Tuesday, October 30, 2012

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்மூன்றாவது இடத்தை பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது  ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதில் 1,2 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும்  3,4 ஆம் பாதங்கள் கும்ப ராசிக்கும் சொந்த மானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஞ, ஞா, கே ஆகியவைகளாகும்.

குண அமைப்பு
     
அவிட்டம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் என்பதால் பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். பிறருடைய முகத்தை நேருக்கு நேர்ப் பார்த்து பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள் மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டுவார்கள். அழகும் அறிவும் நிறைந்தவர்கள்.  மற்றவர்களின் சொத்துக்கு ஆசை படாதவர்கள். அடுத்தவர் தன்னைபற்றி விமர்சனம் செய்தாக பொருத்து கொள்ள மாட்டார்கள். உலகமே தலை கீழாக கவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். மதியாதவர்களின் வாசற்படியை கூட மதிக்க மாட்டார்கள். வலிய சண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவு வைக்கவும் மாட்டார்கள், தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் போராடி வெற்றி பெற கூடியவர்கள். அனுபவ அறிவாளி மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள். செல்வாக்கும் சேரும்.

குடும்பம்;
     
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோர், சகோதரர் என கூட்டாக வாழ்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்க தவறாக முன்கோபிகள். தாய் தந்தையை ஆயுள் காலம் வரை பேணி காப்பார்கள். கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கேற்ப குடும்பத்திலுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்கள். உற்றார் உறவினர்களை விட மற்றவர்கள் மீது அதிக பாசம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ பிடிக்காதவர்கள் சமூக சீர்திருத்த வாதியாகவும் மூட நம்பிக்கைகளை வேரோடு கலைபவர்களாகவும் இருப்பார்கள். பகட்டான வாழ்க்கையும்,  பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்கு பிடிக்காது. இலவசம் பொருட்களை வாங்க மாட்டார்கள். பொய் பேசுபவர்களை கண்டால் பொங்கி எழுவார்கள்.

தொழில்;
     
அவிட்ட நட்சத்திர காரர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். பூமி மீது தீராத மோகம் உண்டு. பலர் நாட்டை காக்கும் ராணவ படைகளில் அதிகாரிகளாக விளங்குவார்கள். காவல் துறையிலும், சமூகத்தை காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். கடின உழைப்பை விரும்புவார்கள். முத்து பவழம் போன்றவற்றிலும் லாபம் பெறுவார்கள். விளையாட்டு துறைகளிலும் அதிக ஆர்வம் இருக்கும். மாநில அளவில் பல பரிசுகளை தட்டி செல்வார்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். 22 வயது வாழ்வில் போராட்டங்களை சந்தித்தாலும் 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவார்கள். அரசியலிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். அடிமைத்தனம், மூடநம்பிக்கை இவற்றிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள்.

நோய்கள்;
     
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கை கால்களில் வலியும் நரம்புகளில் பிரச்சனையும், இருதய சம்மந்தப்பட்ட ரத்த  சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இருதய துடிப்பு அதிகமாதல் போன்றவற்றாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

திசைப் பலன்கள்;
     
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திராதிபதி என்பதால் முதல் திசையாக வரும் செவ்வாய் திசையின் காலங்கள் 7 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் உஷ்ண சம்மந்த பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும்.
     
இரண்டாவதாக வரும் ராகு திசை காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.
     
மூன்றாவதாக வரும் குரு திசை காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியம் நடைபெறும் அமைப்பும் கொடுக்கும். 16 வருடம் நடைபெறும் குரு திசை காலங்கள் ஏற்ற இறக்கமும் நிறைந்தாக இருக்கும்.
     
நான்காவதாக வரும் சனி திசை காலங்களில் பல முன்னேற்றங்கள் பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகளை எதிர்கொள்ள  நேரிடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். உடனிருப்பவர்களாலும் தொழிலாளர்களாலும் அனுகூலம் கிட்டும். பழைய இரும்பு பொருட்களாலும் லாபங்கள் கிடைக்கும்.

விருட்சம்;
     
அவிட்ட நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் வன்னி மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை ரிஷப லக்னம் உதயமாகி அரை நாழிகை சென்று செப்டம்பர் மாதத்தில் இரவு 11 மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
அவிட்ட நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம் உபநயனம், குழந்தைக்கு மொட்டையடித்தல் காது குத்துதல் பெயர் வைத்தல் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். மருந்துண்பது, வண்டி வாகனம் வாங்குவது பயணங்கள் மேற் கொள்வது ஆகியவற்றையும் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருவான்மியூர்;
     சென்னைக்கு தெற்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஸ்தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால் வண்ண நாதர் என்ற பெயர்களுடன் ஈசன் அமைந்த ஸ்தலம் அன்னை திரிபுர சுந்தரி.

திருகாட்டுப்பள்ளி;
     தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் அக்னீஸ்வரர் அருள் புரியும் ஸ்தலம்.

கொடுமுடி;
      பாண்டி கொடுமுடி என்று அழைக்கபடும் கொங்கு நாட்டில் மகுடேஸ்வரர் சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருப்பூந்துருந்தி;
      திருவையாருக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

கூற வேண்டிய மந்திரம்
      ச்ரவிஷ்டா தேவதா; வந்தே
      வஸிந் ரதவராஸ்ரிதான்!
    சங்கம் சக்ராங்கிதகரான்
      க்ரீ டோஜ்வல மஸ்தகான்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்
      மிருக சீரிஷம், சித்திரை நட்சத்திரங்கள் பொருந்தாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Sunday, October 28, 2012

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


  
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடலில் தொடை, தொடை எலும்பு சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை தொடர் எழுத்துக்கள் க,கா,கி,கீ ஆகியவை.

குண அமைப்பு;
   
திருவோண நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள்.  அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை  அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வல்லல் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் இதமாக பேசி பழகுவார்கள். ஒணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொருத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.

குடும்பம்;
     
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனைவி மீதும் தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். 16 வயது முதல் 23 வயது வரை தேவையற்ற நட்பால் பாதை மாறக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்ற மடைவார்கள். நீண்ட தலை முடியும், அழகிய முகமும் இருக்கும். சில நேரங்களில் முன்னுக்கு முரணாக பேசுவதால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். மனைவிக்கு பயந்து நடப்பதுடன் அவள் மீது அதிக பாசமும் வைத்திருப்பார்கள், பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்கள். நவீன ரக வீட்டு பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். குடும்பத்தின் ஆதரவை பெற்று சீரும் சிறப்பாக வாழ்வார்கள் உறவினர்களையும் நேசிப்பார்கள்.

தொழில்;
     
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர்களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஒவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள். 24 வயதிலிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வராய்ச்சி,  கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

நோய்;
     
திருவோண நட்சத்திரகாரர்களுக்கு அடிக்கடி உடல் நிலையில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் சிறுநீரக கோளாறு உண்டாகும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான சர்க்கரை வியாதி ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

திசைப் பலன்கள்;

      திருவோண நட்சத்திரதிபதி சந்திரன் என்பதால் முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகளும், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.

      இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.
     
மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்க மானப் பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.
     
நான்காவதாக வரும் குரு திசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
     
ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயரும் உண்டாகும்.


செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்
     
திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு  தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

விருட்சம்;
   
திருவோண நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் இரவு 9.30 மணிக்கு மேல் உச்சியில்  காணலாம்.

பரிகார ஸ்தலங்கள்

திருமுல்லைவாயில்;
     சென்னைக்கு மேற்க்கில் ஆவடியை ஒட்டியுள்ள ஸ்தலம் மாசில மணீசுவரர்&கொடியிடை நாயகி அருள் பாலிக்கும் எருக்கல் செடியை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம்

எருக்கத்தம் புலியும்;
      கடலூர் மாவட்டம் விருதாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள ராஜேந்திர பட்டினம் என்ற எருக்கத்தம் புலியூரில் நீல கண்டேசு வரும் நீலமலர் கண்ணி அம்பிகையும் அருள் பாலிக்கும் திருத்தலம்.

கூறவேண்டிய மந்திரம்
      சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
    ச்ரவண நட்சத்திர வல்லடம்
      விஷணும் கமலபத்ராஷம்
      தீயா யேத் கருட வாகனம்

பொருந்தாத  நட்சத்திரங்கள்
      ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Friday, October 26, 2012

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்



      இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தோறாவது இடத்தை பெறுவது உத்திராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசிக்கும், 2,3,4 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும் சொந்தமானதாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் 1&ம் பாதமானது உடல் உறுப்பில் தொடை, தொடை எலும்பு போன்றவற்றையும் 2,3,4&ம் பாதங்கள் தோள், முட்டிகள் போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் பே, போ,ஐ,ஜி ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஒ, ஓ ஒள ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
உத்திர நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள் சமூக நலனுக்காக பாடுபடும் குணம்  உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.

குடும்பம்;
     
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். உற்றார் உறவினர்களாலும் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவர். 22 முதல் 26 வயது வரை ஒரு சில தடுமாற்றமும் குழப்பமும் வாழ்வில் ஏற்பட்டாலும் 40 வயது முதல் பொருளாதார ரீதியாக அதிரடி முன்னேற்றம் உண்டாகும். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகமிருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத்தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.

தொழில்;
      உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்று தேர்ந்திருப்பார்கள். சமுகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியும் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாக கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். இராணுவத்தில் படை தலை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். எக்ஸி கியூட்டில் ஆபிசர்களாவும், கோயில் மற்றும் தேவ ஆலயங்கள், தர்கா போன்றவற்றிலும் சமூக சேவை செய்வார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதடும் வக்கீல்களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.

நோய்;
     
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண் நோய், பல் நோய், முதுகு தண்டில் பிரச்சனை, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படும். தோல் நோய் தொழு நோய், பால்வினை நோய்கள், இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனை, இதய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.

திசை பலன்கள்;

      உத்திராட நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும் இதன் மொத்த காலங்கள் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷமும்,  உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பழமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.
     
மூன்றாவதாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களிலும் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.
     
நான்காவதாக  வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

      ஐந்தாவதாக வரும் குரு திசையும் 6 தாக வரும் சனி திசையும் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
விருட்சம்;
     
உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தினை ஆகஸ்டு மாதம் இரவு பதினோரு மணியளவில் வானில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
உத்திராட நட்சத்திரத்தில் நிச்சியதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையை  தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்துப் படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புதுவேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

வழி பாட்டு ஸ்தலங்கள்

கோயம்பேடு;
      சென்னைக்கு மேற்கே 8.கி.மீ தொலைவிலுள்ள குறுங்காலீசுவரர் தர்சம் வர்த்தனி அருள் பாலிக்கும் திருக்கோயில்.

பேளுர்;
      சேலத்துக்கு கிழக்கே 32 கி.மீ தொலைவிலுள்ள தான் தோன்றீசுவரர் அறம் வளர்த்த அம்மையுடன் காட்சி தரும் ஸ்தலம்.

திருப்பூவனூர்;
      மன்னார் குடிக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் வல்லப நாதர் கற்பக வல்லி ராஜராஜேஸ்வரியுடன் காட்சி தரும் ஸ்தலம்.

காங்கேயநல்லூர்;
      காட்பாடிக்கு தென் கிழக்கே 4.கி.மீ காங்கேசுவரர்& பால குஜாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருப்பூவணம்;
      மதுரைக்கு கிழக்கே 19 கி.மீ தொலைவிலுள்ள பூவண நாதர் சௌந்தர நாயகியோடு அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருஇன்னம்பூர்;
      கும்ப கோணத்துக்கு வடமேற்கே 6 கி.மீ தொலைவிலுள்ள நாதேசுவரர் அன்னை குந்தளாம்பிகை உள்ள ஸ்தலம்.

திருகடிக்குளம்;
      திருத்துறைப் பூண்டிக்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள கற்பக நாதர் அன்னை சௌந்தர நாயகி காட்சி தரும் ஸ்தலம்.

திருக்கோஷ்டியூர்;
      சிவகங்கையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள வைணவ ஸ்தலம்.
  
சொல்ல வேண்டிய மந்திரம்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
    ஓம் தத்புருஷாய வித்மஹே
      வக்ரதுண்டாய தீமஹி
      தன்னோ தந்தி ப்ரசோதயாத்

என்ற மந்திரத்தை தினமும் கூறலாம்.

பொருந்தாத நட்சத்திரங்கள்
     புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Wednesday, October 24, 2012

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது இடத்தை பெறுவது பூராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்குரியதாகும். இது உடல் பாகத்தில் தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ, த, ப, டா ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஸ, எ, ஏ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.

குடும்பம்;
     
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள்.  சுவையான உணவை விரும்பி உண்பார்கள். தாய் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பொய் சொல்லாதவர்கள். பெற்றோரின் ஆசைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பூராடம் நூலாடாது என்பதற்கும் மணவாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை. அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்திற்கு பிறகு சரியாகி விடும்.

தொழில்;
     
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிபடுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.

நோய்கள்;
     
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தைராய்ட், சிறுநீரகக் கல் வயிற்றுப் புண், கீல் முட்டு வாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். ஜீரண கோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

திசை பலன்கள்;
     
பூராட நட்சத்திரதில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் முதல் திசையாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்களாகும். என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.
     
இரண்டாவதாக வரும் சூரிய திசை காலங்கள் 6 வருடமாகும். இத்திசையில் சிறு சிறு உஷ்ண சம்மந்தம்ப் பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.
     
மூன்றாவதாக வரும் சந்திர திசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.
     
நான்காவதாக வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும். எதிலும் கவனம் தேவை. மாரக திசையாக அமையும்.

விருட்சம்;
     
பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மரமாகும். இந்த நட்சத்திரத்தை மீன லக்னம்  உதயமாகி ஒன்றரை நாழிகை கடந்த பின்னர் வானத்தில் காண முடியும் ஆகஸ்ட் மாதத்தில் இரவு 10 மணியளவில் தென்படும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்

      ஆடு மாடு கன்று வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல், கடன்களை பைசல் செய்தல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை செய்வது, கிணறு குளம் வெட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

சிதம்பரம்;
      கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும். சிதம்பர ரகசியம் இங்கே விஷேசம், சபாநாயகராக அருள் பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவ காம சுந்தரியும் அருள் பாலிக்கிறார். பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய ஸ்தலம்.

நகர்;
      திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம் அப்பிரதீசுவரர் அருளாசி செய்யும் அற்புத ஸ்தலம்.

கடுவெளி;
      தஞ்சை மாவட்டம் திருவை யாருக்கு வடக்கில் 3.கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ளது. ஆகாச புரீசுவரர் அருள் புரியும் ஸ்தலம்.

கூற வேண்டிய மந்திரம்
     
ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
      பாசஹஸ்தாய தீமஹி
      தந்நோ வருண ப்ரசோதயாத்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்

      பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை பூராட நட்சத்திரத்திற்கு பொருந்தாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Monday, October 22, 2012

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்



மூலம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தொன்பதாவது இடத்தை பெறுவது மூல நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மூலம் தனுசு ராசிக்குரியதாகும். இது இடுப்பு, தொடை, நரம்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் யே. யோ, பா, பீ ஆகியவையாகும். தொடர் எழுத்துக்கள் பு, யூ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
மூல நட்சத்திராதிபதி கேது பகவானாவார். இது வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து  சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே  மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும்.

குடும்பம்;
     
சிறு வயதில் கேது திசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். இவர்களுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பாமலிருப்பது அனைவருக்கும் நல்லது. பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.

தொழில்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கி டெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணபுரியம் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கும், கடைநிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி இறக்குமதி கெமிக்கல் ஷிப்பிங்  கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருத்துவ கம்பெனி போன்றவற்றால் சிறந்த லாபம் கிட்டும்.

நோய்கள்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பைல்ஸ், கல்லீரலீல் பாதிப்பு நுரையிரலில் பாதிப்பு, இடுப்பு வலி, அஜீரண கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.

திசை பலன்கள்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதுமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும்.
     
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.  இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும்.
     
மூன்றாவதாக வரும் சூரிய திசை 6 வருடங்களும் நான்காவதாக வரும் சந்திர திசை 10வருடங்களும் நடைபெறும் என்பதால் இத்திசை காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை ஐந்தாவது திசையாகும். செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக திசையாகும். செவ்வாய் பலம்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.  .

ஸ்தல விருட்சம்;
     
மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தினை ஜீலை மாதத்தில்  கும்ப லக்னம் உதயமாகி 4 மணி நேரம் கழித்து நள்ளிரவில் விண்ணில் சுடர் விடுவதை காணலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

பொழிச்சலூர்; 
     சென்னைக்கு தெற்கில் பல்லாவரத்துக்கு மேற்கில் 3.கி.மீ தொலைவிலுள்ள அகஸ்தீசுவரர்&ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருமாந்துறை;
     திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5.கி.மீ தொலைவில் உள்ள வடக்கரை மாந்துறை எனப்படும் ஆம்ரவன ஈஸ்வரர் அன்னை அழகம்மை ஆலயம்.

மயிலாடுதுறை;
      மயூரநாதர் அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

குலசேகர பட்டினம்;
      திருச்செந்தூருக்கு 14 கி.மீ தொலைவிலுள்ள விஜய காசி கொண்ட பாண்டீஸ்சுவரர்&அறம் வளர்த்த நாயகி அருள் புரியும் திருத் ஸ்தலம்.

அச்சாள் புரம்;
      சீர்காழிக்கு அருகிலுள்ள சிவலோகத்தியாகேசர் அருள் புரியும் ஸ்தலம்.

பாமணி;
      பாதாளேச்சுரம் எனப்படும் இத்தலம் மன்னார் குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சர்ப தோஷம் நீக்கும் ஆலயமாகும். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
      
மூல நட்சத்திரத்தில திருமணம் செய்தல், கிரக பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்துண்பது தானியம் வாங்குவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
      வாயு புத்ராய தீமஹி
      தன்னோ மாருதி ப்ரசோயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்
      அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Saturday, October 20, 2012

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்




இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது இடத்தை பெறுவது கேட்டை நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் நே, ய, இ, யூ தொடர் எழுத்துக்கள் நே, கை ஆகியவை.

குண அமைப்பு;
     
கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினாலும் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் விதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும் கேட்டையின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால்  வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்கள் செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய  இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய  இருக்கும். நீர் நிலைகளில் குளிப்பதில் அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றியை மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணுறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து  முடிப்பவர்களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது சாஸ்திர விதி.

குடும்பம்;
     
கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன் கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்புகளிடையே நிறைய பாசமும் வைத்திருப்பார்கள். இவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசி கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு  காதல் திருமணமே நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

தொழில்;
     
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர்களாகவும், பத்திரிகை நிருபர்களாகவும், மனோ தத்துவ நிபுணர்களாகவும், நடிகர் நடிகைகளாகவும், கட்டிட காண்டிராக்டர்களாகவும், அழகுகலை நிபுணர்களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்பியூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 22 வயது வரை கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் தன் கையே தனக்குதவி என சுய உழைப்பில் செல்வம் சேர்ப்பார்கள். தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தை அமைத்து கொள்வார்கள். 46 வயது முதல் 56 வயது வரை ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகம் நிறைய உண்டாகும்.

நோய்கள்;
     
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல ஆரோக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றாலும் தோள் விலா எலும்புகளில் வலிமையும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;
     
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலமிருந்திருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.
     
இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும். 
     
மூன்றாவதாக வரும் சுக்கிர திசை  20 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும்.
     
நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும் ஐந்தாவதாக வரும் சந்திர திசை 10 வருடமும் நடைபெறும். இத்திசைகளின் காலங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும். 6வதாக வரும் ராகு திசை மாரக திசையாக கூறப்படுகிறது.

ஸ்தல மரம்;
     
கேட்டை நட்சத்திர காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை கும்ப ராசி உதயமாகி 1----&3/4 நாழிகை அளவில் இரவு 11 முதல் 12 மணி வரை வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     
ஆடு மாடு வாங்கி விற்றல்,  பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்;

வழுவூர்;
     மயிலாடு துறைக்கு தெற்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்தம் இரண்டும் தனி சிறப்பு கொண்டவை. ஈசனர் கீர்த்தி வாசன் என்ற திருநாமத்தை கொண்டுள்ளார். கஜ சம்ஹார மூர்த்தி தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் வில்லேந்திய சனிஸ்வரனையும் இங்கு காணலாம்

பிச்சாண்டார் கோயில்;
     திருச்சிக்கு வடக்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு முகமாகவும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். சரஸ்வதி தேவிக்கும் இங்கே தனி ஸ்தலம் உண்டு

செய்ய வேண்டிய மந்திரம்
     ஓம் பூவராஹாய வித்மஹே
     வஜ்ர ருபாய தீமஹி
     தன்னோ வராஹ ப்ரசோதயாத்

கேட்டை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
    
 அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Thursday, October 18, 2012

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


     
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினேழாவது இடத்தை பெறுவது அனுஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும். இது உடலில் சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு, குதம், இடுப்பு பகுதி எலும்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ந,நி,நு,நே ஆகியவை தொடர் எழுத்துக்கள் நா,நீ,நூ ஆகியவை.

குணஅமைப்பு;

அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலையை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக் குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். யார் தவறு செய்தாலும் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள். அழகான கூந்தலும் விசாலமான கூந்தலும் இவர்களுக்கு அழகு சேர்ப்பதால் அமையும். சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். கருமியாகவும் இருப்பார்கள். இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற கூற்றுப்படி பூமியில் இருக்கும் போதே புண்ணிய காரியங்களை செய்து சமுதாயத்தின் முன்னேற்றமடைவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள்.  இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்திமுப்பார்கள். பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.

குடும்பம்;

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக  பாசம் கொண்டவர்கள். மனைவிக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். செல்வம் செல்வாக்கு அசையும் அசையா சொத்துக்கள் யாவும் சிறப்பாக அமையும். எல்லாரிடத்திலும் நட்பாக பழகுவதால் உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெறுவார்கள் ஆழ்ந்த சிந்தனையில் எப்பொழுதும் முழ்கியிருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் 29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். 40 முதல் 60 வயது வரை பொற்காலமாக அமையும். தன்னுடைய தாராள மனப்பான்மையை எப்பொழுதும் வீட்டில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

தொழில்;
     
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளிகளாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசனகர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல் துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிட கலை, காண்டிராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். பலராலும் பாராட்டப்படக் கூடிய அரிய பெரிய காரியங்களை செய்து பெரிய பதவிகளை வகிப்பார்கள். மக்கள் செல்வாக்கால் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிலும் இடம் பெறும் வாய்ப்பு அமையும். சமுதாயத்தில் புகழ் பெருமை, செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். தொழிலாளர்களுக்காக போராடுவதால் தொழில் சங்க தலைவராக இருப்பார்கள்.

நோய்கள்;

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம்புகள் மற்றும் தலை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். தலைவலியும், வயிற்றில் பிரச்சனையும் எப்பொழுதும் இருக்கும்.

திசை பலன்கள்;
     
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 19 என்றாலும் பிறந்த நேரத்தை  கணக்கிட்டு மீதமுள்ள சனி தசா புக்திகளை பற்றி அறியலாம். சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடையே கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் தனமும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்கள் 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
     
மூன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.
     
நான்கவதாக வரும் சுக்கிரன் திசை 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வும் அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
     
சூரிய திசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.

ஸ்தல மரம்;
     
அனுஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மகிழம்பூ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை கும்ப லக்னம் அமைந்த முன்னிரவில் 10 மணியளவில் தலைக்கு நேராக காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்துபடி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் சேர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருவெற்றியூர்;
     சென்னைக்கு வடக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள புற்றிடங் கொண்டார், ஆதிபுரீசுவராக அருள் பாலிக்கும் ஸ்தலம். ஸ்தல விருட்சம் மகிழ மரம்.

திருவண்ணாமலை;
     திருமாலும் நான்முகனும் அடி&முடி தேடிய போது அவர்களுக்கு எட்டாமல் அண்ணாமலையாக இறைவன் தோன்றிய ஸ்தலம்.

நீடூர்;
     மயிலாடு துறைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்ட ஊழிக் காலத்தும் அழியாதலால் நீடூர் ஆனது. லட்சுமி நாராயண பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் நாராயணாய வித்மஹே
     வாசுதேவாய தீமஹி
     தன்னோ விஷ்ணு பிரசோதயாத்

அனுஷ நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

     பரணி, பூசம்,பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகியவை பொருந்தாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Tuesday, October 16, 2012

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினாராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1,2,3&ஆம் பாதங்கள் துலா ராசிக்கும், 4&ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் வயிற்றின் கீழ் பகுதி, சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் போன்றவற்றை ஆளுமை  செய்கின்றன. 4&ம் பாதம் சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்பு, குதம், சிறுகுடல் போன்றவற்றை ஆள்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் தி, து,தே, தோ தொடர் எழுத்துக்கள் தூ,தை ஆகியவை.

குண அமைப்பு
     
விசாக நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பர்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துறைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள் நல்ல நீதிமானாகவும், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேச கூடியவராகவும் இருப்பார்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தன்னுடைய கொள்கைளிலிருந்து எந்த நெருக்கடியான நேரத்திலும் மாறமாட்டார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களை மதிக்கும் பண்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பும் சமுதாயத்தில் பெயர் புகழை உயர்வடைய செய்யும், பல கோடி கொட்டி கொடுத்தாலும் பொய் பேச மாட்டார்கள்.

குடும்பம்;
     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்ய கூடிய  நிலையும், ஏற்கனவே மண மானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். நல்லவருக்கு நல்லவராகவும், தீயவருக்கு தீயவராகவும் நடந்து கொள்வார். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வார். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டையிட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கரை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை யிருக்கும். அடிக்கடி நோய் வாய்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்கனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.

தொழில்;
     
விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.  சிறு வயதில் சில சங்கடங்களை சந்தித்தாலும் 23 வயதிற்கு மேல் நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும் தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.

நோய்கள்;
     
உடல் நலத்தில் மீது அதிக அக்கரை எடுத்து கொள்ளாத காரணத்தால் அடிக்கடி நோய் வாய் படுவார்கள். பலமற்ற இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதய சம்மந்தப்பட்ட நோய்கள் சிறு நீரகங்களில் பாதிப்புகள் உண்டாகும்.

திசை பலன்கள்;
     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் குரு திசை மொத்த வருட காலங்கள் 16 என்றாலும், பிறந்த நேரத்தை கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறியலாம். பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் திசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியோர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
    
இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்பட நேரிடும்.
     
மூன்றாவதாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
     
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக  தெய்வீக காரியங்களில் நாட்டமும் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
    
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.

ஸ்தல மரம்;

விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.குயவன்  சக்கரத்தை போல ஐந்து நட்சத்திரங்கள் கொத்தாக இருக்கும். இதை ஜீன் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
சிற்ப கலை கற்றல், நாட்டியம் பயிறுதல், அக்னி காரியங்கள் செய்தல், மந்திரம் கற்றல், தேவ புத்ரு பூஜை விதை விதைத்தல், கிணறு குளத்தை சீர்படுத்துதல், வியாதிக்கு மருந்துண்ணுதல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

அத்தாள நல்லூர்;
     நெல்லை மாவட்டம் வீர நல்லூருக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருநின்றியூர்;
     மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமி புரீசுவரர்&உலகநாயகி அருள் பாலிக்கும் திருஸ்தலம்.

கபிஸ்தலம்;
     தஞ்சை, பாப நாசத்துக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் கும்ப கோணம் திருவையாறு சாலையில் விளாமரங்கள் நிறைந்த ஸ்தலம் மூலவர் கஜேந்திர பெருமாள் தாயார் ரமாமணிவல்லி

கூற வேண்டிய மந்திரம்;
     ஓம் தத்புருஷாய வித்மஹே
     மஹாஸேனாய தீமஹி 
     தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்

விசாக நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

     கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Sunday, October 14, 2012

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினைந்தாவது இடத்தை பெறுவது சுவாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு ஆண் பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் துலா ராசிக்குரியவராவார். உடல் பாகத்தில் தோள் பட்டை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை இவர் ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ரூ, ரே, ரோ, த தொடர் எழுத்துக்கள் தா ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
சுவாதி நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகளும் உடையவர். மனித உரிமைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள். பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியினையும் காட்டி விடுவார்கள். திடமான புக்தி உடையவர்கள் என்றாலும் அடிக்கடி தன் புக்தியை மாற்றி கொள்வார்கள். எளிதல் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வித்தியாசப் படுவார்கள் எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் புன்னகை பூத்த முகமும் நீண்ட விரல்களும், பிறரை வசீகரிக்கும் தோற்றமும் பலர் மத்தியில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். விளையாட்டு குணம் அதிகமிருக்கும். சுய மரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிங்கிரமாக மன்னிப்பையும் கேட்பார்கள். பெரியவர் சிறியவர் என பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். இவர்களின் தோற்றத்தை கொண்டு வயதை எடை போட முடியாது. நல்ல எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர்கள்.

குடும்பம்;
     
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எது நல்லது, எது கெட்டது என ஆராய்ந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். மண வாழ்க்கை சற்று தாமதமாகத் தான் அமையும். அதிக பிள்ளைகளை பெற்று கொள்ள விட்டாலும் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். முன் கோபம் அதிகமுடையவர்கள் என்பதால் கணவன் மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். பிராணிகள் பறவைகள் அனைத்தின் மீதும் பாசம் கொண்டவர்கள். மலை கடல் மரம் கொடி செடி போன்றவற்றினை அதிகம் விரும்பி நேசிப்பார்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

தொழில்;
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கை மண் அளவு  என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். சங்கீதம், நாட்டியம், இலக்கியம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருக்கும். நல்ல மனவலிமை கொண்டவர்கள் என்பதால் தொழில் ரீதியாக உண்டாக கூடிய பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பார்கள். மொத்த  வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். சகல சாஸ்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள். சிலர் கலை துறையை சார்ந்தவர்களாக-வும், பேராசிரியர்களாகவும் கெமிக்கல் இஞ்சினியர்களாகவும் ஏரோனாட்டிக்ஸ். கம்பியூட்டர் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

நோய்கள்;

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் நோய், ஹார்ட் அட்டாக், சிறு நீர் குழாய்களில் பாதிப்பு, இரண்யா கோளாறு, கர்ப்பபை போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

திசைப்பலன்கள்;
    
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை முதல் திசையாக வரும். இத்திசையின் மொத்த வருட காலங்கள் 18 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு ராகு திசையின்  மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம்வயதில் ராகு திசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்த நிலை பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் குரு திசை காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. பெற்றோர் பெரியோர்களிடையே ஒற்றுமை குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும் யோகம் கொடுக்கும்.

மூன்றாவதாக வரும் சனி திசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும் முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
     
நான்காவதாக வரும் புதன் திசையிலும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
     
சுவாதி நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திரு ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது மாணிக்கம் போன்ற ஜோதியுடன் காட்சி தரும் இந்த நட்சத்திரத்தை ஜீன் மாதம் இரவு 10 மணியளவில் வானத்தில் காணலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் செய்ய கூடிய நல்ல காரியங்கள்

மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி ஜோதிடம் மருத்துவம் கற்றல், அன்ன தானம் ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

பிள்ளையார்பட்டி;
     சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மருதீசுவரர் அருள் பாலிக்கும் மருதகுடி ஸ்தலம்

ஸ்ரீரங்கம்;
     ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகிலுள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்

திருப்புடை மருதூர்;
     நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்துக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள இந்திரன் வழிபட்ட ஸ்தலம். தைபூசத்தன்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.

கடத்தூர்;
     கோவை மாவட்டம் உடுமலை பேட்டைக்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவில் அமராவதி ஆற்றங்கரையில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜீனேஸ்வரர் திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்

     உக்ரம் வீரம் மகாவிஷணும்
     ஜீவலந்தம் ஸர்வதேமுகம்
     ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்
     ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்!

பொருந்தாத நட்சத்திரங்கள்

     ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Friday, October 12, 2012

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவது இடத்தைப் பெறுவது  சித்திரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இந்த நட்சத்திரதின் 1,2 ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கும், 3,4&ம் பாதங்கள் துலா ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் 1,2&ம் பாதங்கள் தொந்தி அடிவயிறு போன்றவற்றையும், 3,4&ம் பாதங்கள் சிறு நீரகம், பிறப்புறுப்பு, அடிவயிறு போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பே, போ, ர, ரி போன்றவை. தொடர் எழுத்துக்கள், பை, பௌ போன்றவையாகும்.

குண அமைப்பு;

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருக்கும். அழகிய உடல் வாகும், நீலவிழியும், கட்டான உடலமைப்பும், சிறந்த ஒழக்கமும் அமைந்திருக்கும். பலவகை கலையம்சம் கொண்ட ஆடை அணிகலன்களை விரும்பி அணிபவர்களாக இருப்பார்கள். பிரபஞ்சம் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். தெய்வ பக்தியும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் பிறருக்கு கொடுத்து உதவக் கூடிய தாராள குணமும் இருக்கும். சொன்ன சொல்லை தன் தலையை வைத்தாவது காப்பாற்றுவார்கள். நல்ல அறிவு கூர்மையும் நடைமுறையை பற்றி பேசுபவர்களாகவும் இருப்பார்கள். வாசனை பொருட்களை விரும்பி உபயோகிப்பார்கள்.

குடும்பம்;
     
தெரிந்தோ தெரியாமலோ சில நட்சத்திரங்களைப் பற்றி தவறான பழ மொழிகள் வழங்கி வருகின்றன. சித்திரைக்கு அப்பன் தெருவிலே என்ற பழமொழியும் இதில் ஒன்று. ஆனால் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான குடும்பமும் தந்தை தாய்க்கு குறையில்லா வாழ்க்கையும் அமையும். மனைவியின் மேல் அதிக பிரியம் உடையவராகவும் மனைவியின் பேச்சை கேட்பவராகவும் இருப்பார்கள். பரம்பரை கௌரவத்தை எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள் நந்தி வாக்யம் என்ற நூலில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பற்றி கூறுகையில் பாதி வாழ்க்கை சுக போகமாகயும் மீதி வாழ்க்கை துறவறத்திலும் கழியும் என்று கூறுகிறது. அதிகம் பேசுபவராக இருந்தாலும் அதில் அர்த்தம் நிறைய இருக்கும். 23 வயது வரை கொஞ்சம் கஷ்டமும் சிறு சிறு விபத்துக்களும், பொருள் அழிவும் கெட்ட நண்பர்களின் சகவாசமும் இருக்கும் என்றாலும் அதன் பிறகு வாழ்வில் ராஜயோகமும், செல்வம் செல்வாக்கும் உயர் வடைந்து அனைவரும் அண்னாந்து பார்க்கும் உயரத்திற்கு வந்து விடுவார்கள். மணவாழ்க்ககை சற்று தாமதமாகவே அமையும்.

தொழில்;
    
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த துறையை சார்ந்திருந்தாலும் அதில் சாதனைகள் பல செய்ய கூடிய வல்லமையை பெற்றிருப்பார்கள். எதிலும் முதலிடத்தை பிடித்துவிடுவார்கள்.  பல பட்ட படிப்புகள் படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்பிற்கும் சம்மந்தம் இருக்காது. எல்லோரிடத்திலும் கனிவாக பேசி வேலை வாங்குவார்கள். பலரை வைத்து நிர்வகிக்க கூடிய நிர்வாகத் திறன் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்கள். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்து கொண்டேயிருப்பதால் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலையும் நிறையவே இருக்கும் தொழில் மீது அதிக பற்று உள்ளவர்களாக இருப்பதால் தங்களுடைய தூக்கத்தைக் கூட தூக்கி யெறிந்து விட்டு பணி புரிவார்கள் மக்களால் போற்றி புகழ் கூடிய அளவிற்கு வாழ்வில் உயர்வடைவார்கள்.

நோய்கள்;

     சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் வியாதியும், சிறு நீரக பாதிப்பும், கர்ப்பப்பை, சிறு நீர் குழாய்கள் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். உடலில் நீர் சத்து குறைவு, ஹார்ட் அட்டாக், வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்,  அப்பன்டிஸ் போன்றவற்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை, ரத்த சம்மந்தப் பட்ட பாதிப்புகள் போன்றவை உண்டா-கும்.

திசைப்பலன்கள்;

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் வருட காலம் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் மட்டுமே இளமை கால வாழ்வில் கல்வியில் முன்னேற்றமும், சுகவாழ்வும் கிட்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் கல்வியில் ஈடுபாடு இருக்காது. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் அவப் பெயரை எடுக்க நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் அதனால் வம்பு வழக்குகளும் ஏற்படும்.
     
அடுத்து 3&வதாக வரும் குரு திசை காலங்கள் 16 வருடம் நடைபெறும். இத்திசை காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை, முரட்டு சுபாவம் மறைந்து அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பு உண்டாகும். சுகவாழ்வும் கிட்டும்.

நான்காவதாக வரும் திசை சனி திசையாகும். இது 19 வருட காலங்கள் நடைபெறும் சனி திசை மாராக திசை என்றாலும் சனி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால்  பலவகையில் மேன்மைகளும் சமுதாயத்தில் உயர்வும் உண்டாகும். உடனிருப்பவர்களால் உயர்வுகள் கிட்டும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயர்வடையும்.


ஸ்தல விருட்சம்;
     
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் வில்வ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரம் மீனின் கண் போல பளிச்சென்று இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் ஒரு மணிக்கு  உச்சிக்கு நேராக விண்ணில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
சித்திரை நட்சத்திரத்தில் திருமணம் பூ முடித்தல், குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் வைத்தல், புது மனை புகுதல், அன்னதானம் செய்தல், கல்வி, ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் வண்டி வாகனங்கள் வாங்குவது, நாட்டிய அரங்கேற்றம் போன்றவற்றை தொடங்கலாம். புத்தகம் வெளியிடுதல், குளம் கிணறு வெட்டுதல் தானியத்தை  களஞ்சியத்தில் சேர்த்தல் போன்ற வற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

அண்ணன் கோயில்;
     நாகை, சீர்காழிக்கு தென் கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள திருமால் கோயில்

நன்னிலம்;
     மயிலாடுதுறை, திருவாரூர் இடையேயுள்ள செஞ்சடை நாதர்&பெரிய நாயகி திருக்கோயில்

நாச்சியார் கோயில்;
     கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 9 கி.மீ தொலைவிலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் தாயாரை மணம் புரிந்த காட்சியிலுள்ள கோயில்

திரு நெடுங்களம்;
     திரு வெறும்பூருக்கு கிழக்கே 10.கி.மீ தொலைவிலுள்ள நித்ய சுந்தரர்&ஒப்பிலா நாயகி திருக்கோயில்

திருக்கோயிலூர்;
     பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த விரட்டுடேசுவரர் சிவானந்த வல்லி திருக்கோயில்

திருநாராயணபுரம்;
     கரூர்&முசிறிக்கு மேற்க்கில் 15.கி.மீ தொலைவில் காளமேக பெருமாள்&பூதேவி&ஸ்ரீதேவி சந்நிதி

திருக்கண்டியூர்;
     வடக்கில் 10.கி.மீ தொலைவிலுள்ள சிரக் கண்டீசுவரர்&மங்கள நாயகி திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்
ஓம் நமோ பகவதே, மஹா ஸீதர் சனாய தீப்த்ரே
ஜ்வாலா பரீதாய ஸர்வ திக்ஷோபணகராய
ஹீம் பட் ப்ரஹ்மனே பரஞ் ஜ்யோ திஷே நம!

சித்திரை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
    
அவிட்டம், மிருகசீரிஷம், போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001