Wednesday, October 28, 2015

கல்வி கற்கும் யோகம்

  வாங்கி படிக்க தவறாதீர்கள் 
நவம்பர் 2015 
ஓம்சரவணபவா இதழுடன்

2016 புத்தாண்டு பலன்கள்

(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 சந்திராஷ்டமம்,சுப முகூர்த்த நாட்கள்அதிர்ஷ்டக்குறிப்புகள்  அடங்கியது)  



96 பக்கம் இலவச இனைப்பு


இப்படிக்கு

ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
------------------------------------



 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

கல்வி கற்கும் யோகம்

ஒரு குழந்தையானது பூமியில் பிறந்தவுடன், அக்குழந்தையின் தாய், தந்தையருக்கு குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமையானது தொடங்கிவிடுகிறது. நம் குழந்தை என்னவாக ஆகவேண்டும் என கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தை உயர்ந்த நிலையை அடைய முதல் அடிப்படைத் தேவையாக கல்வி அமைகிறது. அக்கல்வி தங்கள் பிள்ளைக்கு நல்ல படியாக அமைய அதற்கு தேவையானவற்றை செய்ய தொடங்குகிறார்கள்.

பழங்காலங்களில் நெல் மணியை தரையில் கொட்டி அ, ஆ எழுத சொல்லிக் கொடுத்தவர்கள், அடுத்து கரும்பலகைகளில் எழுதி படிக்கக் கற்று கொடுத்தார்கள். வலது கையை தலைக்கு மேல் கொண்ட வந்து இடது காதை தொட்டால்தான் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் நிலைகள் போய் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை இரண்டரை வயது முதலே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, இவன் டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். 10ஆம்  வகுப்பு வரை சமமாக செல்லும் காலங்கள், 11ஆம் வகுப்பு வரும் முதலே எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு தன் மகனை என்ன படிக்க வைக்கலாம், எதில் கொண்டு சென்றால் இவன் முன்னேற்றமடைவான் என ஆராயும் பெற்றோர்களுக்கு இதே சில டிப்ஸ்.

நவகிரகங்களில் கல்வி காரகன் புதன் பகவானாவார். ஒரு குழந்தையானது தனது அடிப்படை ஆரம்ப கல்வியில் காலடி எடுத்து வைக்க அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2ஆம் வீடானது பலமாக இருத்தல் அவசியம். 2ஆம் வீடானது பலமாக இருந்தால் குழந்தை எந்த தடைகளும் இன்றி அடம்பிடிக்காமல் அழாமல் பள்ளிக்கு செல்லும். அதுவே 2ஆம் வீட்டிற்கு பாவ கிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் குழந்தை அடிப்படை கல்வியிலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ஆம் வீட்டைக் கொண்டு அந்தக் குழந்தையின் மேல்நிலைக் கல்வியைப் பற்றி அறியலாம். 4ஆம் வீடானது பலமாக இருந்து விட்டால் அக்குழந்தையின் மேற்கல்வியில் தடைகள் இல்லாமல் இருக்கும். அதுவே 4ஆம் வீட்டிற்கு பாவகிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் கல்வியை  பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை போன்றவற்றால் கல்வி நிலை பாதிப்படையும். 5ஆம் வீடானது உயர்கல்வி, பட்டயக் கல்வி பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் 5ஆம் வீடானது பலமாக இருந்தால் ஏதாவது ஒரு துறையில் சாதனைகள், ஆராய்ச்சிகள் செய்யக்கூடிய யோகம் அமையும். 

      ஜென்ம லக்னத்திற்கு 4,5ஈம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக்கல்வி  யோகம்  உண்டாகும். 4,5 ல் பாவ கிரகமான சனி அல்லது ராகு அமைவது நல்லதல்ல அப்படி அமைந்திருந்தால் படிக்கும் வயதில் அப்பாவ கிரக திசை புக்தி நடைபெற்றால் கல்வியில் தடை படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.

வித்தியாகாரகன் எனவும் கல்வி காரகன் எனவும் போற்றப்படும் புதன் பகவான் வலுப் பெற்று இருந்தால் கல்வியில் மேன்மை உண்டாகிறது. ஜென்ம லக்கினத்திற்கு 4,5ஆம் வீட்டிற்கு அதிபதியுடன் புதன் தொடர்பு இருப்பது நல்லது. 4,5ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் வலுவாக அமைகின்றதோ அக்கிரகங்களின் தன்மைக்கேற்ப உயர்கல்வி அமையும்.

புதன் சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறை சந்திரன் சேர்க்கை ஏற்றால் சுப கிரக தன்மையுடனும். சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றால் பாவ கிரக தன்மையுடனும் பலனை தருவார்.
புதன் மிதுனம், கன்னி ராசியில் அதிக பலம் பெறும் போது கல்வி ரீதியாக மேன்மை ஏற்படும். மீனத்தில் நீச்சம் பெற்றாலும் உடன் சுக்கிரன் அமைந்து நீச பங்கம் உண்டாகி இருந்தால் கல்வியில் சிறு தடைக்குப் பிறகு மேன்மை ஏற்படும்.

    புதன் பாவிகளான சனி, ராகு, கேது சேர்க்கை மற்றும் பார்வை பெறாமல் இருப்பது மிகவும் உத்தமம். புதன் ஜென்ம லக்கினத்திற்கு எந்த வீட்டில் அமைந்து உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதி புதனுக்கு கேந்திரத்தில் அமையப் பெற்றால் புதனுக்கு வலுவான பலம் உண்டாகி பட்டக் கல்வி, உயர்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படுகிறது. புதனுக்கு இருபுறமும் பாவிகள் சூழாமல் இருப்பது கல்வி ரீதியாக மேன்மையை உண்டாக்கும்.

      புதன் சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை அல்லது சுப கிரகத்தின் வீட்டில் இருந்தால் கல்வியில் நல்ல நிலை அடையும் சூழ்நிலை ஏற்படும். புதன் பாவ கிரக வீட்டில் அமையப் பெற்றாலும் புதன் வக்ரம் பெற்றாலும்  பாவிகளால் பார்க்கப்பட்டாலும் கற்ற கல்வியை பயன் படுத்த முடியாமல் கல்விக்கு சம்பந்தம் இல்லாத தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை, வாழ்நாளில் கற்றகல்வியை உபயோகிக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது.

      புதன் வீடான மிதுனம், கன்னியில் சனி ராகு,போன்ற பாவிகள் வலுப் பெற்றால் கல்வியில் இடையூறு உண்டாகிறது. 

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, அதன் கல்வியும் தரமானதாக, சிறப்பாக அமைய, அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2,4,5 ஆகிய வீடுகள் பலம் பெற்றிருப்பதுடன்  கல்விகாரகன் புதனும் பலமாக இருத்தல் மிகமிக அவசியம். 

No comments: