Monday, April 22, 2024

Today rasi palan - 23.04.2024

 


Today rasi palan - 23.04.2024

இன்றைய ராசிப்பலன் - 23.04.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

23-04-2024, சித்திரை 10, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.19 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் இரவு 10.32 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சித்ரா பௌர்நமி விரதம். சித்ரகுப்த பூஜை. வாஸ்து நாள் காலை 8.50-9.26.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

சுக்கி ராகு புதன்(வ) 

 சூரிய குரு

 

 

 

சனி செவ்

 

23.04.2024

 

 

 

 

 

 

சந்தி கேது

 

இன்றைய ராசிப்பலன் - 23.04.2024

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு சுபவிரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வகையில் வம்பு வழக்குகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

துலாம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக உடல் அசதி மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உங்கள் ராசிக்கு காலை 09.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானம் தேவை. உங்களுக்கு மதியத்திற்கு பிறகு அனுகூலமான செய்தி கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு காலை 09.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.

No comments: