மின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்
வாழும் வீட்டிற்கு மிக முக்கியமானது மின்சாரமாகும். மின்சாரம் இல்லாமல் நம்மால் ஐந்து நிமிடங்கள் வாழ முடியுமா என்றால் முடியாது என்றே கூற வேண்டும். தற்போதுள்ள விஞ்ஞான யுகத்தில் சமைக்கும் அடுப்பு முதல் சமையல் செய்யும் பாத்திரங்கள் வரை மின்சாரத்தில் இயங்க கூடியவையாக இருக்கின்றன. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வீட்டிற்கு வந்தோமா? சுவிட்சை தட்டினோமா? சமையலை முடித்தோமா? என அவசர கதியில் செயல்பட்டு சாப்பிட்டு முடித்தவுடன் அறைக்கு சென்று ஒய்வெடுக்கவே விரும்புகிறோம். ஒய்வெடுப்பதற்கும் வேண்டாமா ஏ.சி. பழைய பாடல் ஒன்றில் பட்டனை தட்டி விட்டால் தட்டில் இட்லி வந்திடனும்,காபியும் வந்திடனும் என வரிகள் இருக்கும். பாரதி பாடிய பாடல்கள் பலித்ததோ இல்லையோ மின்சார வசதியால் பட்டனை தட்டி இட்லி வருவது உண்மையாகி விட்டது.
இத்தனைக்கும் உறுதுணையாக இருக்கும் மின்சார போர்டினை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது என பார்க்கும் போது மின்சாரம் என்பது நெருப்பு, உஷ்ணம் சார்ந்த பொருள் இந்த நெருப்பு சார்ந்த பொருளான மின்சார போர்டினை அக்னி முலை என கூறக்கூடிய தென் கிழக்கு மூலையில் வைப்பது நல்லது. அது போல ஒவ்வொரு அறைக்கும் வைக்க கூடிய சுவிட்ச் பாக்ஸினை தென்கிழக்கு பகுதிலேயே அமைப்பது சிறந்தது. வசதி படைத்தவர்கள் ஜெனரேட்டர், ஹி.றி.ஷி போன்றவற்றையும் பயன்படுத்தினால் அவற்றை கட்டியத்தின் தென்கிழக்கு அறையில் வைப்பது சிறப்பு. பெரிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் மின்சார தேவைகளுக்காக ஜெனரேட்டரை பயன்படுத்துகிறார்கள். அவற்றை எந்த பகுதியில் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே தென்கிழக்கு பகுதியில் அமைப்பது சிறப்பு.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001