Tuesday, January 1, 2019

வார ராசிப்பலன் - ஜனவரி 6 முதல் 12 வரை 2019


வார ராசிப்பலன் - ஜனவரி 6 முதல் 12 வரை 2019 
மார்கழி 22 முதல் 28 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


செவ்




திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சூரிய சனி புதன் சந்தி
குரு சுக்கி

 

                               
கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு        04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை.
மகரம்              07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.
கும்பம்      09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.
மீனம்        12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளி தொடர்புகளால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        7, 8, 9, 10, 11.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சூரியன், சனி 8-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சிவ பெருமானையும் சனி பகவானையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் -         04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        6, 12.
சந்திராஷ்டமம் -         07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குரு பகவான் 5-ல் சாதகமாக இருப்பதால் திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        6, 7, 8.
சந்திராஷ்டமம் -         09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.
.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் 6-ல் கேது சஞ்சரிப்பதும் வலமான பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் இருக்காது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        7, 8, 9, 10, 11.
சந்திராஷ்டமம் -         12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். சூரியன் 4-லும் செவ்வாய் 7-லும் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, வீண் அலைச்சல் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 12.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள், பிரச்சினைகள் எல்லாம் விலகி எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        6, 12.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சனி, சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் --       7, 8, 9.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் --       6, 9, 10, 11.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் இருந்த தடைகள் விலகி வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 7-ல் ராகு 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் --       7, 8, 9, 12.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்ளால் அனுகூலப் பலன் உண்டாகும். சிறப்பான பணவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி  லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் --       6, 9, 10, 11.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு பகவான் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். துர்கையம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் --       6, 7, 8, 12.



No comments: