Saturday, June 30, 2018

Today rasi palan - 01.07.2018


Today rasi palan - 01.07.2018
இன்றைய ராசிப்பலன் -  01.07.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
01-07-2018, ஆனி 17, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி மாலை 05.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.36 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் இரவு 09.36 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,




சூரிய
               
திருக்கணித கிரக நிலை
01.07.2018


ராகு புதன்
சுக்கி  
கேது  சந்தி செவ்(வ)

சனி (வ)
 
குரு (வ)


இன்றைய ராசிப்பலன் -  01.07.2018
மேஷம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.
கன்னி
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திடீர் தனவரவு உண்டாகும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
மகரம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். வியாபார ரீதியான செயல்களில் சற்று நிதானம் தேவை. பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.

Vaara Rasi Palan (01-07-2018 to 07-07-2018) | Weekly Astrosign Predictio...

Friday, June 29, 2018

Today rasi palan - 30.06.2018


Today rasi palan - 30.06.2018
இன்றைய ராசிப்பலன் -  30.06.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
30-06-2018, ஆனி 16, சனிக்கிழமை, துதியை திதி பகல் 03.20 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.29 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சனிப்ரீதி நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.




சூரிய
               
திருக்கணித கிரக நிலை
30.06.2018

ராகு சுக்கி புதன்
கேது  செவ் (வ) சந்தி

சனி (வ)
 
குரு(வ)               
 

இன்றைய ராசிப்பலன் -  30.06.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
துலாம்
இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள் எடுக்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
கும்பம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.