Saturday, November 29, 2014

ஆண்டு பலன்கள் 2015 மேஷம்


முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்



(1-1-2015 முதல் 31-12-2015 வரை) 
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்


மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக  ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால்  உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு  உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை 

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.

உத்தியோகம் 

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல்  ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள்  போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால்  வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால்  தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு  

அஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல் 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.


மாதப் பலன்கள்


ஜனவரி  

உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-01-2015 அதிகாலை 02.42 மணிமுதல் 18-01-2015 காலை 07.33 மணி வரை.

பிப்ரவரி

மாதக் கோள் என வர்ணிக்கப்படும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. அசையும்- அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். திருமண சுப காரியங்களுக்கான  முயற்சிகளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-02-2015 காலை 11.08 மணி முதல் 14-02-2015 மாலை 05.37  மணி வரை.

மார்ச்

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.  கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 11-03.2015 மாலை 05.41 மணிமுதல் 14-03-2015 அதிகாலை 01.31 மணி வரை.

ஏப்ரல் 

ஜென்ம ராசிக்கு 4-ல் குருவும் 8-ல் சனியும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-04-2015 இரவு 11.19 மணி முதல் 10-04-2015 காலை 07.28 மணி வரை.

மே

ராசிக்கு 2-ல்  சுக்கிரனும் 6-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப் படையும். கடன்கள் சற்று குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 05-05-2015 அதிகாலை 05.33 மணி முதல் 07-05-2015 மதியம் 01.02 மணிவரை.

ஜூன்

ராசிக்கு 6-ல் ராகுவும் மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய், சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்று வீர்கள். என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சனி சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிருக்காது. கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய இயலாது போகும். உற்றார்-  உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-06-2015 மதியம் 01.06 மணி முதல் 03-06-2015 இரவு 07.49 மணி வரை. மற்றும் 28-06-2015 இரவு 09.46 மணி முதல் 01-07-2015 அதிகாலை 04.17 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக் கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-07-2015 காலை 06.40 மணி முதல் 28-07-2015 மதியம் 01.50 மணி வரை.

ஆகஸ்ட்

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவையற்ற வீண் பயணங்களைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையி ருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-08-2015 மதியம் 02.42 மணி முதல் 24-08-2015 இரவு 11.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-09-2015 இரவு 09.22 மணி முதல் 21-09-2015 காலை 07.03 மணி வரை

அக்டோபர் 

ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமான நிலையில் நடைபெறும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாகச் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கப்பெறும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-10-2015 அதிகாலை 03.09 மணிமுதல் 18-10-2015 மதியம் 01.11 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குருவும், 6-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறமுடியும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது,

சந்திராஷ்டமம்: 12-11-2015 காலை 09.11 மணி முதல் 14-11-2015 மாலை 06.44 மணி வரை.

டிசம்பர்

5-ல் குருவும் 6-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள். பணம் சேமிக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 09-12-2015 மாலை 04.28 மணி முதல் 12-12-2015 அதிகாலை 01.19 மணி வரை.


அதிர்ஷ்டம் அளிப்பவை


எண் - 1, 2, 3, 9; நிறம் - ஆழ் சிவப்பு;  கிழமை - செவ்வாய்; கல்- பவளம்; திசை - தெற்கு;  தெய்வம் - முருகன்.

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது. 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Friday, November 21, 2014

விஜய் டிவியில் "இந்த நாள்" (தினப் பலன்கள்)

காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்

விஜய் டிவியில் "இந்த நாள்" (தினப் பலன்கள்)

24.11.2014 திங்கட்கிழமை முதல் 
( திங்கள் முதல் வெள்ளி வரை ) 
விஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் " 

என்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

இப்படிக்கு

ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்



முனைவர் பட்ட ஆய்வாளர்

சனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017

காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்

விஜய் டிவியில் "இந்த நாள்" (தினப் பலன்கள்)

24.11.2014 திங்கட்கிழமை முதல் 
( திங்கள் முதல் வெள்ளி வரை ) 
விஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் " 

என்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

இப்படிக்கு

ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்

முனைவர் பட்ட ஆய்வாளர்



முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்


சனி பெயர்ச்சி பலன்கள் 
 மீனம்  2014 -2017

மீனம் :- பூரட்டாதி , உத்திரட்டாதி , ரேவதி

தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தாலும் பிறரது கஷ்டங்களை கண்டால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு உதவி செய்யும் பண்பு கொண்ட மீனராசி நேயர்களே!  இது நாள் வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது ஓரளவுக்கு அற்புதமான நற்பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும்.  செல்வம், செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக எதிலும் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை உண்டாகும். உற்றார் உறவினர்களால் இருந்து வந்த மன சஞ்சலங்கள் மறையும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறைந்து குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாவதுடன் சேமிக்கவும் முடியும். புதிய கார், பங்களா வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். ஆடை ஆபரணம் சேரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் பெரிய முதலீடுகளில் தடையின்றி லாபங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவிகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 

சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5 இல் சஞ்சரிப்பதுடன் சனி பகவானையும் பார்வை செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பகவான் ருண,ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை, தேவையற்ற எதிர்ப்பு, உடல் சோர்வு போன்றவை உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.  திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பு, தொழில் வியாபாரத்தில் லாபங்கள், உத்தியோகஸ்தர்களுக்;கு எதிர்பாராத கௌரவமான பதவி உயர்வுகள் போன்ற அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

தேக ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். கடந்த காலங்களிலிருந்த வந்த சோர்வும் மந்த நிலையும் விலகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பல சாதனைகளைச் செய்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிகள் பல கிடைக்கப் பெறுவதால் மன நிலையில் மகிழ்ச்சி உண்டாகும். புத்துணர்வு ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களும் ஒரளவுக்கு சுறுசுறுப்புடனேயே இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.
குடும்பம் பொருளாதாரம்
     கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பச் சூழல் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் ப+ர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகள் செய்வதை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களையும் படிப்படியாகக் குறைத்து கொள்ள முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாகும். ப+ர்வீக சொத்து வழக்குகளிலிருந்த பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
     பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைத்தாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயர்வடையும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கா விட்டாலும் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரத்தில் சில போட்டிகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிக அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பணவரவுகளும் திருப்திகரமாகவே இருக்கும். திருமண வயதை எட்டியவர்களுக்கு குரு பலம் பெற்றிருக்கும் போது சிறப்பான வரன்கள் தேடி வந்து நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
     பணவரவுகள் ஏற்றத்தாழ்வுடன் அமையும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையே இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளிலிருப்போர்க்கு எதிர்பார்த்ததைவிட லாபம் சிறப்பாகவே அமையும். கடன்களும் வசூலாகும்.
அரசியல்வாதிகளுக்கு 
     அரசியல்வாதிகளுக்கு கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறைந்து, தங்கள் பேச்சிற்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்ககூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.
விவசாயிகளுக்கு
     விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருப்பதால் லாபமும் சிறப்பாகவே இருக்கும். விளைபொருட்களுக்கேற்ற விலையும் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். பொருளாதாரம் உயர்வடைவதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் நடைபெறும். புதிய ப+மி நிலம் நவீனகரமான கருவிகள் வாங்கும் யோகமும் உண்டாகும். கால்நடைகளாலும் அனுகூலத்தைப் பெறுவீர்கள்.
படிப்பு
     கல்வியில் சற்று கவனம் செலுத்தினால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை சிறப்பாகப் பெற முடியும். அரசு வழியிலும் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.

ஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ், ஷேர் போன்றவற்றில் குரு பலமாக இருக்கும் காலங்களில் ஓரளவுக்கு சிறப்பான லாபம் கிட்டும்.  

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசி அதிபதி குருவின் நட்சத்திரத்தில் சனி 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 5 இல்; குருவும். 7 இல் இராகுவும் இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில திடீர் தன வரவுகள் ஏற்பட்டு மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாகும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.;. கணவன் மனைவி உறவில் ஒற்றுமை குறையும். உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் ரீதியாக முன்னேற்றமும் லாபமும் அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். சிலருக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். அரசியல்வாதிகள் பேச்சை குறைத்து கொண்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் அனைவரின் பாராட்டையும் பெற முடியும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது நட்சத்திரத்தில் சனி தங்கள் திறமைகளை நிரூபிக்க கூடிய சந்தர்ப்பமும், எதிர் பார்த்த உயர்வுகளும் கிடைக்கப் பெறும9 இல் சஞ்சரிக்கும்  இக்காலத்தில் குரு 5 இல் இருப்பதால்   உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு;. பலவழிகளில் பணம் உங்கள் பாக்கெட்டை நிரப்பும் வீடு மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்;கள். கடந்த கால பிரச்சினைகள் விலகி பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். உங்கள் செல்வம் செல்வாக்கு உயரும் உடல் நிலை சிறு சிறு பாதிப்புகளை உண்டாக்கும். சிறிது மருத்துவ செலவுகளும் உண்டாகும். சர்ப கிரகங்கள் சாதக மற்ற சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தடையின்றி கிடைப்பதால் மேலும் மேலும் அபிவிருத்தி செய்து முன்னேற்றம் அடைவார்கள்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
பாக்கிய ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், 7 இல் இராகுவும் சஞ்சரித்தாலும் 5 இல் குரு சஞ்சரிப்பதால்; இக்காலங்களில் ஓரளவுக்கு சுமாரான பலன்களைப் பெற முடியும்;. பண வரவுகள்  திருப்தியளிப்பதாகவே இருக்கும் எடுக்கும் முயற்சிகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமான இருப்பார்கள் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்களை பெறமுடியும். ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  9 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 8 இல் சஞ்சரிக்க இருப்பது மீண்டும் அஷ்டம சனியை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதன் முழுப் பலனை அடைய முடியாது. தொழில் வியாபார நிலையில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். புதிய முதலீடுகளில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பது நல்லது. குருபகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்திலும் தேவையற்ற இடமாற்றமும். அலைச்சலும் உண்டாகும். வெளி வட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலமற்றப் பலனை சந்திப்பீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கும் வீண் குழப்பங்களும் நெருக்கடிகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கலைஞர்கள் கைநழுவிய வாய்ப்புகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் வாயப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசி அதிபதியான குருவின்  நட்சத்திரத்தில் சனி 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 6 லும்  ஜென்ம இராசியில் கேது , 7 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி சற்று தெளிவு பெறுவீர்கள். தனவரவில் இருந்த பிரச்சினைகள் விலகி சுமாரான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சுமாரான அனுகூலப்பலனை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது முன்னேற்றம் தரும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளையும், முன் ஜாமீனையும் தவிர்ப்பதால் வீண் விரயங்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியான உயர்வுகள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்தி அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று விடுவீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மேன்மை தரும். புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். அரசயல்வாதிகள் தங்கள் கடமை உணர்ந்து செயல்படுவது நல்லது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவர்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில எதிலும்ஓரளவுக்கு ஏற்றம் உண்டாகும். குருபகவான் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலையை ஏற்படுத்தும் என்றாலும் எதிலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படக்கூடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதக பலனை அடைய முடியும்.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்கள் அலைச்சல் டென்ஷனை உண்டாக்கக் கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு அறுவடை அதிகரிக்கும்.

 சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 9 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும்  இராகு 6 ஆம் வீட்டிலும், சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.  கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் அலைச்சல் டென்ஷன் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியிலும் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்வற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். அரசியல் வாதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
பாக்கிய  ஸ்தானத்தில் சனியும், 6 இல் இராகு,  7 இல் குருவும் சஞ்சரிப்பது அற்புதமான  அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.  உடல் ஆரோக்கியமும்  மேன்மையடையும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும்.  குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி யாவும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதக பலனை அடைய முடியும். சிலர் பூமி மனை மற்றும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் பணி புரிய முடியும். அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களை நண்பர்களாக பாவித்து அன்புடன் நடந்துகொள்வது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றதல் பெயர் புகழை உயர்த்தி கொள்ள முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 4,7 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 6 இல் இராகு, 7 இல் குருவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும்.  குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி யாவும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகுவதுடன் பூர்வீக சொத்துக்களால் இருந்து வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். பூமி மனை வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகுவதால் லாபமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல் வாங்கலில்  இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு  பணியிலிருந்த கெடுபடிகள் குறைந்து உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் பெயர் புகழ் உயரும். அரசியல் வாதிகளுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் காலமிது

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 9 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் இராகு 6 ஆம் வீட்டிலும், குரு 7 லும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும்.  உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கபெறும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு அஷ்டம ஸ்தானமான 8 இல் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார நிலை ஏற்ற தாழ்வுடனே அமையும். பழைய கடன்கள் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் அதன் முழு பயனை பெற நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் அதிக வேலை பளு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். என்றாலும் எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை நிலவினாலும் தேக்கமடையாமல் லாபம் பெற முடியும். கூட்டாளிகளாலும் சிறுசிறு வம்பு வழக்குகள் தோன்றி மறையும்.  பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.

பூரட்டாதி 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
     பரந்த மனப்பான்மையும் அழகான உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு, சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றமடைவீர்கள். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ப+ர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு நற்பலன் அமையும். எதிலும் உங்கள் சொந்த முயற்சியாலேயே முன்னேற வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தேவையற்ற இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அலைச்சல்களும் அதிகரிக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     எதிலும் வளைந்து கொடுத்து வாழக்கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் உண்டாவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.


அதிர்ஷ்டம் அளிப்பவை

தேதி :-   1, 2, 3, 9, 10, 11, 12
கிழமை :-   ஞாயிறு, வியாழன்
திசை :-   வட கிழக்கு
நிறம் :-   சிவப்பு, மஞ்சள்
கல் :-   புஷ்பராகம்
தெய்வம் :-   தட்சினா மூர்த்தி

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Monday, November 17, 2014

சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம்: 2014 -2017



காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்

விஜய் டிவியில் இந்த நாள் (தினப் பலன்கள்)

 வரும் 24.11.2014 திங்கட்கிழமை முதல் 
( திங்கள் முதல் வெள்ளி வரை ) 
விஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 12 இராசிகளுக்கும் தினப்பலன் நிகழ்ச்சியான
இந்த நாள் என்ற புதிய நிகழ்ச்சியினை 
காணத்தவறாதீர்

இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்




முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்

சனி பெயர்ச்சி பலன்கள் 
கும்பம்: 2014 -2017


கும்பம்: அவிட்டம் 1.2.  சதயம். பூரட்டாதி 123

எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் அதன் சாதகப் பலனை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே  உங்கள் இராசியாதிபதி சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சனி கோட்சாரரீதியாக 10 இல் சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். எதிலும் சற்று சிந்தித்து நிதானமுடன் செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் வேலைப் பளு குறைவதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு பணி நிமிர்த்தம் காரணமாக எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை பிரியக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடின்றிச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பெரிய முதலீடுகளை சற்று தவிர்ப்பது நல்லது.
சனி 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை ருண, ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக  எதிர்ப்புகள் யாவும் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு சமசப்தம  ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் அடைய முடியும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு  அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில்    சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டு உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்பினை எதிர் கொள்வீர்கள்.; 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.

தேக ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் உடனடியாக சரியாகும். குடும்பத்திலுள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பம் பொருளாதாரம் 
     கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகாது. பொன் பொருள் சேர்க்கைகளும் தாராளமாக அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை அடையலாம். பதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சிடன் வாழ்வார்கள். குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதற்காக குடும்பத்தோடு பயணங்கள் செய்வீர்கள். கடன்களும் படிப்படியாகக் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
     சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அவர் உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார் செய்யும் பணியில் சில பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்ந்து தண்டனையை அனுபவீப்பீர்கள். வேலைப் பளு அதிகரிப்பதால் பணிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மனநிம்மதி குறையும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்கள் என்ன தான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப் பலனை அடைய முடியாது. கைக்கு எட்டிய வாய்ப்புகளையும் போட்டியாளர்கள் கண் எதிரேயே தட்டிச் செல்வார்கள். தூக்கத்தில் கூட கவனமுடன் இருக்க வேண்டியிருக்கும். உடனிருக்கும் கூட்டாளிகளே நம்பிக்கை துரோகம் செய்வார்கள். தொழிலாளர்களும் சமயம் பார்த்து சம்பள உயர்வு கேட்டு போர்க் கொடி தூக்குவார்கள். திடீரென தொழில் செய்யும் கருவிகள் பழுதாவதால் வீண் விரயங்கள் ஏற்படுவதோடு வந்த வாய்ப்புகளையும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். பணவரவுகளும் பஞ்சமின்றி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் ப+ர்த்தி செய்வீர்கள். பொன் பொருள் சேரும். குருபலம் இருக்கும் போது திருமண சுப காரியங்கள் கைகூடுவதுடன் புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைப் பளு அதிகரிப்பதுடன் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதமடையும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும் ஏற்றத் தாழ்வான நிலையே இருக்கும். கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.

அரசியலவாதிகளுக்கு
     கட்சி விட்டுக் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மக்களின் ஆதரவைப் பெற அதிக பாடுபட வேண்டி வரும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவதால் எந்தவொரு காரியத்திலும் தீர்மானமான ஒரு முடிவை எடுக்க முடியாது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற கையை விட்டு செலவுகள் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். சேமிப்பும் குறையும்.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் உழைப்பு இரட்டிப்பாகும். அதிக செலவுகள் செய்து உரம் போட்டு பயிர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். அரசு வழியில் உண்டாகக் கூடிய நெருக்கடிகளால் கடனுதவிகளும் தாமதப்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் வீண்  வம்பு வழக்குகளும் ஏற்படும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும்.

படிப்பு
     கல்வியில் மந்த நிலை உண்டாகக் கூடிய காலம் என்பதால் மற்ற பொழுது போக்குகளில் கவனத்தை செலுத்துவதைத் தவிர்த்து முழு முயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக அரசு வழியில் ஆதாய பலன்கள் கிடைத்தாலும், நடுவில் இருப்பவர்களின் கெடுபிடிகளால் கைக்கு வந்து சேருவதில் காலதாமதம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

ஸ்பெகுலேஷன்: லாட்டரி.ரேஸ். ஷேர் போன்றவற்றில் குரு சாதகமாக இருக்கும் காலங்களில் ஓரளவுக்கு லாபத்தைப் பெற முடியும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு தன, லாப ஸ்தானாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 6 இல் குரு வக்ர கதியில்  சஞ்சரிப்பதால்; இக்காலங்களில்;; பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். புத்திரர்களால் மன சஞ்சலம், தேவையற்ற செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் விரோதம் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டி இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைபடும். தொழில் வியாபார நிலையில் அதிகமான போட்டி பொறாமைகளும் லாபம் இல்லாத நிலையும் உண்டாகும். கூட்டாளிகளிடமும் கருத்து வேறுபட்டால் பிரிவினைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடல் நல குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். எனவே எதை செய்வதனாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளின் பதவிக்கு ஆபத்து உண்டாகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது நட்சத்திரத்தில் சனி ஜீவன ஸ்தானமான  10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 6 இல் குரு வக்ர கதியில் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவினாலும் இறுதியில் வெற்றியையே பெறுவீர்கள். உடல் நலத்தில் சிறுசிறு மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடமும் உறவு சமூக நிலையில் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் விலகி ஓரளவு திருப்தியான தனவரவு இருக்கும். கடன் குறையும். தொழில் வியாபார நிலையில் போட்டி பொறாமைகள்; ஏற்பட்டாலும் ஓரளவு லாபம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு குறைவான வேiலை கிடைத்தாலும் மன திருப்தி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் முயன்று படிப்பது உத்தமம். 2 இல் கேதுவும், 8 இல் இராகுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
தொழில் உத்தியோக ஸ்தானமான 10 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில்;  சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்களை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் முழு பலனை அடையாவிட்டாலும் சுமாரான அனுகூலத்தை அடைய முடியும். சுபசெய்திகள் கிடைக்கும். சுப செலவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன் பிறப்புகளாலும் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திலும் குழப்பங்கள் விலகி நிம்மதி உண்டாகும். வீடுமனை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலம் அமையும். பொருளாதார நிலையும் படிப்படியான மேன்மையை அடையும்.  தொழில் வியாபார ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதையும் சற்று யோசித்து எச்சரிக்கையுடன் செயல்படுத்தினால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  10 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 9 இல் சஞ்சரிக்க இருப்பதும் குரு 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும்  அற்புதமான அமைப்பாகும்.பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பொன் பொருள் சேரும். சுபகாரியங்களும் கைகூடி  மகிழ்ச்சி தரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்; எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க பெறும். நண்பர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். குருபகவான் சற்று சாதகமாக இருப்பதால் கடன்கள் குறையும்.  உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் ஆதரவு மகிழச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது  ஆரோக்கியத்திற்கு நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 2,11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் யாவும் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்புகளும் அமையும். பொருளாதார மேம்பாடுகளால் பொன் பொருள் சேரும். கடன்களும் படிப்படியாகக் குறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளும் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகமும் அமையும். நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்றி காட்டுவீகள். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். தொழில் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  7 ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றமே உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை உண்டாகும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருந்தாலும் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் வியாபாரத்தில் நல்ல லாபம், கூட்டாளிகளால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். கலைஞர்கள் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பொருளாதார நிலையும் உயர்வாகவே அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவையும் பெறுவார்கள்;. உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும்;. பொன் பொருள் சேரும். சேமிக்கவும் முடியும

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 10 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில்; வக்ர கதியில் சஞ்சரித்தாலும் குரு 7 இல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி தரும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டு. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் லாபமும் அபிவிருத்தியும் பெருகும்.இக்காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது;. புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். மாணவர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளில் தவறாது நடந்து கொள்வது முன்னேற்ற பலன்களை கொடுக்கும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
தொழில் உத்தியோக  ஸ்தானமான 10 இல்; சனியும்  ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு, 8 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும்;. இதனால்உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். பொருளாதாரம் ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் குழப்பங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசஞ்சலம் தரக்கூடிய சம்பவங்களும் நடை பெறும். எடுத்த காரியங்கள் யாவும் தடைபடும். உத்தியோக நிலையில் நெருக்கடிகள் சோதனைகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகளும் தொழிலாளர்களிடையே ஒற்றுமை குறைவும் உண்டாகும். புதிய முதலீடுகளில் பெரிய அளவில் விரிவுபடுத்தும் செயல்களால் வீண் விரயம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைபடும். எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவமானப்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பிறருக்கு உதவி செய்வதாக தரும் வாக்குறுதியை தவிர்க்கவும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 5,8 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் 10 இல் சனியும், 8 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சுபிட்சமாகவே அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை நிலவினாலும் தேக்கம் அடையாது. நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ பதவிகளால் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். என்றாலும ;தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவை பெற முடியும்.  ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி இருவரும் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்புது நல்லது.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 10 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு, 8 இல் குரு  சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும்.;. உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ் நிலைகளே நிலவும். உங்களின் பேச்சிற்கு மரியாதை இருக்காது. உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதால் உங்கள் கௌரவத்தை இழக்ககூடிய நிலை உண்டாகும். பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நன்றியை மற்ந்துவிடுவார்கள். எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும் காலமாகும். அது மட்டுமின்றி உங்களுக்கு அஷ்டம் சனியும் தொடருவதால் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும், வீண் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மன அமைதி குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் அமைப்பு போன்றவை ஏற்படும். தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது மனநிம்மதியை தரும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10 இல்  சஞ்சரிக்கும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படும் என்றாலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 02.09.2017 முதல்  பாக்கிய ஸ்தானமான 9 இல் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெறும். பெரியோர்களின் ஆசியும், ஆதரவும் அனுகூலத்தை உண்டாக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலையும் சற்று மேன்மையாகவே அமையும். புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர் வருகையும் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சாதகப்பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை விலகி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

அவிட்டம் 3.4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     இலக்கிய மனமும், சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டவர்களாக விளங்கும் உங்களுக்கு, சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுப காரியங்களும் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     எதிலும் சுயமாகவும், தனித்தமையுடனும் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், உற்றார் உறவினர்களால் நல்ல ஆதரவும் உண்டாகும் என்றாலும் சனி ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் உண்டாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளதிருப்பது நல்லது.

ப+ரட்டாதி 1.2.3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     இசை ஆர்வமும், இலக்கியத்தில் நல்ல ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் ஏற்று இறக்கமாக அமையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திருமண வயதை எட்டியவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. சனி ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் இடைய+றுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும் வேலைப் பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 4.5.6.7.8
கிழமை     : சனி. வெள்ளி
நிறம் : பச்சை. வெள்ளை
கல் : நீலக்கல்
திசை : மேற்கு
தெய்வம் : ஐயப்பன்

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA