Monday, May 14, 2012

மீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்.

10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன், செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  அதுபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய  வாய்ப்பு, இரும்பு, விவசாயம், எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய் 10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம், கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.  ராகு 10ல் இருந்தால் மருந்து, கெமிக்கல் தொடர்புடையவற்றிலும்  10 ல் சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும், அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

5 comments:

Anonymous said...

Thank you for this article.

Anonymous said...

Dear sir,
thanks for posting ....but viruchigam and thanusu laknam were missing from the list .....Please post that 2 lagnams also

Arul said...

Dear Sir

Kindly I request you to write Viruchiga lagna Articles.

Thank you

Arul Kumar Rajaraman

Mahadevan said...

நன்றி ஐயா.

விருச்சிகம் மற்றும் தனுசு லக்ன பலன்களையும் கொடுத்ததற்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் மேலான சேவை!

Unknown said...

ஐயா நான் மீன லக்னம் தற்போது எனக்கு கடந்த பத்து ஆண்டுகளாக ராகு திசை நடக்கிறது. வாழ்வில் நிம்மதி இல்லை தீர் வு எப்போது???