Saturday, September 30, 2023

Today rasi palan - 01.10.2023

 


Today rasi palan - 01.10.2023

இன்றைய ராசிப்பலன் -  01.10.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-10-2023, புரட்டாசி 14, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி காலை 09.42 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் இரவு 07.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 

  சந்தி

ராகு

குரு (வ)

 

 

சனி (வ)

 

01.10.2023

சுக்கி

 

புதன்

 

 

  கேது

சூரிய செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  01.10.2023

மேஷம்

இன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் மன வருத்தத்திற்க்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூர பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

துலாம்

இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வகையில் வீண் விரயங்கள் ஏற்படலாம். பொருளாதார பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

இன்றைய ராசிபலன்| 30.09.23 | DAILY ASTROLOGY | ஜோதிட மாமணி,முனைவர் முருகு...

Friday, September 29, 2023

Today rasi palan - 30.09.2023

 


Today rasi palan - 30.09.2023

இன்றைய ராசிப்பலன் - 30.09.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-09-2023, புரட்டாசி 13, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.22 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் இரவு 09.08 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 09.08 வரை பின்பு சித்தயோகம். மஹாலய பக்ஷாரம்பம். (வாக்கியம்) புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

  சந்தி

 

ராகு குரு (வ)

 

 

சனி (வ)

 

30.09.2023

சுக்கி

 

புதன்

 

 

  கேது

சூரிய செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  30.09.2023

மேஷம்

இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

விருச்சிகம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

தனுசு

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் வேற்று மொழி நபர்களால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.

மீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.