள் தாய். தந்தை பொருளை தேடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். என்றாலும் தாயானவள் அன்பின் வடிவம். மன்னிக்கும் மனது உடையவள். குழந்தையை தன் உயிருக்கு உயிராக எண்ணுபவள். பெற்றோர்களின் கண்காணிப்பில் வளரும் குழந்தைகள் கண்டிப்பாக நன்கு கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

Contact

For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Intha Naal Episode 269

ww

Sunday, October 11, 2015

கண்டத்தை ஏற்படுத்துபவர்கள் யார்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


கண்டத்தை ஏற்படுத்துபவர்கள் யார்

     நாம் அனைவருக்கும் எப்பொழுதும் நல்லதே நடப்பதுமில்லை. அது போல எப்பொழுதும் கெட்டதும் நடப்பதில்லை. வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம் போல் ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருக்கும். ஜனன ஜாதகத்தில் நவ கிரகங்கள் பலமாக இருந்தால் தான் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். யாருக்கு எப்போது கண்டம் உண்டாகும். கண்டத்திற்கு ஒப்பான உடல் நிலை பாதிப்பு எப்போது உண்டாகும் என்பதனைப் பற்றி பார்ப்போம்.
     நவ கிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக் கூடிய கிரகம் சனி. சனி ஒருவர் ஜாதகத்தில் வலுவாக அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி மட்டும் தான் நவ கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற கிரகமாகும். சிறப்பு வாய்ந்த கிரகமான சனி ஆயுள் காரகன் மட்டுமின்றி ஜீவன காரகனாகவும் வர்ணிக்கப்படக் கூடியவராவார். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் கேந்திர திரி கோணத்தில் அமையப் பெற்றாலும் தனக்கு நட்பு  கிரகமான சுக்கிரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரன் புதன் வீட்டில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி நீசம் பெற்றோ சூரியனுக்கு அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றோ ஆட்சி உச்ச ஸ்தானத்தில் வக்ரம் பெற்றோ இருந்தால் ஆயுள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகிறது.
     மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை ஏற்படுத்தக் கூடியது எது என்று பார்த்தால் சில ஸ்தானங்களை மாரக ஸ்தானம் என்று பிரித்துள்ளார்கள். குறிப்பாக சர லக்னம் என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், கடகம், துலாம், மகரத்திற்கு 2,7க்குடையவர்களும் ஸ்திர லக்னமென  வர்ணிக்கக் கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்திற்கு 3,8க்குடையவர்களும், உபய லக்னம் என வர்ணிக்கப்படக் கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனத்திற்கு 7,11க்கு உடையவர்களும் மாரகாதிபதி ஆவார்கள்.
     பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் அதிபதியும், சனியும் பலம் பெற்று மற்ற கிரக அமைப்பும் சாதகமாக இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். மாரகாதிபதியின் திசா புக்தி வருகின்ற சமயங்களில் கண்டங்கள் ஏற்படும் என்றாலும் அக்கிரகங்களின் அமைப்பிற்கேற்ப பலாபலன்கள் ஏற்படும்.
     கண்டத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் திசை மற்றும் புக்தி காலங்கள் வரும்  எனில் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பாதிப்பினை ஏற்படுத்தாமல் போகாது. வருகின்ற திசா புக்தியின் கிரகமானது ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகமாக இருந்தால் (சூரியன், சந்திரன்) கண்டிப்பாக பாதிப்பினைத் தரும். இரு வீட்டு ஆதிபத்ய கிரகம் என்றால் மாரகத்தை துணிந்து ஏற்படுத்தாது. அதற்கு பதில் மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தையும் பல்வேறு கஷ்டங்களையும் உண்டாக்கும்.
     மாரக ஸ்தானாதிபதிகளை சுப கிரகங்கள் பார்த்தால் பெரிய கெடுதலை ஏற்படாது. அதுவே மாரக ஸ்தானாதிபதிகளை பாவ கிரகங்கள் பார்த்தாலும் பாவ கிரக சேர்க்கைப் பெற்றாலும் கொடிய வியாதியினை உண்டாக்கும்.
     ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக இருந்தால் மாரகாதிபதியின் திசா புக்தி காலத்தில் எதிர்பாராத உடல் நிலை பாதிப்புகள் மற்றும் கண்டங்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக மாரகாதிபதியும் மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களிலும் கெடுதியை உண்டாக்கும் என்றாலும் சுபர் பார்வை பெற்று பலமாக இருந்தால் கெடுதலை ஏற்படுத்த மாட்டார்கள். மாரகாதிபதியும் மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களும் பலமிழந்து அதன் திசா புக்தி  நடைபெறுகின்ற போது தான் எதிர்பாராத கண்டங்கள் சோதனைகள் எல்லாம் ஏற்படும். குறிப்பாக திசா புக்தி சாதகமற்ற நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி நடைபெற்றால் பாதிப்புகள் அதிகரிக்கும்.


Contact

For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078

Monday, October 5, 2015

திடீர் பணக்காரர் ஆகும் யோகம் யாருக்கு





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

திடீர் பணக்காரர் ஆகும் யோகம் யாருக்கு
                                                                       
பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். ஜெனன ஜாதகம் சாதகமாக இருப்பது மட்டுமின்றி கோட்சார கிரக சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் தான் பண வரவு சிறப்பாக இருக்கும். அதை விட மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒரு ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமில்லை யோகத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் தசா புக்தி நடக்க வேண்டும்.  தசா புக்தி நடப்பது கூட முக்கியமில்லை. அந்த தசா புக்தி  பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கக் கூடிய தசா புக்தியாக இருக்க வேண்டும். 

ஜனன ஜாதகமும் தன யோகமும்

     ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடு தனஸ்தானமாகும். 9ஆம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 10ஆம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11ஆம் வீடு லாப ஸ்தானமாகும். வீடு வாகன யோகத்தையும் அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழி வகுக்கக் கூடிய ஸ்தானமாக 4ஆம் வீடு அமைகிறது. 5ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் பூர்வ புண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடைய முடியும். நவ கிரகங்களில் தன காரகன் என வர்ணிக்கப்படக் கூடியவர் குரு, குரு பலமாக அமையப் பெற்றால் பொருளாதார மேன்மைகள் எளிதில் உண்டாகும். 2,9,10,11 ஆகிய பாவங்கள் பலம் பெறுவது சிறப்பு. அது மட்டுமின்றி இவர்கள் 6,8,12ல் மறையாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

     2,9,10,11க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், ஆட்சி பெற்று பலமாக அமைவதும் வலிமையான தன யோகத்தை உண்டாகும். குறிப்பாக 4,7,10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். 1,5,9 ஆகிய ஸ்தானங்கள் திரிகோண ஸ்தானங்களாகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணாதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் இணைந்து  பலமாக அமையப் பெற்றிருந்தாலும் எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான ஏற்றத்தினை அடைய முடியும்.

     பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சமுதாயத்தில் சொல்லக் கூடிய அளவிற்கு ஏற்றம் உயர்வினை என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக அடைவார்கள். 4ஆம் அதிபதி பலமாக அமையப் பெற்றால் கிடைத்த பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். அது போல ஒருவர் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் பெறுகிறதோ அந்த பாவத்தின் வழியில் தாராளமான பணத்தினை அடைய நேரிடும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 9ம் பாவம் பலம் பெற்றிருந்தால் தந்தை மூலமாகவும் 7ஆம் பாவம் பலம் பெற்றால் மனைவி மற்றும் கூட்டுத் தொழில் மூலமாகவும், 4ஆம் பாவம் பலம் பெற்றால் தாய் வழியிலும் 3,11ஆம் பாவங்களும் செவ்வாயும் பலம் பெற்றால் உடன் பிறந்தவர்கள் மூலமும், எதிர் பாராத தன வரவுகளையும் பொருளாதார மேன்மைக்களையும் அடைய முடியும்.

கோட்சாரமும் தன யோகம்
     கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு பகவான் 2,5,7,9,11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் போது பண வரவு திருப்திகரமாக இருக்கும். அது போல ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் சனி பகவான் 3,6,11 ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்கின்ற போது பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகிறது.

தசா புக்தியும் தன யோகமும்

     ஒருவர் சம்பாதித்து அத்தியாவசிய செலவுகள் செய்வதென்பது தன யோகமாக கருத முடியாது. சம்பாதிப்பென்பது அவர்களது அத்தியாவசிய செலவுகளுக்கு அப்பாற்பட்டு அபரிமிதமாக அதிகப் படியாக சேரும் பணமே தன யோகமாகும். அப்படிப்பட்ட சேர்க்கையானது தசா புக்தி மிகவும் சாதகமாக இருக்கின்ற காலத்தில் தான் ஏற்படுகிறது.

     எதிர்பாராத விதத்தில் தன யோகத்தை அடைய வைக்க தசா புக்தி ரீதியாக சில கிரகங்கள் தான் மகிவும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சுக்கிரன், புதன், சனி ராகு ஆகிய திசைகள் தான் எதிர்பாராத யோகத்தினை உண்டாக்குகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய் குரு கேது ஆகிய திசைகள் நடக்கின்ற போது தன வருவாய் ஆனது ஒரு சீரான தாக இருக்கின்றது. அது மட்டுமின்றி நேர்மையான வழியிலும் நல்வழியிலும் பல பொது காரியங்கள் செய்வதற்கும் வழி வகுக்கும் திசையாகவே விளங்குகிறது. கேந்திர திரி கோண ஸ்தானங்களில் சுக்கிரன், புதன், சனி ராகு ஆகிய நான்கு கிரகங்கள் அமையப் பெற்று அந்த திசையானது நடைமுறையில் நடைபெற்றால் திடீர் செல்வந்தராகக் கூடிய அமைப்பினை உண்டாக்குகிறது. பொதுவாக 3வது திசை பெரிய யோகத்தினை ஏற்படுத்துவதில்லை.

     சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக சுக்கிர திசையாக வருவதால் சுக்கிரன் பலம் பெற்று விட்டால் எதிர்பாராத தன யோகத்தினை சுக்கிர திசையில் அடைய முடியும்.


     புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை 3வது திசை என்பதால் பெரிய யோகத்தினை ஏற்படுத்த இடையூறுகள் உண்டாகும்.

     சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை 3வது திசையாக வருவதால் அனுகூலத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே சனி பலம் பெற்றிருந்தால் காலம் கடந்து வர கூடிய சனி திசை பெரிய அளவில் யோகத்தினை உண்டாக்குகிறது.

Contact

For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078