Tuesday, May 31, 2022

Today rasi palan - 01.06.2022

 


Today rasi palan - 01.06.2022

இன்றைய ராசிப்பலன் -  01.06.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-06-2022, வைகாசி 18, புதன்கிழமை, துதியை திதி இரவு 09.47 வரை பின்பு வளர்பிறை திரிதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 01.00 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

குரு செவ்

சுக்கி ராகு

சூரிய புதன்(வ)

சந்தி

சனி

 

01.06.2022

 

 

 

 

 

கேது

 

 

இன்றைய ராசிப்பலன் - 01.06.2022

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். வேலை சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள்  நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£ இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

துலாம்

இன்று தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.

Monday, May 30, 2022

Today rasi palan - 31.01.2022

 


Today rasi palan - 31.01.2022

இன்றைய ராசிப்பலன் -  31.01.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-05-2022, வைகாசி 17, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 07.19 வரை பின்பு வளர்பிறை துதியை. ரோகிணி நட்சத்திரம் பகல் 10.01 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 10.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

குரு செவ்

ராகு சுக்கி

சூரிய சந்தி புதன்(வ)

 

சனி

 

31.05.2022

 

 

 

 

 

கேது

 

 

இன்றைய ராசிப்பலன் -  31.01.2022

மேஷம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். செலவுகள் குறைந்து காணப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலன் அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.

சிம்மம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளி பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளிவட்டார நட்பு ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

மகரம்

இன்று வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடித்தால் சாதகமான பலனை அடையலாம். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். செலவுகள் சற்று அதிகரிக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அதன் மூலம் ஆதாயங்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும்.