Sunday, July 15, 2012

நவரத்தினங்களில் கனக புஷ்ப ராகம்






கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது.  சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும். 

தங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள். 

புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்ப ராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.

யார் கனக புஷ்பராகம் அணியலாம்? 

இந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனசு, மீன ராசிகளில் பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம். இதனால் தொழிலில் தடை, திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்றவை விலகும். அசுரபரான செவ்வாயை அடக்கி செவ்வாய் தோஷத்தை விலக்கும், மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். மற்ற இயற்கை கற்களை போலவே கனக புஷ்ப ராகத்திற்கும் ஓர் அதிர்வு உண்டு. இந்த அதிர்வானது போலி கற்களுக்கு இருக்காது. குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்ப ராகம் பெற்று தருகிறது.

கனகபுஷ்ப ராக கல்லுக்குப் பதில் ஏமிதிஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். இது இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. வெண் பவளத்தையும் ஓயிட் கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம்.

ஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற கல்லையும் அணியலாம்.ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும் காட்சியளிக்கும். 
புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகல் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. கனக புஷ்பராக கல்லானது இயற்கை அளித்த அற்புதமான பரிசாகும். 



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

1 comment:

ANBUTHIL said...

thanks and continue your posting all post is usefull