இது எனது 300 வது பதிவு ஆதரவு அளித்த அனைத்து நபர்களுக்கும் நன்றி . நன்றி
முருகு பாலமுருகன்
காதல் திருமணத்தம்பதியர்களுக்கு
இலவச ஆலோசனை
ஜோதிடவியல் துறையில் திருமண வாழ்வு தொடர்பாக முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வதால் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்களின் ஜாதகங்கள் ஆய்வுப்பணிக்காக தேவைப்படுகிறது.அதனால் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் தங்களது பிறந்த தேதி,நேரம்,ஊர்,திருமணநாள், முகவரி செல்போன் எண், ஆகியவற்றை தெளிவாக E.mail அனுப்பவும்.அப்படி அனுப்பும் நேயர்களுக்கு அவர்களின் ஜாதகத்திலுள்ள முக்கிய கேள்விக்கு E.mail மூலம் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.இவை அனைத்தும் ஆய்வுப்பணிக்காக மட்டும் என்பதால் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இப்படிக்கு
முருகு பாலமுருகன் முனைவர் பட்ட ஆய்வாளர்,
117/33 பக்தவச்சலம் காலனி, முதல் தெரு,
வடபழனி,சென்னை&600026,செல்&7200163001 9383763001
மேஷம்
தங்களது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு மாத முற்பகுதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் ஜென்மராசிக்கு 7ல் சனிராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலும் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிலிக்காது. கூட்டுத் தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்களை ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய் இயலாது. தட்;சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-10-2013 காலை 09.49 மணிமுதல்
10-10-2013 மதியம் 12.49 மணி வரை
ரஷபம்
மற்றவரை சமமாக நினைத்து பழககூடிய பண்பு கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 6ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க செய்ய கூடிய அமைப்பாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமையும் உற்றார் உறவி னர்களால் அனுகூலமும் உண்டாகும். வம்பு வழக்கு களிலிருந்து இழுபறி நிலைகள் மறைந்து தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும். கொடுத்த வாக்குறு திகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்புகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரத் திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிரு த்தியை பெருக்க முடியும். விநாயகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-10-2013 மதியம் 12.49 மணிமுதல்
12-10-2013 மதியம் 03.10 மணி வரை
மிதுனம்
சிரித்து பேசியே காரியங்களை சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் குருவும் 4ம் வீட்டில் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடை படும் தேவையற்ற பயணங்களால் அலைச் சல்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் விரயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 12-10-2013 மதியம் 03.10 மணி முதல்
14-10-2013 மாலை 05.47 மணி வரை.
கடகம்
எதுவந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில், 2ல் செவ்வாயும், 4ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். தொழில் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய போட்டிக ளையும் சமாளிக்க முடியும் பணவரவுகளில் நெருக்க டிகள் ஏற்படுவதால் சில நேரங்களில் கடன்களும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 14-10-2013 மாலை 05.47 மணி முதல்
16-10-2013 இரவு 09.32 மணி வரை.
சிம்மம்
வாழ்க்கையில் எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் தாங்கும் உங்க ளுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும், 3ல் சனி ராகுவும், 11ல் குருவும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகா ரியங்களும் கைகூடும். பொன் பொருள் சேரும் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டா கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் வெளிவட்டாரத் தொடர்பும் மகிழ்;ச்சியளிக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 16-10-2013 இரவு 09.32 மணிமுதல்
19-10-2013 அதிகாலை 03.14 மணிவரை
கன்னி
பேச்சிலும் செயலிலும் பிறர் மனதை புண்ப டுத்தி விரும்பாத உங்களுக்கு ஜென்ம ராசியியில் சூரியனும், 2ல் சனிராகுவும் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவதும், முன்னேற்றத் ;தைக் குறைப்பதும் நல்லது. பணவரவுகளில் நெருக்க டிகள் இருக்காது. தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்தாலும் பெரிய முத லீடுகளை ஈடுபடாதிருப்பது நல்லது. உத்தியோக ஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கம். தட்சிணாமூர்த்தியை வழி படவும்.
சந்திராஷ்டமம் 19-10-2013 அதிகாலை 03.14 மணிமுதல்
21-10-2013 காலை 11.21 மணிவரை
துலாம்
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு 9ல் குருவும் 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 12ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். பணவர வுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தே வைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொன் பொருள் சேரும் சிவபெருமா னை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம 21-10-2013 காலை 11.21 மணி மதல்
23-10-2013 இரவு 09.48 மணிவரை
விருச்சிகம்
இரக்க சுபாவமும், தயாளகுணமும் கொண்ட உங்களுக்கு 6ல் கேதுவும் 11ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கம் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கம். குடும்ப த்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பொருள் இழப்பும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை உண்டா க்கிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் சிறுசிறு லாபம் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம 23-10-2013 இரவு 09.48 மணி முதல்
26-10-2013 காலை 09.27 மணிவரை
தனுசு
தீய நெறிகளில் ஈடுபடுபவர்களை தண்டி க்கும் குணம் கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 10ல் சூரியனும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வ தால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி கள் குறையும். புதிய கிளைகளை நிறுவும் நோக்க மும் நிறைவேறும். பொருளாதார நிலையும் உயர்வ டைவதால் சொந்த வீடு மனை வண்டி வாகன ங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுத்த கடன்க ளும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கம். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 26-10-2013 காலை 09.27 மணிமுதல்
28-10-2013 இரவு 08.44 மணிவரை
மகரம்
மிகவும் சிக்கனமாக செலவுகள் செய்யும் உங்களுக்கு சூரியன் 9லும் சுக்ரன் 11லும் சஞ்சாரம் செய்வதால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பணவர வுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடை க்கப்பெறும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேளைபளுவும் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01-10-2013 மதியம் 01.28 மணிமுதல்
03-10-2013 இரவு 10.37 மணிவரை
28-10-2013 இரவு 08.44 மணிமுதல்
31-10-2013 காலை 06.12 மணிவரை
கும்பம்
பிடிக்காதவற்றை துச்சமாக நினைத்து தூறஎறியும் குணம் கொண்ட உங்களுக்கு 5ல் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகா ரியங்கள் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் பாக்கியமும் அமையும். பணவரவுகளு க்கும். பஞ்சம் ஏற்படாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிச்சியை அளிக்கும். 8ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கிய வர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03-10-2013 இருவு 10.37 மணிமுதல்
06-10-2013 அதிகாலை 05.22 மணிவரை
மீனம்
குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்ட உங்களுக்கு, 2ல் கேதுவும், 4ல் குருவும் 7ல்; சூரியனும், 8ல் சனிராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்யதுணிவார்கள் கணவன் மனை வியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் மனநிம்மதி குறைவடையும். உடல் ஆரோக்கியத்தி லும் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செ ய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சனை கள் ஏற்படும் குல தெய்வ வழிபாடுகள் செய்வது நல்ல து.
சந்திராஷ்டமம் 06-10-2013 அதிகாலை 05.22 முதல்
08-10-2013 காலை 09.49 மணிவரை