Tuesday, February 18, 2014

ராகு


ராகு


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்
தொடர்புக்கு 7200163001

நன்றி,நன்றி  


       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 2 வருடத்திற்குள்  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 6 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

அன்புடன்
முருகுபாலமுருகன்




விஞ்ஞானத்தில் ராகுகேது 



ராகு கேது வெறும் நிழல் கிரகங்கள் தான். வான் வெளியில் இவர்களுக்கென்று நிலையான ஓர் இடமில்லை. சந்திரன் பூமியை சுற்றிவர சரியாக ஒருமாதம் ஆகிறது. பூமி சூரியனை சுற்றி வரும் பாதையும், சந்திரன் சூரியனை சுற்றி வரும் பாதையும் ஆகாயத்தில் ஒரே திசையாக உள்ளது. சூரிய வீதியும், சந்திர வீதியும் ஆகாயத்தில் சந்திக்கும் நிலை வடக்கிலும், தெற்கிலும் ஏற்படுகின்றன. வடக்கில் சந்திக்கும் நிலை ராகு என்றும், தெற்கில் சந்திக்கும் நிலை கேது என்றும் கூறப்படுகிறது. இதை தான் ராகு&கேது என்று நம் ஆன்றோர்கள் கணக்கிட்டார்கள். மேல் நாட்டு ஜோதிடர்கள் ராகு கேதுவை கணக்கில் எடுப்பதில்லை. 



புராணத்தில் ராகுகேது 



கசியபரின் இரண்டாம் மனைவி திதியின் புதல்வி சிம்ஹிகையும், 5ம் மனைவி தனுவின் மகன் விப்ரசித்துவும் சகோதர சகோதரிகளாக இருந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிறந்தவன் தான் ஸ்வர்பானு என்ற அசுரபுத்திரன்.



இதற்கிடையில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுதும் தீராத பகை இருந்து கொண்டே இருந்தது. அசுர குருவான சுக்கிரன் போரில் மடிந்த அசுரர்களை உயி மந்திரத்தின் மூலம் உயிர்பித்துக் கொண்டேயிருந்தார். இதனால் அசுரர்களின் இனம் பெருகி கொண்டே இருந்தது. இதை கண்ட தேவர்கள் அச்சமடைய தொடங்கினர். தேவர்களுக்கு இப்படிப்பட்ட மந்திரங்கள் எதுவும் தெரியாததால் அனைவரும் ஒன்று கூடி யோசித்து இறவாமல் இருப்பதற்கு ஒருவழியை தேடி கண்டுபிடித்தார்கள். 



திருபாற்கடலை கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதை உண்டால் இறப்பு ஏற்படாது என அறிந்தனர். அமுதத்தை கடைந்தெடுக்கவும் அசுரர்களின் துணை தேவைப்பட்டதால் அசுர அரசனாகிய மகாபலி சக்கரவர்த்தியை இனங்க வைத்தனர். அசுரர்களும் தலைவனுக்கு கட்டுப்பட்டு அப்பணியில் ஈடுபட்டனர். மந்தரமலையை மத்தாகவும் கசியபருக்கு சத்துரு என்ற மனைவியின் மூலம் பிறந்த வாசுகி என்ற பாம்பரசனை கயிராகவும் பயன்படுத்தி கடைந்தனர். வாசுகி நிலைகுலைந்து கக்கிய விஷத்தை கடலில் கலக்காமல் இருக்க அதை சிவபெருமான் விழுங்கி நீலகண்டரானார். மீண்டும் பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து, காமதேன, வெள்ளை குதிரை, வெள்ளை யானை, ஐராவதம், கற்பக விருச்சம், தேவதைகள், அகவிகை, மகாலஷ்மி முதலியோர் வெளிபட்டனர். கடைசியில் தன் வந்தினி என்பவன் அமுத கலசத்துடன் வெளிவந்தான். அசுரர்கள் அமுதத்தை பிடுங்கிகொண்டு ஓடி ஒருவருக்கொருவர் பங்கிட்டு கொள்வதில் சண்டையிட்டனர். இந்த தருணத்தில் திருமால் மோகினி வடிவமெடுத்து அசுரர்களிடம் சல்லாபமாக பேசி அமிழ்தத்தை கைப்பற்றி தேவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார். தேவர்களின் சூழ்ச்சியை அறிந்த ஸ்வர்பானு தேவ குமாரன் போல வேடமிட்டு அமர்தத்தை வாங்கி உண்டான். இதை உணர்ந்த திருமால் கோபத்தால் கையிலிருந்த அகப்பையால் அவன் தலையை கொய்தார். அமுதத்தை உண்டதினால் ஸ்வர்பானுவுக்கு மரணம் நேரவில்லை. தலை அப்படியே இருக்க அதற்கு கீழே கருநாக உடலாகமாறியது. இது ராகு என பெயர் ஏற்பட்டது. அசுர உடல் அப்படியே இருக்க ஐந்துதலையுடைய நாகம் தலையாக மாறியது. இது கேது என பெயர் பெற்றது. இதனால் தேவ ராகவும் இல்லாமல் அசுர ராகவும் இல்லாமல் அவதிபட்டு பிரம்மனிடம சென்று வேண்டிய பின் ராகு&கேது தேவ மற்றும் அசுர குலத்திற்கு சமமாகவும், கேது மோட்சத்தை தருபவராகவும் மாறினார்கள்.



ராகு



ராகுபகவான் அசுர தலையையும், பாம்பு உடலையும் கொண்டவர். பெரும் பலசாலி சூரியனையே பலமிழக்க செய்பவர். அசுர ஸ்திரியின் கர்பத்தில் உதித்தவர். அதிகார ஆற்றலை அடைவதற்கு துணைபுரிவர். உலகியல் விஷயங்களில் அதில் ஆர்வம் உடையவர். உள்ளத்தை தெளிய வைப்பார். பயணங்களுக்கு காரகனாவார். அங்கும் இங்கும் சுற்ற வைப்பார். நீல நிறத்திற்கு காரணகர்த்தா. தென்மேற்கு திசையை ஆள்பவர். பஞ்ச பூதங்களில் வானம் இவரின் ஆதிக்கமாகும். புளிப்பு சுவையை விரும்புபவர். அதிர்ஷ்டம், பெண்கள் மூலம் உண்டாகும் சுகபோக வாழ்க்கை, செல்வம் செல்வாக்கு அனைத்தையும் அள்ளி தருவார். விதவை இவரது சின்னம். நீச பாஷைகளுக்கு உரியவர். அசிங்கமான வார்த்தைகளை பேச வைப்பவர் குருர சுபாவம் கொண்டவர். தந்தை வழி பாட்டன் வகையை குறிப்பவர். படபடப்பு கொண்டவர். கோமேதகம் இவரது ரத்தினம் செப்பிடு வித்தைக்கு சொந்தகாரர். சர்பம் இவருடைய ஆதிக்கம் மந்த புத்தி உடையவர்.



அதி நவீன நூதன பொருட்கள், ராடர் வான வீதியில் பறக்கும், விமானம், ஹெலிகாப்டர் இவற்றிக்கெல்லாம் காரணகர்த்தா, துப்பறியும் குணம் கொண்டவர். விரக்தி மனப்பான்மையையும் ஏற்படுத்துவார். கட்டம் போட்ட துணிகளை விரும்புகிறவர். 



எண்கணிதத்தில் 4&ம் எண்ணுக்கு சொந்தகாரர். அதிலும் குறிப்பாக சொல்லப்படுவது 13 ம் எண்ணாகும். 4ம் எண்ணுக்குரியவர்கள் எதிலும் தனித்தன்மை பெற்றவர்களாக இருப்பார்கள். சட்ட திட்டங்களுக்கு உட்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. எதிலும் மாறுபட்ட நோக்குடையவர்களால் இருப்பார்கள். 



விமானப்படை 



ஆகாயவிமானத்திற்கு ராகு காரகனாவார். அதனால் தானோ என்னவோ அவற்றில் பணிபுரிபவர்களுக்கு நீல நிறத்தில் ஆடை கொடுக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் ரஷ்யா 1957 ம் ஆண்டு சட்ருக் என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்தது இதன் கூட்டுதொகையை பாருங்கள்
1957 = 22 2+2=-4



பாம்பு கடித்தவுடன் உடல் நீலநிறமாக மாறிவிடுகிறது. பாம்புக்கு ராகு காரகனல்லவா விஷகடிகள், தற்கொலை எண்ணம் போன்றவைகள் ராகுவால் ஏற்படுகின்றன. நீல நிறத்தில் இருக்கும் மயில் துத்தத்தை தற்கொலை எண்ணம் உடையவர்கள் தின்று உயிர் விடுவதை எத்தனையோ கேள்வி பட்டிருக்கிறோமல்லவா?



இரசாயண பொருட்கள் 



இரசாயணத்திற்கு ராகு காரகத்துவம் வகுப்பதால் தான் துணி துவைக்கும் சோப்பு துணியின் வாசனைக்காக கம்பர்ட், துணியின் வெள்ளை நிறம் பளிச்சென தெரிய ஆலா போன்றவைகள் அனைத்தும் நீல நிறத்திலே தயாரிக்கப்படுகின்றன. 



அமெரிக்கா



ராகுவின் ஆதிக்கம் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா. எப்படி என பார்ப்போம். அமெரிக்காவின் மிகப்பெரும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி ஒரு விதவைப் பெண் அமெரிக்காவின் தேசிய சின்னமான கழுகுவின் இறக்கைகள் 13 உள்ளன. அமெரிக்கா சுதந்திரம் வாங்க காரணமாக இருந்தவரும் முதல் ஜனாதிபதிபதியுமான ஜார்ஜ வாஷிங்டன் பிறந்த தேதி பிப்ரவரி 13. அது போல பெண் மூலம் சுகத்தை கொடுப்பவர் ராகு. அமெரிக்காவில் யோகமும் போகமும் கொழிக்கிறது. கலாச்சாரம் என்ற பெயரில் யாரும் வேண்டுமானாலும் வாழலாம். இன்பத்தை அனுபவிக்கலாம். உலகில் தலைசிறந்த வர்ஜினியா புகையிலை விளைவது இங்குதான். பாஸ்டர் தேனீர் விருந்து நடந்ததும் இங்குதான். மது மாது என பல வகையில் சுக போகங்களை மக்கள் தடையின்றி அனுபவிப்பதும் இங்குதான். 



ராகு புலனாய்வு செய்வதில் கில்லாடி, உளவுத்துறையான சி.ஐ.ஏ. இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்காவில் தீவிர வாதம் பரவாமல் தடுக்கிறது. முதன் முதலில் அணுகுண்டை பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். நாடுகளிலே வல்லரசாக திகழ்ந்து உளவுத்துறை, அதிகாரம், மற்றவர்களின் சூழச்சிகளையும், ரகசியங்களையும் கண்டு பிடிக்கும் ஆற்றல் போன்றவற்றில் அமெரிக்காவிற்கு நிகர் உண்டா. எப்படி வேலை செய்கிறார் ராகு பார்த்தீர்களா?



நோய்



புற்று நோய்க்கு காரணகர்த்தா ராகு. அது போல கதிரியத்திற்கும் காரகன் ராகு. முள்ளை முள்ளாள் எடுப்பது போல புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை தானே பயன்படுத்தப்படுகிறது. அவர் நோய்க்கு அவரே மருத்துவமும் செய்கிறார். ராகுவின் லீலையே லீலைதானே.



Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001



Thursday, February 6, 2014

சனி

சனி

விஞ்ஞானத்தில் சனி 

சூரியனுக்கு வெகு தூரத்தில் சுற்றி வரும் கிரகம் சனியாகும். குருவை அடுத்து சுற்றும் கோள் சனி. சனி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 30 வருடங்களாகும். சூரியனிடமிருந்து சுமார் 50 சதவிகித ஒளி கதிர்களை பிரதிபலிக்கிறது. சனிக்கு 12 துணை கோள்கள் உண்டு.

புராணத்தில் சனி 

நீதியை உலகிற்கு வழங்க வேண்டி நெறி முறை தவறாமல் அவரவர் குற்றங்களுக்கேற்ப தண்டனை கொடுப்பதை கடமையாக கொண்டவர். சதா குடிபோதையில் இருப்பதால் கண்கள் சிவந்து காணப்படும். அஞ்சா நெஞ்சம் உடையவர். எப்பொழுதும் கூட்டமாக இருப்பதையே விரும்புவார். காகம் இவரது அம்சம், எருமை இவரது வாகனம். காகம்,எருமை இரண்டுமே எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும் சிறைவாசம் தண்டனை, ஒதுக்கப்பட்ட ஜாதி இவற்றிற்கு காரகன் இவரே. இழுப்பு நோய்க்கும் காரணமானவர்.  இவனை பிடிக்கப்போய் ஒருகால் ஊனமானாலும் வஜ்ரம் பாய்ந்த கருமையான மேனியை கொண்டவர். இவருக்கு புத்தி கொஞ்சம் மந்தம் என்றாலும் நவகிரகங்களிலேயே ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் இவரே.

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்தவர் சனி. சாயாதேவி தன் மனைவி சமுக்ஞா தேவியின் நிழல் என்பதை அறிந்த சூரியன் சாயாதேவியை வெறுத்ததால் சனிக்கும் சூரியனுக்கும் பகை ஏற்பட்டது. இதனால் தான் சூரியனும் சனியும் பகை கிரகங்களாயின என புராணங்கள் கூறுகின்றன. சனி நின்ற வீட்டை விட பார்க்கும் வீடுகளுக்கு கெட்டபலன் மிக அதிகம். சனியின் பார்வை கொடியது என்பதற்கு உதாரணமாக இராவணனின் கதையை

ஒருநாள் இராவணன் அரியனை ஏறும் சமயத்தில் நாரதர் வந்தார். இராவணனும் முதலில் நாரதரை வரவேற்று உபசரிதான். இராவணனுக்கு  நவகிரகங்களை கவிழ்த்துப் போட்டு அவர்களின் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது வழக்கம். நாரதர் கலகக்காரனல்லவா விடுவாரா? ஒரு வீரன் புறர் முதுகின் மீது ஏறி செல்வது அழகல்ல. அதனால் அவர்களின் மார்பின் மீது ஏறி செல்வது தான் அழகு என ஆலோசனை கூறினார். அவர் யோசனை ஏற்ற ராவணன் நவகிரகங்களை மல்லக்கப் போட்டு அவர்களின் மார்பின் மீது கால் வைத்து அரியணை ஏறினான். அப்போது சூரியன், சந்திரன், சுக்கிரன், அங்காரகன், புதன், குரு போன்றவர்கள் மீது கால் வைக்கும் போது எந்த வித மாற்றமும் தெரிய வில்லை. ஆனால் சனியின் மார்பு மீது கால் வைத்து ஏறும் போது சனியின் பார்வை இராவணின் பார்வையுடன் கலந்தது. இதனால் இராவணின் சர்வ வல்லமையும் மறைந்தது. இதனால் இராவணன் நிலை குலைத்தான். இது பின்னாளில் இராமணனிடம் இராவணன் தோல்வி அடைய சூழ்ச்சியாக இருந்தது. இதனால் சனியின் பார்வை எவ்வளவு கொடியது என்று தெரிகிறதல்வா? சர்வ வல்லமை படைத்த இராவணனுக்கே இந்த கதி என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்ன என எண்ணிப்பாருங்கள். இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை. முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை என கூறினார்களோ? என்னவோ? சனியின் தாக்கத்தை அனுபவிக்காதவர்கள் இந்த மண்ணில் இருக்கவே முடியாது. கோட்சாரத்தில் சனி, 3,6,11 ஆகிய வீடுகளில் சஞ்சரித்தல் மட்டுமே நற்பலனை தருவார்.  சனி என்றாலே அனைவருக்கும் சனி தான். அர்தாஷ்டம சனி, கண்டசனி, அஷ்டமசனி, ஏழரை சனி (விரையசனி, ஜென்மசனி, பாதசனி) என பல வகைகளில் நமக்கு தொல்லைகளை தருவார். என்றாலும் சனி போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்ற பழமொழிக்கேற்ப சனி கொடுக்க ஆரம்பித்தால் அதை தடுக்க யாரும் இல்லை என்பதே உண்மை.

எண்கணிதம்

எண்கணித வரிசையில் 8ம் எண்ணுக்கு சொந்தகாரர். 8ம் எண்ணில் பிறந்தவர்கள் சர்வ வல்லமை படைத்தவராக இருந்தாலும் மந்த புத்தி உடையவர்களாக இருப்பார்கள். முக்கியமான நல்ல காரியங்களுக்கு 8ம் எண்ணை தவிர்த்து விடுவார்கள்.

ஆயுள்

ஒருவரது ஆயுளை வாழ்க்கையின் அளவை குறிக்கும் ஆங்கில சொல் Life என்னடா Life   என அங்கலாய்ப்பவர்களும் உண்டு. என் Life Super    என மகிழ்பவர்களும் உண்டு. லிவீயீமீ ன் கால அளவு என்ன என்பது அந்த சனிபகவானுக்கே வெளிச்சம். ஆயுளை கொடுப்பவரல்லவா அவர் 

Life
3185 = 17 - 1+7 =8

ஒவ்வொருவரின் உடலையும் அவர்களின் கை ஜானில் அளந்தால் 8 ஜான் இருக்கும். இதை யாரால் மறுக்க முடியும். 

சனி நீராடு 

சனிக்கிழமைகளில் எண்ணெய்தேய்த்து குளித்தால் ஆயுள் நீடிக்கும் என்று ஓளவையாரே பாடியுள்ளார். அதுவும் எந்த எண்ணெயில் தெரியுமா? சனியின் காரகத்துவமான எள்ளில் இருந்து தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெயில் தான் இதை தான் சனி நீராடு என்றார். 

அது போல தோல் பொருட்களுக்கும் காரகன் சனி. உலகம் முழுவதிலும் பெயர் பெற்ற தோல் பொருள் செய்யும் கம்பெனி BATA. BATA    என்ற நிறுவனம் செருப்புக்கு பெயர் போனது என நாம் அனைவரும் அறிந்ததே. 

BATA.  
2141 = 8 சனியின் ஆதிக்கமல்லவா  

சிறைசாலை 

தண்டனை, சிறைவாசம் இவற்றிற்க்கெல்லாம் சனியே காரகன் எனபார்த்தோம். உலகில் முதன் முதலில் பதினைந்தாம் நூற்றாண்டில் 1403 ம் ஆண்டு கைதிகளுக்கென்று சிறை சாலை கட்டப்பட்டது. இந்த வருடத்தை கூட்டி பாருங்கள் 8ம் எண் வருகிறதா. இரும்புக்கு சொந்தகாரரும் சனிதான். பின்பு கைதியின் கையில் தங்க காப்பா மாட்டுவார்கள். இரும்பால் செய்யப்பட்ட கை விலங்கை தான் மாட்டுவார்கள். தவறு செய்பவர்களையும், நீதி தவறு தவறுபவர்களையும் சனி லேசில் விடமாட்டார். இரும்பு காப்பை மாட்டி இரும்பு கம்பியை எண்ண வைப்பார். ஜெயிலுக்கு சென்றாலும் சும்மா இருக்க முடியுமா? அங்கும் கல் உடைப்பது, மரவேலை செய்வது போன்ற பணிகளை செய்ய வேண்டும்.  இதற்கும் காரகன் சனியே தான். கைதிக்கு காப்பு, போட்டு கோர்ட்டுக்கு கொண்டு சென்றால் வழக்கறிஞரும் நீதிபதியும் அணிந்திருப்பது கருப்பு அங்கியை தான். நீதிமானான சனியின் நிறம் கறுப்புதானே

கருப்பு நிறம் 

துக்கம் சோகம், நிம்மதியின்மை போன்றவற்றிற்கும் காரகன் சனி. என்பதால் தான் துக்கம் அனுசிப்பவர்கள் கறுப்பு துண்டு, கறுப்பு பேட்ஜ், போன்றவற்றை அணிகிறார்கள். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும் கருப்பு நிற கொடியை காட்டுகிறார்கள். 

இது மட்டுமா வெயிலின் தாக்கம் கண்களை பாதிக்காமலிருக்க கறுப்புநிற கூலிங்கிளாஸ், பலர் கருப்பு நிற குடை பயன்படுத்துகிறோம். கார்களுக்கு சன் கிளாஸ் என்ற பெயரில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி வெயில் கொடுமையிலிருந்து தப்பித்து கொள்கிறோம். சூரியனுக்கு சனி பகையல்லவா? சனியை சரணடைந்தால் சூரியனிடமிருந்தும் அவரால் ஏற்படும் உஷ்ணத்திலிருந்தும் காப்பாற்றுவார். 

ஆப்பிரிக்கா கண்டம் 

சுமார் 800 மொழிகளை பேச கூடிய ஆப்பிரிக்கா கண்டம் சனியின் ஆதிக்கத்திற்குட்பட்டதே. ஆப்பிரிக்கர்கள் என்றாலோ நீக்ரோக்கள் தான் அவர்களை பாருங்கள் கறுகறுவென சுருண்ட மயிருடன் காட்சியளிப்பார்கள். நல்ல உடல் வலிமை மிக்கவர்கள். இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள் கூட்டம் கூட்டமாக வாழுவார்கள். அடிமை தொழிலுக்காக கை விலங்கிடபட்டு கறுப்பர்கள் என்ற கொடுமைக்குள்ளானவர்கள் சனியின் ஆதிகத்தால் சந்தோஷத்தை ஒரு காலத்தில் தொலைரர்தார்கள். 

காக்காய் வலிப்பு

வலிப்பு நோய்க்கு காரகனாக சனி சொல்லப்படுகிறார். அதனால் தான் வலிப்பு நோய் யாருக்காவது வந்தால் அதை சனியின் அம்சமான காகத்துடன் சேர்த்து காக்காய் வலிப்பு என பெயரிட்டுள்ளனர். இரும்புக்கும் காரகன் சனி என்பதால் முன்னாள் எடுப்பது போல காக்காய் வலிப்பிற்கு இரும்பை கையில் கொடுக்கிறார்கள்.

பொதுவாகவே வீட்டில் யாரையும் சனியனே என்று திட்ட கூடாது. தன்னை அடிக்கடி அழைப்பவர்களை சனி பிடித்துக் கொள்வார் என்பது  முன்னோர்களின் கூற்று. ஆகவே சனியின் சன்னதியில் சனியின் பார்வை படும் படி நேராக நின்று கையெடுத்து கும்பிடகூடாது, பக்கவாட்டில் நின்று தான் வழிபட வேண்டும்.  எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு ஆலயத்தில் உட்கார்ந்து எழுந்து வரலாம். ஆனால் சனியை வணங்கிவிட்டு திரும்பிபார்க்காமல் வந்து விட வேண்டும் என நம் முன்னோர்கள் சனிக்கென தனி பரிகார முறைகளை வகுத்துள்ளனர். இதையே நாமும் பின் பற்றுவோம். 


Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001