2013 ஆண்டு பலன்கள், மீன ராசி
தங்களுடைய விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க் கையை அமைத்துக் கொள்ளம் மீன ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சஞ்சரிக்கும். உங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 28-05-2013 முதல் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இது மட்டுமின்றி சர்பகிரகங்களான கேது 2ம் விட்டிலும் 8ல் ராகுவும் சஞ்சரிப்பது, 8ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுவதும் அவ்வளவு அனுகூலப்பலனை ஏற்படுத்தாது என்ப தால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வத நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்ச னைகளை உண்டாக்குவார்கள். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதுடன் வேலைபளுவும் கூடும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றயாவும் உண்டாகும். ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மருத்துவ செலவுகளை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் அதிக செலவுகள் ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மனநிம்மதி குறையும்.
குடும்பம் பொருளாதாரநிலை
ஜென்ம ராசிக்கு 2ல் கேதுவும் 8ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். வீண்வாக்கு வாதங்களால் உற்றார் உறவினர்களை பிரியக்கூடிய கூ+ழ்நிலையும் உண்டாகும். பண வரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்;த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்து க்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும்.
கொடுக்கல் வாங்கல்
குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் 3ம் வீட்டிலும், பின்பு 4ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணத்தை பெற்றுக் கொண்டவர்களும் துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபத்தினைத் தான் பெறமுடியும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும். உதவிகளும் தாமதப்படும். வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியாமல் அவமானப்பட நேரிடும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் மனநிம்மதி குறையும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலையினைப் பெறமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதால் உயரதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாவீர்கள் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டு பிரியவேண்டியிருக்கும். புதிய வேலைவாய்ப்பு தகுதிக்கேற்றபடியிருக்காது.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் யாவும் மங்கும். மக்களின் தேவைகளை ப+ர்த்தியடைய செய்ய முடியாமல் போவதால் அவர்களின் ஆதரவும் குறையும். கட்சி பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலை சோர்வடையும். வீண் விரயங்களும் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த்தைகளும் உங்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
விவசாயிகளுக்கு
பயிர்களில் புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் விளைச்சல் குறையும். பயிர்களை பாதுகாக்க அதிகபாடுபட வேண்டியிருக்கம். கால் நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் பங்காளிகளிடையே மனசஞ்சலங்களும் வம்புவழக்குகளும் ஏற்படும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க நேரிடும்.
படிப்பு
கல்வியில் முழுமையாக ஈடுபடமுடியாதபடி ஞாபகமறதியும், மனக்குழப்பங்களும் உண்டாகும். ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். அரசு வழியில் எதிபார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வாழ்க்கை பாதை மாறும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.
ஜனவரி
தம்மிடமுள்ள ரகசியங்களை மறைக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 10ல் சூரியனும் 11ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதியவாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் காலம் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமையும் சுமாராகத்தானிருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 05-01-2013 இரவு 10.13 மணிமுதல்
08-01-2013 அதிகாலை 01.16 மணிவரை
பெப்ரவரி
வெகு சீக்கிரத்தில் பிறர் மனதிற்கு பிடித்தவராக மாறும் உங்களுக்கு 11ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவின ர்களும் வீண் பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும். தவறுகளுக்கு பொறுப்பேற்க கூடிய காலம் என்பதால் தங்கள் பணிக ளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சி ணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 02-02-2013 காலை 06.08 மணிமுதல்
04-02-2013 காலை 09.13 மணிவரை
மார்ச்
வெகு சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படக் கூடிய உங்களுக்கு 8ம் வீட்டில் சனிராகு சஞ்சரிப்பதும், 12 வீட்டில் சூரியன் செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடமும் ஒற்றுமை குறைவு உண்டாகும். திருமண சுபகா ரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலை பளுவையும் அதிகரிக்கும் முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01-03-2013 மதியம் 01.59 மணி முதல்
03-03-2013 மாலை 05.06 மணிவரை
28-03-2013 இரவு 09.48 மணிமுதல்
30-03-2013 இரவு 12.49 மணிவரை
ஏப்ரல்
அடிக்கடி குணத்தை மாற்றிக்கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் சூரியன் செவ்வாயும், 2ல் கேதுவும், 3ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறமுடியாமல் போகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் கிடைக்காது. நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை கள் உண்டாகும். சிவபெ ருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 25-04-2013 காலை 05.41 மணிமுதல்
27-04-2013 காலை 09.07 மணிவரை
மே
சற்று பயந்த சுபாவம் கொண்ட உங்களுக்கு 2ல் சூரியன் செவ்வாயும் 3ல் குருவும் 8ல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத் திலுள்ளர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை குறை யும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். குடும் பத்தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். பொருளாதார தடைபடும். தட்சி ணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22-05-2013 மதியம் 01.35 மணி முதல்
24-05-2013 மாலை 05.13 மணிவரை
ஜூன்
எப்போதும் கற்பனை உலகத்தில் மிதக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகும். 4ல் குருசஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத் துக்களால் சிறுசிறு விரயங்கள் சந்திப்பீர்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு குறையும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 18-06-2013 இரவு 09.43 மணிமுதல்
21-06-2013 அதிகாலை 01.30 மணிவரை
ஜூலை
பொறுமைசாலியாகவும், தன்னடக்கம் உள்ளவராகவும் விளங்கும் உங்களுக்கு 4ல் சூரியன் செவ்வாயும், 8ம் வீட்டில் சனிராகுவும் சஞ்ச ரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களும், சுகவா ழ்வில் பாதிப்புகளும் உண்டாகும். அசையும் அசை யா சொத்துக்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலம் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபா ரம் செய்பவர்கள் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 16-07-2013 காலை 09.16 மணி முதல்
18-07-2013 காலை 09.46 மணிவரை
ஆகஸ்ட்
வெகு சுPக்கிரத்தில் உணர்ச்சிபட கூடிய இளகிய மனம் படைத்த உங்களுக்கு 2ல் கேதுவும் 4ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்ப த்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் வீண்விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கம். மாத பிற்பாதியில் போட்டிகள் சற்று குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று நிலையை சமாளிக்க முடியும். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 12-08-2013 மதியம் 01.47 முதல்
14-08-2013 மாலை 05.53 மணிவரை
செப்டம்பர்
ஆடம்பர பொழுது போக்குகளில் அதிக நாட்டம் கொண்ட உங்களுக்கு குரு 4லும் சனிராகு 8லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். மாத முற்பாதிவரை சூரியன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரள வுக்கு உதவிகள்கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைபளு கூடுவதால் விடுப்பு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம் 08-09-2013 இரவு 09.36 மணிமுதல்
11-09-2013 அதிகாலை 01.55 மணிவரை
அக்டோபர்
குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்ட உங்களுக்கு, 2ல் கேதுவும், 4ல் குருவும் 7ல்; சூரியனும், 8ல் சனிராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்யதுணிவார்கள் கணவன் மனை வியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் மனநிம்மதி குறைவடையும். உடல் ஆரோக்கியத்தி லும் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செ ய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சனை கள் ஏற்படும் குல தெய்வ வழிபாடுகள் செய்வது நல்ல து.
சந்திராஷ்டமம் 06-10-2013 அதிகாலை 05.22 முதல்
08-10-2013 காலை 09.49 மணிவரை
நவம்பர்
நீதி நேர்மை தவறாமல் வாழ விரும்பும் உங்களுக்கு 8ல் சூரியன் சனி,ராகு சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள் நிறைய ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் நிம்மதியாக செயல்பட முடியாது சுகவாழ்வு பாதிப்படையும். உற் றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் அவர்களை பிரிய நேரிடும். சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். கொடுத்ததைக் கேட்டால் அடுத் தது பகையாக மாறும். சனிக்குரிய பரிகாரங்கள் தொடர்ந்து செய்யவும்.
சந்திராஷ்டமம் 02-11-2013 பகல் 01.66 மணிமுதல்
04-11-2013 மாலை 05.48 மணிவரை
29-11-2013 இரவு 08.56 மணிமுதல்
02-12-2013 அதிகாலை 01.52 மணிவரை.
டிசம்பர்
மிகுந்த பெருந்தன்மையும், பரந்த மனப்பா ன்மையும் கொண்ட உங்களுக்கு 8ல் புதனும், சனிராகுவும், 7ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் முன்கோபத்தை குறைப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்வதும் நல்லது. எதிர்பார்க்கும் உத விகள் சற்றுகிடைக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகளே உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ப வர்க ள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 27-12-2013 அதிகாலை 04.51 மணிமுதல்
29-12-2013 காலை 10.00 மணிவரை
பூரட்டாதி 4ம் பாதம்
ஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட பூரட்டாதி நேயர்களே இந்த ஆண்டு முழு வதும் உங்களுக்கு சற்று சோதனையான காலங்க ளே! உங்கள் ராசியாதிபதி குருபகவான் சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி அஷ்டம சனியும் தொடருவ தால் உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக நீங்கள் அவசியம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். நீங் கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் கூட மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படு த்திவிடும். நிம்மதியும் குறையும்.
உத்திரட்டாதி
நினைத்ததை நடத்தி காட்டவேண்டும் என்ற துடிப்பு கொண்ட உத்திரட்டாதி அன்பர்களே! சனிபகவான் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுகிறது. குரு மற்றம் ராகுகேதுவும் சாதக மின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி கணவன் மனை வியிடையேயும் ஒற்றுமை குறையும். குடும்ப த்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிக ரிக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படு வதால் பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டா கும். அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சேமிப்புகள் குறையும்.
ரேவதி
ஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதி பிரியம் கொண்ட ரேவதி அன்பர்களே ராசியாதிபதி குருவும், சனி மற்றும் ராகுகேதுவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும். பிரச்சனை களால் மனக்குழப்பங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை நிலவுவதால் பொரு ளாதார நிலையிலும் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆடம்பரசெலவுகளை குறைப்பதும், உடல் ஆரோ க்கியத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் நல்லது.
அதிர்ஸ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11,12 நிறம் - மஞ்சள், சிவப்பு
கிழமை - வியாழன், ஞாயிறு கல் - புஷ்ப ராகம்
திசை - வடகிழக்கு தெய்வம் - தட்சிணாமூர்த்தி
; பரிகாரம்
உங்கள் ஜென்மராசிக்கு 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்வது துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. குரு மே வரை 3லும் ஜூன் முதல் 4லும் சஞ்சாரம் செய்வதால் குருப்பிரிதி தட்சிணா மூர்த் தியை வழிபாடு செய்வதும் நல்லது. 8ல் சனி சஞ்சரித்து அஷடம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வதும், ஆஞ்ச நேயரை வழிபடுவதும் நற்பலனை உண்டாக்கும்.
please contact my postal adress
Jothidamamani
MURUGUBALAMURUGAN M.A.ASTRO.
Astro Ph.D research scholarNo-117/33 Bhakthavachalam colony 1st street,
(Near Valli Thirumanamandapam)
Vadapalani,
Chennai-600026
My Cell - 0091 - 7200163001, 9383763001
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.