Tuesday, April 30, 2024

Today rasi palan - 01.05.2024

 


Today rasi palan - 01.05.2024

இன்றைய ராசிப்பலன் -  01.05.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-05-2024, சித்திரை 18, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 04.01 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் பின்இரவு 03.11 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். குருபெயர்ச்சி (திருக்கணிதம்) பகல் 1.00. (வாக்கியம்) மா¬லை 5.21.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

செவ் ராகு புதன் 

 சூரிய சுக்கி குரு

 

 

சனி

 

01.05.2024

 

சந்தி

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  01.05.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

கடகம்

இன்று உங்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வளர்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் பாதியில் தடைப்படலாம். வீண் பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

தனுசு

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை ஓரளவு குறையும்.

மீனம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.

Monday, April 29, 2024

இன்றைய ராசிபலன்| 30.04.2024 | DAILY RASIPALAN | முனைவர் முருகு பால முருக...

Today rasi palan - 30.04.2024

 


Today rasi palan - 30.04.2024

இன்றைய ராசிப்பலன் -  30.04.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-04-2024, சித்திரை 17, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 07.05 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 05.46 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.09 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

செவ் ராகு புதன் 

 சூரிய சுக்கி குரு

 

 

சனி

 

30.04.2024

 

 

 

சந்தி

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  30.04.2024

மேஷம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.36 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கும்பம்

இன்று குடும்பத்தினருடன் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மீனம்

இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.